ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையைப் பகுதியில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்ப…
-
- 0 replies
- 366 views
-
-
தமிழர் இறைமையை தமிழர் அரசியற் தலைமையானது தானே முன்வந்து தாரைவார்த்துவிடுவது ஏன் ஒருபோதும் செய்யக்கூடாதது? இறைமையைச் சரணாகதி செய்யும்படி ஏன் தமிழர்கள் எல்லாப்பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தனி இறைமைக்கு உரிமை கோருவதற்கான சட்டஇ வரலாற்று அடிப்படைகள் எவை? – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில்இ அரசியல்வாதிகளாயினும் சரிஇ சாமான்யராயினும் சரிஇ ஒவ்வொரு ஈழத்தமிழரும் கருத்தூன்றிக் கவனமாக ஆராயவேண்டிய கேள்விகள் இவைஇ என்று கூறுகிறார் கொழும்பிலிருந்து தமிழ்நெற் அரசியற் கருத்துரையாளர். சிங்களவர்களைப் போன்றே தமிழர்களும் தங்கள் இறைமையை போர்த்துக்கேயரிடம் இழந்திருந்தார்கள். ஆயினும்இ இந்த இழப்புகள் தனித்தனியான சட்ட உடன்படிக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதில் இலங்கை தொடர்பான அறிக்கை 23 ஆவது விடயமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகார…
-
- 0 replies
- 298 views
-
-
குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி போராட்டம் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற கோரி யாழ் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று காலை பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். "மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து" என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர்ந்து 65 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை புத்தூர் மேற்கு, கலைமதி கிராம மக்கள் மண்டபத்திற்கு முன்னால் மேற்கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்தப் போராட்டத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றும் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத…
-
- 2 replies
- 366 views
-
-
சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த சந்தர்ப்பத்தை சரியாக கையாள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (13) மாலை இடம்பெற்ற 13 வது திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும…
-
- 0 replies
- 417 views
-
-
பிரித்தானியாவில் கடந்த 24ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட “உலகத் தமிழர் பேரவை” அமைப்பின் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசுத் தலைவர் வேட்பாளரும், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவிற்கு மிகவும் நெருங்கியவருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) கலந்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு லண்டன் கனறிவூப் பகுதியில் அமைந்துள்ள “பிரித்தானிய பன்னாட்டு நட்சத்திர விடுதியில்” இந்த அமைப்பின் முதலாவது மாநாட்டின் இறுதி நிகழ்வும், இராப்போசன விருந்தும் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரும், அந்த மக்களின் விடுதலைக்காக ஜோர்ஜ் புஸ்ஸிற்கு எதிராக அரசுத் தலைவ…
-
- 0 replies
- 494 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால், இலங்கையைக் காப்பாற்றும் அரணாக சீனா இருக்கும் என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார். உள்ளக முரண்பாடுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களை சீனா வரவேற்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். சீனா, இலங்கையின் நேச நாடு. என்றென்னும் நட்புடன் திகழும். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=101863&category=TamilNews&langu…
-
- 1 reply
- 269 views
-
-
அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது. மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தத…
-
- 64 replies
- 3.6k views
-
-
உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் இலங்கை தமிழர் குறித்து மாநிலங்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழகத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக வருவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் அணுகுமுறையாகும். எனினும், அவ்வாறு இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் போது அவர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டில் குடியேற இலங்கை அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இல…
-
- 0 replies
- 614 views
-
-
காணி அதிகாரம் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குருபரன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பொலிஸ் அதிகாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அத்துடன் காணி அதிகாரம் பற்றிய விடயதானங்கள் தமிழ் மக்களிடையே விவாதத்திற்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் என சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு காணி அதிகாரம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசிலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் காணி அ…
-
- 0 replies
- 174 views
-
-
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது... தற்காலிகமாக நிறுத்தப்பட்டது! நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273678
-
- 0 replies
- 197 views
-
-
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் கலந்துரையாடியுள்ளன. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நேற்று லண்டனில் பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரியை சந்தித்து இது குறித்து உரையாடியுள்ளார். இதனையடுத்து தமது சந்திப்பு தொடர்பில் ஸ்வைரி, தனது ருவிற்றர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். தாமும் பிஸ்வாலும் சிறிலங்காவின் மனித உரிமைகள் விடயம் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை என்பவை தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக ஸ்வைரி குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஜெனீவாவுக்கு செல்லவுள்ள பிஸ்வால் அங்கு இந்தியா உள்ளிடட நாடுகளின் இராஜதந்திரிகளை சந்த…
-
- 0 replies
- 290 views
-
-
மக்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி.. பொது நிகழ்வுகளை, தவிர்த்துக்கொள்ளும் அமைச்சர்கள்... ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்? அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வை தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையிலேயே அவர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அரசுமீதான அதிருப்தியை மக்கள் தம்மீது காட்டக்கூடும் என்பதாலும், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரம…
-
- 0 replies
- 79 views
-
-
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிபெடுத்திருப்பது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நா…
-
- 6 replies
- 1.5k views
-
-
அலரிமாளிகையினை... முற்றுகையிட்டு, போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு! அலரிமளிகைக்கு முன்பாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான குறித்த போராட்டத்தின் போது வீதி தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முயற்சித்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275688
-
- 0 replies
- 181 views
-
-
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர் இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின…
-
- 0 replies
- 594 views
-
-
-
வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்... // பசில் ராஜபக்ஸ http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-6
-
- 0 replies
- 178 views
-
-
ரம்புக்கனை ஆர்ப்பாட்டம்: கேகாலை நீதிமன்றில் முன்னிலையாகின்றது சட்டத்தரணிகள் சங்கம்! ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பொலஸார் மற்றும் படையினர் கட்டுப்பாட்டுடன் செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் என அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பத…
-
- 0 replies
- 132 views
-
-
டெங்கு நோய்த் தாக்கம்: யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி பலி டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவி ஒருவர் இன்று யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி கே. சரா உயிரிழந்துள்ளார். கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் காய்ச்சல் காரணமாக சோர்வடைந்து காணப்பட்டதுடன் தனியார் வைத்திய சாலையில் மாத்திரை பெற்று வந்துள்ளார். நேற்று 14 ஆம் திகதி காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் சி…
-
- 1 reply
- 509 views
-
-
அவசர நிதி உதவிக்காக... IMF இடம் உத்தியோகபூர்வமாக, கோரிக்கை விடுக்கப்பட்டது! அவசர நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான இலங்கைக்குழு வாஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர கால, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை வழமை…
-
- 0 replies
- 185 views
-
-
. நாடாளுமன்ற வளவில் வெள்ளம் : படகுச் சேவை ஏற்பாடு அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் படகுச் சேவை மூலம் வெளியில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வில் இன்று பிரசன்னமாகியிருந்த அனைவரையும் 6 படகுச்சேவைகள் மூலம் அங்கிருந்து வெளியே அழைத்து வர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. - வீரகேசரி - .
-
- 7 replies
- 1k views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது இனிக் கடும் நடவடிக்கையாம்! – இலங்கை அரசு அறிவிப்பு. [sunday, 2014-03-16 18:13:12] இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து பின்னர் குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்கின்ற வேளையில், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளைப் பறிமுதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இருநாட்டு மீனவர்க…
-
- 0 replies
- 267 views
-
-
ஆதரவாளர்களால் நஸீரின் இல்லம் முற்றுகை அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரின் இல்லத்தை இன்று (23) காலை முற்றுகையிட்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது, அட்டாளைச்சேனை பிரதேச மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துரைத்த ஏ.எல்.முஹம்மட் நஸீர், “தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிந…
-
- 0 replies
- 338 views
-
-
அமைதியின்மையை... ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு... எதிராக சட்ட நடவடிக்கை! நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக இதுவரையில் 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள்…
-
- 0 replies
- 125 views
-