ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
வல்வைப் படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வல்வையில் வைத்து 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களும் இதன்போது நினைவு கூரப்பட்டனர். கடந்த 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி, வல்வெட்டித்துறையில் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் நடந்த மோதலில் 9 இந்திய இராணுவம் உயிரிழந்தமைக்காக 2ம், 3ம், 4ம் திகதிகளில், இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன…
-
- 0 replies
- 229 views
-
-
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இன்று (30) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்…
-
- 66 replies
- 4.4k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய போலியான நைக் காலணி! சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய காலணிகள் என வெளியிடப்படும் வீடியோவில் உள்ளது போலியான நைக் (NIKE) காலணிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைக் (NIKE) சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய ஒரு ஜோடி காலணிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியமை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ள காலணிகள் நைக் (NIKE) நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என, NIKE Inc நிறுவனம் உ…
-
- 10 replies
- 759 views
-
-
தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் இல்லை-சாணக்கியன் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் இல்லை, இதைப் பற்றியெல்லாம் கேட்கப் போனால் நாங்கள் குழப்பவாதிகள் என்கிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்ட விடயங்கள் தொடர்பில் இரா.சாணக்கியன் கருத்துத் தெரிவிக்கையில், “மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு தீர்வில்லை, கெவிலியாமடு பிரச்சினைக்குத் தீர்மானமில்லை, மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் காணிக்கு அம்பாறை அரச அதிபரின் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது தொடர்பில் எவ்வித கருத்தும் இல்லை. திவுலபொத்தான என்…
-
- 0 replies
- 414 views
-
-
கௌதாரிமுனை காணி பகிர்ந்தளிப்பில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் போலி அரசியலை மக்கள் புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் கௌதாரிமுனை கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்துக்களை பொருட்படுத்தாமல், நூற்றுக்கு மேற்பட்ட கௌதாரிமுனை மக்கள் இன்று(28-07-2021) ஆர்வத்துடன் வயல்காணிகளுக்கு விண்ணப்பம் செய்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை மண்ணித்தலை சிவன்கோவில் முன்னால் இறங்குதுறையடியில் மக்கள் சந்திப்பை நடத்தி, கடலட்டைப் பண்ணைகளையோ வயல்காணிகளையோ பெற்றுக்கொ…
-
- 22 replies
- 1.2k views
-
-
பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடு நீக்கம் July 31, 2021 முழுமையாக தடுப்பூசிகள் பெற்ற விமானப் பயணிகளை இலங்கைக்குள் அழைத்து செல்லும் பொழுது, இதுவரையிலும் நடைமுறையிலிருந்த, விமானமொன்றிற்கான ஆகக் கூடுதலாக 75 பயணிகள் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. விமானங்களில் செல்லும் பயணிகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருப்பதற்கான எழுத்து மூலமான ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்கள் நிறைவடைந்த பயணிகளை, அதிகபட்ச பயணிகளைக் கொண்ட விமானத்தில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது. அதேவேளை, தடுப்பூசியின் ம…
-
- 2 replies
- 429 views
-
-
ரிஷாத்தின் இல்லத்தில் பணியாற்றிய 11 பெண்களில் மூவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் கடந்த 2010 முதல் வீட்டுப் பணியாளர்களாக பணியாற்றிய 11 பெண்களில் மூன்று பேர் உயிரிழந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் அவரது வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகளைத் தொடர்ந்து 16 வயது சிறுமி உட்பட மொத்தம் 11 பெண்கள் 2010 - 2021 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ரிஷாத்தின் இல்லத்தில் பணியாளர்களாக தொழில்புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வ…
-
- 0 replies
- 396 views
-
-
ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில் பயன்படுத்திய உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தில், இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள, ரிஷாட்டின் வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய சிறுமி உட்பட 11 பேரில், 9 யுவதிகள் இதுவரையிலும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடலில் சூடுவைத்தமை, தாக்கியமை மற்றும் ஏனைய துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்தமை உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் …
-
- 2 replies
- 536 views
-
-
சமீபத்திய அரசியலில்... இரு பெரும் துரோகங்களை, மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய சமீபத்திய அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் இரு பெரும் துரோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர ஒன்றிணைந்த மக்கள், அந்த ஆட்சியால் அதிருப்தி அடைந்தனர். பின்னர் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை பற்றிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2019 இல் மக்கள் மீண்டும் நம்பிக்கையை இழந்துள்ளதாக ஹரிணி அமரசூரிய கூறினார். துரோகங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பல்வேறு வழிகளில் தீர்வுகளைத் தேடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதே தரப்பினர் தற்போத…
-
- 0 replies
- 527 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், தனியான பல்கலைக்கழமாக மாற்றப்பட்டுள்ளது யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியான பல்கலைக்கழமாக இயங்க ஆரம்பித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது குறித்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தர…
-
- 0 replies
- 334 views
-
-
ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய... மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் இந்த விடயம் குறித்த…
-
- 0 replies
- 450 views
-
-
நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்துக்கு மலர் மாலை அணிந்து, மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றப்பட்டது. யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை , அவரது வீட்டுக்கு அதிகாலை 5 மணியளவில் சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்தனர். https://newuthayan.com…
-
- 0 replies
- 427 views
-
-
அனைவரது கவனத்தையும் ஈர்த்த திருகோணமலை கவனயீர்ப்பு போராட்டம் திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மடத்தடி சந்தியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி, வட கரை வீதியூடாக திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்து, அங்கு வனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் நாட்டின் தலைவர்களது முகமுடிகளை அணிந்து, ஆடைகளைக் குறிக்கும் வகையில் வேடமிட்ட சிலர் பிரேதப் பெட்டி ஒன்றினை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை- ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 534 ரக விமானம், மொஸ்கோவ் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 51 பேரும் இலங்கைத் தூதுவரும் வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் வாரந்தோறும் இரவு 10.20 மணிக்கு மொஸ்கோவ் நகரில் இருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு இ…
-
- 0 replies
- 265 views
-
-
இலங்கை மிக மோசமான டெல்டா அலையின் விளிம்பில்! – 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என எச்சரிக்கும் பேராசிரியர் இலங்கை மிகவும் மோசமான டெல்டா அலையின் விளிம்பில் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பில் ஆராயும் விசேட நிபுணர், பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளார். இணையம் ஊடாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய டெல்டா திரிபு தெற்காசிய பிராந்தியம் உட்பட உலகளவில் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் மலித் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் இந்தப் பிரச்சினை, இலங்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அடுத்த சில வா…
-
- 0 replies
- 253 views
-
-
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! July 30, 2021 யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.07.21) யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஐ நா பெற்றுத்தர வேண்டும் எனவும் நீண்ட காலமாக தமது உறவுகளை தேடிய வண்ணம் வீதிகளிலும் மழை,வெயில்களிலும் போராடி வருவதாகவும் எனினும் தற்போது உள்ள கொரோனா நிலை காரணமாக தாம் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும், எனினும் தமது பிள்ளைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்…
-
- 3 replies
- 310 views
-
-
ரிஷாத் வீட்டில் சிறுமி உயிரிழந்தமைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வலியுறுத்தும் சஜித் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் எந்தவொரு குறுக்க…
-
- 2 replies
- 511 views
-
-
(நா.தனுஜா) இலங்கையினால் நேற்று ஒரேதினத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் - 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் ஊடாக நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு பாராட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையினால் நேற்று முன்தினம் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொவிட் …
-
- 3 replies
- 378 views
-
-
கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறாதவர்களின் விவரங்களைத் திரட்ட ஜனாதிபதி பணிப்பு! கொவிட் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பொன்றை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கையானது, நாட்டின் அனைத்து பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன் இன்று பிற்பகல் நடைபெற்ற போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பிரதேச செயலகங்கள் ரீதியாக இந்த விடயம் தொடர்பில் கணக்கெடுப்பை நடத்தி, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத நபர்கள் தொடர்…
-
- 3 replies
- 420 views
-
-
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மற்றொரு தீர்மானம்; இணை அனுசரணை நாடுகள் திட்டம் July 31, 2021 எதிர்வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தயாராகி வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன், மசிடோனியா, கனடா, ஜேர்மனி மற்றும் மொண்டினீக்ரோ ஆகியவை இணைந்து கூட்டாக இந்த தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. மனித…
-
- 3 replies
- 529 views
-
-
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. யாழ், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில், கொழும்புத்துறை, J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதே பிரிவைச் சேர்ந்த 66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்…
-
- 17 replies
- 960 views
- 1 follower
-
-
சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்கள் விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும…
-
- 15 replies
- 1k views
-
-
விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இ…
-
- 12 replies
- 1.4k views
-
-
ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம் ஹிஷாலினியின் மரணம் வறுமையின் அடையாளம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஓருங்கிணைப்பாளர் சுட்டிக் காட்டியுள்ளார். ஹிஷாலினியின் மரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலவாக்கலை அக்கரப்பத்தனைப் பிரதேசத்தின் டயகம மூன்றாம் பிரிவைச் சேர்ந்த ஜூட்குமார் ஹிஷாலினி என்ற 16 வயதுச் சிறுமி கொழும்பிலுள்ள அரசியல் பிரிமுகரின் வீட்டில் பணிப் பெண்ணாக அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி குறித்த சிறுமி பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு-தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த போதும் சிகிச்சை பலனின்றி 15 ஆம் திகதி அவரது உயிர் பரிதாப…
-
- 2 replies
- 394 views
-
-
தவறிழைத்த காவல்துறையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் July 31, 2021 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்கள் பணத்துக்காக வன்முறைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். என யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகே தெரிவித்தார். கோப்பாய் பகுதியில் இளைஞர் ஒருவரை வானின் கடத்திச் சென்று காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்கரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட…
-
- 1 reply
- 705 views
-