Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயர் மற்றும் மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் புதிய நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான அர்ஜூன ஒபேசேகர, உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும் இதன்போது, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோவும் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சஷி மஹேந்திர, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். https://athavannews.com/2021/1222500

  2. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்புக்கள் 20 வருடங்களுக்கு நீடிக்கும்! June 15, 2021 கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இன்னும் 20 வருடங்கள் வரையில் காணப்படுமென தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதன் பாதிப்புக்களை டொலர்களில் மதிப்பிட முடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து, கடலில் கலந்த பாரியளவான பிளாஸ்டிக் பொருள்கள் தற்போது 40 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடலில் இன்னும் எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருக்குமென ஆராய முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்க…

    • 1 reply
    • 200 views
  3. முல்லைத்தீவில், மக்களின் விவரங்களை திரட்டும் காவற்துறை! June 15, 2021 முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில், காவற்துறையினர், நேற்று (14.06.21) ஈடுபட்டனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், காவற்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க காவற்துறை கட்டளைச் சட்டத்தின் 76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை என, அந்த படிவத்தில் குறிப்பிடப…

  4. மேய்ச்சல் நில ஆக்கிரமிப்பால் மாடுகளை விற்கும் பண்ணையாளர்கள் 163 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்கள் செயற்படுவதன் காரணமாக பலர் மாடுகளை விற்பனை செய்துவிட்டு வேறு தொழில்களை நாடிச் சென்றுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் மேய்ச்சல் தரைக் காணிகளை பயிர்ச்செய்கை என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுனரின் ஏற்பாட்டில் வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்த சிங்கள மக்களினால் அபகரிக்கப்பட்டது. இதன்போது பண்ணையாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர் கொண்டு வந்ததுடன் …

  5. எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : நாடு திரும்புகின்றார் பசில் ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஜூன் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அமைச்சரை பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பு கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை…

  6. நயினாதீவு கடலில்... கரையொதுங்கும் மருத்துவக்கழிவுகள் – அச்சத்தில் மக்கள்! நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் போட்ட நிலையில் இங்கு, வந்தவையா என்ற குழப்ப நிலையே காணப்படுவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(திங்கட்கிழமை) கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1222704

  7. மட்டக்களப்பில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை! மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில் மேலும் புதிதாக 4 பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புணானை பொலிஸ் சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை பொலிஸ் நிலையமாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி பொலிஸ் நிலையமாகவும், மட்டக்களப…

  8. கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட செலவுகளை உள்ளடக்கியது என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இழப்பீடு பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். தீயைக் கட்டுப்படுத்த இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட செலவு அடங்கலாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் இடைக்கால உரிமைகோரலைக் கொடுத்துள்ளளாதாக அமைச்சர் கூறினார். இதேவேளை கப்பல் நிறுவனத்திடமிருந்து முக்கிய…

  9. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிதியுதவி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார். மேலும் இது ஒரு கடன் தொகை அல்ல எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த நிதி கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், எதிர்வரும் ஒகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்கப்படுவதாகவும் சந்திரநாத் அமரசேகர கூறினார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனொன்றைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்திரநாத…

  10. 'நான் ஏன் பாராளுமன்றம் செல்கின்றேன்': மனந்திறந்தார் ரணில்..! (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், பாராளுமன்றம் செல்வதற்கு நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றா…

    • 1 reply
    • 544 views
  11. ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம் இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது. ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்த…

    • 6 replies
    • 538 views
  12. தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே பிரதேச செயலக விடயத்தில் சிலர் தடையாக உள்ளனர் – தவராசா கலையரசன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் வேளையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை-2 கிராமத்தில் அரச காணிக்குள் மண் இட்டு நிரப்பி சலவை தொழிலாளிகள் தொழிலை மேற்கொள்ளும் தோணா பகுதியினையும் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் சில முஸ்லிம் நபர்கள் ஈட்டுப்பட்டு வந்தனர். இது தொடர்பில் அப்பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த…

  13. எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : ஆளும்கட்சியின் விசேட ஊடக சந்திப்பு மேலிடத்தின் அறிவுறுத்தலை அடுத்து இரத்து!! எரிபொருள் அதிகரிப்பு சர்ச்சை தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (14) நடைபெறவிருந்த ஊடக சந்திப்பை ஆளும்கட்சி இரத்து செய்துள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் உயர்வுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு தனது அமைச்சரவை பதவியை இராஜினாமா செய்யுமாறு கூறியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றவிருந்தார். சாகர காரியவசத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் உயர்வு என்பது அரசாங்கத்தின் கூட்டு முடி…

  14. பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – கோயில்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டம்! ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. மேலும் இதன்போது, பாடசாலைகளை கோயில்களிலும் மர நிழல்களிலும் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரம், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகளை கட்டங்கட்டமாக மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில …

  15. மலையக தலைமைகள்... பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வந்தால், கை கோர்க்க தயார்!- கஜேந்திரகுமார் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு வரும்போது அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித தடையும் கிடையாதென யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மஸ்கெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்தப்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும், ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பா…

  16. பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கத் தயாராகும் ரெலோ, புளொட்..! (ஆர்.ராம்) பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை அடுத்துவரும் காலங்களில் முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) ஆகியன முன்னெடுத்துள்ளன. இதற்கான முதலாவது கட்டப்பேச்சுக்கள் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் நடைபெற்றுள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் மூலம் உறுதி செய்ய முடிந்துள்ளது. இந்த உரையாடலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சம்பந்தன் சுகவீன விடுமுறை எடுத்துள்ள நிலையில் தற்போது அ…

  17. (13.06.2021) திரு. சுமந்திரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு

  18. மக்கள் ஏற்கனவே வாழ்க்கை செலவு நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், எரிபொருள் விலையை ஏற்றியமைக்கு பொறுப்பேற்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில ராஜினாமா செய்ய வேண்டுமென கூறுவது யார்? ஆளுகின்ற பொதுஜன பெரமுன (SLPP) ஆளும் கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் எம்பி. அரசின் இந்த திடீர் “நன்னடத்தையை” பார்த்து, “உலக மகா நடிப்புப்புடா” என நாடு முழுக்க மக்கள் மயங்கி வாயடைத்து நிற்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி தனது சமூக உடகங்களில் கூறியுள்ள கருத்தை தேசிய ஊடகங்களுக்கு மேலும் விவரித்து கூறியுள்ளதாவது, பிழை நடந்தால், இப்படி பொறுப்பேற்று ராஜினாமா செய்வற்கு நல்லதே. அது நாகரீக அர…

    • 1 reply
    • 580 views
  19. அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கிறார் ரணில்..!: ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்தால் தேசிய பொருளாதாரம் பாதாளத்தில் விழும் (எம்.மனோசித்ரா) ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு அப்பால் சென்று நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி ஜி.எஸ்.பி. சலுகையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டடும் என முன்னாள் பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பிடிவாதத்துடன் செயற்பட்டு ஜி.எஸ்.பி. சலுகை இழக்கப்படுமாயின் சர்வதேச சந்தையில் இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் தேயிலைக்கு காணப்படும் வாய்ப்ப்ப…

    • 4 replies
    • 732 views
  20. ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் June 13, 2021 (க.கிஷாந்தன்) ” ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்றபோது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.” – என்று தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று (13.06.2021 ) முன்னெடுத்திருந்தது. இவ் நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததன் பின் சமகால …

  21. நடராசா கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, பால்பண்ணை அமைந்திருக்கும் ஜே/144 கிராமசேவையாளர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு, விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். யாழ். மாவட்ட மக்களுக்கு 50,000 தடுப்பூசிகள் அண்மையில் வழங்கப்பட்டபோதும், அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பால்பண்ணைக் கிராமத்துக்கு தடுப்பூசி வழங்கப்படாதமை குறித்து, அந்தக் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்தே, அமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார். யாழ். மாவட்டத்துக்கு அடுத்த தொகுதி தடுப்பூசிக…

  22. மன்னார்: இறால் பண்ணையால் மீனவர் குடும்பங்கள் பாதிப்பு 18 Views மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலுப்பக்கடவை பகுதியில் அமைக்கப்படுகின்ற இறால் பண்ணையால் அக்கிராமத்தில் கரையோர மீன்பிடியை நம்பி வாழும் 100ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக இலுப்பக்கடவை மீனவ மக்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது, ”நாங்கள் இலுப்பக்கடவை மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாது என்ற படியினால் எங்கள் குடும்பங்களில் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றோம். இங்கு இறால் பண்ணை…

  23. நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்! கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பலரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், எனினும் ஒரு சிலரது நடவடிக்கை வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டார். அ…

  24. அரசாங்கத்தை... வீட்டுக்கு, அனுப்புவோம்- எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் சுமந்திரன் தற்போதைய அரசாங்கம் கோரமான ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்குமாயின், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, ‘மக்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் அரசாங்கம் தற்போது பிரயோகித்து வருகின்றது. அரசாங்கம் மக்களின் நலன்களில் அக்கறை காட்டாமல், குடும்ப ஆட்சியை ந…

    • 2 replies
    • 479 views
  25. (ஆர்.ராம்) நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் விமர்சனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பினை மையப்படுத்தியே இந்த மீளாய்வு முன்னெடுக்கப்பட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக நீதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் கூட்டாக இணைந்து பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த மீளாய்வைச் செய்வதற்காக…

    • 1 reply
    • 444 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.