Jump to content

கருணாவை லண்டனுக்கு கள்ளப் பாஸ்போட்டில் அனுப்பியது கோத்தா!


Recommended Posts

அவுஸ்த்ரேலிய பிரஜையான குமார் குணரட்ணம்,வேறு ஒரு பெயரில் இலங்கைக்குள் நுளைந்துள்ளார் எனவும் அவர் கள்ள பாஸ்போர்ட் மூலமே இலங்கைக்குள் வந்தார் எனவும் கோத்தபாய குற்றஞ்சாட்டியிருந்தார் .பின்னர் குமார் குணரட்ணம் நாடுகடத்தப்பட்டதும் யாவரும் அறிந்ததே.

இது குறித்து அவுஸ்த்ரேலிய விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோத்தபாயகோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் 2007ம் ஆண்டு கள்ளப் பாஸ்போர்ட் மூலம் கருணாவை லண்டனுக்கு அனுப்பிய கோத்தபாய எவ்வாறு குமார் குணரட்ணம் குறித்து கருத்துக்களை வெளியிட முடியும் என சில ஆங்கில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது.விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு கருணா பிரிந்த பின்னர், தனது மனைவியை அவர் லண்டனுக்கு அனுப்பிவைத்தார். அவர்களைச் சென்று பார்வையிட தான் ஆவலாக உள்ளதாக அவர் மகிந்தரிடமும் மற்றும் கோத்தபாயவிடமும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து 2007 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி, D1944260 என்ற இலக்கம் கொண்ட இராஜதந்திரிகளுக்கான பாஸ்போர்ட்டை இலங்கையின் குடியகல்வு அதிகாரசபை வழங்கியுள்ளது. கொகில குணவர்த்தன என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்த பாஸ்போர்ட்டில் கருணாவின் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகார சபை கோத்தபாயவின் பாதுகாப்பு அமைச்சுக்கு கிழ் நேரடியாகச் செயல்ப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே கோத்தபாயவுக்குத் தெரியாமல் அங்கே எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை.

இந் நிலையில் வழங்கப்பட்ட பாஸ்போட்டை, இலங்கை குடியகல்வுத் திணைக்களமே பிரித்தானிய தூதுவராலயத்துக்கு அனுப்பி, விசாவைப் பெற்றுள்ளது. 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி, இலங்கையில் உள்ள பிரித்தானியத் தூதுவராலயம் 6 மாத கால விசாவை வழங்கியுள்ளனர்.

லண்டனில் நடைபெறும் காலநிலை மாற்றம் என்ற மாநாட்டில் கலந்துகொள்ளவே கொகில குணவர்த்தன(அதாவது கருணா) செல்கிறார் என்று பிரித்தானியத் தூதுவராலயத்துக்குச் சொல்லப்பட்டுள்ளது.

மற்றும் அதற்கான விண்ணப்பத்திலும் இக் காரணங்களே குறிப்பிடப்பட்டுள்ளதாம். 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு கருணா கொழும்பு விமானநிலையம் சென்றடைந்தார்.

பின்னர் அதிகாலை 2.05 க்கு அவர் யூஎல்.505 என்ற ஏர்-லங்கா விமானத்தில் லண்டன் நோக்கிப் பயணித்துள்ளார். லண்டன் வந்த அவர் மிக எழிதாக ஏர்போட்டில் இருந்து வெளியே சென்று, கென்சிங்டன் என்னும்(லண்டன் புறநகர்ப்பகுதி) இடத்தில் உள்ள தொடர்மாடி வீடு ஒன்றில் வசித்துவந்தார்.

அங்கே அவரது மனைவியும் வரவழைக்கப்பட்டார். (கருணாவின் மனைவி தற்போது அயர்லாந்தில் வசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது). இவ்வாறு சுமார் 6 வாரங்கள் கருணா லண்டனில் வசித்துவந்தவேளை, இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், பிரித்தானியப் பொலிசார் இவரைக் கைதுசெய்தனர்.

அவர் வீட்டில் இருந்த பாஸ்போட்டையும் கைப்பற்றினர். கைதான கருணா பிரித்தானியப் பொலிசாரின் கேள்விகள் பலவற்றிற்கு பதில்சொல்லாமல் காலத்தைக் கடத்தி வந்தார். இறுதியில் தாம் குற்றவாழி என்று இனம்காணப்பட்டால் தனக்கு 10 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என்பதனை உணர்ந்து பின்னர் உண்மைகளை உளற ஆரம்பித்தார்.

இதனூடாகவே பிரித்தானியப் பொலிசார் பல உண்மைகளை விளங்கிக்கொண்டனர். கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரிலேயே கருணாவுக்கு கள்ளப் பாஸ்போட் வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படியான ஒரு திருட்டுவேலை செய்த கோத்தபாய, குமார் குணரட்ணம் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்க தகுதியுடையவரா ? என சில ஆங்கில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ஒரு குற்றச்செயல் தொடர்பாக மற்றவர்களை குற்றஞ்சொல்ல முன்னர் நீங்கள் சுத்தமானவரா என்று பார்ப்பது நல்லதல்லவா.

http://thaaitamil.com/?p=16035

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ரொம்ப ஓவர் ரூமச்.. உண்மையிலேயே கோத்தா ஒரிஜினல் பாஸ் போர்ட் கொடுத்திருந்தாலும். அதை இவர் கருணா ஏத்துக்கமாட்டார்.. பிறப்பு அப்பூடி..! டூப்பிளி கேட்டை விரும்பி கேட்டு பெற்று கொண்டார் என்றுதான் வரவேணும்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.