Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும்- சுமந்திரன். 25 Views தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வது என்ற விடயத்திலே அனைவரும் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ தேர்தல் கூட்டோ அல்ல. தமிழர்களிற்கு எதிரான விடயங்களில் அனைத்து தரப்புகளும் ஒன்று சேர வேண்டிய தேவ…

  2. மேய்ச்சல் தரை அபகரிப்பால் உணவின்றி உயிரிழக்கும் மாடுகள் 18 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இருவரை அப்பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையில் ஈடுபட்டவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மகா ஓயா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, 14நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் காடுகளுக்குள் கால்நடை பண்ணையாளர்கள் தங்களது மாடுகளை மேய்த்துவரும் வேளையில், ஒரு சில மாடுகள் அத்துமீறிய பயிர்ச் செய்கையாளர்களின் பயிர்களுக்குள் செல்லும்போது அந்த மாடுகளை அவர்கள் பிடித்து கட்டிவைத்துள்ள…

  3. அம்பாந்தோட்டை முறைமுகம் 198 வருடங்கள் சீனாவிடம்? 12 Views முன்னாள் அரசாங்கம் இழைத்த தவறுகாரணமாக 99 வருடகால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 198 ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி சீனாவின் South China Morning Post பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீள்பார்வைக்குட்படுத்துகின்றது என வெளியான தகவல்களையடுத்தே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிடம்பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வழியின்றி முன்னைய மைத்திரி-ரணி…

  4. ஐநா ஈழத் தமிழர்களின் முகத்தில் அறைந்து விட்டது - அனந்தி சசிதரன்

  5. ஒருவாரத்திற்கு பிற்போடப்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்க முயற்சி (ஆர்.ராம்) தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியானது ஒருவாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஐக்கியம் அவசியம் என்பதில் உறுதியாக இருந்ததோடு அதில் கொள்கை அளவிலும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. முன்னதாக 28ஆம் திகதி (இன்றையதினம்) தமிழ்த் தேசியப் பேரவையை கட்டமைப்பதற்கான கலந்துரையாடலை நடத்துவதென்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், ஒவ்வொரு கட்சிகளும் தமது கட்சியின் உயர்மட்டக்குழுக்களை கூட்டி அது தொடர்பில் தீர்மானம் …

  6. வட்டுவாகல் களப்பை ஆழப்படுத்தி தருமாறு மீனவர்கள் கோரிக்கை 4 Views முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் களப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வட்டுவாகல் களப்பை ஆழப்படுத்தி தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் நான் சிறிய வயதில் இருந்தபோது இதோ ஆழமாக்கி தருகிறோம் என்று கூற தொடங்கியவர்கள் இன்று எனது மகனுக்கு ஒன்பது வயதாகிவிட்டது இன்றுவரை ஆழமாக்கி தருகிறோம் என்று கூருக்கிறார்களே தவிர ஆழமாக்கி தரப்படவில்லை என மீனவர் ஒருவர் கவலை வெளியிட்டார். இப்போது இறால் சீசன் ஆரம்பித்துள்ள நிலையில் வட்டுவாகல் பகுதியில் அதிகளவான மீனவர்கள் தமது வீச்சு வலை தொ…

  7. தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காதது ஏன்?: கஜேந்திரகுமார் (ஆர்.ராம்) தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பேரவையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஆரம்பக் கூட்டங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தமிழ்த் தேசியப் பேரவையில் பங்கேற்குமாறு கஜேந்திரகுமார் தலைமையிலான அணியிருக்கு …

  8. இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு: சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆர்.ராம்) இந்தியாவை வெளிப்படையாக பகைக்காது 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்காகவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் களமிறங்கியுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் இணைப்பேச்சாளரும், மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளின் பின்னால் உள்ள அரசாங்கத்தின் சூட்சுமமான திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு தேவையான சர்வாதிகாரத்தினை வலுப்படுத்துவற்கான ஏற்கனவே அரசியலமைப்பில் 20ஆ…

  9. கோத்தாபய அரசின் ஜெனிவாவுக்கான பதிலளிப்பானது மஹிந்தவின் எல்.எல்.ஆர்.சி.பரிந்துரைகளுக்கு முரணானது (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அளித்துள்ள 30 பக்க பதிலளிப்பானது அவருடைய சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) பரிந்துரைகளுக்கு முற்றாக முரணானது என்று ஐ.நாவுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும், இராஜதந்திரியும் ஐக்கிய மக்கள் சக்தியின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி. தயான் ஜயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நடைபெற…

  10. ஜுனில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த திட்டம் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமதம் குறித்தும் காணப்படும் நிலையிலேயே அரசாங்கம் ஜுன் மாதத்தில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதுடன், இதன்போது மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து மாகாண சபைகளுக்கும் பத…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தநிலையில் இதன்போதே இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்க…

    • 5 replies
    • 645 views
  12. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றது தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தமது போராட்டங்களை திசை திருப்பி, அரசினை திருப்திபடுத்த முயல்கின்றது. தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பயன்படுத்தி, அதாவது அவர்களது உணர்வுகளை பயன்படுத்தி வருகின்றனர் என வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் வடக்…

  13. தண்ணிமுறிப்பு கிராமத்தில் விவசாய நடவடிக்கைக்கு பௌத்த மதகுரு தலைமையினால குழு தடை 23 Views தண்ணிமுறிப்பு கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்களம் தடை விதித்துள்ளதோடு குருந்தூர் மலை பௌத்த புராதன பூமி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி பொலிஸார் மற்றும் வன வள திணைக்களத்தினரை ஏவி விட்டு வேலைகளுக்கு தடைவிதித்த சம்பவம் நேற்று மாலை (27)இடம்பெற்றுள்ளது. …

  14. சிறீலங்கா தேசிய ஒற்றுமையை நிலை நிறுத்தும்- சீனா 17 Views சிறீலங்கா தேசிய ஒற்றுமையை நிலை நிறுத்தும் என நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் நடைபெற்ற சிறீலங்கா தொடர்பான நாடு சார்ந்த தீர்மானம் குறித்த கலந்துரையாடலின்போது சிறீலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து சில மேற்கத்திய நாடுகள் கேள்வி எழுப்பின. இவ்விடயம் தொடர்பிலேயே சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் க…

  15. இலங்கையில் 82 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை-400க்கும் மேற்பட்டோர் பலி 22 Views இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை 464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை வெலிக்கடை சிறைச்சாலையில் 909 பேருக்கும் மஹசீன் சிறைச்சாலையில் 878 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மஹர சிறைச்சாலையில் 827 பேருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் 450 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவி…

  16. நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த அர்பணிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் நுவரெலியாவிலுள்ள தமக்கு சொந்தமான 180.2 பேர்ச்சஸ் காணித்துண்டை விடுமுறை நாட்களில் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து வியாழக்கிழமை (25) கையளித்தார். கந்தபொலை கோர்ட் லாட்ஜ் தோட்டத்தில் பகுதியில் வசிக்கும் திரு தொன் பேர்னார்ட் அலோசியஸ் குருகுலாதித்தியா மற்றும் திருமதி லாலனி பெட்ரியஸ் குருகுலாதித்தியா, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் காணியை நன்கொடையாக வழங்குவதற்கான ஆவணங்களில் கைசாத்திட்டனர். …

    • 2 replies
    • 511 views
  17. வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம். படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம். அரச பொ…

    • 11 replies
    • 679 views
  18. (எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்படும் வரை அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் , இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் 800 - 1200 செல்சியஸ் வெப்பநிலையில் தகனம் செய்யப்பட்டது. தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. எனவே தற்போது தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டுக்கும் சட்ட பூர்வமாக…

    • 1 reply
    • 306 views
  19. இலங்கையை நிர்க்கதியாக இந்தியா கைவிடவேகூடாது.! - வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெனிவா நெருக்கடியில் எமது அயல்நாடான இந்தியா, 'அங்குமில்லை, இங்குமில்லை' என்ற பாணியில் பங்கேற்காமைப் போக்கைப் பேணாமல், முழு ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் எங்களுக்கு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும். இலங்கையை நிர்க்கதியாக இந்தியா கைவிட்டு விடக்கூடாது." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே. கொழும்பில் வைத்து இந்தியாவின் 'த ஹிண்டு' நாளிதழுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கை விடயம் விரைவில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் வாக்கெடுப்புக்கு வர இருக்கின்றது. அச்சமயம…

    • 3 replies
    • 928 views
  20. சிறீலங்கா தொடர்பான பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்க முடியும் – சுமந்திரன் 28 Views ஐ.நா மனித உரிமைப் பேரவையில், சிறீலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்த விவாதத்தில், சிறீலங்காவுக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், எனவே பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். மிக முக்கியமாக இந்தியா இந்த விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகமூட்டியிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தொடர்பான விவாதம…

  21. சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்துவிடக் கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம் 23 Views இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப்போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது நிலைப்பாட்டை வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்- “யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களுக்கு இன்னும் பொறுப்பு கூறப்படவில்லை. இலங்கை அரசாங்கம்,…

  22. P2P பேரணி வீண்வேலை ! தமிழர் பிரச்சனைகளை பிரதமர் மகிந்த ஊடாக தீர்க்கலாம் - கருணாஅம்மான் By Batticaloa பி2பி பேரணி தேவைக்கில்லாத ஒன்று. வீண்வேலை. அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உதவஇருக்கின்றகாலகட்டத்தில் இவையெல்லாம் தேவையா? இதைவிட கதிர்காம பாதயாத்திரையில் செல்லலாம். இவ்வாறு கருணாஅம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் காரைதீவில் தெரிவித்தார். தேர்தல் முடிந்த கையோடு அம்மானைக்காணவில்லை என பலர் விரக்தியிலிருந்ததுண்டு ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறினார்கள். உண்மை அரசாங்கம் இப்போதுதான் நிலையானகட்டத்திற்குவந்துள்ளது. இனி நாம் நிறைய வேகைளை முடிக்கலாம். கொழும்பிற்குச்சென்று பல அமைச்சர்களையும் சந்தித்துவருகிறேன். விரைவில் நல்லவை நடக்கும். …

  23. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தரப்பு பரிந்துரைகள் திங்கட்கிழமை முன்வைக்கப்படும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பரிந்துரைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முன்வைக்கபடவுள்ளது. ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளே இவ்வாறாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணையை பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மொண்டிநீக்ரோ, வட மெசிடோனியா மற்று…

  24. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிக விரைவில் சந்திக்கபோறாராம் ஐனாதிபதி..! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை மிக விரைவில் ஐனாதிபதி சந்திப்பார் என வெளியுறவு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார். வியாழக்கிழமை இந்திய ஊடகமான 'த இந்து' வுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து அந்த குடும்பங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி உண்மையிலேயே உறுதியாக உள்ளார். இது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் முதல் பயணமாகும். அவர் [ஜனாதிபதி] அரசியல்வாதிகள் சொல்வதைக் காட்டிலும், நேர…

  25. சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது – அரசாங்கம் by Anu இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக அரச கரும மொழிகளை மீறினால் மாத்திரமே அதற்கெதிராக நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய சீன அல்லது வேறு நாடுகளின் தனிப்பட்ட பெயர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.