ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
இலங்கையில் நடந்ததைக் கூறி, நடந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாம் முன்னேறமுடியும். அதன்மூலமே மக்களிடம் நல்லெண்ணத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்தமுடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நோர்வே தூதுவர் கில்டி ஹரல்ற்சட், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இன்று முற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் தெரிவித்தவை வருமாறு:- தற்போதைய அரசியல் சூழல், ஏற்பட்ட மாற்றம், மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் தமிழ்மக்களுக்கு சாதகமாகவுள்ளனவா போன்ற விடயங்களை நோர்வே தூதுவர் எம்மிடம் கேட்டறிந்தார். அரசியல் சூழ்சிலையில் மாற்றம் ஏற்பட்டுள்…
-
- 2 replies
- 389 views
-
-
இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு வெற்றி – எம்.ஏ சுமந்திரன் இலங்கையின் 200 வருட நீதித்துறைக்கு கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்வரும் 07ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது. இந்தநிலையில் இந்த வரலாற்று…
-
- 1 reply
- 714 views
-
-
ஊட்டியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ பயிற்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கழகத்தில் இலங்கை ராணுவ வீரர்கள் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது. இதனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் வலுத்ததால் இலங்கை இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.ஈழ இணையம்
-
- 7 replies
- 926 views
-
-
28 ஆண்டுகளின் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை செல்கிறாhர். இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமரின் தற்போதைய பயணம் அங்கு ஓர் நிரந்தரத் தீர்வையும் அமைதியையும் உண்டாக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியப் பிரதமர் ஒருவர் வடமாகாணம் செல்வது இதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குக் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு வாழ் தமிழரின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண மதிப்புக்குரிய பிரதமர் மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் உறுதி பூண்டிருப்பதைக் கனடியத் தமிழர் பேரவை வரவேற்கிறது. 2009ஆம் ஆண்டின் பின் நில அபகரிப்பு, தடுத்து வைத்…
-
- 0 replies
- 157 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் மைத்திரிபால சிறிசேன… November 19, 2018 பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற சர்வ கட்சி சந்திப்பின்போது தம்மால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதற்கு பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அரசியலமைப்பின் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்ததன் பின்னர் ஒரு சில தரப்பினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஜனா…
-
- 0 replies
- 608 views
-
-
வியாழன் 24-05-2007 17:37 மணி தமிழீழம் [சிறீதரன்] ஈ.பி.டி.பினரால் கப்பல் பயணிகளிடம் பணம் பறிப்பு யாழ்ப்பாணம் திருகோணாமலைக்கு இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பிரயாணிகள் கப்பலில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் பணம் அறவிட்டு வருவதாக கப்பல் பயணத்தை மேற் கொள்பவர்கள் தெரிவிக்கின்றார்கள். கப்பலில் பொது மக்களே தமது பயணப் பொதிகளைத் தூக்கி ஏற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் கப்பலில் நிற்க்கும் இருவர் கப்பல் பயணத்தின் போது பயணிகளிடம் கப்பல் புறப்பட்டு சில நிமிட நேரத்தில் பொதிகள் ஏற்றியதாகக் கூறி ஒவ்டிவாருதரும் பொதிக்கு ஐம்பது ரூபா என்ற அடிப்படையில் பணம் தர வேண்டும் எனக் கூறி பணம் பறித்து வருவதாக கப்பல் பயணிகள் தெரிவிக்கின்றார்கள். இது சம்பந்தமாக கப்பல் கப்டனுக்குப…
-
- 0 replies
- 722 views
-
-
இலங்கையின் கொலைக்களம் - உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்களும் வெளியாகி உள்ளன:- 27 ஜூலை 2011 சனல் 4 வெளியிட்ட மிக முக்கியமான விடயங்கள் - கேளுங்கள் பாருங்கள் http://bcove.me/1k9i6jv4 http://bcove.me/knq597e0 போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவும் படையணிகளின் தலைமையதிகாரி சர்வேந்திர சில்வாவும் உத்தரவிட்டதாக இறுதிப்போர் இடம் பெற்ற போது அங்கிருந்த இரண்டு பேர் சனல் 4க்கு அளித்த புதிய சாட்சியங்களை அது இன்று வெளியிட்டுள்ளது. சாட்சிதாரிகளில் ஒருவரான இராணுவ அதிகாரி ஒருவர் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான உத்தரவாதம் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நிலையில், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்புத் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்- ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் எவ்வாறான சூழ்நிலை நிலவுகின்றது? என அவர்கள் எங்களிடம் வினவினர். அதற்கு நான் ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை தூதருக்கு விளக்கியதுடன் தமிழ் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புக்களையும் எடுத்துக் கூறினேன். இந்தக் கருத்துக்களை அவர்கள் புரிந்துகொண்டதன் பின்னர் , வடபகுதிக்கு தற்போது எத்தகைய உதவிகள் தேவை என…
-
- 1 reply
- 470 views
-
-
புதன் 30-05-2007 04:35 மணி தமிழீழம் [தாயகன்] இளைஞர்களைக் கைது செய்வதற்காக இராணுவத்தினரே கண்ணிவெடியைப் பொருத்தினர் யாழ் தென்மராட்சி வரணிஇ மந்துவில் பகுதிகளை கடந்த திங்கட்கிழமை சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினர்இ கிளைமோர் கண்ணிவெடி பொருத்தியதாகக் கூறி இரண்டு இளைஞர்களைக் கைது செய்திருந்தனர். சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த இரண்டு இளைஞர்களும் நேற்று முன்னிறுத்தப்பட்டபோதுஇ இளைஞர்களைக் கைது செய்வதற்காக படையினரே கிளைமோரைப் பொருத்தியதாக நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் கூறப்பட்டுள்ளது. வறணி இயற்றாளையைச் சேர்ந்த 18 வயதுடைய குமாரு தயாநந்தன் மந்துவிலைச் சேர்ந்த 19 வயதுடைய ஆறுமுகம் கமலதீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர். நன்றி பதிவு
-
- 1 reply
- 1k views
-
-
இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறப்பு! போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே, பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். http://athavannews.com/ஜனாதிபதி-கிளிநொச்சிக்க/
-
- 1 reply
- 563 views
-
-
ஒரு வாரத்தில் 1,000 பேர் கடத்தல்? சிறிலங்காவில் ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் பரப்பப்படுவதில் உண்மை ஏதும் இல்லை என்று அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கேகலிய ரம்புக்வெல, சில ஊடகங்கள் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் சிறிலங்காவின் நன்மதிப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டுவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இவை உண்மையல்ல. அதேபோல் பல முஸ்லிம்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார் அவர். ஆனால் எந்த ஊடக நிறுவனம் அத்தகைய செய்திகளை வெளியிட்டத…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்த் தலைமைகளின் பின்னடிப்பும் தமிழினத்தின் பின்னடைவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்தை நெருங்கும் இவ் வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தின்போது இருந்த துடிப்பும், வேகமும் பதவியேற்பதில் இல்லாமல் போனமை தமிழர்தரப்பின் பலவீனங்கள் எங்கேயுள்ளன என்பதை கோடிகாட்டும். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்துவிட்டால் உடனடியாகவே பதவியை ஏற்று பணியை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் சுணைக்கெட்ட தமிழ்த் தலைமைகள் எதிலுமே பின்னடிப்பு. இந்த பின்னடிப்புத் தான் தமிழினத்தின் பின்னடைவுக்குக் காரணம் என்பது உணர்தற்குரியது. பரவாயில்லை, ஏதோ பதவியை ஏற்று உள் ளூராட்சி சபைகளின் ஆட்சிக்கு வந்த பின்னராவது…
-
- 0 replies
- 598 views
-
-
கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா APR 09, 2015 | 1:25by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறவனத்தின் பணிப்பாளரான ஆர்.என்.நாயக், புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்தியாவின் பவர் கிரின்ட் கோப்பரேசன் நிறுவனமும், சிறிலங்காவின் மின்சார சபையும் இணைந்து, 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை நிறுவுவது தொடர்பான…
-
- 3 replies
- 419 views
-
-
யாழ். குடாநாட்டில் பெருமளவான சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 9,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் என அமைப்புக்களுக்கு இடையிலான பிராந்திய குழு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐந்து வயதுக்கும் குறைவான இந்த சிறுவர்களுக்கு உயர்சக்தி கொண்ட பிஸ்ட்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். எனினும் யாழ். குடாநாட்டில் தற்போதுள்ள கையிருப்பு எதிர்வரும் 4 அல்லது 6 வாரங்களுக்கே போதுமானவை. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வெல்லாவெளி பகுதிகளில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உணவே பிரதான தேவையாக உள்ளது. தமது சத்துணவு திட்ட…
-
- 0 replies
- 766 views
-
-
வெள்ளவத்தையில் வீடு வாங்கி ஏமாந்தார் யாழ்.வர்த்தகர்! Published on August 22, 2011-8:58 am சட்டவிரோதமாக காணி,வீடு பரிவர்த்தனைகளில் பின்னணியில் இருப்போரைக் கண்டுபிடிப்பதற்கு குழுவொன்றை குற்ற விசாரணைத் திணைக்களம் நியமித்திருக்கின்றது என சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்திருக்கிறது. முறைப்பாடுகள் அதிகரித்ததையடுத்தே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலில் இந்த விசாரணை இடம்பெறுகிறது. போலி ஆவணங்கள், உரிமையாளர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் விடயங்கள், வீடுகளின் உரிமையாளர்களிடமிருந்து பணத்தை கப்பமாகப் பெறுதல், ஏனையோரின் நிலத்தை விற்றல், அடைமானம் வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக சி.…
-
- 0 replies
- 900 views
-
-
மைத்திரியின் மகள் சத்துரிகா பொதுத்தேர்தலில் போட்டி? [Wednesday 2015-04-15 10:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பூட்டான் பிரதமர் இலங்கை வந்திருந்தபோது அவரது மனைவியின் உதவிப் பெண்ணாக மைத்திரியின் மகள் செயற்பட்டார். இதனையடுத்தே இந்தச் செய்தி கசிந்துள்ளது. சத்துரிக்கா சிறிசேன, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தனது தந்தையின் தேர்தல் பிரசார பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். தமது தந்தை பொதுவேட்பாளராக களமிறங்கியமை தொடர்பில், அப்போது அடிக்கடி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தும் வந்தார். தேர்தல் வெற்றியையடுத்து அவரது கணவரான திலின சுரஞ்ஜ…
-
- 2 replies
- 1.7k views
-
-
புலமைப் பரிசில் பெறுபேறுகள் வெளியாகின! 2023ஆம் ஆண்டின் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளி விபரங்கள் http://www.samakalam.com/புலமைப்-பரிசில்-பெறுபேற-9/
-
- 0 replies
- 173 views
-
-
மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம் [19 - June - 2007] * ரிரான் அலஸ் கூறுகிறார் கே.பி.மோகன் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தா…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
சிறிலங்கா கறிவேப்பிலைக்கு ஐரோப்பிய நாடுகளில் தடை இத்தாலி, சைப்ரஸ், கிறீஸ், மால்டா போன்ற நாடுகளுக்கு, சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இத்தாலியின் கட்டானியா, சிசிலியில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. EUROPHYT அறிவித்தலின் மூலம், சிறிலங்காவில் இருந்து, கறிவேப்பிலைகளைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த நாடுகளுக்கு வரும் பயணிகள் சிறிலங்காவில் இருந்து கறிவேப்பிலைகளை எடுத்து வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இருந்து இத்தாலிய விமான நிலையங்களுக்கு வந்தவர்களின் பைகளில் இருந்து கறிவேப்பிலைகளை, இத்தாலிய சுங்கப் பிரிவினர் பறி…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டு முகாம்களில் இருக்கின்ற இலங்கையரை அழைத்து வர ஏற்பாடு 9/2/2011 10:16:53 AM தமிழ்நாட்டில் உள்ள சுமார் 31 முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற பல்லாயிரக்கணக்கான மக்களை மீண்டும் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டுவருகிறது. இப்போது யுத்தம் முடிவடைந்து நாட்டில் மீண்டும் அமைதியும் சமாதானமும் திரும்பிக்கொண்டிருப்பதனால் அவர்கள் இலங்கை திரும்பி தங்கள் உறவுகளுடன் ஒன்றிணைந்து வாழ இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் நாட்டு முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களை மீண்டும் இங்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத…
-
- 0 replies
- 380 views
-
-
புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற விடமாட்டோம் – மகிந்த அணி கொழும்புச் செய்தியாளர்Jan 02, 2019 | 0:58 by in செய்திகள் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். “ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் இடமளிக்காது. புதிய அரசியலமைப்பு தேவையா, அல்லது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பு மாற்றத்துக்கு, மக்களின் ஆணையை அரசாங்கம் பெற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 635 views
-
-
மக்கள் பிரதிநிதிகளான எமக்கும் பல தேவைகள் உண்டுஇது குறித்து ஊடகங்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை வீரகேசரி நாளேடு மக்கள் பிரதிநிதிகள் என்றாலும் எங்களுக்கும் தனிப்பட்ட தேவைகள் இருக்கின்றன. நாங்கள் உணவு உட்கொள்ளவேண்டும். முடிவளர்க்கவேண்டும். உடைஅணியவேண்டும். இவ்வாறு பல தேவைகள் உள்ளன. நாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் சொகுசு வாகனங்களில் சென்றோம். அரசியலுக்கு வந்த பின்னரும் சொகுசு வாகனங்களை பயன்படுத்துகின்றோம். இவை குறித்து ஊடகங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை பொறுப்புடன் மேற்கொண்டால் குற்றவியல் சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படாது. ஊடகத்துறை அமை…
-
- 1 reply
- 992 views
-
-
வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை - பசில் 08 செப்டம்பர் 2011 வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை மூலம் பார…
-
- 2 replies
- 391 views
-
-
மிக் விமானம் – கோத்தபாய – லசந்த – தொலைக்காட்சி நிகழ்ச்சி – குற்ற விசாரணை…. January 8, 2019 மிக் விமானம் கொள்வனவுத் தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கோத்தபாய ராஜபக்ஸ இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இரகசிப் காவற்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிக்ழச்சியின் நகல் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நீதிமன்றம் ஊடாக குறித்த தொலைக்கட்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச…
-
- 0 replies
- 362 views
-