ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
தேசியப் பட்டியல் ஆசனத்தை நிராகரிக்கும் முன்னாள் பிரதமர் நூல் ஒன்றை எழுதப்போகின்றாராம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு தனது நேரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் களிடம் தெரிவித்துள்ளார். கட்சியின் இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பாடத்திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்திருந்தார். புத்தகம் ஒன்றை எழுதத் திட்டமிருப்பதாலேயே முன்னாள் பிரதமர் அக்கோரிக்கையை…
-
- 1 reply
- 390 views
-
-
ஓரணியில் தமிழ் உறவுகள் ; அடக்கியாள நினைக்காதீர்;சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன." - இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியக் க…
-
- 4 replies
- 587 views
-
-
கிழக்கில் சூரியன் உதிக்கவில்லை – வியாழேந்திரன் வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை இதுதான் உண்மை என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (30) நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலையத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார். மேலும், “இந்த அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம், நான் சர்வதேச அரசியலைப்பற்றி சிந்திக்க முன்பு எனது மாகாணம் எனது மாவட்டத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது,…
-
- 1 reply
- 424 views
-
-
கிழக்கில் தமிழர்களது இருப்பை அழிக்கும் வகையில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு தமிழர்கள் இனம் மாற்றப்படுவதும் தொடர்கிறது.! கிழக்கு மாகாணத்தில் தமிழர்களது இருப்பை அழிக்கும் வகையில் எல்லைப்பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன் தமிழர்கள் இனம் மாற்றப்பட்டும் வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை இதுதான் உண்மை என, மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கிவைத்து உரையாற்றியஇராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தனது உரையில் தெரிவித்தா…
-
- 2 replies
- 552 views
-
-
ஜே.ஆர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உருவாக்கியது ஏன்? பிரதீப் ஜெயவர்த்தன கருத்து முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன நாட்டின் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காகவே நிறைவேற்று அதிகார முறையை உருவாக்கினார் என அவரது பேரன் பிரதீப்ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துக்குள் சர்வாதிகாரம் என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டிருந்த பல சவால்களை எதிர்கொண்டு அகற்றுவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தி முறியடிப்பதற்கு நிறைவேற்று அதிகார முறை உதவியது வெளிநாட்டு இராணுவங்களின் ஊருடுவல்கள்,கிளர்ச்சி மற்றும் நாட்டை அழித்த யுத்த…
-
- 0 replies
- 820 views
-
-
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட விசேட குழு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் இலங்கை மின்சார சபையினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி திட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு மின் வலு அமைச்சர் டலஸ் அழகபெரும மற்றும் காற்று சூரிய சக்தி வலு இராஜாங்க அமைச்சர் துமிந்த திசநாயக்க தலைமையிலான விசேட குழுவினர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். சுமார் 30 காற்றாலைகளை கொண்டு அமைக்கப்பட்ட 103.5 மெகா வாற் மின் உற்பத்தி திறனை கொண்ட குறித்த திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக குறித்த அமைச்சர்கள் குழு ஆராய்ந்ததுடன் நேரடியாக காற்…
-
- 0 replies
- 329 views
-
-
தேர்தல் பின்னடைவுக்கு கல்முனை விவகாரமும் ஒருகாரணம்: கல்முனை நேர்காணலில் த.தே.கூ.பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. DicksithSeptember 30, 2020 இருபதாவது திருத்தம் என்பது ஜனநாயகத்திலிருந்து விலகி எதிர்த்திசையில் அதாவது சர்வாதிகாரப்போக்கில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். அது நாட்டிற்கு நல்லதல்ல. எனவே அதனை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கிறோம். அதற்காக நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன்.இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன்.திரு சுமந்திரன் நேற்றுமுன்தினம் கல்முனைக்கு விஜயம்செய்தபோது கல்முனைநெற் இணையத்தள ஏற்பாட்டில் நேர்காணலை மேற்கொள்ளமுடிந்தது. அந் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்களை இங…
-
- 13 replies
- 997 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியில் மோசடி – சமூக வலைத்தளங்களால் கண்டறியப்பட்ட பிரபலம் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக திரட்டிய நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் அதனை வழங்குவதாக தற்போது உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இஷினி வீரசிங்க என்ற பெண், gofundme.com மூலம், 82,882 டொலரை திரட்டினார். இருப்பினும், திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை என வெளிவந்த சர்ச்சைக்கு பின்னர் #Ishinigate என்ற காஸ்டக் மூலம் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அவர் செய்ததாகக் கூறப்பட்ட கொடுப்பனவுகளின் ரசீத…
-
- 0 replies
- 390 views
-
-
இந்து சமுத்திரம்... திறந்த மற்றும், சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் இலங்கையே பிரேரணை முன்வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தென்கொரியா, ஜேர்மன், வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான புதிய நான்கு தூதுவர்கள் இன்று ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். இதன்போது இலங்கையில் கொரோனா தொற்றினை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பாக புதிய தூதுவர்களும் இதன்போது ஜனாதிபதிக்கு பாராட்…
-
- 0 replies
- 366 views
-
-
மட்டக்களப்பில் 1500 ஏக்கர் மேச்சல் தரை காணி பறிபோவதை தடுத்து நிறுத்தினார் சாணக்கியன்! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல் தரை காணிகள் 1500 ஏக்கரை சிங்கள மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளார். மட்டக்களப்பு எல்லை பகுதியான மயித்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு வழங்கப்படவிருந்தது. கிழக்கு மாகாண ஆளுநர், மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்திடம் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள சிங்கள மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணிகளை கோரியிருந்தார். அதன் முதல் கட்டமாக 15…
-
- 0 replies
- 342 views
-
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்– இரா.சாணக்கியன் by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/a13-1-720x450.jpg அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் என்ற ஒரு தேரரின் அடாவடித்தனத்தினைப்பற்றி இந்த இடத்தில் சில வார்த்தைகளை சொல்லத்தான் வ…
-
- 12 replies
- 2.3k views
-
-
மாகாண சபைகள் குறித்து டில்லி தீர்மானிக்க முடியாது! ஜனாதிபதியே தீர்மானிப்பார்; சரத் வீரசேகர மாகாண சபைகள் விவகாரம் என்பது இலங்கையின் உள்விவகாரம் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் அல்லர் எனவும் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- “நாங்கள் மாகாண சபைகளைத் தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிட முடியாது. நாங்கள் சுதந்திரம் மற்றும் இறைமை மிக்க நாடு. இந்தியா எங்கள் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது. இந்திய – இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேய…
-
- 0 replies
- 401 views
-
-
தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத்தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தீலிபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலுக்கே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வேண்டுகோளை அடுத்து, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகள் ஏற்பா…
-
- 49 replies
- 2.9k views
-
-
மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை’ அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “ஒவ்வொரு கட்சிக்கும் அதிலிருக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும், தனித்தனிக் கொள்கைகள் இருக்கலாம்; அவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிப்பதே முக்கியம். 20ஐ ஆராய்வதற்காக நான் அமைத்த குழு, அறிக்கையைக் கையளித்துள்ளது. அது, எனக்குக் கையளிக்கப்பட்ட தனிப்பட்ட அறிக்கையாகும்” என்றார். “13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமை…
-
- 7 replies
- 1.6k views
-
-
மாகாண சபை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். மாகாண சபை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம், அது குறித்து எமது ஜனாதிபதியே முடிவு செய்வார். வெளிநாடு தலைவர்களுக்கு இந்த விசயத்தில் அக்கறை தேவையில்லை என்று ஆனந்த வீரசேகர எம்பி தெரிவித்துள்ளார். இலங்கை இநதிய ஒப்பந்தப்படி, புலிகளின் ஆயுதங்களை இந்திய பறித்திருக்க வேண்டும். அந்த நிபந்தனையை இந்தியா ஒரு போதும் நிறைவேற்றவில்லை.... ஆகவே இந்த ஒப்பந்தம் தானாகவே செயல் இழந்து விட்டது. (இலங்கை படைகள் தான் அதை செய்தன என்று சொல்ல வாறார்). மகிந்தவின் வழமையான செயலான, அல்லக்கைகளை கிளப்பி விடும் வேலை நடக்கின்றது. மோடி என்ன, மோடி.... இந்திராகாந்தியில் இருந்து பார்த்துக் கொண்டுதான் வாறம்.... டெல்லி வாலாக்களே.... நம்ம பக…
-
- 4 replies
- 882 views
-
-
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுத்துள்ளனர். இதன்படி கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், புடவைக்கடைகள் மற்றும் வீதியோர வியாபாரங்கள் வழமை போன்று இயங்கியது. இதன்போது பொதுமக்கள் வழமை போன்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் வழமை…
-
- 7 replies
- 1.2k views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்கொண்டமை தொடர்பில் 05 ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கொவிட் 19ஐ கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பாராட்டப்பட்டது. முறையான திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் கொவிட் 19ஐ முறியடித்த நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடுகளினதும் கொவிட் 19 நிலைமைகள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருடனான இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆசியான் நாடுகள் இலங்கையுடன் கொண…
-
- 0 replies
- 493 views
-
-
(எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கத்தோலிக்க வெளிப்பாடு ( The Catholic Expression ) என்ற அமைப்பு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்துள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களின் போது நீதி நிர்வாகத்தின் போது மறைக்கப்பட்ட காரணிகள் குறித்து 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அதற்கமையவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சிரந்த.ஆர்.அன்டனி அமர…
-
- 0 replies
- 341 views
-
-
(நா.தனுஜா) 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கி…
-
- 0 replies
- 630 views
-
-
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத் கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடினர். யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு கோத்தாபய அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்தது இதன் காரணமாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தனர். இவ்வாறு இனைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் தம…
-
- 0 replies
- 372 views
-
-
மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும்- பிரதமர் நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது? கடந்த காலம் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்த…
-
- 3 replies
- 684 views
-
-
இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பிக்கவே முடியாது - சம்பந்தர்.! “அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும்,அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ஒருபோதும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது.” இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்க…
-
- 5 replies
- 1k views
-
-
தமிழர்களுக்கு அழிவுதான் – மட்டு. சுமணரத்ன தேரர் எச்சரிக்கை! தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்னதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கலடி ரஜமஹாவிகாரையில் காணிகள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம் சுமத்தியுள்ள தேரர், இன்னும் ஒரு வாரத்திற்குள் இது நிறுத்தப்படாவிடின் மட்டக்களப்பு பெரும் விளைவினை எதிர்நோக்கும் என்று மிரட்டியுள்ளார். செங்கலடி பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்த அவர், அங்குள்ள வெட்டாந்தரைகளைக் காண்பித்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (30) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் த…
-
- 1 reply
- 468 views
-
-
இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையில் பசு வதையை தடை செய்வது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வௌியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம …
-
- 43 replies
- 4.9k views
-