ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
சமையல் எரிவாயுவின் விலையும் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இருந்தபோதும் ஷெல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்காது என நுகர்வொர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலம் முதல்கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்காக மகிந்த அரசு பல்வேறு சலுகைகளையும் விலைக்குறைப்புக்களையும் அறிவிப்பு செய்து வருகின்றது. http://meenakam.com/?p=1236
-
- 2 replies
- 612 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது நிழல் என்ற பிரமையில் இருந்த லக்ஸ்மன் குலுகல்ல? ஆவணப் படம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். இதேவேளே இந்த நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதற்கு அப்பால், அவர்களில் ஒருவராக தன்னை நினைத்து செயற்பட்டவர். ஆயின் ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பினூடு திடிரென இந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்…
-
- 0 replies
- 346 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு மத்தள வானூர்தி நிலையம் இந்தியாவுக்கு இலங்கையின் சமாளிப்பு வியூகம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகாலப் பகுதிக்கு சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதால் ஆத்திரமடைந்துள்ள இந்தியாவைச் சமாளிப்பதற்காக துறைமுகத்தை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய நிறுவனத்துக்கு மத்தல வானூர்தி நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் வானூர்திப் போக்குவ…
-
- 8 replies
- 596 views
-
-
சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தல்: வேட்பாளர்கள், வாக்காளர்கள் விபரம் எதிர்வரும் சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக சிறீலங்கா தோ்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களின் சின்னங்கள் அடங்கிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசத்தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், சின்னங்கள் விவரம் 01. ஐதுருஸ் மொஹமட் இல்லியாஸ் – அன்னாசி 02. மொஹமட் ஹாசிம் மொஹமட் இஸ்மாயில் – கழுகு 03. விக்கிரமபாகு கருணாரத்ன – மேசை 04. உபாலி சரத் கோன்கஹே – கேட் 05. சன்ன ஜானக சுகத்சிறி கமகே – முயல் 06. சிறிதுங்க ஜயசூரிய – முச்சக்கர வண்டி 07. விஜே டயஸ் – கத்தரிக்கோல் 08. முத்துபண்டார தெமினிமுல்ல – …
-
- 0 replies
- 562 views
-
-
கல் வீடுகளுக்கு விண்ணப்பியுங்கள் பொருத்து வீட்டுக்கு கொடுத்த விண் ணப்பங்களை மீளப்பெற்று, கல் வீட் டுக்கு மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 50 ஆயிரம் கல் வீடுகள் அமைக்குப் பணி விரைவாக நடைபெற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. தேசிய ஒன்றிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது…
-
- 0 replies
- 418 views
-
-
தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா படையினரால் இனவழிப்பு போர் உக்கிரமடைந்த வேளை, மெளனமாகவும், வெறும் வார்த்தைகளாலும் அறிக்கை விட்டுக்கொண்டிருந்த தமிழக தலைவர்கள் சிலருக்கு மத்தியில் தன்னைத்தானே தீ மூட்டி எரித்து தமிழீழ மக்களின் இன அழிப்பு போரினை உலகுக்கு எடுத்து கூறியவன் மா வேங்கை முத்துக்குமார். அவரது ஓராண்டு நினைவு தினம் வருகின்ற 29 ஜனவரி மாதம் வருகின்றது. இந்த நினைவு நாளை தமிழகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் எழுச்சியுடன் நடாத்த் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் அனைத்துலக தாயக விடுதலை செயற்பாட்டாளர்களினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதே வேளை தமிழகத்திலும் ஈழ விடுதலை ஆதரவாளர்களினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது... htt…
-
- 0 replies
- 478 views
-
-
இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுள்ள இந்திய கப்பல்கள் இரண்டையும் திரும்ப அழைக்குமாறு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு டிதெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடக்கும் பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு கூடாது என்று வலியுறுத்தி பல முறை கடிதம் எழுதியுள்ளேன். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக …
-
- 0 replies
- 267 views
-
-
யாழ்ப்பாணத்தில் கொழும்பு பங்குச் சந்தை [ ஞாயிற்றுக்கிழமை, 24 சனவரி 2010, 05:04 GMT ] கொழும்பு பங்குச் சந்தையின் கிளை ஒன்று அடுத்த மாதம் யாழப்பாணத்தில் திறக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மக்களின் வருமானம் அதிகமானதாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பெருந்தொகைப் பணம் கிடைப்பதாகவும் கொழும்பு பங்குச்சந்தை மேலாளர்கள் கூறியுள்ளனர். அதனால், அந்த வருமானங்களை முதலீடு செய்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத் தமது கிளையொன்றை அங்கு அமைக்கத் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது மாத்தறை, கண்டி, குருணாகல, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் பங்குச் சந்தையின் கிளைகள் இயங்கி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் புதிய கிளையை அமைப்பதற்க…
-
- 14 replies
- 2k views
-
-
மோதலின்போது உயிர் மற்றும் பொருள் இழப்புகளை கணக்கிடுவதற்கான அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு மாற்றாக வடக்கிலும் கிழக்கிலும் தனியான கணக்கெடுப்பை நடத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு திட்டமிடுகின்றது. தனது கட்சியினர் அரசாங்கத்தின் கணக்கெடுப்பை நம்பகமானதென அங்கீகரிக்கவில்லையென இரா.சம்பந்தன் கூறினார். அந்த வகையில் அரசாங்கம் எவரையும் தவறாக வழிநடத்துவதை தடுப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அவர் கூறினார். அரசாங்கம், ஜெனீவாவில் சில பிரச்சினைகளை தாண்டுவதற்காக இதை செய்யக்கூடும். ஆனால் எமக்கு இது எமது மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பானதாகும் என அவர் கூறினார். தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதனால் உண்மையை நிலைநிறுத்த தனது கட்சி விரும்புகின்றதென அவர் க…
-
- 0 replies
- 360 views
-
-
Published by J Anojan on 2022-02-09 18:10:22 ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 667 நாட்கள் சிறைப்படுத்தலின் பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CA/ PHC/APN/10/22 எனும் மனுவின் உத்தரவாக அவருக்கு பிணையளிக்குமாறு கடந்த 7 ஆம் திகதி அறிவித்தனர். அந்த உத்தரவுக்கு அமைவாக சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் செல்ல அனுமதித்தார். அதன்படி, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறுமதி…
-
- 2 replies
- 296 views
-
-
கிழக்கில் மீண்டும் மழை: 1000 குடும்பங்கள் பாதிப்பு அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக சுமார் 1000குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்துவரும் மழையின் காரணமாக தாழ்நிலத்திலுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை நிந்தவூர், காரைதீவு மற்றும் கல்முனைப்பகுதிகளிலுள்ள தாழ்நிலப்பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தினுள் 63.6மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியு…
-
- 0 replies
- 581 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் 03.09.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 317 views
-
-
வடக்கு ஊடகங்களால் மக்களுக்கு என் மீது தவறான புரிதல்கள் கொழும்பு ஊடக அமைப்பிடம் முதலமைச்சர் விக்கி ஆதங்கம் “வடக்கில் உள்ள சில ஊடகங்கள் நான் தெரிவிக்கும் கருத்துக்களைத் திட்டமிட்டுத் திரிபுபடுத்தி வெளியிடுகின்றன. இதனால் மக்களுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வழிவகுக்குப்படுகின்றது” இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுதந்திர ஊடக இயக்கப் பிரதிநிதிகளு டனான சந்திப்பில் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னுக்கும், கொழும்பில் செயற்படும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான சந்திப்பு கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்…
-
- 0 replies
- 300 views
-
-
ஐ.நா. அறிக்கை... காலத்திற்கு காலம் வரும், அறிக்கையே – டக்ளஸ் காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில் ” நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இலங்கையில் இருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து 50 பேரும் கச்சதீவுக்கு போகலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது . அதன் பின்னர் ஜனாதிபதியுடன் நான் கலந்துரையாடி இரு பக்கத்தில் இருந்தும…
-
- 5 replies
- 433 views
-
-
உதயன் சுடரொளிப் பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இந்தச் செய்தி எமது யாழ் மாவட்ட செய்தியாளராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவாஜிலிங்கம், சிறீகாந்தா, கஜேந்திரன் ஆகியோர் விலக்கப்பட்டுள்ள நிலையிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் விலகிக் கொண்டுள்ள நிலையிலும் கடைசி நேரத்தில் சரவணபவன் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதனிடையே உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பிந்திக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன SOURCE : http://www.eelamweb.com
-
- 8 replies
- 1.8k views
-
-
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுவதே தீர்வுக்கு வழி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவிப்பு (ஆர்.யசி) நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாதை யில் சர்வதேச அழுத்தங்களை விடுத்து சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுவதே தீர்வினைப்பெறும் ஒரே வழிமுறையாகும். நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியல் அமைப்பின் மூலமாக தீர்வு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். நாட்டை பிளவுபடுத்தவோ அல்லது சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்தவோ அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார். இலங்கையின் தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் சர்வதேச அழுத்தம் வழங்கப்பட வேண்டும…
-
- 0 replies
- 294 views
-
-
சமயங்களிடையேயான நல்லுறவை வளர்ப்பதற்கான அரங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்கர்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேரில் சென்று அழைர்ர் விடுத்துள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறும் கோரி உள்ளார். இவ்வாறே, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் சமயங்களின் உயர் பீடங்களும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து, எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் கூட்டத்திற்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி பி.ப 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி சந…
-
- 0 replies
- 290 views
-
-
அரசியல் கைதிகளை விடுவிக்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் உத்தரவை பெற வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் நீண்ட காலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அடுத்த பேச்சு வார்த்தைக்கு முன்னர் விடுவிப்பதற்கான உத்தரவை நடக்கவிருக்கும் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாத…
-
- 0 replies
- 195 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 ஆவது தடவையாக இன்று புதன் கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது. இன்று காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த புதை குழி தோண்டப்பட்ட போது மேலும் இரண்டு (2) மனித எச்சங்கள் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது வரை மீட்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதன் கிழமை குறித்த மனித புதை குழி தோண்டபபட்ட போது அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண தலைமையிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை. இதே வேளை திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி உள்ள இடத்திற்கு சென்ற குற்ற புலனா…
-
- 0 replies
- 345 views
-
-
ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கம் இறுதி சந்தர்ப்பம் வீ.ஆனந்தசங்கரி (செயலாளர், தமிழர் விடுதலைக் கூட்டணி மிக அவதானமாக பரிசீலித்ததன் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் கவலை தருகின்றது என்றும், அதிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் அக்கூட்டமைப்பை உடனடியாக கலைக்கும்படி தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினராகிய நாமே என்பதால் அதனை கலைக்குமாறு கேட்பதற்கு எமக்கு சகல உரிமையும் உண்டு. தப்பான வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை ஒரு சிலர் சுயநலம் கருதி பயன்படுத்துவதால் நாம் எடுக்கு…
-
- 0 replies
- 434 views
-
-
பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோருகிறது! பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய பரிமாற்ற ஏற்பாடாக இருக்கும். முன்னதாக, அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க பங்களாதேஷ் இதேபோன்ற கடன் வசதியை இலங்கைக்கு வழங்கியது. Thinakkural.lk
-
- 1 reply
- 278 views
-
-
பான் கி மூனின் நடவடிக்கை இலங்கையர்களை ஆத்திரமூட்டுமாம் - போகொல்லாம கொழும்பு நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 பான் கி மூன் அவர்களின் குழு அமைக்கும் செயற்பாடு இலங்கையர்களை ஐ. நா மீது கோபமடைய செய்யும் என எச்சரித்துள்ளார் போகொல்லாம. ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களை செவி மடுக்காது இலங்கை தொடர்பில் ஆலோசனை குழு அமைக்க போவதாக கூறியமை அவரது சுயாதீன, தனிப்பட்ட முடிவாகும். உண்மையில் இலங்கை தொடர்பான விடயங்கள் ஐக்கிய நாடுகளின் பொது சபை, பாதுகாப்பு சபை ஏன் மனித உரிமைகள் ஆணையகத்திலும் கூட தோற்கடிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான முடிவினை எடுப்பது பான் கி மூன் அவர்களின் தன்னிலை வெளிப்பாடே என குமுறியுள்ளார் போகொல்லாம. இந்த செயற்பாடுகள் கூடவே ஐ. நா வின் அரசியல்…
-
- 2 replies
- 487 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்திற்கு எதிராக, ஒரு இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் போராட்டம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இலங்கையின் சுதந்திர தினமான நேற்று முதற்கட்டமாக வெல்லம்பிட்டியவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒரு இலட்சம் கையெழுத்துகளைப் பெற்று, அதன் பிரதி ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்படவுள்ளது. கடந்தமுறை பத்து இலட்சம் கையெழுத்துக்களை ஜெனிவாவுக்கு அனுப்பும் போராட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=102960&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 307 views
-
-
அரசாங்கத்தில் இருந்து... வெளியேறுமா, சுதந்திரக் கட்சி? – தீர்மானம் இன்று! ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா? இல்லையா? என்பது குறித்து இன்று (திங்கட்கிழமை) தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசசேட கூட்டமொன்று நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவ…
-
- 0 replies
- 175 views
-
-
யாழ்.மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதலாம் இடத்தில் யாழ் மாவட்டமும் இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 43 வீதமானவர்களும் கொழும்பு மாவட்டத்தில் 39 வீதமானவர்களும் புகைத்தலில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். http://www.e-jaffna.com/arch…
-
- 9 replies
- 684 views
-