ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
மகிந்த ராஜபக்சவினது அரசாங்கத்தைத் தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் என்று ஜே.வி.பி. அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையில் வன்னிப் போரின் பயங்கரங்களில் இருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்;து வைக்கப்பட்டிருந்த போது இலங்கைப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர் என்று அங்கிருந்த நிலைமைகளை வெளிப்படுத்துகிறார் பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர். வாணி குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக மெனிக் முகாம் என்ற இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக் கணக்காக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். விடுதலைப் …
-
- 3 replies
- 1.2k views
-
-
கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியை ஒருவர் பாடசாலையின் கூரை மீதேறி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராகவே இவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். (படங்கள்: கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/76979-2013-07-30-10-17-13.html
-
- 21 replies
- 1.2k views
-
-
அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்களை சீறீலங்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணைணயம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் பிரான்சின் வெளிநாட்டமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... முக்கியமாக தற்போது சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலேயே சிறீலங்கா தமிழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போதய அந் நாட்டின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களைத் திருப்பி அனுப்பவேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் தகவல் வெளியிடப்பட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாதாம்! - கௌசலின் ஆலோசனை இது. [Monday 2014-08-25 12:00] தமிழர்கள் வடக்கு மாகாணத்துக்கு தனியாக பொலிஸ் அதிகாரத்தைக் கோரக் கூடாது என்று தெரிவித்துள்ளார் காணாமற்போனார் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மனித உரிமை பணியாளர் அவ்டாஸ் கௌஷல். இந்தின் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்தியா இலங்கையுடன் பேச்சு நடத்தலாம்; ஆலோசனை வழங்கலாம்; ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா உத்தரவிட முடியாது. இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றையவர்களின் இறைமையை மதித்து…
-
- 7 replies
- 1.2k views
-
-
பிளேக்கின் தூண்டுதலில் யாழில் ஆர்ப்பாட்டம்.அனைவரையும் ஆச்சரியத்தில் ஆள்த்தியுள்ளது. Posted by சோபிதா on 11/07/2011 in செய்தி யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது. அண்மைக்காலங்களில் குடாநாட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ள போதிலும் இது முக்கியமான ஆர்ப்பாட்டம் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் அமெரிக்க முந் நாள் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் தூண்டுதலின் பேரிலேயே இப் போராட்டம் நடைபெற்றதாகக் கருத்து தெரிவித்துள்ளமை அனைவரையு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சனி 12-01-2008 19:08 மணி தமிழீழம் [சிறீதரன்] பெலியகொடவில் ஆடைதொழிற்சாலையில் பெரும் தீ இன்று மாலை பெலியகொட பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன்றினுள் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தீயினால் ஏற்பட்ட தாக்கதினை தணிப்பதற்கு தீயணைப்பு படையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கட்டிடம் தீயின் தாக்கத்திற்கு உட்பட்டதாகவும் மேலும் தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.2k views
-
-
லண்டனிலிருந்து ஸ்கய் SKY செய்தி நிறுவனம் லண்டன் போரட்டத்தை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்புகிறது. http://news.sky.com/skynews/Home/UK-News/T...More_Disruption
-
- 1 reply
- 1.2k views
-
-
சில விடயங்களில் சிறிலங்கா முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ருவிட்டர் செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். “உட்கட்டமைப்பு, மீள்குடியமர்வு, கண்ணிவெடிகளை அகற்றல் போன்ற விடயங்களில் சிறிலங்கா அடைந்துள்ள முன்னேற்றத்தை அமெரிக்காவும் அனைத்துலக சமூகமும் மதிக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவது சாதகமானது. ஆனால், தெரிவு செய்யப்பட்ட பரிந்துரைகளை மட்டும் தான் சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எல்லாத் தரப்பினதும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்த 24 மணி நேரத்தினுள் இரு அகதி படகுகள் அவுஸ்ரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சுமார் 7 நோட்டிகல் மைல் தொலைவில் அவுஸ்ரெலிய கடற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இலங்கை தமிழர்கள் 32 பேர் இருந்ததாகவும் இவர்களை கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு நிலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த படகில் 22 அகதிகளும் இரு மாலுமிகளும் உள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 1 reply
- 1.2k views
-
-
. .ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தண்டிக்கப்பட வேண்டியவர் - சர்வதேச சட்டநிபுணர் பேராசிரியர் பொயெல் சீற்றம் வியாழன், 20 ஜனவரி 2011 20:24 .ஜனாதிபதி ஒருவருக்கு அமெரிக்காவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் அனுமதியுடன் விஜா இல்லாமல் அமெரிக்காவிற்கு சென்றுவர முடியும். எனினும் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவிற்கு செல்ல விரும்பினால் நிச்சமாக விஸா அனுமதி பெற்றே செல்லவேண்டும் என்பது கட்டாயம் என பேராசிரியர் பிரான்சிஸ் பொயெல் தெரிவித்துள்ளார். இந்த விதிமுறையானது ஜெனிவாவில் காணப்படுகின்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு அமைவானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார். அமெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் வக்கீலாகவே மாறிவிட்டார் வைகோ. இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது சரியா… தவறா என்று சட்டரீதியாக நடக்கும் போராட்டங்களில் சென்னைக்கும் டெல்லிக்குமாக அலைகிறார் வைகோ. கடந்த 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு கோர்ட் படி ஏறிய வைகோ, சுமார் ஒன்றரை மணி நேரம் தனது வாதங்களை எடுத்துவைத்தார். ‘நீதிமன்றத்தையே பொதுக்கூட்ட மேடையாக்கிவிட்டார் வைகோ’ என்று வழக்கறிஞர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தன வாதங்கள். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1992-ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடைக்கான நீட்டிப்பை மத்திய அரசு பிறப்பித்து…
-
- 2 replies
- 1.2k views
-
-
8 தமிழர்களை விடுதலை செய்தது கொழும்பு நீதிமன்றம். கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 8 தமிழர்களை விடுதலை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு டாம் வீதியில் கடந்த மே 6ஆம் நாளன்று சிறிலங்கா காவல்துறையினர் பாரிய சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது தம்பிராஜா அன்பரசன் தம்பிராஜா வளர்முகம் மற்றும் அவர்களின் தாயாரான தம்பிராஜா பரஞ்சோதி ராஜதுரை கமலாதாஸ் செல்லன் கேதீஸ்வரன் கந்தசாமி ரமணன் விக்னராஜ கிரிதன் ஜோவன் சந்திரகுமார் ஆகியோரை துறைமுகம் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்தன…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் மெழுகு திரியைத் தேடி அலையும் இராணுவம் ஜ வெள்ளிக்கிழமைஇ 23 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ கிழக்கு மாகாணத்தின் அனைத்து இராணுவ முகாங்களின் தொடர்பாடல்களையும் மின்சாரத்தையும் ஒருங்கிணைக்கும் றெடதெனியவில் அமைந்துள்ள தொடர்பாடல் கோபுரமும் அதனுடன் இணைந்திருந்த மின்மாற்றியும் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இனம் தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வெற்றிகர தாக்குதலால் கிழக்கு மாகாணத்தில் வெலிக்கந்தை பகுதியில் அமைந்திருந்த அனைத்து ஒட்டுக் குழுக்களின் குடில்களுக்கும் இராணுவ முகாம்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மின்சார வினியோகம் நிரந்தரமாக தடைப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து வாளைச்சேனை வெலிக்கந்தை களுவாங்கேணி போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகங்களும் முற்றுமுழு…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் போர்க்குற்றம்: புதியதலைமுறை புதியஆதாரம் வெளியீடு http://puthiyathalaimurai.tv/pt-special-documentary-on-lankan-war-crimes இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்” கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை ராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின. இதேபோல ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும், சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன. கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத்தள்ளப்படுகிறார்கள்.. பின்னால் இருந்து வெற்றி எக்…
-
- 7 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியாக 61 ஆவது படையணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது என்று அந்நாட்டின் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அந்த நாட்டு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற நடவடிக்கைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும். தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, மார்ச் 14, 2011 யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதற்கான அனுமதியை சிங்களப்படையினர் வழங்கியுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருக்கும் வசாவிளான் வடக்கு, கட்டுவன் தெற்கு, கொல்லங்கலட்டி, குரும்பசிட்டி கிழக்குப் பிரதேச மக்களுக்கே மீளக்குடியமர்வதற்கான அனுமதியைப் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கியுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். அப்பகுதியில் மீளக்குடியமரவென சுமார் நான்காயிரம் மக்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. My link
-
- 1 reply
- 1.2k views
-
-
இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட கால் இல்லாத போராளிகள் சிலர் சிங்களஒப்பந்தகாரர்களுக்கு கல் உடைத்தல் கல் அரிதல் வேலைகளை செய்து பிழைக்கின்றார்கள். நேற்று முந்தினம் தொடர்பு கொண்ட ஓர் போராளி (இவர் செயற்கை உறுப்பு பொருத்தும் பணியில் முன்னர் பயிற்சி பெற்றிருந்தவர்). தான் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு இப்போ கிளியில் வசிப்பதாகவும் தனக்கு கால் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தானும் தம்மை போன்ற சிலரும் சைக்கிளில் தேங்காய் கட்டி வியாபாரம் செய்ய நினைத்ததாகவும் எனினும் சைக்கிள் ஓட காலில் புண்வருவதுடன் வியாபாரம் செய்ய போதிய முதல் இல்லை என்றதனால் சிங்கள ஒப்பந்தகாரர்களிடம் வேலைக்கு போனதாகவும் கூறினார். இப்போ கல்லுடைக்கும் வேலையும் , கல் அரியும் வேலையும் செய்வதாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஜோர்ஜ் பெனான்டஸ். முன்னாள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மத்தியில் சிறீலங்காவில், சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தான் முன்னரும் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் இனிமேலும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதே வேளை இந்தியாவின் பிரதமமந்திரி மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் கூட்டமைப்பினரை சந்தித்தபோது இறையாண்மையுள்ள இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாக வாழ உதவிசெய்வதாக உறுதியளித்தமை தெ…
-
- 3 replies
- 1.2k views
-
-
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் 31-வது நினைவு நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்நிகழ்வு தொடர்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் சென்னையில், வங்கக்கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க் கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது. வேலுப்பிள்ளை பிரபாகரனை தன் வயிற்றில் சுமந்த நமது அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச்சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்…
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியில் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். யாழில் விடுதி ஒன்று முற்றுகை! 6 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 22 replies
- 1.2k views
-
-
15ம் நூற்றாண்டில் சிறிலங்காவினை ஐக்கியப் படுத்துவதற்கு சீனர்கள் உதவியது எவ்வாறு? [ திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010, 13:47 GMT புதினப்பலகை] [ தி.வண்ணமதி ] சிறிலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் அனுராதபுரக் காலதிலிருந்து இருக்கும் ஒன்று. அனுரதபுரம் மற்றும் சிகிரியா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது. 15ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சீன 'அட்மிறல் செங் கீ'யினது [Admiral Zang He] சிறிலங்காவிற்கான பயணம் தவிர்ந்த எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தீவினது அரசியலில் சீனா தலையீட்டினை மேற்கொள்ளவில்லை. Sri Lanka Guardian என்னும் இணையத்தளத்தில் Dr. Janaka Goonetilleke என்பவரால் எழுதப்பட்ட வரலாற்றுக் கட்டுரையை புதி…
-
- 2 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு வடக்கே விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் முல்லைத்தீவு வடக்கு வேல் அமுழுவைக்கல் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்ரு காலை 6.10 மணியளவில் ஸ்ரீ லங்கா விமானப்படையினரின் சுப்பர் சோனிக் மிக் ரக மற்றும் கிபிர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் இனங்காணப்பாட இலக்குகுகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.. இன்று காலை விமானத்தாக்குல் நடத்தப்பட்ட பகுதியிலேயே விடுதலைப்புலிகள் போரிற்க்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதகவும் இவ் இலக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.. இவ் விமானத்தாக்க…
-
- 0 replies
- 1.2k views
-