வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
http://youtu.be/X9K3eSe_4b4 'ஆடிப்பெருக்கு' திருவிழா - கொண்டாடுவது ஏன்? "ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி ... வாடியம்மா... எங்களுக்கு வழித்துணையாக....." என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம். அதிலும், ஆடியில் பொங்கும் நுரையுடன் பெருக்கெடுத்து வரும் புதுத்தண்ணீரைக் காண்பதும் அதில் நீராடுவதும் தனிசுகம். ஆடியின் சிறப்பு: புரட்டாசி, ஐப்பசி மழைக்காலத்திலும் காவிரியாறு இருகரையைத் தொட்டுத்தான் செல்லும். ஆனாலும், அதற்கு இல்லாத விசேஷம், ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் வந்தது? மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குற…
-
- 12 replies
- 5.4k views
-
-
சரியாக 6000 கருத்துக்களை எழுதிய புத்தனை வாழ்த்துவோம் புத்தன் சமுதாயத்தை மிக நுணுக்கமாக அவதானித்து நகைச்சுவையாக கதைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் தான்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துவோம்.
-
- 29 replies
- 3.1k views
-
-
இன்றைய, டொராண்ரோ தமிழ் ஸ்டார், பத்திரிகையில் வந்த செய்தியைக் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன். இவர், யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், தாயகத்தை, அதன் நலனை, நேசிக்கும் ஒரு நல்ல நண்பர், இவரை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்! ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே…
-
- 25 replies
- 2.4k views
-
-
இன்று பிறந்தநாள் காணும் எங்களின் அன்பு அண்ணன் , மக்கள் போராளி சுப . உதயகுமார் அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
-
- 6 replies
- 3.7k views
-
-
காலத்தை முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்துசெல்லும் வல்லமை கொண்டது இசைஞானியின் இசை... துயரங்களில் தோழ் தடவும் தோழனாகவும் சந்தோசங்களில் குதூகலிக்கவைக்கும் இனிமையாகவும் காதலர்களுக்கு இனிய நினைவுகளின் ஊற்றிடமாகவும் இழந்துபோனவர்களுக்கு நினைவுகளை உயிர்ப்பிக்கும் பிரம்மதேவனாகவும் இசைஞானியின் இசை இருந்து வருகிறது... இன்று 70 வயதை கொண்டாடும் இசைஞானிக்கு ஒரு ரசிகனாய் எனக்கு எப்பொழுதும் இனிமையயும் சந்தோசத்தையும் அழகிய நினைவுகளையும் அள்ளிக்கொடுக்கும் உன் இசைக்கு அடிமையாய் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்... http://www.youtube.com/watch?v=1TVqWLH-nx4
-
- 8 replies
- 1k views
-
-
ஒரு ஆடம்பரம் இல்லை , ஆர்ப்பாட்டம் இல்லை, வெற்றுக் கூச்சல் இல்லை. பிறந்த நாளை என்றுமே கொண்டாடாத மக்கள் தலைவர் 'வைகோ' அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கும் , தமிழ் நாட்டிற்க்கும் தமிழ் சமூகத்திற்கும் தொடர்ந்து களமாட வாழ்த்துகள்
-
- 23 replies
- 4k views
-
-
நிலாமதி அக்காவும் 6000 பதிவுகளை தாண்டியுள்ளார்.நல்வாழ்த்துக்கள் அக்கா.
-
- 47 replies
- 4.1k views
-
-
அன்பர்களே, யாழ் இணையத்தில் கடந்தவருடம் மாதாந்தம் பொற்கிளி(ழி) முயற்சியை எமது நிறுவனம் வழங்கியது. இவ்வருடம் நான்கு காலாண்டுகளிற்கு இம் முயற்சி மட்டுப்படுத்தப்படும் என நாம் அறிவித்தோம். முதல் காலாண்டிற்கான பொற்கிளி(ழி) முடிவை இங்கு, இப்போது உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம். யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! 2013 - காலாண்டு 01 விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கீழ்வரும் ஆக்கங்கள் கடந்த மூன்று, நான்கு மாதங்களில் யாழ் இணையத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அப்பாவின் ஈர நினைவுகள்....: நிழலி [ ஆக்கம்: நிழலி ] இளையறாஜா நிகழ்வால் வந்து ஒரு பதிவு [ ஆக்கம்: இன்னுமொருவன் ] எங்கள் பாலனின் ப…
-
- 24 replies
- 1.9k views
-
-
மூவேந்தருக்கும் வாழ்த்துகள் 5 000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்ட சாத்திரியாருக்கும் 15 000 பதிவுகளை இட்ட தமிழரசிற்கும் 20 000 பதிவுகளை எட்டும் தமிழ் சிறி அண்ணாவிற்கும் வாழ்த்துகள் இந்த மூன்று உறவுகளும் தங்கள் வித்தியாசமான சிந்தனைகளால் யாழில் பல உறவுகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் பாதை வேறாக இருந்தாலும் எல்லோருடைய பயணமும் ஈழத் தமிழர்களின் விடிவை நோக்கியே என்ற வகையில் இவர்களின் பணி யாழில் தொடர வாழ்த்துகள்
-
- 34 replies
- 2.8k views
-
-
உயிரை.. வியர்வையை ஊதியமாகக் கொண்டு மண்ணுக்காய் மக்களுக்காய் பிறருக்காய் உழைக்கும் உன்னதங்களின் தினமே மே தினம். உண்மையான உழைப்பாளிகளுக்கு மே தின வாழ்த்துக்கள். படங்கள்: முகநூல்.
-
- 2 replies
- 2.3k views
-
-
புங்கையூரானுக்கு வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா அந்தத் தமிழ் வாத்தியார் யார் ?
-
- 32 replies
- 2.5k views
-
-
மாணவர் போராட்டத்தின் முழுச்செய்திகளையும் சலிக்காது நேரம் பார்க்காது எமக்காக இணைத்துவந்த தங்கை துளசி அவர்கள் செய்தி இணைப்பாளராகவும் தனது சேவையைத்தொடங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது. அவர் மேலும் தொடர்ந்து தனது சேவையை எமக்களிப்பதற்காகவும் யாழில் பெரும் வளச்சியடையவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
- 23 replies
- 2.3k views
-
-
21.4.2013 72 வது பிறந்தநாள் காணும் எங்கள் ஐயா பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஜயா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் ஐயாவிற்கு எனது அன்பான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் நண்பர்களே நீங்களும் நேரடியாக வாழ்த்த விரும்பினால் அழையுங்கள் 919444494975 fb
-
- 16 replies
- 1.9k views
-
-
அன்பர்களே, இணைய உலகில் பதினைந்து வயது என்பது மிக பெரிய காலம். இந்த சாதனையை யாழ் இணையம் அடைந்துள்ளது. இதற்காக பாடுபட்ட யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர், யாழ் நிர்வாகிகள், யாழ் கருத்து கள உறவுகள், யாழ் வாசகர்கள், இம் மைக்கல்லின் பின்னால் தமது உழைப்பை நல்கிய அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறுகிறோம். ஒன்றே செய்யினும் நன்றே செய்க! நன்றே செய்யினும் இன்றே செய்க!!
-
- 41 replies
- 3.5k views
- 1 follower
-
-
5000 கருத்துக்களை எழுதி விட்ட துளசி அக்காக்கு வாழ்த்துக்கள் தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில் துளசி அக்காவும் ஒரு ஆள்...மாணவ போராட்ட செய்திகள் தொடந்து இணைத்து வரும் உறவு...மற்றவர்களுடன் அன்பாக பழகும் ஒரு உறவு....... ..இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்....
-
- 43 replies
- 3.5k views
-
-
சித்திரை வருடப் பிறப்பை யார்,யார் கொண்டாடுறனீங்கள்? இப்பவும்,இங்கேயும் மருத்து நீர் வைச்சு முழுகுறனீங்களே? புது உடுப்பு போடுறனீங்களா? கோயிலுக்குப் போவதுண்டா? கை விசேசம் கொடுப்பது/வாங்குவதுண்டா? வருசன்று கோயிலுக்குப் போயிற்று வந்து மச்சம் சமைத்து சாப்பிடுவதுண்டா? தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்/உண்மையை மட்டுமே சொல்லுங்கள்...லண்டனில் இன்று இரவு எட்டு மணிக்கு வருசம் பிறக்குதாம்..இரவு பிறக்கிறதாலே நாளைக்கும் கொண்டாட்டமாம் நான் வருடப் பிறப்பை கொண்டாடுவதில்லை என்டாலும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
-
- 17 replies
- 3.6k views
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் இசைக்கலைஞனை வாழ்த்துவோம். களத்தில் பொறுமையாகவும் சிரிப்புடனான பல முகக்குறிகளுடன் நகைச்சுவையாக கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.முன்பு நகைச்சுவை கவிதைகளை எழுதியவர்.தொடர்ந்தும் எழுதுவார் என யாழ் களம் எதிர்பார்க்கிறது.யாழ் களத்தில் களேபரம் போன்ற பிரபல்யமான பதிவுகளுக்கு சொந்தக்காரரான இசை தொடர்ந்து நகைச்சுவை பதிவுகளையும் பதிவார் என எதிர்பார்க்கிறோம்.
-
- 29 replies
- 2.7k views
-
-
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா...தாயகத்தின் மீது அளப்பெரிய நேசிப்புள்ள ஒருவர்..பழக மிக இனிமையான,எளிமையான,அன்பான மனிதன்..அவர் மனதினுள் ஏதோ ஒரு சோகம்மெல்லிதாக இளையோடுவதுபோல் உணர்வேன் அவருடன் பேசும்போது..அவற்றை கடந்து வர வேண்டுகிறேன்..
-
- 37 replies
- 2.2k views
- 1 follower
-
-
தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில்... இவரும் ஒருவர் . இவர் கதை, கவிதை, சமயம், சமையல், அரசியல் என்று... எல்லாப் பகுதிகளிலும் தனது அழகிய தமிழால்... கருத்துக்களை எழுதுவதை பார்த்து வியந்துள்ளேன் . நானும்... இவரும், ஒரு பள்ளிக்கூடத்தில்... ஒரே தமிழ் வாத்தியாரிடம் தமிழ் படித்திருந்தாலும், இவரது தமிழ் எனக்கு, ஏன் வரவில்லை என்று பொறாமையாக இருக்கும் . இவரது எழுத்துக்களை வாசிக்க என்றே... ரசிகர் கூட்டம் ஒன்று களத்தில் உள்ளது. புங்கையூரான்... தனது லொள்ளுடன், தொடர்ந்தும் பதிவுகளை இட வாழ்த்துகின்றேன்.
-
- 31 replies
- 2.5k views
-
-
உலகத்தின் மாந்தருக்கு உண்மை அன்பின் புனிதத்தை உணர்த்திய தினமாம் இயேசுநாதர் மரித்த தினம் உண்மை அன்பு சாவதில்லை உணர்த்தினார் மீண்டும் உயிர்த்து மூன்று நாட்களில் உலகில் எங்கும் அன்பே பெரிது இயேசுநாதரின் அன்பின் தினங்களை கொண்டாடிடும் என் இனிய உள்ளங்களுக்கு அன்பு பொழியும் ஈஸ்ரர் வாழ்த்துக்கள் ....... அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள் www.groups.google.com
-
- 55 replies
- 7.7k views
-
-
1000 பச்சை புள்ளிகளை நெருங்கும் நெடுக்ஸுக்கு வாழ்த்துக்கள்.விஞ்ஞானத்தில் இருந்து அரசியல் வரை பல விவாதங்களில் பல சிந்திக்க வைக்கக்கூடிய கருத்த்துக்களை வைத்தவர்.மேலும் பல பச்சை புள்ளிகளை பெற வாழ்த்துக்கள்.யாழுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள், நெடுக்ஸ்.
-
- 33 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஆயிரம் பதிவை நெருங்கிய வந்தியத்தேவன். யாழ் களத்தில் இணைந்து, நான்கு மாதத்தில்.... ஆயிரம் பதிவை நெருங்கிய, வந்தியத்தேவனுக்கு... இதயபூர்வமான வாழ்த்துக்கள். நான்கு மாதத்தில் ஆயிரம் பதிவு என்பது, ஒரு அபார சாதனை. இவரை களத்தில் அவதானித்தவரை... பன்முக திறமையுள்ள ஒரு உறவாக தெரிகின்றார். யாழில் தொடர்ந்து இணைந்து.... தனது கருத்துக்களை எம்முடன், பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று, அன்பாக வேண்டுகின்றோம்.
-
- 29 replies
- 1.9k views
-
-
உண்மையில் பக்குவம் கொண்ட ஓர் தமிழீழ கலைஞனாய் ,ஓரிரு வரிகளில் ஆழுமையாக உண்மையை கருத்திடும் என் இனிய நண்பர் இசைக்கலைஞனை வாழ்த்துவதில் பெருமையும் ,மகிழ்சியுமடைகிறேன் ................என்னில் இவரது நல்ல மனதிற்கு கிடைத்த இந்த விருப்பு புள்ளிகள் .இவரது உண்மையான முகத்தை எனக்கு ,எமக்கு காட்டி நிற்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது .................இவரைப்போன்றவர்கள் இந்த யாழில் இருப்பதையிட்டு பூரிப்படைகிறேன் .....................வாழ்க வாழ்க வாழ்க .................
-
- 62 replies
- 4k views
-
-
இரண்டாயிரம் கருத்துகளை மிக வேகமாக நெருங்கும் "தின்னைக் காவலன்" நந்தன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்.... இவர பற்றி சொல்லனும்னா.... அமைதியின் உருவம்...... கோபபட்டால் எரிமலையின் வடிவம்...... சிரிப்பு முக குறியை முதலில் போட்டு தனது வரவை கட்டியம் கூறுபவர்...... கடலை போடுவதற்கு யாராச்சும் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு திண்ணையில் இருக்கும் போது யாராச்சும் வம்பு பண்ணினால் தும்பு பறக்க பேச்சு விழும்...... இதை தூரத்தில் இருந்து சென்றி போட்டு திண்ணையை கண்காணிக்கும் நியாணி வந்து 50 கலிபர் போட்டு அடிச்சால் தான் நிறுத்த முடியும்..... நகைச்சுவை உணர்வு மிக்கவர்..... தன்னை விட சிறியவர்கலோடும்..... இறங்கி வந்து சிறப்பாக பழக கூடியவர்....... குறிப்பாக யாழில் ஏ…
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-