ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை தமிழ் மக்கள் கூட்டணி மீது சேறு பூச சில ஊடகங்கள் காத்திருப்பதாகவும், இவை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாண த்தில் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், மேலும் தெரிவித்ததாவது: “நாம் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியை தொடங்கியுள்ளோம். ஒருபுறம் எமது மக்கள் கடந்த 30 வருட கால போர்த் தாக்கங்களில் இருந்து இன்னமும் மீண்டுவரமுடியாத நிலையில் இருக்கின்றார்கள். …
-
- 0 replies
- 411 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அயல்நாடு எனும் வகையில் தனது பிரசன்னத்தை ஆழமாகவே பதிக்க வேண்டிய தேவைகள் ஏற்பட்டமையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் பலன்களும் இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டத்தினை மிக மிக ஆழமாகவேம் பாதித்துள்ளன என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அண்மைக்கால வரலாற்றில் 1987 இல் இலங்கை - இந்திய இணைவு ஆவணம் உண்மையில் அதன் பின் வந்துள்ள அரசியற் போக்குகளை தீர்மானித்துள்ளது. அதன் மிகப்பெரிய சாதனைகளிலொன்று வடக்கு - கிழக்கை ஒரு அலகாகக் கொண்டமையாகும். இதனோடு, இணைந்த முக்கியத்துவமுடையது தமிழை இலங்கையின் தேசிய மொழிகளிலொன்றாக பிரகடனப்படுத்தியமை. இந்த இணைவு ஆவணத்துக்கு பிரேமதாஸ உட்பட பல சிங்கள அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் அடியாகவே சமாதானக்கா…
-
- 0 replies
- 952 views
-
-
மகிந்தரின் ரகசிய செயல் அம்பலம்! [ Monday, 26-09-2011 15:58 ] ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சனிக்கிழமை இரவு சந்தித்த பின்னர் மின்தூக்கி அருகே காத்திருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹண தெரிவித்த தகவல்களை இன்னர்சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒளிநாடாவையும் பதிவு செய்து தமது இணையத்தளத்திலும் அதனை இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டிருக்கின்றது. "நாங்கள் அவருக்கு அனுப்பியிருந்த ஒளிநாடாவை அவர் ஏற்கனவே பார்த்துள்ளார்" என்று பான் கீ மூன் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜுபக்ஷவிடம் பாலித கோஹண தெரிவித்திருக்கின்றார். "இலங்கையின் கொலைக் களங்கள்" என்ற பிரித்தானிய சனல் -04 தொலைக்காட்சி வெளியிட…
-
- 1 reply
- 1.8k views
-
-
படைவலுச் சமநிலையே தீர்வுக்கான அடிப்படை -அருஸ் (வேல்ஸ்)- தமது தாயகப்பிரதேசம் வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஆரம்பகால கோரிக்கை என்பதற்கு மேலாக இன்று அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் அனைத்துலகத்திற்கு உண்டு. ஆனால் கிழக்கை முற்றாக இராணுவ மற்றும் அரசியல் வழிகளில் தனிமைப்படுத்துவதன் மூலம் அந்த நிலைப்பாட்டை தகர்த்துவிடலாம் என்பது இலங்கை அரசுகள் காலம் காலமாக கடைப்பிடிக்கும் கொள்கையாகும். எனினும் அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரல்களை தீர்மானிப்பவர்களில் முக்கிய புள்ளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் வழிகளில் தீர்வைக் காணவேண்டும் என கூறிவந்தாலும் அவர்களின் உண்ம…
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கை இராணுவ மயப்படுத்தி நீண்டகாலத்துக்கு வைத்திருக்க முடியாதளவுக்கு சர்வதேச நெருக்கடிகள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பிளேக்க ஒரு ஆலோசனை கூறியிருந்தார். வடக்கில் அதிகளவில் தமிழ்ப் பொலிசாரை நியமித்தால், நீண்டகாலத்துக்குப் படையினரை நிலை கொள்ள வைக்க வேண்டிய தேவை ஏற்படாது என்பதே அவரது ஆலோசனை.பிளேக் கூறிய கருத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத பலரும், இங்கு சிறிலங்கா பொலிஸ் தான் உள்ளதேயன்றி, தமிழ்ப் பொலிஸ்,சிங்களப் பொலிஸ் என்று கிடையாது என்று பதிலடி கொடுத்திருந்தனர். ஆனால் பிளேக் சொல்ல வந்தது தமிழ் பொலிசாரைப் பற்றியல்ல. தமிழ்ப் பொலிசாரை அதிகளவில் நியமிப்பதன் மூலம் நீண்டகாலத்துக்குப் படைகளைக் குவித்து வைத்திருக்க வேண்…
-
- 2 replies
- 991 views
-
-
வித்தியாவின் கொலைக்கு நீதி வேண்டி சுதந்திர சதுக்கத்தில் மாலை கவனயீர்ப்பு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் முன்னால் கவனயீர்ப்பு ஒன்று நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதி விவகார அமைச்சு , மகளிர் விவகார அமைச்சு மற்றும் சிறுவர் விவகார அமைச்சு என்பனவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. எனவே கவனயீர்ப்பில் கலந்து கொண்டு வித்தியாவின் கொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுக்கவும் மூவின மக்களையும் கலந்து கொள்ளுமாறு மகளிர் வ…
-
- 0 replies
- 279 views
-
-
கஞ்சிகுடிச்சாறில் ஒரு விசேட அதிரடிப்படையினர் பலி: 6 பேர் காயம் அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறுப்பகுதியில் வெள்ளி மாலை சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அமுக்க வெடியில் சிக்கி விசேட அதிரடிப்படையினர் ஒருவர் கொல்லப்பட்டும் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் ஊடுருவ முயலும்போது மூன்றுக்கு மேற்பட்ட அமுக்கவெடிகள் ஒரேநேரத்தில் வெடித்ததில் எழுவர் காயமடைந்ததாகவும் அவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் ஒருவர் அதீத குருதிப்பெருக்கால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்களின் டீ.என். ஏ அறிக்கைக்காக காத்திருக்கின்றோம்; வடக்கு டிஐஜி புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முழுமைபெற்றுவிட்டன. தற்போது மரபணுப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ்ப்பாண பொலிஸ் தலைமைகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்போது புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் தற்போதைய நிலை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் 9 பேர…
-
- 0 replies
- 847 views
-
-
அவசரமாக மைத்திரியை புதுடில்லிக்கு அழைக்கும் இந்தியா! இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய விஜயத்தின் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திரக் கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1369394
-
- 1 reply
- 538 views
-
-
மன்னாரில் படையினர் முன்னேற முயற்சி: விடுதலைப் புலிகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007, 18:19 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கைக்கான முயற்சிகளை எடுத்தனர். கடந்த இரு நாட்களாக படையினர் முள்ளிக்குளம், விளாத்திகுளம் பிரேதசங்கள் மீது தொடர் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். நேற்று சனிக்கிழமையும், இன்றும் இரு தடவைகள் சிறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படையினரின் தொடரான எறிகணைத் தாக்குதல்களால் முள்ளிக்குளம், விளாத்திகுளம், வலயன்கட்டு, பரிசங்குளம் ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வீடுகள் மு…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவில் தணியவில்லை அவர்கள் உயிர்ப்புடன் இருக்கின்றார்கள் என கபட நோக்கோடு நெதர்லாந்து அதிகாரிகள் கூரியுள்ளார்கள். இதுபற்றி அசோசியேட்டட் பிரஸ் எழுதியுள்ளது. . 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் இடையேயான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத்தொடர்ந்து எந்தவிதமான தாக்குதலினையும் புலிகள் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு கூறியிருக்கின்றார்கள். சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு. அலன் கீனன் எனும் சர்வதேச நெருக்கடிகள் குழுவின் ஆலோசகர்தான் மேற்கண்டவாறு கூறினார். . ஆனால் நெதர்லாந்து வக்கீல்களோ தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என நிரூபிப்பதற்காக இல்லாத பொல்லாத கதைகள் எல்லாவற்றையும் கூறி விடுதலைப்புலிகள் ஐரோப்பாவில் இருக்கி…
-
- 0 replies
- 886 views
-
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியர் உட்பட நால்வர் விண்ணப்பம்! Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 03:54 PM வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும். நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் …
-
-
- 18 replies
- 1.5k views
- 1 follower
-
-
நெடுங்கேணி வான் தாக்குதல்: சிறிலங்கா வான்படை - கண்காணிப்புக்குழு மோதல் வவுனியா மாவட்டம் நெடுங்கேணியில் அண்மையில் சிறிலங்கா வான் படையினரால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல் தொடர்பான இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கும் சிறிலங்கா வான்படைக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. இந்த வான் தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டதுடன், இரு பொதுமக்கள் காயமடைந்திருந்தனர். எனினும் தாம் விடுதலைப் புலிகளின் இலக்குகளையே தாக்கியதாகவும், அதில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை என்று சிறிலங்கா வான் படை தெரிவித்துள்ளது. ஆனால் சிறிலங்கா வான் படையினர் நடத்திய அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டு, இரு பொதுமக்கள் க…
-
- 0 replies
- 869 views
-
-
இளவாளை பிரதேசத்தில் பாரிய போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்குமாறு பொலிசாருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு. சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு இளவாலை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்து. இளவாலை பிரதேசத்தில் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணைகோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசரணையின்போது, அங்கு இடம்பெறுகின்ற பாரிய போதை வஸ்து கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்து, சந்தேக நபர்களைக் கைது செய்து நியாயதிக்கமுள்ள நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த இளவாலை பொலிஸ்…
-
- 1 reply
- 641 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும், தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பத்தாம் ஆண்டு நினைவு ஆண்டு ஆ\ரம்பித்திருக்கின்ற நிலையில் முதன்முதலாக இவ்வருடம் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. சாந்தி பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும்…
-
- 0 replies
- 212 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 04:39 PM இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (05) லங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது. 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் பிறந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தனர். நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதில் சிக்கல் நிலமை காணப்பட்டிருந்தது. இதனை அடுத்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் அனுசரனைய…
-
- 0 replies
- 262 views
-
-
குடியமர்ந்த மக்களிற்கு எதுவுமே கிட்டவில்லை! சஜீவன்; குற்றச்சாட்டு!! கடந்த 25 வருடங்களின் பின்னர் அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக பல தரப்பினர்களும் வாக்குறுதி வழங்கியிருந்த போதும் மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இங்கு மீள்குடியேற்றத்திற்காக பல மில்லின் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் அறிவித்திருக்கின்ற நிலையில் அந்த நிதி எங்கு , யாருக்கு செலவிடப்படுவதாக கேள்வியெழுப்பி இருக்கின்றார் சஜீவன். அத்துடன் வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவரான அவர் மீள்குடியமர்ந்த மக்களிற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொட…
-
- 1 reply
- 344 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். மேற்படி ஆசிரியர் சங்கத்தின் வடக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணி நேரம் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது முரண்பாடுகளை நீக்கி, சம்பளத்தை அதிகரிக்கவும், கொள்ளையடித்த 30 மாத நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் ஆசிரியர்களைப் பாதுகாப்போம், கற்பித்தலுக்கு இடையூறு விளைவிக்கும் மேலதிக வேலைகளை இரத்துச் செ…
-
- 0 replies
- 245 views
-
-
மனிதாபிமான அப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிய மறுக்கும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனக் குற்றஞ் சுமத்தியிருக்கின்றார் த.தே.இயக்த்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள். 'ஈழத்தமிழர்களுக்கு உணவு,மருந்துகள், உள்ளளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கும் முயற்சிக்கு முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து விட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். நெடுமாறன். ஈழத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் சேகரிக்கப்பட்ட மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ். நோக்கி படகில் புறப்படவிருக்கும நெடுமாறன் தலைமையிலான குழுவினர், தமது படகுப்பயணத்துக்கு ஆதரவு கேட்கும் கூட்டத்தைச் சனிக…
-
- 0 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் மாவீரர் தினம் தொடர்பாக உணர்வாளர் சீமானுக்கும் பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த வாரம் இந்தியா சென்றிருந்த குழு ஒன்று உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து தாம் நடத்தவிருக்கும் மாவீரர் தினத்துக்கு ஆதரவு தரும்படி கூறியுள்ளனராம். அதாவது தேசிய செயல்பாட்டாளர்களால் கடந்த 21 வருடமாக லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஒரு மாவீரர் தினத்தை எக்ஸ் எல் மண்டபத்தில் நடத்த புதிதாக வந்த சிலர் முனைப்புக்காட்டி வருவது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தாங்கள் நடத்தும் மாவீரர் தினத்தை ஆதரிக்கவேண்டும் என இவர்களில் சிலர் உணர்வாளர் சீமான் அவர்களைச் சந்தித்து கோரிக்கை விட…
-
- 2 replies
- 1.6k views
-
-
மகி்ந்தவைப் பிரதமராக்கினால் மைத்திரியைப் போட்டுத் தள்ளுவார்! - ரஞ்சன் ராமநாயக்க [Friday 2015-06-19 07:00] ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையே இரகசிய நட்பு தொடர்வதாகவும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படும் செய்திகள் வெறும் புரளியாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினால் அவர் அப்பதவியிலிருந்து ஜனாதிபதியாவதற்கு ஒரு தோட்டாவை மாத்திரமே செலவு செய்வாரென்பதை நன்கு புரிந்து வைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதிவர…
-
- 0 replies
- 417 views
-
-
திருமலை கடற்படைத் தளத்தில் இன்று விடுதலைப்புலிகளின், மூன்று ஆயுதம் கொண்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் இழுவைப்படகுகளை அழித்த கடற்படையினரை கெளரவிக்கும் முகமாக சிரிலங்கா ஜனாதிபதியின் தலைமையில் வைபங்கள் வெகு எழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உயர் மட்ட இராணுவ,கடற்படை அதிகாரிகள் பலரும் இவ் வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். ஜானா
-
- 6 replies
- 3k views
-
-
கனடாவில் நடந்த இலங்கை அரசின் தீபாவளிக்கொண்டாட்டம் இன்று துர்கேஸ்வரம் கோவில் பிரதம குருக்களின் குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமான தீபாவளி நிகழ்வுக்கு பெரும்பாலான சிங்கள இனத்தவர்கள் பட்டுவேட்டியுடன் காட்சி தந்தனர்(தமிழர்களாக நடித்து) இத்துடன் பல துரோகிகளுடன் நாங்களும் கலந்துகொண்டோம்.சிங்கள தேசத்து தேசிய கீதம் பாடப்பட்டது.அச்சமயம் பலர் எழுந்து நிற்க மறுத்ததால் ஆரம்பத்திலேயே எங்களை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள் (யாராயினும் எந்த ஒரு நாட்டு தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தவேண்டும்,அதேபோல மௌன அஞ்சலியும் செலுத்தபழகிக்கொள்ள வேண்டும்)படங்கள் எடுத்தவர்கள் மற்றும் எழுந்து நிற்காதவர்கள் குண்டர்களால் வெளியேற்றபட்டனர்.அத்துடன் நானும் வெளியேறிவிட்டேன். முக்கிய குறிப்பு:- தன்மானமுள்ள…
-
- 8 replies
- 1.6k views
-
-
அரசு - தமிழ்க் கூட்டமைப்பு அடுத்த கட்டப்பேச்சு 16 இல் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயம் தொடர்பில் அரசு கூட்டமைப்புக்கு இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசு தரப்பிடம் கடந்த பல சுற்றுப் பேச்சுகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளுக்கு இணக்கம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என அவர் கூறினார். அடுத்த சுற்றுப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோ…
-
- 0 replies
- 600 views
-
-
மகிந்தவுக்கு முடியுமானால், அவர் தான் ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள், தமிழ்-முஸ்லிம் துரோகிகள் ஆகியோரை வெற்றி பெற செய்துக்காட்டட்டும். இந்த முறை மகிந்தவுக்கு கிடக்கப்போவது பிரியாவிடை இல்லை. அது அதிர்ச்சிவிடை. அதை தரப்போவது, தமிழ் பேசும் மக்கள் அல்ல. மகிந்தவுக்கு எதிர்வரும் தேர்தலில் அதிர்ச்சி தரப்போவது, இந்நாட்டு சிங்கள மக்கள் ஆகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய மனோ கணே…
-
- 2 replies
- 257 views
-