Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.பல்கலையில் இம்முறை 2500 பேருக்கு பட்டமளிக்க ஏற்பாடு (சி.எல்.சிசில்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது. வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவார்கள். ஆனால் இம்முறை அதற்கு முற்றிலும் மாறாக 2,500 மாணவர்கள் வரையில் பட்டம் பெறவுள்ளனர். கொரோனாப் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிப்பது மிகவும் சிரமமானது. எனினும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமையவே புதிய ஒழுங்கு நடைமுறை களுடன் இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. வழமையாகப் பட்ட…

  2. (ஆர்.யசி) இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டதிற்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவை சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது ஒரு சில நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளன. துறைமுக அபிவிரு…

  3. (ஆர்.யசி) மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளப்போவதுமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆணைக்குழு முழுக் கேலிக்கூத்து எனவும் அவர் விமர்சித்தார். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தகால மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும், எதிர்வரும் பெப்ரவரி -மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை சமாளிக்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழு குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் போத…

  4. பிள்ளையான் குழுவின் மத்திய முகாம் தொடர்பில் வெளியான தீர்ப்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகமாக செயற்படும் தமது குடும்ப வீட்டினை மீள ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிவான் இந்த உத்தரவினை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமது குடும்ப சொத்தாக பரம்பரைபரம்பரையாக தாங்கள் வசித்துவந்த வீட்டிற்குள் கடந்த 30வருடமாக தாங்கள் செல்லமுடியாத நிலையிருந்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி…

    • 40 replies
    • 4.7k views
  5. கந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.! சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழ…

  6. சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இரு இலங்கையர் இந்தியாவில் கைது (சி.எல்.சிசில்) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, மாலைதீவு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பங்கீட்டின் முக்கிய கர்த்தாக்கள் எனக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை ஒரு பெரும் நடவடிக்கை மேற்கொண்டு இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்(NCP) கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட எம்.எம்.எம்.நவாஸ் மற்றும் முஹமட் அஃப்னாஸ் ஆகியோரே சென்னையிலிருந்து இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. குறித்த இருவரும் நடுக்கடலில் பாகிஸ்தானிய மற்றும் …

  7. தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சாமச கூட்டம் இன்று (22) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமாசத்தினர் மேலும் தெரிவித்ததாவது, எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலேயே வட கடலில் மீனவர்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, எல்லையைத் தாண்டும் தமிழக மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்யும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்பதுடன் இது தொடர வேண்டும் என்…

    • 48 replies
    • 4.6k views
  8. சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு அன்ரிஜன் துரித கருவி பரிசோதனை மூலம் கொரோனா தொற்று இன்று (22) சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை ஊடான முடிவுக்காக சுகாதார அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரச தரப்பால் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பவித்ரா வன்னியாராச்சி ‘கொரோனா தடுப்பு மருந்து என்று கூறப்படும் தம்மிக்க பண்டாரவி்ன் பானி மருந்தை முதன்முதலாக பருகியிருந்தார் என்பதும், கொரோனாவில் இருந்த…

  9. (நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 46 ஆவது கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நில…

  10. (இராஜதுரை ஹஷான்) காதி நீதிமன்றம் நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கு பொருத்தமற்றது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடும் வேளையில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் மதத்தை அடிப்படையாக கொண்டு சட்டம் செயற்படுத்தப்படுகின்றமை எவ்வகையில் நியாயமாகும். ஒரு நாடு -ஒரு சட்டம் என்ற கொள்கை செயற்படுத்தப்பட வேண்டுமாயின் காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/92253/athuraliya.jpg கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்ப…

  11. இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான் இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும். மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலி…

  12. இம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை! தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு குறித்த கட்சி கடிதம் அனுப்பியுள்ளதுடன் தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் உப தலைவரும் ஊடகப் பேச்சாளருமான சமன்குமார் கூறுகையில், “இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்ட…

  13. புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்கள் சென்றமையை அடுத்து பிசுபிசுத்துள்ளது. நேற்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, நிலாவரை கிணற்றுப் பகுதியில் சிங்கள இனத்தினைச் சேர்ந்தவர்கள் கட்டிட அத்திபாரம் வெட்டுவதைப் போன்று வெட்டி வருகின்றனர் என்ற தகவல் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவைக்கூட்டத்தினை தவிசாளர் சடுதியாக முடிவுறுத்திவிட்டு சபையினரையும் அழைத்துக்கொண்டு நிலாவரை கிணற்றுப் பகுதிக்குச் சென்றார். அச்சமயத்தில் நிலாவரை கிணற்று…

    • 6 replies
    • 1.2k views
  14. வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27ம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த வருடம் ஒக்டோபரில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நிர்வாகத்தினர் பிணையில் விடுவ…

  15. மேச்சல் தரை விவகாரம் -பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதி மன்றம் உத்தரவு 17 Views மட்டக்களப்பு,மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை வழக்கு முடியும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும்,மேய்ச்சல் தரையினை பாவிப்பதை தடைசெய்யவேண்டாம் எனவும் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தெரிவித்தார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 18ஆம் திகதி பண்ணையாளர்கள் சார்பில் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல்தரை அபகரிப்பு தொடர்பாக த…

  16. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ! மூவரடங்கிய ஆணைக்குழுவை நியமித்தார் ஜனாதிபதி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து, செயற்பட்டு விதம் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்…

    • 6 replies
    • 927 views
  17. ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிக்கு இலங்கை அனுமதி Published by J Anojan on 2021-01-22 11:45:33 நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதிப்படுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/98952

  18. பராமரிப்பற்ற காணிகள் நல்லூர் பிரதேச சபைக்கு உடைமையாக்கப்படும்- மயூரன் எச்சரிக்கை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என அப்பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களிலுள்ள காணிகள், உரிமையாளர்களால் பராமரிக்கப்படாது புற்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில் குறித்த காணிகளை பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும், தற்போது டெங்கு நுளம்பு பரவும் நிலை காணப்படுகின்றது. எனவே நல்லூர் …

  19. யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு 21 Views யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், சட்டத்தரணி சுகாஸ், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். http://athavannews.com/wp-content/upl…

  20. மாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை 15 Views மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், அந்த மக்களின் அவல நிலை குறித்து முக நுால் பதிவு ஒன்றில்,இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “முதல் மாதம் –அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து எமது மாவட்டத்திற்குள் அத்துமீறி காணிகளை பிடித்தார்கள். காடுகளை அழித்தார்கள். முறையிட்டோம். ஆளுநர் சொன்னார், சோளம் நாட்ட வந்தவர்கள் 3 மாதத்தில் போய்விடுவார்கள் …

  21. இராஜதுரை ஹஷான் பொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின்12(1) அத்தியாயத்திற்கு முரணாகும். மொழி அடிப்படையில் நியமனம் வழங்கினால் முஸ்லிம் இனத்தவர்கள் அதிகளவில் உள்வாங்கப்படுவார்கள். இது அரசியலமைப்பிற்கும், நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகமாகும். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டி, தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர் 12 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீதியமைச்சர் அலிசப்ரி ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரி…

    • 0 replies
    • 648 views
  22. யாழில் 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்வு:தீவக வலயத்தில் 4 (சி.எல்.சிசில்) ‘ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பரிந்துரையின் கீழ் 10 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி தீவக கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வலிகாமம் கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வடமராட்சிக் கல்வி வலயத்தில் 2 பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட்டுள்ளன. தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் வருமாற…

  23. ஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021 இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், உலகின் பார்வையில் விமர்சிக்கப்பட்ட ஒரு கொள்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட, மரண தண்டனையை அமுல்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு, இலங்கை மனித உரிமை சமூகத்தால் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அதேவேளை, சிறைச்சாலை கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் நீண்ட காலமாக இலங்கைக்கு பரிந்துரைத்து வர…

  24. தமிழ்க் கட்சிகளின் யோசனை வரைபை நிராகரிக்குக - அமைச்சர் தினேஷ் குணவர்தன.! "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் நிறுத்த வேண்டும் என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிவைத்துள்ள யோசனை வரைபை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் அடியோடு நிராகரித்து அதைத் தூக்கிவீச வேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது 'இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா…

  25. சென்னை - மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை.! இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல்வெளி இல்லாத ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.