ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142733 topics in this forum
-
இலங்கை விமானங்கள்... துருக்கியில், தரையிறங்கத் தடை! இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது. துருக்கி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. அதன்படி, பங்களாதேஷ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த நாடுகளில் இருந்து நிலம்…
-
- 0 replies
- 364 views
-
-
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் : சந்திரிக்கா வீரகேசரி இணையம் 8/1/2009 12:35:37 PM - நமது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இயற்கையாகவே பெண்கள் மிகவும் சிறந்த ராஜதந்திரிகளாகவும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவர்களாகவும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 13 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 'இந்திய அரசியலில் பெண்களின் வாக்குகள்' என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஏனை…
-
- 0 replies
- 647 views
-
-
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி “கூட்டாட்சி (சமஷ்டி) கோரிக்கையை செல்வா முன்வைத்தபோது, அதனை ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். தொடர்ச்சியாக பொன்னம்பலம் எதிர்த்துக்கொண்டிருந்தார். நாம் தந்தை செல்வாவின் தடத்தில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனையும் எதிர்ப் பவர்கள் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் அமரர் பொன்னம்பலத்தின் வாரிசுகளா? பொன்னம்பலத்தின் சைக்கிள்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களா ?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். …
-
- 3 replies
- 497 views
- 1 follower
-
-
கடல் எல்லையை குறிக்கும் இலங்கையின் பெயர் பலகை..! கடல் எல்லையை குறிக்கும் விதத்தில் பெயர் பலகையினை திறந்துள்ளது இலங்கை. இந்தியாவின் எல்லை பகுதியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை கடல்நீர் பெருக்கத்தை பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்கவும், இலங்கையில் இருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும் நமது எல்லை பகுதியான 5-ம் மணல் திட்டில் 'இந்தியா' என்ற பெயர் பலகையினை இந்திய கடற்படையினர் ஏற்கனவே வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரில் இருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டு கொடியுடன் 'இலங்கை' என எழுதப்பட்ட பெயர் பலகையினை வைத்துள்…
-
- 2 replies
- 2.3k views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில உட்பிரிவுகளை திருத்த அரசாங்கம் தீர்மானம் ! 1978 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில உட்பிரிவுகளை திருத்துவதற்காக பாதுகாப்பு செயலாளர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை குறித்த குழு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தாய் இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இந்த வேண்டுகோளுக்கு இணங்க, வெளிவிவகார அமைச்சு சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தது. அதன்படி தற்போ…
-
- 0 replies
- 372 views
-
-
சிறிலங்காவில் சீனத் தொழில்நுட்பவியலாளர்களின் பிரசன்னம் படைத்துறை நோக்கங்களுக்கானது என்றும் அது வெறுமனே அபிவிருத்தித் திட்டங்களுக்கானது மட்டுமல்ல என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் ஒன்றை அமைத்து வருகின்றது. அந்த துறைமுகம் அருகிலேயே பெரும் எண்ணெய்க் குதங்களையும் அது அமைக்க உள்ளதாக சிறிலங்கா அரசு நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அதிருப்தி வெளியாகி உள்ளது. ஆனால், சீனாவின் நடவடிக்கைகள் படைத்துறை நோக்கங்களுக்கானது என்ற இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவின் கருத்தை சிறிலங்கா மறுத்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கவே அவர்கள் (சீனர்கள்) இங்கு வந்திருக்கிறார்கள். அது ஒரு அபிவிருத்தித் திட்டம். …
-
- 0 replies
- 523 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடல்
-
- 0 replies
- 346 views
-
-
வெலிக்கடை சிறைப்படுகொலையினை நினைவு கூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு இராணுவத்தினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்ததுடன் ஏற்கனவே தம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் பூசி வருவதாக ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிறீக்குமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்டவர்களையும் அஞ்சலித்து ரெலோ வடக்குக் கிழக்கு பூராகவும் சுவரொட்டிகளை ஒட்டி வருவதுடன் தொற்றுக் கால…
-
- 1 reply
- 481 views
-
-
வடக்கில் தற்போதிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபோதும் தளர்த்தப்படமாட்டாது என்று கூறியிருக்கிறார் பாதுகாப்பு அதிகாகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா. அத்துடன் வடக்கில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களை நிரந்தர முகாம்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அகதி முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் புலிகளும் ஒளிந்துள்ளனர். தினம் 15 புலிகள் வரையில் இனங்காணப்பட்டு கைதுசெய்யப்பட்டு வருவதால் காம்களுக்குள் இருக்கும் மக்களை இப்போதைக்கு விடுவிக்க முடியாதென்றும் ஜெனரல் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். அதேவேளை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூயவும் வடக்கு, கிழக்கில் பாதுகாப்பை வலுப்படு…
-
- 0 replies
- 1k views
-
-
தொட்டிலில் கதறியழுத ஆறு மாத குழந்தையை விட்டு தூக்கில் தொங்கிய தாய் : வவுனியாவில் சோகம்! (படங்கள்) வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு மாத கைக்குழந்தையின் தாய் சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்றைய தினம் இவரது சொந்த இடமான கிளிநொச்சியில் உள்ள வீட்டுக்கு காலை சென்று மீண்டும் மாலை நேரத்தில் வீடு வந்துள்ளார். பின்னர் இன்று காலை எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து கணவரின் தந்தைக்கு காலை உணவு செய்து வழங்கிய…
-
- 0 replies
- 815 views
-
-
கொரோனாவால்... உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு, இடப்பற்றாக்குறை! மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்நௌபர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் இதுவரையில் ஆயிரத்து 279 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இன்னும் 700 சரீரங்களை மட்டுமே குறித்த பகுதியில் அடக்கம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம், 50க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகும் நிலையில், சரீரங்களை அடக்கம் செய்வதற்கான மற்றுமொரு இடத்தினை சுகாதாரத்துறை மற்…
-
- 0 replies
- 157 views
-
-
-
- 14 replies
- 3.1k views
-
-
அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் அறவழிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் மாலை 3 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடைபெறும் இந்த அமைதிப் போராட்டத்துக்குத் தெற்கிலுள்ள சிவில் அமைப்புகளும் ஆதரவை வழங்கியுள்ளன. எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினரும், காணாமல்போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் …
-
- 0 replies
- 482 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் முகமாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகம் பொய்யான பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவ்வாறான ஒரு முயற்சியே பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சியாகும். அதில் சித்திரிக்கப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு நவீன தொழிநுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிலையம் கூறியது. இது தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுகல்ல கைச்சாத்திட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 558 views
-
-
இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்க வேண்டாம் என ஜெயலலிதா, மன்மோகனிடம் கோரிக்கை 12 செப்டம்பர் 2013 இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு யுத்தக் கப்பல்களை இலங்கைக்கு வழங்க இந்திய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள், இனச் சுத்திகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடே தமிழகம் முழுவதிலும் பரவலாகக் காணப்படுகின்றது என ஜெயலலிதா சுடு;டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள…
-
- 1 reply
- 381 views
-
-
அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தினை வாக்கெடுப்பிற்கு விடும் வேளை நாம் அதனை ஆதரித்தமைக்கு காரணம் அப்போது பயங்கரவாதம் நாட்டில் இருந்தது. தற்போது அவை ஒழிக்கப்பட்டபின்பும் பயங்கரவாத தடை சட்டம் தேவையற்ற தொன்று. தற்போது அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி சனனாயக போராட்டங்களையும் நசுக்குகின்றது. என கூறிய ஜே.வி.பி நேற்று நடந்த பயங்கரவாத சட்ட நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வெளினடப்பு செய்தது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 100 உறுப்பினர்களும் எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தமையால் 87 அதிகப்படியான வாக்குகளால் அவசரகால…
-
- 0 replies
- 566 views
-
-
‘அரசியலுக்கு வரமாட்டேன்’ தான், எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் குதிக்க மாட்டேன் என்றும், அரசியலுக்கு வரும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அளுத்கடை நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து, ஊடகவியலாளர்கள் நேற்றுமுன்தினம் (29) கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னதாகக் கேள்வி கேட்ட ஊடகவியலாளர், “இரட்டை பிரஜாவுரிமையை இல்லாமற் செய்து கொள்வீர்களா?” என வினவினார். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தலில் போட்டியிடும் எண்ணம் என்னிடம் இல்லை என்பதனால், இரட்டை பிரஜாவுரிமை, எனக்குப் பிரச்சினை இல்லை” என்றார். …
-
- 1 reply
- 437 views
-
-
இலங்கை - சீனா குறித்த சர்வதேச ஊடகங்களின் செய்திகள் அடிப்படையற்றவை - கப்ரால் Published by T. Saranya on 2021-09-03 17:27:49 (இராஜதுரை ஹஷான்) சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளதால் நாட்டில் நிதி மற்றும் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை அடிப்படையற்றது. கொவிட் தாக்கத்தினால் இலங்கை மாத்திரமல்ல பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகள் கூட பொருளாதார ரீதியில் ஏதோவொரு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட்கப்ரால் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் இம்மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தி சுகாதார பாதுகாப்பு கட்டுப…
-
- 0 replies
- 229 views
-
-
எங்களுக்கான போர்க் களம் திறந்தே உள்ளது மீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. சிங்கள தேசத்தின் அத்தனை கொடூரங்களையும் நெஞ்சில் நெருப்பாக ஏந்தி உலக நாடுகளின் கரங்களை இறுகப்பற்றி எம் தேசத்தை விடுவிக்க மீண்டும் ஒரு களம் எங்களுக்காகத் திறந்துள்ளது. சிங்கள அரசால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இன அழிப்பின் முக்கிய பங்கு வகித்த, இறுதி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இர…
-
- 10 replies
- 2k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக சதி இடம்பெறுவதாக அரச தலைவரும் அரசும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த அனைத்துலக சதியை முறியடிக்க வேண்டுமானால் உள்நாட்டிலிருந்து கொண்டு பேசுவதால் பயனில்லை. இது தொடர்பாக ஐ.நா. சபையிலேயே பேச வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஐ.தே.க. கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்காவின் நிலைப்பாட்டை ஐ.நா. சென்று அரச தலைவர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அனைத்துலக சமூகத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக பாரதூ…
-
- 0 replies
- 508 views
-
-
இனியாவது மஹிந்த தமிழரை மதிக்கட்டும்! வடக்குத்தேர்தல் நல்ல பாடம் என்கிறார் மன்னார் ஆயர்! தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்கள், உணர்வுகளை இனியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மதித்து நடக்க வேண்டும்'' என்று மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசின் சலுகைகளுக்குத் தமிழர்கள் அடிபணிந்தவர்கள் அல்லர் என்பதை வடமாகாண சபைத் தேர்தலில் எமது மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். வடபகுதியை விரைவில் பௌத்த மயமாக்குவோம் என்று தென்னிலங் கையிலிருந்து கூக்குரலிட்ட சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும் வடக்குத் தேர்தலில் எமது தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு …
-
- 0 replies
- 333 views
-
-
காணியை விடுவிக்குமாறு கோரி தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என்கிறார் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் புதுக்குடியிருப்புப் பிரதேச செய லகத்துக்கு முன்னால் இராணுவம் சுவீகரித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி இராணுவத் தளபதிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செய லாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரித்து முகாம் அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்துத் தெரிவிக்கையில், காணிகள் மீண்டும் எமக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த…
-
- 0 replies
- 116 views
-
-
Published on September 28, 2013-10:04 pm · No Comments வடமாகாணசபை தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு மாகாணசபையை ஏற்றுக்கொண்டது தவறு என புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழகத்தில் உள்ள சிலரும் கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றனர். மாகாணசபை தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கு முன்னர் கோரி வந்தனர். தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டோம் என்று சொல்ல இந்த அயோக்கியர்கள் யார் என கவிஞர் காசி ஆனந்தன் ஆவேசமாக பேசிய காணொளி ஒன்றும் இணையத்தளங்களில் பார்க்க முடிந்தது. தனிநாட்டு தமிழீழ கோரிக்கையை கைவிடுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில்…
-
- 49 replies
- 3.8k views
-
-
கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக இரண்டாம் நிலை அதிகாரியான பிரிகேடியர் சயீட் ரசா அஷ்கரி நேகா சிறிலங்கா தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவை இன்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 530 views
-