ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143627 topics in this forum
-
இலங்கை கடற்படையினரின் சிறப்பான செயற்பாடுகளின் காரணமாக, கடற்புலிகளின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். " முன்னர் கடற்புலிகளின் பலம் பற்றி அதிகம் எடைபோட்டிருந்தோம். ஆனால் தற்போது அவர்களது சகலவிதமான பலமும் அழிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையினர் கடற்புலிகளின் பலத்தினை வெற்றிகரமாக ஒழித்துள்ளனர்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வெலிசர கடற்படைத்தளத்தில் நடைபெற்ற, கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட 100வது 'அரோ' எனும் பெயரிலான தாக்குதல் படகை பார்வையிடும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்ததன் மூலம், புலிகளின் ஆயுத விநி…
-
- 14 replies
- 3k views
-
-
சிறிலங்கா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கு ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. நியுயோர்க்கில், பார்க் அவென்யூவில் உள்ள ஆசிய சமூகத்தில் (AsiaSociety) வரும் டிசம்பர் 4ம் நாள் காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரை இந்தக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா, நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகளில் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான பணியகத்தின் பணிப்பாளர் ஸ்டீபன் ஜே ராப், நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் பிலிப் ஜி. அல்ஸ்டன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் பார்வ…
-
- 0 replies
- 337 views
-
-
யாழ் நகர அபிவிருத்தி தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் இல்லத்தில் நடைபெற்றது. 55மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நகர அபிவிருத்தி சபையினூடாக இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே வடக்கு மாகாணசபையில் கலந்துரையாடப்பட்டது. இருப்பினும், இன்று இதுகுறித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலை வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய வடக்குமாகாண சபையினரும் புறக்கணித்திருந்தனர். ஆனால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியயை …
-
- 3 replies
- 434 views
-
-
சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் திடீர் பதவி விலகல் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:15 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா மத்திய வங்கியின் திறைசேரி செயலாளர் பி.வி.ஜயசுந்தர இன்று புதன்கிழமை மாலை திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அவர் நேரில் சென்று கையளித்துள்ளார். இவரது பதவி விலகல் கடிதத்தை மகிந்த ஏற்றுக்கொண்டுள்ளதாக அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. பி.வி.ஜயசுந்தர பதவி விலகியமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை புதினம்
-
- 1 reply
- 850 views
-
-
[size=3][size=1][size=4]மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 1035 குடும்பங்கள் வசித்து வருகின்றன.[/size][/size] [size=1][size=4]இவர்களுக்கு மாதம் தோறும் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான உதவித்தொகையாக ஆண்களுக்கு ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு 750 ரூபாயும், குழந்தைகளுக்கு 400 ரூபாயையும் கணக்கிட்டு திருமங்கலம் வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்கினர்.[/size][/size] [size=1][size=4]இந்த பணத்தை பெற்று கொண்ட அகதி ஒருவர், கூத்தியார்குண்டு விலக்கில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு 500 ரூபாயை கொடுத்து சாப்பாடு வாங்கியபோது, கடைக்காரர் அது போலி நாணயதாள் என கூறி உள்ளார்.[/size][/size] [size=1][size=…
-
- 1 reply
- 644 views
-
-
மட்டுவில் இடம்பெற்ற சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தின கண்டன பேரணி (சசி) சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு சமுர்த்தி வங்கி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர் மணிக் கூட்டு கோபுர சந்தியில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. இதன் போது மட்டக்களப்பு பிரதேச செயலாளர் தவராஜவுக்கு புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடியினை வழங்கி ஆரம்பித்த பேரணி காந்தி பூங்கா வரைக்கும் சென்றது . இந்த பேரணியில் புகைத்தல் மற்றும் மது போன்ற வற்றால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு கண்டன பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்வுக்கு முகாமைத்துவ உ…
-
- 0 replies
- 199 views
-
-
மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது. இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கைது…
-
- 6 replies
- 542 views
-
-
வந்தாலுமூலை பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் மட்டக்களப்பு வந்தாமூலை பகுதியில் இன்று காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உப்போடை வீதியில் உள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஷ்னானந்தராஜாவின் அலுவலகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி தமிழ்வின்
-
- 1 reply
- 1.1k views
-
-
எமது நாட்டில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும் என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் மஹாத்மா காந்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அனைத்து நாடுகளும் பெருமிதம் கொள்ளக் கூடிய வகையில் இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் அவசியமானது. குறிப்பாக பெரும்பான்மை மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும். அதன்பட…
-
- 0 replies
- 583 views
-
-
உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து எதிர்வரும் 28ம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விளக்கம் அளிக்க உள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைமை குறித்து இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்க உள்ளார்.நல்லிணக்க விவகாரம் தொடர்பில் கடமையாற்றி வரும் மனோரி முத்தெட்டுவேகமவும் வெளிவிவகார அமைச்சருடன் ஜெனீவா விஜயம் செய்ய உள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்ஈழத்திற்கு ஆதரவான புலம்பெயர் தரப்புக்களும் எதிர்ப்ப…
-
- 1 reply
- 291 views
-
-
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியல்ல- ஆனந்தசங்கரி by : Litharsan மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேசமே தனது நிகழ்ச்சி நிரலில் இயங்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் இலங்கையில் தேர்தலை நடத்துவது மனிதாபிமானம் உள்ள எந்தவொரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். கொரோனா நோயின் தாக்கத்தினால் மக்கள் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர்களு…
-
- 2 replies
- 585 views
-
-
யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! written by admin November 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்…
-
- 0 replies
- 205 views
-
-
ஜானக பெரேரா மரணத்துக்கு கோத்தபாயதான் பொறுப்பு: ஐ.தே.க. குற்றச்சாட்டு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 08:16 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் முன்னாள் தரைப்படைத் தளபதி ஜானக பெரேராவின் மரணத்துக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் பொறுப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: ஜானக பெரேராவின் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது ஜானகவுக்கு எதுவித உயிராபத்து அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் குறிப்…
-
- 0 replies
- 622 views
-
-
அம்பிட்டிய தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு Dec 9, 2025 - 09:37 AM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், "வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்ட…
-
- 1 reply
- 182 views
- 1 follower
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...operations.html http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...rations_13.html
-
- 0 replies
- 1.4k views
-
-
13 ஆவது திருத்தம் நேரக்குண்டு: விமல் புதன்கிழமை, 07 நவம்பர் 2012 11:25 0 COMMENTS 'அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அதனை தொடரந்து முன்னெடுப்பது நாட்டுக்கு பெரும் ஆபத்தானது. அது ஒரு நேரக்குண்டு' என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52127-13-.html
-
- 0 replies
- 375 views
-
-
யாழில் காய்ச்சலால் அவதியுற்ற இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைத்தபோது பொறுப்புணர்வற்ற முறையில் பதில் வழங்கப்பட்டுள்ளதுடன் அம்புலன்ஸ் வண்டி வழங்கவும் மறுப்பு தெரிவித்தமை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரிற்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. பொன்னாலை சமூக செயற்பாட்டாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ந.பொன்ராசாவால் எழுதப்பட்ட அந்த பகிரங்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொன்னாலையில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு கடந்த நான்கு நாள்களாக காய்ச்சல். நேற்று முன்தினம் தொல்புரம் மத்திய மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார். நேற்று பிற்பகல் மாவடியில் உள்ள தனியார் வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இன்று (02) சனிக்கிழமை அவருக…
-
- 0 replies
- 481 views
-
-
13 ஆம் திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உரிய சட்டரீதியான பதிலை நாம் வழங்குவோம்: மனோ கணேசன் [sunday, 2012-11-11 19:08:28] பதின்மூன்றாம் திருத்தத்திற்கு பதிலாக புதிய பத்தொன்பதாம் திருத்தம் கொண்டு வரும் அரசாங்கத்தின் திட்டம், அமைச்சர் விமல் வீரவன்சவின் சுதந்திர மக்கள் முன்னணியுடனான ஐதேக தலைவர் ரணில் தலைமையிலான குழுவினரின் பேச்சு ஆகியவை தொடர்பில் இன்று கூடிய, எதிரணி கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிய வருகிறது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இவைபற்றிய ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கூறியதாவது, வரவு செலவு திட்டம், வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய …
-
- 0 replies
- 433 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் ! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457707
-
- 0 replies
- 212 views
-
-
ஈழ தேசம் தமிழர்களின் மரபுவழி உரிமையாகும் - சுப.வீரபாண்டியன் ஈழ தேசம் தமிழ் மக்களின் மரபுவழி உரிமை எனவும், பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்றார்கள் என்ற கருத்து உண்மைக்குப் புறம்பானதெனவும் மூத்த தமிழறிஞரும், சிந்தனையாளருமான சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெறவுள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கும் விடுக்கும் வகையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர் உரிமைகள் நசுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அஹிம்சை வழியாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடிய போதிலும் குறித்த போராட்டங்கள் சிங்கள பேரி…
-
- 0 replies
- 828 views
-
-
09 Jan, 2026 | 05:22 PM (செ.சுபதர்ஷனி) கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், வியாழக்கிழமை (8) இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விம…
-
- 1 reply
- 237 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பாக ஐ.நா வெளியிட்ட உள்ளக அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எவ்வாறு கிடைத்தன என்று இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட 29 பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன. இவை எவ்வாறு புலம்பெயர் அமைப்புக்களிடம் கிடைத்தன என இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின…
-
- 5 replies
- 2.9k views
-
-
கொழும்பு வரை வந்த வான்புலிகள் அரசுக்கு ஏற்படுத்திய புதிய அழுத்தம் 11/2/2008 5:29:25 PM - விடுதலைப் புலிகளின் விமானப்படை 9 ஆவது தடவையாகவும் தாக்குதல் நடத்தி விட் டுப் பத்திரமாக தரையிறங்கியிருப்பது அரச, பாதுகாப்பு வட்டாரங்களைப் பெரும் திகைப் புக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இரண்டு இலகு ரக விமா னங்கள் ஐந்தே நிமிடங்களில் மன்னார் வான் பரப்பை அடைந்தன. இரவு 10.20 மணியளவில் முதலாவது குண்டு தள்ளாடிப் படைத்தளத்தின் மீது வீசப் பட்டது. அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப் பட்டன.தள்ளாடியில் இருந்த 58 ஆவது டிவிசன் தலைமையகத்தின் ஆட்லறி ,பல்குழல் பீரங்கி களே …
-
- 0 replies
- 981 views
-
-
தமிழீழம்: தமிழ் ஈழப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்த தகவல்களை இலங்கைப் படையினருக்கு காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தமிழீழ எல்லாளன் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்: எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்திருந்த காலத்தில் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்…
-
- 2 replies
- 936 views
-
-
கொக்கிளாயில் சிங்களவர் பாரம்பரியமாக வாழவில்லை என்பதை 1965ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உறுதிப்படுத்துகின்றது. இதிலிருந்து கொக்கிளாயில் தமிழர்களின் கரை வலைப்பாடுகளே உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் சிங்களவர்களே அடாத்தாக கரை வலைப்பாடுகள் அமைத்து தொழில் செய்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலைக் கட்டுப்படுத்தல் மற்றும் தமிழர்களின் கரை வலைப்பாடுகளில் சிங்கள மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய கூட்டமொன்று நடைப…
-
- 0 replies
- 218 views
-