ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
புதிய பிரேரணையை ஏற்றுக் கொண்டால் இலங்கை சர்வதேச பொறியில் சிக்கிவிடும் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு; நிராகரிப்பதுடன் தோற்கடிக்க முயற்சிக்கவேண்டும் என்கிறார் (ரொபட் அன்டனி) ஜெனிவா மனித உரிமை பேரவையில் இம்முறை கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அரசாங்கம் ஒரு போதும் அனுசரணை வழங்கக்கூடாது. அவ் வாறு வழங்கினால் மீண்டும் இரண்டு வருடங் களுக்கு சர்வதேசத்தின் பொறியில் இலங்கை சிக்கிவிடும். எனவே , அரசாங்கம் இந்த விடயத்தில் இப்போதாவது புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளவேண்டும் என்று கூட்டு எதிரணி யின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். …
-
- 0 replies
- 452 views
-
-
மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரித்தானியா தொடர்ந்தும் கவனம் 19 ஜூலை 2013 இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரி;;த்தானியா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் சாதக பாதக தன்மைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரத் திணைக்களம் அறித்துள்ளது. செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி வாக்குறுதி அளித்தமை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது. வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும், கருத்துச் சுதந்திரம் தொடர்பிலான நிலைமைகள் குறித்து திர…
-
- 0 replies
- 180 views
-
-
தமிழ்மொழி புறக்கணிப்பு: சீன நிறுவனத்திற்கு தூதரகம் விடுத்த முக்கிய அறிவிப்பு !! மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளை புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்று அமைத்துள்ள பெயர்பலகையில் தமிழ்மொழி இடம்பெறாதமையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் டுவிட்டரில் பதிவொன்றினை பகிர்ந்திருந்தார். இந்நிலைய…
-
- 0 replies
- 486 views
-
-
சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின் போது, சிக்கியிருந்த பொதுமக்கள் விவகாரத்தில், ஐ.நாவின் பாதுகாப்பு சபை வரலாற்று தவிறிழைத்துள்ளதாக, மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. சிறிலங்கா,கொங்கோ குடியரசு,சூடான்,சாட்,போன்ற நாடுகளில் தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக, பாதுகாப்பு சபை கடைப்பிடித்த அலட்சியப்போக்கை சுட்டிக்காட்டி ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் தூதுவர் குழுவுக்கு, மனித உரிமை கண்காணிப்பகம் எழுதியுள்ள கடிதத்திலேயே சிறிலங்கா தொடர்பாக இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஐ.நாவின் மதிப்பீடுகளின் படி இவ்வருடம் ஜனவரி - மே காலப்பகுதியில், சிறிலங்காவின் வடக்கில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட…
-
- 0 replies
- 833 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் பேச்சு – தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அறிக்கை 21 Views தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத் தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருகின்றது என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஸ்ட அரசியல் வாதியுமான தின…
-
- 0 replies
- 514 views
-
-
வட மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிலவேளை, வெற்றி பெற்று சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீர், இரத்தம் மற்றும் சுடுகாடு என்பவையே உறுதியாகும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=25463
-
- 0 replies
- 608 views
-
-
யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசம் உள்ள காணிகள், வீடுகள் மற்றும் உணவகங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், பொலிஸார் வசம் உள்ள ஒரு உணவகத்தினை குறுகிய காலத்திற்குள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பொலிஸார் இணங்கியுள்ளனர். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் காங்கேசன்துறையில் மக்களுடைய வீடுகள், பொதுமக்களின் காணிகள் போன்றன பொலிஸாருடைய பயன்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலையில், பொலிஸாரிடம் உள்ள உணவகங்கள், வீடுகளை உரிம…
-
- 0 replies
- 328 views
-
-
சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமான மற்றொரு சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெறவிருப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை சிறிலங்கா அரசு கடன் உதவியாகக் கோரியிருக்கின்றது. இருந்தபோதிலும் சிறிலங்காவில் காணப்படும் மனித உரிமைகள் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தக் கடன் உதவியை வழங்குவதை அனைத்தலக நாணய நிதியம் தாமதப்படுத்தி வந்திருக்கின்றது. இது தொடர்பாக இதற்கு முன்னர் சிறிலங்கா அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கள் வெற்றி பெறவில்லை. மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்பதை அனைத்துலக நாணய நிதியம் ஒரு நி…
-
- 0 replies
- 456 views
-
-
ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:.. ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா? பனங்காய்
-
- 86 replies
- 5.9k views
-
-
அரசியல் பிரச்சினைக்கு தீர்வு : தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் : சம்பிக்க (ஆர்.யசி) நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழர் தரப்பு நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அதை விடுத்து சர்வதேசத்தை வரவழைத்து தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கும்இ சர்வதேச அழுத்தங்களுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கும் தீர்வு காணும்வரையில் நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பிளவுபடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக…
-
- 0 replies
- 180 views
-
-
புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக நாடு கடத்தப்பட உள்ள கனடாவாழ் தமிழர் மேல் முறையீடு கனடா வாழ் ஈழத்தமிழர்கள் ஐந்து பேரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்திய குற்றத்துக்காக கனடியன் பொலிசார் கைது செய்து விசாரித்தனர். இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் இவர்களை கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரமணன் மயில்வாகனம் (30) என்பவர் தனது நாடு கடத்தலை எதிர்த்து கனடா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முயற்சி செய்வதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஏற்றுக் கொளவதா இல்லையா என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை செய்து வருவதாகவும் இவ்வாறு மேன்முறையீடு செய்வதே மயில்வாகனம் கனடா நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான கடைசி சந்தர்ப்பம…
-
- 2 replies
- 1.4k views
-
-
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாதிப்புக்கள் 20 வருடங்களுக்கு நீடிக்கும்! June 15, 2021 கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இன்னும் 20 வருடங்கள் வரையில் காணப்படுமென தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதன் பாதிப்புக்களை டொலர்களில் மதிப்பிட முடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து, கடலில் கலந்த பாரியளவான பிளாஸ்டிக் பொருள்கள் தற்போது 40 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடலில் இன்னும் எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருக்குமென ஆராய முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்க…
-
- 1 reply
- 201 views
-
-
சிறிலங்காப் படையில் இருந்து தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் நிறுவனங்களில் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றலாம் எனக் கருதும் படைத் தலைமை அவ்வாறானவர்களை தனியார் நிறுவனங்களில் தேடிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படையில் இருந்து தப்பியோடி தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேரின் விபரங்களைப் பெறும் நோக்கில் காவல்துறையினர் கொழும்பு மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். மேற்படி படையினர் 150 பேரினதும் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. படையில் இருந்து கடந்த சில வருடங்களில் தப்பிச்சென்ற 65 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் தனியார்துறை…
-
- 0 replies
- 371 views
-
-
5,000 ஏக்கர் தனியார் காணிகள் குடாநாட்டில் படையினர் வசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும், முப்படையினர் வசம் 5 ஆயிரம் ஏக்கர் தனியார் காணி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 640 ஏக்கரும், பொலிஸார் வசம் 25 ஏக்கரும், கடற்படையினர் வசம் 800 ஏக்கரும், வான் படையினரின் கட்டுப்பாட்டில் 540 ஏக்கரும் உள்ளது. பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற்குரிய கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நெடுந்தீவுப் பிரதேச செ…
-
- 0 replies
- 289 views
-
-
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக உத்தியோகபூர்வ அறிவித்தலை சிறீலங்கா அரசாங்கம் விடுத்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலப்பகுதியில் போர் நிறைவுபெற்ற பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் போருக்கு பின்னரான அபிவிருத்திகளோ அல்லது பாதுகாப்பு தளர்வுகளோ பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.மாறாக சிறீலங்கா அரசின் படைத்துறை கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், மறுசீரமைப்புக்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. படையினாரின் எண்ணிக்கைகளின் அதிகரிப்புக்களுக்கு அப்பால் கட்டமைப்புக்களில் பல மாற்றங்களும், பலப்படுத்தல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வாரம் புதிய தளபதிகள் முப்படையிலும் புதிதாக நியமனம் பெற்றுள்ளதுடன், இராணுவத்தளபதியாக முன்னாள் வன்னி மாவட…
-
- 1 reply
- 1.3k views
-
-
காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க சிறிலங்கா இராணுவம் இணக்கம் மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காங்கேசன்துறை – தொண்டைமானாறு இடையிலான வீதியை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் மீளத்திறந்து விடவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளார். வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரின் தலைமை…
-
- 0 replies
- 228 views
-
-
குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த கூட்டத்திற…
-
- 0 replies
- 398 views
-
-
-மொஹொமட் ஆஸிக் பிக்கு வேடமிட்டு விஹாரைகளுக்குள் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை மாத்தளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். மாத்தளை லக்கல பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சில காலம் பிக்குவாக இருந்துள்ளனர். அதன் பின்னர் துறவரத்தை கைவிட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் நுழைந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தனது குடும்பத்தை வாழ வைப்பதற்காக விஹாரைகளுக்கு சென்று கொள்ளையிடுவதாக விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார் மாத்தளை பொல்கொடுவ பிரதேசத்தில் விஹாரை ஒன்றில் 50,000; ரூபாய் பணம் மற்றம் டிஜிடல் கமரா ஒன்று திருடிய சம்பவம் தொடர்பாக இச் சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவ…
-
- 8 replies
- 681 views
-
-
கொழும்பு லிபர்ட்டி எலைட் திரையரங்கில் நேற்று (24) திரையிடப்பட்ட இலங்கை யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "மெட்ராஸ் கபே" திரைப்படத்தில் ஆங்கில உபதலைப்பு இல்லாததை அடுத்து படத்தைப் பார்க்க வந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக "ஸ்ரீலங்கா மிரர்" க்கு தெரியவந்துள்ளது. ஹிந்தி மொழியில் உள்ள இந்த படத்தை ஆங்கில உபதலைப்பு இல்லாமல் பார்க்க முடியாது எனவும் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியவர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக செலுத்திய 300 ரூபா கட்டணத்தையும் மீளப் பெற்றுக் கொண்டே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய பணத்தை மீள வழங்கும் போது திரையரங்கின் நிர்வாகி, இந்தப் படத்த…
-
- 7 replies
- 747 views
-
-
33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு, இன்று (06) முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது. 0 0 0 G - See more at: http://www.tamilmirror.lk/196139/ம-தலம-ச-சர-கள-ம-ந-ட-#sthash.16cDidVW.dpuf
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை தொடர்வதற்கு தேவையான உதவிகளை வழங்கத் தயார் என இந்தியா அறிவித்துள்ளது. வடக்குப் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழுவொன்றை இந்தியா அனுப்பி வைக்கவுள்ளது. இந்திய விவசாய ஆய்வுப் பேரவையின் விஞ்ஞானிகளைக் கொண்ட விசேட குழுவொன்று இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நிலத்தின் தன்மை, காலநிலை, என்ன வகையான பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து இந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடாத்த உள்ளனர். எதிர்வரும் பருவ காலத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்திய விஞ்ஞ…
-
- 1 reply
- 862 views
-
-
கனடிய கடற்படையின் வின்னிபெக் கொழும்புத் துறைமுகத்தில் கனடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வின்னிபெக் என்ற கனடிய கடற்படைக் கப்பலே, கூட்டுப்பயிற்சி மற்றும் நட்பு தேவைகளுக்காக நேற்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ள இந்தப் போர்க்கப்பலானது, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துக…
-
- 0 replies
- 192 views
-
-
தமிழகத்தைச் சேர்ந்த 27 அரசியல்வாதிகளுக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி வழங்கி வந்தார்கள் என்று ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். இந்தத்தலைவர்கள் மீது இந்திய உளவுப்பிரிவினர் விசாரணைகள் மேற்கொள்ளவேண் டும் என்றும் அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளார். இலங்கையில் மீள்குடியமர்வு மற்றும் அனர்த்த நிவாரண அமைக்கர் ரிசாத்பதியுதீன் விடுதலைப்புலிகளிடம் பண உதவி பெற்றவர்களின் விவரத்தைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்றும் சுப்பிரமணிய சுவாமி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும் விடுதலைப் புலிகளிடம் இருந்து நிதி உதவி பெற்றுவந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சி.பி. ஐ அமைப்பின் தலைமையில் குழு ஒன…
-
- 0 replies
- 516 views
-
-
மத்தளமாய் இருபுறமும் அடிவாங்கும் அரச உத்தியோகத்தர்களும் வடக்கின் தேர்தல் பிரச்சாரமும் அரசாங்கத்தின் தான்தோன்றித் தனமும் 18 செப்டம்பர் 2013 யாழ்.மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுநர்கள்இ விளையாட்டுத்துறை பணியாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திய அதிகாரிகள் தொடர்பான பெயர் விபரங்கள் தேர்தல் கண்காணிப்பு அலுவலகங்களை சென்றடைந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். பகிரங்கமாகவே அரசிற்கு பிரச்சாரங்களை முன்னெடுக்க பணியாளர்களை நிர்ப்பந்தித்ததாக யாழ்.மாவட்ட சமுர்;த்தி இணைப்பாளர் ஆ.ரகுநாதன் மற்றும் சாவகச்சேரி சமுர்த்தி முகாமையாளர் அன்ரனி ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போன்று யாழ்.மாவட்ட தேர்தல் பணிகள் முன்னெடுக்…
-
- 0 replies
- 652 views
-
-
சம்பூர் கடற்பரப்பில் கூட்டங்கூட்டமாகக் கரையொதுங்கிய திமிங்கிலங்கள் (Video) சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன. சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இன்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக இந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கலாம் என சம்பூர் கடற்றொழில் பரிசோதகர் மொகமட் ரிஸ்வி தெரிவித்தார். http://newsfirst.lk/tamil/2017/05/சம்பூர்-கடற்பரப்பில்-கூட/
-
- 0 replies
- 264 views
-