Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 21 AUG, 2025 | 12:40 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாகவும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கொண்டவர்களின் முதல் ஆரம்பத்தை அவதானிக்கும்போது அவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் வசதி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கை மத்திய பொருளாதாரம் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் தான் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. வறுமை நிலையிலுள்ள நாட்டு மக்கள் எவ்வாறான உணவுகளை உட்கொள்கின்றனர்? அவர்கள் அதிகளவு சீனி மற்றும் உப்பு கொண்ட உணவுகளையே உட்கொ…

  2. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் -சொர்ணகுமார் சொரூபன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு வடமாகாணத்திலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று திங்கட்கிழமை (25) யாழில் வைத்து உறுதியளித்தார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவிலே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சுண்ணக்கல் இங்கு …

  3. கூட்டமைப்பு 20 ஆசனங்களை நிச்சயம் கைப்பற்றும்- செல்வம் எம்.பி. by : Litharsan எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் பேசுகையில், “தேசியத் தலைவரின் வழிகாட்டலில் உருவாக்கபட்ட கூட்டமைப்பு தனித்துவமான வரலாற்றுத் தன்மை கொண்டது. மக்களின் ஆணை எமக்கு நிச்சயம் கிடைக்கும். வன்னியில் 5 ஆசனங்களை நிச்சயம் நாம் பெற்று…

  4. போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள்: தமிழினி [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 07:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழ் மக்கள் அனைவரும் போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் கருத்துரை நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் போர் எழுச்சிகொண்ட காலகட்டத்தில் இந்த போர் எழுச்சி ஒன்றுகூடல் நடைபெறுவது சிறப்பாகும். விடுதலைப் போரின் நீண்ட பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் இப்போது நாம் வந்துள்ளோம். தமிழ்மக்கள் இ…

    • 0 replies
    • 765 views
  5. வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குமாறு சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது. வரும் ஒக்ரோபர் 10ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது தொடர்பான கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோருடனான சந்திப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில், கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றக் கோரும் விவகாரம் குறி…

  6. நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை! by : Benitlas நாடாளுமன்றத்தை தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஏன் இவ்வாறு கோருகின்றனர்? இவ்வாறானவர்கள் இல்லாமல் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணுகின்றனர். எவ்வித பயனும் இன்றி நாடாளுமன்றத்தைக் கூட்டி 92 இலட்சம் வீண் செலவு செய்ய எதிர்பார்ப்பது எதற்காக? நாடாளுமன்றம் கூட்டப்படாத சந்தர்ப்பத…

  7. 24 Sep, 2025 | 03:14 PM (செ.சுபதர்ஷனி) கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விச…

  8. மனித உரிமைகளுக்கான குரலை நசுக்கும் முயற்சி 29.08.2008 நாட்டில் மிக மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல் நிலைவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத அதிகார வர்க்கம், அந்த மனித உரிமை மீறல்கள் குறித்துக் குரல் கொடுக்கும் தரப்புகளின் குரல் வளையை நசிப்பது குறித்தே அதிகம் சிந்தித்து வருகின்றது. மனோகணேசன் எம்.பிக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் பலமணி நேர விசாரணையை அத்தகைய அடக்குமுறை நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே நோக்கவேண்டியிருக்கின்றது. அதனையே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  9. [size=3][size=1][size=4]மகாத்மா காந்தியின் 143 வயது ஜனன தினத்தை முன்னிட்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் காந்தி ஜனன தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாப்பட்டன.[/size][/size] [size=1][size=4]யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று காலை 9.30 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.[/size][/size] [size=1][size=4]தொடர்ந்து அவ்விடத்தின் கூடிய யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் நினைவு அஞ்சலி செலுத்தினர்.[/size][/size] [size=1][size=4]இந் நிகழ்வுகளில் அகில இலங்கை காந்தி சேவா சங்கதின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்த…

  10. அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்! 04 Oct, 2025 | 09:59 AM அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226851

  11. யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், அனைத்துப் பீட மாணவர்கள், கல்விசார ஊழியர்கள் அனைவரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். - See more at: http://www.tamilmirror.lk/172524/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%…

    • 1 reply
    • 359 views
  12. இலங்கை கடற்படையினரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக, கடற்புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். " முன்னர் கடற்புலிகளின் பலம் பற்றி அதிகம் எடைபோட்டிருந்தோம். ஆனால் தற்போது அவர்களது சகலவிதமான பலமும் அழிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினர் கடற்புலிகளின் பலத்தினை வெற்றிகரமாக ஒழித்துள்ளனர்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வெலிசர கடற்படைத்தளத்தில் நடைபெற்ற, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 100வது 'அரோ' எனும் பெயரிலான தாக்குதல் படகை பார்வையிடும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்ததன் மூலம், புலிகளின் ஆயுத விநி…

  13. சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. நியுயோர்க்கில், பார்க் அவென்யூவில் உள்ள ஆசிய சமூகத்தில் (AsiaSociety) வரும் டிசம்பர் 4ம் நாள் காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரை இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா, நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகளில் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர் ஸ்டீபன் ஜே ராப், நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிலிப் ஜி. அல்ஸ்டன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பார்வ…

  14. யாழ் நகர அபிவிருத்தி தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் நடைபெற்றது. 55மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நகர அபிவிருத்தி சபையினூடாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே வடக்கு மாகாணசபையில் கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், இன்று இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலை வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய வடக்குமாகாண சபையினரும் புறக்கணித்திருந்தனர். ஆனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியயை …

    • 3 replies
    • 429 views
  15. சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் திடீர் பதவி விலகல் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:15 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா மத்திய வங்கியின் திறைசேரி செயலாளர் பி.வி.ஜயசுந்தர இன்று புதன்கிழமை மாலை திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அவர் நேரில் சென்று கையளித்துள்ளார். இவரது பதவி விலகல் கடிதத்தை மகிந்த ஏற்றுக்கொண்டுள்ளதாக அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. பி.வி.ஜயசுந்தர பதவி விலகியமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை புதினம்

  16. [size=3][size=1][size=4]மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 1035 குடும்பங்கள் வசித்து வருகின்றன.[/size][/size] [size=1][size=4]இவர்களுக்கு மாதம் தோறும் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையாக ஆண்களுக்கு ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு 750 ரூபாயும், குழந்தைகளுக்கு 400 ரூபாயையும் கணக்கிட்டு திருமங்கலம் வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்கினர்.[/size][/size] [size=1][size=4]இந்த பணத்தை பெற்று கொண்ட அகதி ஒருவர், கூத்தியார்குண்டு விலக்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு 500 ரூபாயை கொடுத்து சாப்பாடு வாங்கியபோது, கடைக்காரர் அது போலி நாணயதாள் என கூறி உள்ளார்.[/size][/size] [size=1][size=…

  17. மட்டுவில் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தின கண்டன பேரணி (சசி) சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் மணிக் கூட்டு கோபுர சந்தியில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. இதன் போது மட்டக்களப்பு பிரதேச செயலாளர் தவராஜவுக்கு புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடியினை வழங்கி ஆரம்பித்த பேரணி காந்தி பூங்கா வரைக்கும் சென்றது . இந்த பேரணியில் புகைத்தல் மற்றும் மது போன்ற வற்றால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு கண்டன பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுக்கு முகாமைத்துவ உ…

  18. மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது. இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கைது…

    • 6 replies
    • 538 views
  19. வந்தாலுமூலை பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் மட்டக்களப்பு வந்தாமூலை பகுதியில் இன்று காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உப்போடை வீதியில் உள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஷ்னானந்தராஜாவின் அலுவலகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி தமிழ்வின்

  20. எமது நாட்டில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும் என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மஹாத்மா காந்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அனைத்து நாடுகளும் பெருமிதம் கொள்ளக் கூடிய வகையில் இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் அவசியமானது. குறிப்பாக பெரும்பான்மை மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும். அதன்பட…

  21. உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து எதிர்வரும் 28ம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளிக்க உள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்க உள்ளார்.நல்லிணக்க விவகாரம் தொடர்பில் கடமையாற்றி வரும் மனோரி முத்தெட்டுவேகமவும் வெளிவிவகார அமைச்சருடன் ஜெனீவா விஜயம் செய்ய உள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்ஈழத்திற்கு ஆதரவான புலம்பெயர் தரப்புக்களும் எதிர்ப்ப…

  22. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியல்ல- ஆனந்தசங்கரி by : Litharsan மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேசமே தனது நிகழ்ச்சி நிரலில் இயங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் இலங்கையில் தேர்தலை நடத்துவது மனிதாபிமானம் உள்ள எந்தவொரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களு…

    • 2 replies
    • 580 views
  23. யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! written by admin November 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்…

  24. ஜானக பெரேரா மரணத்துக்கு கோத்தபாயதான் பொறுப்பு: ஐ.தே.க. குற்றச்சாட்டு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:16 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் முன்னாள் தரைப்படைத் தளபதி ஜானக பெரேராவின் மரணத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் பொறுப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: ஜானக பெரேராவின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது ஜானகவுக்கு எதுவித உயிராபத்து அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் குறிப்…

    • 0 replies
    • 608 views
  25. அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு Dec 9, 2025 - 09:37 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.