Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/12/home-1.jpg சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன. கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 6வீடுகள் சேதமாகியுள்ளதோடு, 4குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால், வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது …

  2. இலங்கை மனித உரிமை மீறல் குறித்து பிரித்தானியா கவலை 46 Views சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவமயமாக்கல் தொடர்பாகவும் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும் ஐக்கிய இராச்சியம் தனது அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்குரிய பணிமனைக்குரிய அமைச்சரான நைஜல் அடம்ஸ் (Nigel Adams) சிறீலங்கா அரசு சிவில் சமூகத்துக்குக் கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் சிவில் சமூகங்களுக்குரிய பணிகளை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தி வரும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமது அரசின் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரித்தானியாவின் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தொழிற்கட்சிய…

  3. அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: நேற்று தமிழர், இன்று முஸ்லிம், நாளை அது உங்களையே அழிக்கும் - கஜேந்திரகுமார் தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று கூற முடியாத நிலைகூட ஏற்படலாம். எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த மரபானது உங்களை அழித்தொழிக்கப்போகிறது என நாடாளுமன்றத்தில் நேற்று சிங்கள தரப்பிற்கு சுட்டிக்காட்டினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அத்து…

  4. மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி.! பொன்சேகா வெறிப்பேச்சு மாவீரர் தினத்திற்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறிப் பேச்சை பேசியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.. அப்படி என்னதான் பேசினார் பொன்சேகா? இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்தமையே எதிர்ப்புக்கு காரணம்.. நாடாளுமன்றில் நேற்றைய உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், “சிவிலியன்கள் இறுதிப்போரில் கொலை செய்யப்படவில்லை.…

    • 22 replies
    • 2.3k views
  5. கமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்! யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய அனைத்து துறைக்கும் பெண்களை நியமித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல், ரோஹினி கொசோக்லு செனட் அலுவலகத்தில் கமலா ஹரிஸின் மூத்த ஆலோசகராகவும் பின்னர் தேர்தலின்போது மக்களுக்கான கமலா ஹரிஸ் என்ற பிரசாரப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார். ஹாரிஸின் ஜனாதிபதி பிரசாரத்தின் தலைமை ஊழியராக, ரோஹினி கொசோக்லு 40 மில்லியன் டொலர் பட்ஜெட்டில் 300 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட …

  6. முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது – ஏனைய சமூகங்கள் மீது திணிக்க முடியாது- மல்கம் ரஞ்சித் கருத்து முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது எனபேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம் கருதக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளா…

    • 4 replies
    • 576 views
  7. மட்டக்களப்பு மாநகரசபையில் பெரும் அமளி? 115 Views மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட அமர்வு இன்று மாநகர முதல்வரினால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கான விசேட அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபை முதல்வர் வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து அது தொடர்பிலான விளக்கவுரையினை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விவாதங்கள் நடைபெற்றன. இதன்போது பலர் வரவு செலவு திட்டத்தினை வரவேற்று பேசியுடன் அதற்கு எதிரான கருத்துகளு…

  8. விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர ஏன் பேஸ்புக் தடை விதிக்கிறது? விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர ஏன் பேஸ்புக் தடை விதிக்கிறது? ஈழத் தமிழர்களின் பதிவுகளை நீக்கியதற்கு என்ன காரணம் சொல்கிறது பேஸ்புக்? படிக்க https://bbc.in/3oi9Igy https://www.facebook.com/BBCnewsTamil/videos/1230092577385210 LTTE தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? - பிபிசி தமிழுக்கு ஃபேஸ்புக் பிரத்யேக பதில் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் பட மூலாதாரம்,GETTY IMAGES …

    • 3 replies
    • 1k views
  9. 2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் https://www.facebook.com/friendsofgajen/videos/580756212763661 2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை: நேர்மையாகக் கூறுவதானால் மிகுந்த தயக்கத்துடனேயே இந்த விவாதத்தில் கலந்துகொள்கிறேன். எதற்காகத் தயக்கம் என்றால், பாதுகாப்பு அமைச்சு விவகாரமானது இனங்களை துருவங்களாக ஆக்கியுள்ளது. இந…

    • 50 replies
    • 3.6k views
  10. தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க முயன்றதாக 2014ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட கோபி எனும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் கிளிநொச்சி – இயக்கச்சி, பனிக்கையடி பகுதியில் உள்ள வீட்டில் இன்று (03) பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கோபியின் தாய் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பரந்தன் பகுதியில் பஸ் ஒன்றில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டு, அது தொடர்பில் தம்பதி ஒன்றும் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து கோபியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கோபியின் தாயும், மற்றுமொரு வயோதிப பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இதன்படி தயானுஜன் அம்பிகா (35-வயது),…

    • 5 replies
    • 1.9k views
  11. “விடுதலை புலிப் பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யாமல் விட்டது தவறானது. புலிகளை அழித்தது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்” இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (03) நாடாளுமன்ற சபையில் தெரிவித்தார். அத்துடன், ஹிட்டலர் மரணமடைந்த பின்னர் அவரது நாசி கட்சி அழிந்து போனது என்பதை சுட்டிக்காட்டியே அக்கருத்தை குறிப்பிட்டார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி எம்பி நளின் பண்டார, ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் ஒரு கட்சி. நீங்கள் கருணாவையும், பிள்ளையானையும் மடியில் வை…

    • 7 replies
    • 664 views
  12. (இராஜதுரை ஹஷான்) சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா துறை சேவையினை ஆரம்பிக்கும் போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார தரப்பினருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், நாட்டுக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தற்போது 80 சுற்றுலாத்துறை பாதுகாப்பு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தடுப்பூசிக…

  13. புதிய உத்திகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்- பிரதமர் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/mahindha-1-6.jpg புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த மாநாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஒழங்கு செய்யப்பட்ட வருடாந்த பொருளாதார மாநாட்டில் கலந்து…

    • 0 replies
    • 320 views
  14. வசாவிளான்,பலாலியில் மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அங்கஜன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மாகாணத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 33,861 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை எனத்தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அங்கஜன் இராமநாதன், வசாவிளான்,பலாலி பகுதிகள் விடுவிக்கப்பட்டு மக்களை மீளக்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில், …

  15. ’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார். நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார். அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வை…

  16. புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இரவு பலத்த காற்றுடன் ஓரளவு மழை பெய்தமையும் திருகோணமலை மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருப்பினும் பல பிரதேசங்களில் அடித்த பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சேதங்களும் விளைவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் திருகோணமலையை அண்டிய கடற் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பும் பாரிய அலையும் வழமைக்கு மாறாக உள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக பல முன்னெடுப்புக்கள் தற்போது வரை இடம…

  17. இலங்கையின் பூர்வீகக் குடிகளான... தமிழ் இந்துக்கள், திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்! கார்த்திகைத் திருநாளன்று, வடக்கு கிழக்கில் தமிழ் இந்துமக்கள் தீபங்களை ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டித்து, தமிழ் தேசியக் கட்சிகள் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனவும் அவர்களுக்கு ம…

  18. யாழில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு: 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிப்பு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார். இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனாலும் பலத்த காற்றுடனான கனமழையினால் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் நேற்றைய தினம் பலத்த காற்றுடனான கனமழை பெய்தது. இதனால் 756 குடும்பங்களை சேர்ந்த 2941பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், சண்டில…

  19. யாழில் தொடர் மழையால் 1,500இற்கு மேற்பட்டோர் பாதிப்பு- மூவரைக் காணவில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்…

  20. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்தலுக்கு மேல், மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது. வவுனியா- கண்டி வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1384 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட கடும் காற்றினால் பந்தல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் காணப்பட்ட மரத்தில் இருந்து பாரிய கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையினால், பந்தல் சேதமடைந்துள்ளது. குறித்த பந்தலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான வயோதிப தாய்மார் சிலர் இரவில் தங்கி…

  21. கொரோனா தடுப்பு மருந்தை குடித்துக் காட்டிய பவித்ரா! கொரோனா சிகிச்சையாக கேகாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு உள்ளூர் ஆயுர்வேத மருந்தை பரிசோதிக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பங்கேற்று அதனைக் குடித்துக் காட்டியுள்ளார். ஆயுர்வேத மருத்துவர் தம்மிக பண்டார உருவாக்கிய குறித்த மருந்தானது மேற்கத்திய மருத்துவர்களின் தலையீட்டால் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. கோவிட் சிகிச்சை மையங்களில் உள்ள தன்னார்வ நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதால், அரசாங்கம் இந்த மருந்து மீது கவனத்தை செலுத்தியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருத்துவம் குறித்த வழிகாட்டுதல்களை ஆய்வு செய்வதற்கு இதன்போது ஒரு நிபுணர் க…

    • 3 replies
    • 695 views
  22. வல்வெட்டித்துறை ஆதிகோவிலை அண்மித்த பகுதியில் புரேவி புயல் காரணமாக இன்று (02) இரவு 10 மணியளவில் வீசிய கடும் காற்றால் நால்வர் காயமடைந்துள்ளனர். சிறுமி உட்பட்ட நால்வர் காயமடைந்த நிலையில் மூவர் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த காற்றினால் பாதிக்கப்பட்டு 50 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் புரேவியால் குடும்பங்கள் பல இடம்பெயர்வு! | NewUthayan

  23. மன்னார் – விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது. இதனால் அந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக இன்று (02) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்ச்சியான மழை நீடித்து வருகின்ற நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் உள்ளனர். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. மன்னாரில் கடல் நீர் உட்புகுந்தது! |…

  24. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 2021 ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுமென தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான இராமநாதன் அங்கஜன். முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139892/afafaf.jpg இலங்கையில் முன்பள்ளிக்கல்வி தொடர்பில் எந்தவொரு அரசும் இதுவரை கவனம் செலுத்தாத …

  25. புரவிப் புயலின் தாக்கம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. காற்றின் வேகமும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. காற்றின் வேகம் காரணமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதி ஓரமாக இருந்த மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்து உள்ளது. இதனால் சற்று நேரம் வீதி போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், பொதுமக்கள், பொலிசார் மரத்தினை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளார்கள். தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிறிது ந…

    • 1 reply
    • 496 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.