ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
தமிழ் மக்கள் ஒன்றிணைவதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் மாகாண சபைத் தேர்தலை பிரயோசனப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்ற பின்னர், 13வதுஅரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் உள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பதை சர்வதேசமும், இலங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்து க…
-
- 0 replies
- 307 views
-
-
பாடசாலைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க தீர்மானம் யாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10,354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்களில் 5,957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவி…
-
- 0 replies
- 184 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய படைத்துறை அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடருக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டி வருவதுடன் அது பற்றிய சுயாதீன விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி வரும் நிலையில், படை அதிகாரிகளுக்கு மதிப்பளிப்பதற்காக அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடருக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார் மகிந்த. செப்ரெம்பர் மாதம் 23 ஆம் நாள் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரின்…
-
- 1 reply
- 487 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று இலங்கை செல்லும் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ் நோக்கி இன்று புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இந்த விஜயத்தின் போது, பெலாரஸ் ஜனாதிபதி அலக்ஸ்சாண்டர் லுகஷேன்கோ, பிரதமர் மிஹாயில் மியஸ்னிகோவ், சபாநாயகர் ஹெனடோலி ருப்நேவ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அந்த நாட்டு பிரதமருடன் வர்த்தக சமூகத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதியுடன் இலங்கையின் வர்தத்கர்களும் இந்த பயணத்தில் இணைந்…
-
- 0 replies
- 298 views
-
-
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார் சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறை…
-
- 15 replies
- 832 views
-
-
சிவில் வானூர்தி நிலையமாக பலாலியை மாற்றவேண்டும் - கூட்டமைப்பிடம் கோருகின்றது யாழ்ப்பாண வணிகர் கழகம் பலாலி வானூர்தி நிலையத்தை யும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் மிக விரைவில் சீரமைத்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை வணிகர் கழகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த காலங்களில் உதாசீனம் செய்யப்பட…
-
- 1 reply
- 359 views
-
-
விடுதலைப்புலிகளால் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கல்கிஸ்சை காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியாக சேவையாற்றிய ஜே.ஜெயரத்னம் விடுதலைப்புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவலை தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். வன்னியில் தடுத்து வைக்கப்பட்;டிருந்த ஜெயரத்னம், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில், புலிகளின் மரணத் தண்டனை வழங்கும் நபரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா தொழிற்நுட்ப கல்லூரி கட்டடித் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் சிலர் கூறியதாகவும் பாதுகாப்பு தரப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களில் ஜெயரத்னம் தடுத்து வைக…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகளின் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர் 08 செப்டம்பர் 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் 107 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். நாளைய தினம் இந்தப் போராளிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதன்படி, இன்னமும் 232 முன்னாள் போராளிகள் மட்டுமே சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். வவுனியாவில் இந்த முன்னாள் போராளிகள் நாளைய தினம் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். குறித்த முன்னாள் போராளிகள் வெற்றிகரமாக தொழிற் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். 11631 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கப்படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்களில் 232 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், ஏனைய அனைவருக்கும் …
-
- 1 reply
- 973 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவுக்கும் கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்க உள்ளது. பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் தலைவர்களுக்கான கலாநிதி பட்டம் வழங்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், நிகழ்வில் அரச தலைவர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வார் என மட்டும் அரச தலைவர் செயலகம் உறுதிப்படுத்தியது. அண்மையில் நடந்த, பல்கலைக்கழப் பேரவைக் கூட்டத்தில் அரச தலைவருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் கௌரவ கலாநிதி பட்டம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் இறைமை, நிலபுல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாது…
-
- 0 replies
- 338 views
-
-
சக்தி டிவி செய்திகள் 26th May 2017, 8PM
-
- 0 replies
- 411 views
-
-
கொஞ்சம் பழசுதான்...இருந்தாலும் பார்க்கப்படவேண்டியது.... Click Here.
-
- 0 replies
- 1.5k views
-
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், மே-4-ம் தேதியன்று இளைய தளபதியருக்கு நிறை வாகக் கூறியவை இரண்டு விஷயங்கள். முதலாவது, ஈழ விடுதலைப் போராட்டத்தின் சமகால பின்னடைவு களுக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித் தது. இரண்டாவது, ஈழ வரலாற்றின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனின் வாள் பற்றியது. தமிழ் எழுச்சிக்கான முழக்கமாகவும், அறைகூவலாயும் பண்டாரவன்னியனின் வாளை வரலாற்றுக் குறி யீடாக நிறுத்திய பிரபாகரன் அவர்களின் உணர்ச்சி மிகு உரை நிறைவை உங்களுக்குச் சொல்லுமுன், மறக்க முடியாத முக்கியமான கடிதம் ஒன்றை இங்கு நான் திறந்து படிக்க வேண்டும். பிரபாகரன் போராட் டப் பின்னடைவுக்கான காரணங்களாய் முள்ளிவாய்க் கால் களத்தில் நின்றுகொண்டு பட்டியல் இட்டவற்றிற் கும் அக்கடிதத்திற்கும் நிறைய தொடர்பிருப்பதால், இங்க…
-
- 0 replies
- 934 views
-
-
தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டன! September 22, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை ஆ…
-
- 0 replies
- 812 views
-
-
ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் இந்திய உளவாளிகள் தமிழர்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு கதியில்லை என்று பலத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள விளையாட்டரங்கை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் இந்தியாவில் இருந்து பல உளவாளிகள் ஊருடுவியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்களின் பணி அங்குள்ள மக்களின் மன நிலையை அறிந்து அதை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதுதான் என்று அறியப் படுகிறது. இது போல இலங்கையின் பல பாகங்களிலும் இந்திய உளவாளிகள் செயற்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் வானொலி தொலைக் காட்சி சேவைகளின் நேயர் நேரங்களில் இதுவரை பங்கு பற்றி தகாத வார்த்தைப் பிரயோகம் வீண் வாதம் விடுதலை புலிகள்மீது வசை பாடுதல் போன்…
-
- 8 replies
- 1.9k views
-
-
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிக்கலானவையாக இருக்கின்றன என்றும் அதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதனால், இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்த முடியாமல் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர்கள் மட்டத்திலான ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் பண்டாரநாயக்க நினைவு அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமானது. அரச தலைவர் அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். "இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்தும் பணிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கண்ணிவெடிகளை அகற்றும் பணி எமது முழுமையான கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால், முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட அப்பணிகள் கு…
-
- 0 replies
- 272 views
-
-
News1st Tamil Prime Time, Saturday, July 2017, 8PM
-
- 0 replies
- 300 views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 02/11/2009, 13:19 சிறீலங்காக் காவல்துறை மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவினால் புதிய சிறீலங்கா காவல்துறை மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா காவல்துறை மா அதிபராக இருந்த ஜயந்த விக்கிரமரட்ட நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் பணி ஓய்வு நிலைக்குச் செல்வதால் அவரின் இடத்திற்கே மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளார். pathivu
-
- 0 replies
- 471 views
-
-
அலரிமாளிகையைச் சுற்றி வெற்றி பெற்றவர்கள் வட்டமிட வெற்றிக்காக உழைத்தவர்களை படையினர் வட்டமிடுகின்றனர்: 21 அக்டோபர் 2013 இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய TNA ஆதரவாளரான இளைஞர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் முதல்வரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்தும் பழிவாங்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவ்வகையில் யாழ்.தீவகப்பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை (21.10.13) சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஊர்வாவற்றுறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய…
-
- 1 reply
- 648 views
-
-
புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும் புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (06) பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில…
-
- 5 replies
- 442 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை தெரிந்துகொள்வது எமது உரிமை – கொழும்பு பேராயர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வது தமது உரிமையாகும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை மாத்திரமே தாம் எதிர்பார்ப்பதாகவும் அதிக பணத்தை வழங்க வேண்டும் என்றோ, ஏனைய வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும் என்றோ தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார். நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விசேட ஞாயிறு ஆராதனைகளின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அப்பாவி ம…
-
- 0 replies
- 100 views
-
-
இராணுவத்திற்கான உணவு விநியோகம் செய்தமைக்கான பல மாத கொடுப்பனவு நிலுவையிலுள்ளதாக உணவு விநியோகம் செய்யும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உணவு விநியோகத்தை நிறுத்த வேண்டி ஏற்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இராணுவத் தளபதிகளுக்கு குறித்த நிறுவனம் எழுத்துமூலம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சராகவும், அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ஷ செயலாளராகவும் பதவி வகிக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கே வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி கடந்த வருடம் ஒதுக்கப்பட்டது. உணவு விநியோகம் செய்ததில், இராணுவத்திற்காக ஒரு வருட கால கொடுப்பனவும், கடற்படையினருக்கு 9 மாதகால கொட…
-
- 1 reply
- 691 views
-
-
மட்டு. மாவட்ட செயலாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் இரு பிரதேச செயலாளர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு (பட்டிருப்பு நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை இடமாற்றக்கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று திங்கட்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்டது. ஊழலுக்கு எதிரான மக்கள் பேரணியும் நியாயமான அதிகாரிகளின் இடமாற்றத்தினை ரத்துச்செய்வதற்குமான வேண்டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்டமமும் பேரணியும் நடைபெற்றது. மட்டக்களப்பில் ஊழல்களில்…
-
- 0 replies
- 219 views
-
-
தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்! மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தீவகம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில், கடற்படையினரின் தேவைக்காக, இன்று காலை, 3 இடங்களில் ஒரே நாளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக, நில அளவை திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜே/10 கிராமசேவையாளர் பிரிவு – அல்லைப்…
-
- 0 replies
- 317 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிபர் தேர்தலில் மஹிந்த இராஜபக்ஸ அவர்களை ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார் வி.முரளிதரன். மஹிந்த இராஜபக்ஸ ஒரு சிரந்த தலைவர் என்றும் ஆனால் எதிர்கட்சியோ பொறுப்புணர்வு இல்லாத ஒரு தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வர முயற்சி செய்வதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் எதிரணியினருக்கு வாக்குகளை போடமாட்டார்கள் எனவும் கூறியுள்ளது முரளிதரன்.
-
- 0 replies
- 887 views
-
-
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று ஆரம்பமாகியது. தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முதன்மை விருந்தி னராகவும், கலைப்பீடாதிபதி பேராசிரியர் க.சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான, அ.சண்முகதாஸ் மாநாட்டின் சிறப்புரையை வழங்கி, மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். மாநாட்டின்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கும், மொழிக்கும் தொண்டாற்றிய ஏழு புலமையாளர்களுக்குக் கௌரவம் வழங…
-
- 0 replies
- 266 views
-