Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேன் எடுக்க காட்டுக்குச் சென்ற மாணவன் உயிரிழப்பு திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மதவாச்சி காட்டுப் பகுதிக்கு, தேன் எடுக்கச் சென்ற சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா ஆதவன் (19 வயது) என்ற மாணவன், நேற்று (26) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். நிலாவெளி, கைலேஸ்வரன் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்று வந்த இவர், குடும்ப கஷ்டநிலை காரணமாக, விடுமுறை காலத்தில் கூலித் தொழில் செய்து வந்த நிலையில், மூன்று பேருடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ளார். 16 அடி உயரமான மரத்தில் ஏறி மரத்தை வெட்டியபோது, மரத்தின் கிளை இவர் மீது விழுந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்த…

  2.  சிகிச்சை பெறும் சி.வியை சந்தித்தார் ராஜித -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வியாழக்கிழமை (07) சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற வடக்கு முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அவசியம் என்ற வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா…

  3. இ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து? மறைந்த ஆறுமுகன் தொண்டமான் வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரான முத்துசிவலிங்கம் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து முத்துசிவலிங்கம், செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், மாரிமுத்து ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் தலைவராக முத்துசிவலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்திற்குள் இது தொடர்பாக இ.தொ.கா இறுதி தீர்மானங்களை எடுக்கவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-கா-தலைவராக-மீண்டும்-ம/

  4. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ச இன்று மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, நிதி மோசடி குற்றச்சாட்டில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://www.tamilwin.com/politics/01/110622

  5. வடக்கில் தேசிய மக்கள் சக்தி காலூன்றியது எப்படி? - ஆர்வத்துடன் செவிமடுத்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி 22 Feb, 2026 | 02:45 PM (நா.தனுஜா) முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் நாட்டுக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் கலாநிதி அகிலன் கதிர்காமர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ரணிதா ஞான…

  6. இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதிக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனமான நிலையினாலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றும், கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ‘மதுபோதை என்ற காலனிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் கம்பஹா, ராகம பிரதேசத்தில் நடத்தப்படவுள்ள விழிப்புணர்வூட்டும் எதிர்ப்பு பேரணி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு – பொறளையிலுள்ள கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த ஊடக சந்திபில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந…

  7. யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை

  8. முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம். இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப…

    • 2 replies
    • 1.7k views
  9. தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகள் விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ், பான் -கி-மூன் ஆகியோர் செய்த துரோகங்கள் குறித்தும், சார்லஸ் பெட்ரி அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் மே 17 இயக்கத் தோழர்கள் புதிய தலைமுறையில்.... http://www.youtube.com/watch?v=E_5y-heYKMw பகிர்வதன் மூலம் செய்தி சென்றடைய உதவுங்கள்... 2 மாத தோழர் உமர் உழைப்பு தமிழர்களுக்கு சென்று சேரட்டும் - திருமுருகன் காந்தி!

    • 2 replies
    • 868 views
  10. தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன் விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர்கள் எந்நாளும் போற்றுதற்குரியவர்கள். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளும், விடுதலைப்புலிகளும் யுத…

    • 1 reply
    • 344 views
  11. என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது - வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம தெரிவித்தார். இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தவர் என்பதனால், என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்குக் கிடைக்காது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரவின் அனுமதியுடன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமை…

  12. இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்களில் மிகவும் மோசமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தை அடையாளப்படுத்த முடியும் என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் தினியாவெல பாலித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் உருவான மிகவும் மோசமான, ஊழல் மிக்க அரசாங்கமாக இதனைக் கருத வேண்டும். அத்துடன் ஆட்சியிலுள்ள அரசாங்கம் தம்மை கொலை செய்தாலும் பரவாயில்லை. யாருக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ இந்தக் கருத்தை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் வரிப் பணத்தை விரயமாக்காது, மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தக் கூடாது. அத்துடன் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக பெற்றோல் கிடைக்கின்றது. இந்தச் சலுகை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கோர…

  13. இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்குப் புதிய உத்தரவு Mar 26, 2026 - 06:57 AM சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும…

  14. ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் நியமிக்கப்பட வேண்டும் - அலிக் அலுவிஹரே: ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அலிக் அலுவிஹரே தெரிவித்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பதற்கான சகல தகுதிகளும் சஜித் பிரேமதாஸவிடம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது யோசனை குறித்த எழுத்து மூல கோரிக்கையொன்றை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அலுவிஹரே அனுப்பி வைத்துள்ளார். கட்சியின் பிரதித் தலைவர் பொறுப்பிற்கு சஜித் பிரேமதாஸவை நியமிப்பதன் மூலம் கட்சிக்கு வலு சேர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது இன்றியம…

  15. காத்திருந்தோரைக் கடந்து சென்ற ஆளுநர் -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடமொன்று, இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு திறந்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிற்பகல் 12.30 மணிக்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலை …

    • 0 replies
    • 506 views
  16. (எஸ்.கே.பிரசாத்) முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன. இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…

  17. நல்லிணக்க காலம் என கூறிக்கொண்டு சிங்கள, பௌத்த மயமாக்கல்களை தான் புதிய அரசாங்கமும் செய்கின்றது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியிடம் தெரிவித்துள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் காலை ஒன்பது மணி முதல் மாலை நான்கு மணி வரை மேற்குறித்த செயலணியின் அமர்வு நடைபெற்றது. இதன் போதே யுத்தத்தினாலும், காணாமல்போதல்கள் உட்பட பல விடயங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது எனவும், இனிமேல் யுத்தத்திற்கு இடமில்லை எனவும், நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ் கின்றனர் என கூறிவரும் தற்போதைய அரசாங்கம், தம்மை நல்லிணக்க…

    • 0 replies
    • 233 views
  18. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் 1,229வது நாளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உறவுகளே இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். இதன்போது நாடாளுமன்ற வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் போன்றோருக்கு எதிரான பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது. https://newuthayan.com/வவுனியாவில்-காணாமல்-ஆக்க/

  19. மாங்குளம், கொக்காவில் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மேற்படி வைத்தியர், பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், மேற்படி வைத்தியரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/55914-2012-12-31-10-10-29.html மருத்துவர் சிவசங்கர் மாங்குளம் பொலிஸில் மருத்துவர் சிவசங்கர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவி…

    • 0 replies
    • 635 views
  20. திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் கிணற்றில் அகழ்வுப் பணிகள் நிறைவு திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ராஜபக்ச தெரிவித்திருக்கினறார். கடந்த திங்கட்கிழமை இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் பதினைந்து அடி ஆழம் வரையில் அகழப்பட்ட இந்தக் கிணற்றில் இருந்து சில எலும்புகள், பல் ஒன்று நாணயம் ஒன்று உட்பட பல தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் தடயப் பொருட்கள் இரசாயன பகுப்பாய்வு செய்யப்பட்டு, அது தொடர்பில் மன்னார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கை…

  21. ஆறு இலங்கை மீனவர்கள் மீட்பு! இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/ஆறு-இலங்கை-மீனவர்கள்-மீட/

  22. ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் வன்னியில் நிகழ்ந்தேறுகின்றனஆழ ஊடுருவும் அரக்கர்களும், பேரினவாத எறிகணைகளும் அகதிகளைக் கொன்று குவிக்க, ஜனநாயக மீட்பு யுத்தம் புரிவதாக உலகை ஏமாற்றுகிறது சிங்கள தேசம். பகலிலும் இருள் சூழ்ந்த பதுங்கு குழி வாழ்விற்கும் பழக்கப்பட்ட மனிதர்கள். மகாவம்சப் பேரிரைச்சல் தரும் வான் தாக்குதல்களால் திசைமாறிச் சரணடைவார்களென்று நம்பப்ப டுகின்றது. வன்னி மக்களின் வாழ்வுரிமை மீது உக்கிரமான போராட்சி புரியும் பெருந்தேசிய இனவாதம், நிவாரணங்களை இடைமறிக்க, எறிகணை யுத்தம் புரிகிறது.கழுத்து முறிக்கப்பட்ட தென்னை மரங்களும் கூடு கலைக்கப்பட்ட பறவைக் கூட்டங்களும் தாயக மக்களின் அவல வாழ்வின் சாட்சிப் பதிவுகளாகின்றன. வலிதரும் இடர் நீக்கப் போராட்டம் தொடர்கின்ற…

  23. இலங்கை வருகிறார் துருக்கி ஜனாதிபதி சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யுப் அர்தூகான் இலங்கை வரவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்க ளிலி ருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த மாநாட்டில் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பிரதிநிதித்து வப்படுத்தி 17 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/ne…

  24. முன்னாள் எம்.பி சரவணபவனின் உதவியாளரது வீடு மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் – சங்கானை தேவாலய வீதியில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் உதவியாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (10) இரவு கூரிய ஆயுதங்களுடன் சென்ற இனம்தெரியாத குழு ஒன்று வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சொத்துக்களையும் அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளனர். https://newuthayan.com/சரவணபவனின்-உதவியாளரது-வ/

    • 2 replies
    • 721 views
  25. இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை: விக்னேஸ்வரன்! அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்கிடுவதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனுள் அடங்கும். மாறாக மேலும் மேலும் தமிழ் மக்கள் வாழ்க்கை சிங்கள ஆதிக்கத்தினுள் அமிழ்ந்துவிடும். கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டு தற்போதைய தேர்தல்க் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்கள். இனி இணக்க அரசியலுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.