ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
யாழில் 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்வு:தீவக வலயத்தில் 4 (சி.எல்.சிசில்) ‘ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பரிந்துரையின் கீழ் 10 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி தீவக கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வலிகாமம் கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வடமராட்சிக் கல்வி வலயத்தில் 2 பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட்டுள்ளன. தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் வருமாற…
-
- 2 replies
- 696 views
-
-
இராஜதுரை ஹஷான் பொலிஸ் பரிசோதகர் நியமனத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது விசேட தகைமையாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அரசியலமைப்பின்12(1) அத்தியாயத்திற்கு முரணாகும். மொழி அடிப்படையில் நியமனம் வழங்கினால் முஸ்லிம் இனத்தவர்கள் அதிகளவில் உள்வாங்கப்படுவார்கள். இது அரசியலமைப்பிற்கும், நாட்டு மக்களுக்கும் இழைக்கும் துரோகமாகும். இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டி, தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்க தேரர் 12 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீதியமைச்சர் அலிசப்ரி ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரி…
-
- 0 replies
- 647 views
-
-
ஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021 இலங்கையின் மனித உரிமைகள் குறித்து அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், உலகின் பார்வையில் விமர்சிக்கப்பட்ட ஒரு கொள்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட, மரண தண்டனையை அமுல்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு, இலங்கை மனித உரிமை சமூகத்தால் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அதேவேளை, சிறைச்சாலை கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் நீண்ட காலமாக இலங்கைக்கு பரிந்துரைத்து வர…
-
- 0 replies
- 476 views
-
-
போர்க்களத்தில் இருந்து மாநாட்டு அறைவரை – இலங்கையின் இராணுவ மயமாக்கல் –JDS கூட்டறிக்கை 60 Views இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் குறித்து JDS அமைப்பு ஊடக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் ஊடக கூட்டறிக்கையில், ஜொகானஸ்பேர்க்: பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கையில் சிவில் சேவையில் பதவிகளைப் பொறுப்பெடுத்து வருவதாக நாட்டுக்கு வெளியேயுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்ட மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்பட்ட ஒரு அட்டவணையானது முன்னாள் இராணுவ அதிகா…
-
- 2 replies
- 543 views
- 1 follower
-
-
யாழ்.நெடுந்தீவு, நயினா தீவு, அனலை தீவு பகுதிகளில் கால்பதிக்க போகும் சீனா - அமைச்சரவை அனுமதி.! யாழ்.நயினா தீவு மற்றும் நெடுந்தீவில், அனலை தீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybrid Renewable Energy Grid) அமைப்பை உருவாக்குவதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கை மின்சார சபை நடை முறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகத்தன்மை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே சீனாவுக்கு தீவுப் பகுதிகளில் புதுப்பிக்க தக்க எரி சக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் கூட்டு முயற்சி நிறுவனமான சைனோசோர் எச்வின் நிறுவனத்துக்கு இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்…
-
- 1 reply
- 555 views
- 1 follower
-
-
தமிழ்க் கட்சிகளின் யோசனை வரைபை நிராகரிக்குக - அமைச்சர் தினேஷ் குணவர்தன.! "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன் நிறுத்த வேண்டும் என்று மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுப்பிவைத்துள்ள யோசனை வரைபை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் அடியோடு நிராகரித்து அதைத் தூக்கிவீச வேண்டும்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது 'இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா…
-
- 0 replies
- 619 views
-
-
சென்னை - மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை.! இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல்வெளி இல்லாத ந…
-
- 0 replies
- 337 views
-
-
புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம் யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தோடு, சில மாணவர்கள்உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்து…
-
- 0 replies
- 337 views
-
-
விமான நிலையங்கள் மீளத் திறப்பு – முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது. ஓமானில் இருந்து குறித்த வணிக விமானம் இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த விமானத்தின் மூலம் சுமார் 50 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், அவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வணிக விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளமையினால் பயணிகள் மீண்டும் சாதாரண விமான கட்டணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 324 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 22 Views வடக்கு மாகாணத்தில் கடந்த 20 நாட்களில் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் அவரது அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்று வரை 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வவுனியா மாவட்டத்தில் 234 பேருக்கும், மன்னாரில் 70 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 32 பேருக்கும் கிளிநொச்சியில் பத்துப் பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந…
-
- 0 replies
- 292 views
-
-
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைவதாயும் தெரிவித்திருந்தார். துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு க…
-
- 19 replies
- 2k views
-
-
கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு பதவி உயர்வு லண்டனில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து ‘கழுத்தை அறுப்பேன்’ என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு சற்றுமுன்னர் மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்த சிறிலங்கா இராணுவத் தலைமை அவரை, சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவிநிலைக்கு உயர்த்தியிர…
-
- 4 replies
- 751 views
-
-
இலங்கையிலும் ஒரு ஹிட்லரும் ஒரு சார்லி சப்ளினும் உள்ளனர்- ஹரீன் இலங்கைக்கு என ஒரு ஹிட்லரும் ஒரு சார்லிசப்ளினும் உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புசால்வை அணிந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஹிட்லரும் சார்லிசப்ளினும் மீசைவைத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் ஆனால் வேறு வேறு குணாதிசயங்கள் உள்ளவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஹிட்லர் உலகை அழவைத்தார் சார்லிசப்ளின் உலகை சிரிக்கவைத்தார். இலங்கையிலும் இதேபோன்றவர்கள் உள்ளனர் இதன் காரணமாக மக்கள் அச்…
-
- 1 reply
- 668 views
-
-
மேய்ச்சல் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரைகாணியை சிங்கள மக்கள் அத்துமீறி பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று புதன்கிழமை (20) பட்டிப்பளை பிரதேசத்தில் இருந்து ஆர்ப்பாட்டமாக பிரதேச செயலகம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமான மணல்ஏற்றம், காத்தாடியார்சேனை ,பொன்னாங்கண்ணிசேன…
-
- 0 replies
- 342 views
-
-
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்ட 10 சந்தேக நபர்கள் விடுதலை தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் இன்சப்புக்குச் சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றி கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலை அடுத்து கைதுசெய்யப்பட்ட 10 சந்தேக நபர்களையும் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜெயசூரிய நேற்று(19) உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் மீது மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற சட்ட மா அதிபரின் அறுவுறுத்தல்களின் பேரில் சந்தேக நபர்களை விடுவிக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு(ரிஐடி) நீதிமன்றைக் கோரியதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதன்படி வாதியின் வேண்டுகோளின் பேரில் பத்த…
-
- 0 replies
- 343 views
-
-
ஹம்பாந்தோட்டை அரச அலுவலர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அரசாங்க அலுவலர்களுக்கான தமிழ் மொழி பயிற்சித் திட்டம் அண்மையில் மாகம் ருஹுணுபுர நிர்வாக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்புப் பிரிவு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மாவட்ட செயலர் டபிள்யூ.எச்.கருணாரத்னே ஆரம்பித்து வைத்தார். அரசாங்க அலுவலர்களுக்கான 150 மணி நேர தமிழ்மொழி பயிற்சித் திட்டம் பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020இன் கீழ் செயற்படுகிறது. இப்பாடநெறியை வாரத்தில் இரு நாட்கள் நடத்தி 2021 ஏப்ரலில் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 314 views
-
-
கிறீடன்ஷ் ஜெனொமிக்ஷ் தனியார் நிறுவனத்தின் பி.சி.ஆர். பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு அனுமதி : நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் ஞானம் கொவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடியை எதிர்கொள்ளும் பொருட்டு அதியுயர் விஞ்ஞான தொழில்நுட்பத்தை உள்ளடக்கி தொற்றைக் கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை தனியார் ஆய்வுகூடத்துக்கான அனுமதி எமக்கே முதல் தடவையாக கிடைக்கப் பெற்றுள்ளது என கிறீடன்ஷ் ஜெனொமிக்ஷ் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் வாஸ் எஸ்.எஸ்.ஞானம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் வாஸ் எஸ்.எஸ்.ஞானம் மேலும் கூறுகையில், …
-
- 0 replies
- 270 views
-
-
‘அகழ்வாராய்ச்சியில் தமிழர்களையும் இணையுங்கள்’ எஸ்.றொசேரியன் லெம்பேட் குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு ஆராய்சியில் துறைசார்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அருங்கலைகள், கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசயைின்படி, திங்கட்கிழமை (18), அகழ்வுப் பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது என்றும்…
-
- 2 replies
- 407 views
-
-
இந்திய மீனவர்கள் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்- பருத்தித்துறை மீனவர் குற்றச்சாட்டு by : Yuganthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/fish-1-720x450.jpg வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மீனவரான சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்துள்ளதாவது, “பருத்தித்துறை சுப்பர்மடம்’ இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று அதிகாலை படகில் சென்றேன். …
-
- 3 replies
- 574 views
- 1 follower
-
-
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள் 4 Views சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுமையான வடிவத்தை நீங்கள் கீழே காணலாம். https://www.ilakku.org/?p=39574
-
- 34 replies
- 3.9k views
-
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடத்தில் முதலாவதாக இலங்கை வரவுள்ள வௌிநாட்டு தலைவர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாகிஸ்தான் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு (adaderana.lk)
-
- 0 replies
- 318 views
-
-
அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை – அனுர by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/11/Anura-Kumar.jpg பொருட்களுக்கான விலை குறித்து வெளியாகும் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. குறித்த விவாதத்தில் பேசிய அவர், வர்த்தமானிகள் வெளியிடப்படுகின்றதே தவிர அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை …
-
- 0 replies
- 377 views
-
-
காணிகள் அபகரிப்பு, காடுகள் அழிப்பு – மக்கள் போராட்டம் 18 Views மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை)பிரதேச செயலகத் திற்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காடுகள் அழிக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்முனை தென் மேற்கு கால்நடை உற்பத்தி பால் பண்ணை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன. மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை)பிரதேச சபைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஜனாதிபதி,பிரதமருக்…
-
- 0 replies
- 292 views
-
-
மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு! மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட …
-
- 1 reply
- 320 views
-
-
அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் எதுவித தடைகளும் இன்றி தமது கடற்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமை போன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த பிரதேச கடற்படை அதிகாரிகளுடன் விடயம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அவ்வாறான நடைமுறைகளை உடனடியாக இல்லாது செய்து அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னர் அல்லைப்பிட்டி பிரதேசத்தில் கடற்…
-
- 0 replies
- 255 views
-