நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பருத்தித்துறை வடை. உழுந்து – 1/2 சுண்டு, அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு செ.மிள. பொடி – 2 தே. க பெருஞ்சீரகம் – 1 மே.க உப்பு – தே.அளவு கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி) எண்ணெய் – தே.அளவு செய்முறை :- * உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். * உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும். * சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும். * அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். ** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)
-
- 9 replies
- 6k views
-
-
மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். இங்கு அந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பான மீன் மொய்லி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் -…
-
- 9 replies
- 2.6k views
-
-
இறால் பிரியாணி தேவையான பொருள்கள் இறால் – அரை கிலோ பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – ஒன்று பச்சை மிளகாய் – 3 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் தயிர் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது மல்லித் தழை, புதினா – ஒரு கைப்பிடி உப்பு – தேவயான அளவு இறால் ஊற வைக்க: இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் மிளகாய் தூள் – கால் ஸ்பூன் உப்பு மஞ்சள் தூள் – சிறிது தாளிக்க: பட்டை – சிறு துண்டு லவங்கம் – 3 ஏலக்காய் – 3 பிரியாணி இலை – ஒன்று அன்னாசிப்பூ – பாதி எண்ணெய் – தேவையான அளவு செய்முறை முதலில் இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசியை 20 நிமி…
-
- 9 replies
- 3.3k views
-
-
-
- 9 replies
- 1.1k views
-
-
ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்றால், அது மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தான். ஆனால் சிலருக்கு பூண்டு வாசனை மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள், பூண்டை வைத்து கூட ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மேலும் ஊறுகாயை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளி (பூண்டு) - 1 கப் (தோலுரித்தது) எலுமிச்சை சாறு - 1/2 கப் சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) மல்லி - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ…
-
- 9 replies
- 5.4k views
-
-
[size=4]ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் வடை, பாயாசத்துடன் ஒரு விருந்து போல் வீட்டில் சமைத்து உண்போம். அப்படி வீட்டில் சாம்பார், பொரியல் என்று செய்யும் போது, அந்த பொரியலில் பூசணிக்காய் பொரியலையும் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அந்த பூசணிக்காய் பொரியல் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]மஞ்சள் பூசணிக்காய் - 1/2 கிலோ வெங்காயம் - 1 நாட்டு தக்காளி - 2 பச்சைமிளகாய் - 4 கடுகு - 1/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் தேங்காய் - 1/4 மூடி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் பூசணிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பி…
-
- 9 replies
- 3.9k views
-
-
அடை கேக் தேவையான பொருட்கள் : சீனி - 500 கிராம் மா - 250 கிராம் ரவை - 250 கிராம் மாஜரீன் - 250 கிராம் வனிலா - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி கஜூ பிளம்ஸ் - 50 கிராம் முட்டை - 6 உப்பு தேவையான அளவு செய்முறை : மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று தடவை அரித்துக் கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மாஜரீன், சீனி இரண்டையும் இட்டு நன்கு கரைத்துக் கொண்டு முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து அடிக்கவும். பின் மா, ரவை, முட்டை வெண்கரு, வனிலா, உப்பு ஆகியவற்றை அடித்து கலவையில் இட்டு 5 நிமிடம் கலந்து பிளம்ஸ், கஜூ சேர்த்து பேக் பண்ணவும். அல்லது எண்ணெய் பூசிய தாச்சியில் ஊற்றி நெருப்ப…
-
- 9 replies
- 3.2k views
-
-
-
https://youtu.be/Ifx69zwQYlQ
-
- 9 replies
- 1.2k views
-
-
தேவையான பொருட்கள்! கோழிச்சதை-500கிராம் தக்காளி -1 வெங்காயம்-2 குடமிளகாய்-2 முட்டை -3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் -5ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவையான அளவு போடவும் நட…
-
- 9 replies
- 3.1k views
-
-
இலங்கையில் மிகவும் பிரபலமானது கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டி தான். இந்த ரொட்டி கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவைாயன உணவாகும். அந்தவகையில் தற்போது இந்த ரொட்டியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள் மைதா மாவு – அரை கப் கோதுமை மாவு – அரை கப் பச்சை மிளகாய் – ஒன்று தேங்காய்த் துருவல் – அரை கப் தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிச…
-
- 9 replies
- 2.7k views
-
-
சண்டே பிரியாணி? செய்து சாப்புடுங்கோ, பொடி மேனிக்காவோட
-
- 9 replies
- 2.2k views
- 1 follower
-
-
சுவையான சுண்டைக்காய் கறி செய்வது எப்படி என யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிட முடியுமா? இப்பதான் காய்க்க தொடங்கியிருக்கு, பிடுங்கி சேகரிக்கத் தொடங்கிவிட்டேன், ஒரு கறிக்கு இப்ப காணும் கொண்டையுடன் சமைக்கலாமா? ================ வேறுபெயர்: மலைச்சுண்டை, கடுகி தாவரவியற் பெயர்: Solanumver verbascl folium ஆங்கிலம் பெயர்: Unarmed night shade இது பெரும்பாலும் மலைகளில் பயிராகும் செடி, ஆனைச் சுண்டை என வேறொரு வகையுமுண்டு. இதை பச்சையாக சமையல் செய்து உண்பது அரிதாக இருப்பினும் இக்காயை வெய்யிலில் உலர்த்தி பின்பு புளித்தமோரில் சிறிது உப்பை சேர்த்து அதில் மேற்கூறிய சுண்டங்காயைப் போட்டு ஊறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்வது நமது வழக்கம். இதில் சிறிது கைப்புத் தன்மை உண்டு. …
-
- 9 replies
- 9.1k views
-
-
எள்ளுப்பா செய் முறை 1)இரண்டு கப் வெள்ளை எள்ளு 2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து 3)ஒரு கப் சீனி எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும் உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும் பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்) அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம். வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.
-
- 9 replies
- 7.7k views
-
-
-
- 9 replies
- 1.3k views
-
-
Coconut Sorbet ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர் கற்றுத்தந்த தேங்காய் சோர்பற் நினைவுக்கு வந்தது. தேவையான பொருட்கள்: சீனி 1 கப் தேங்காய் பால் 3/4 கப் தண்ணி 1 கப் துருவி காயவைத்த தேங்காய் பூ 1/2 கப் தேசிக்காய் புளி 1 தே.க மின்ற் இலை செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் சீனியையும், நீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். சீனி நன்றாக க…
-
- 9 replies
- 3.1k views
-
-
[size=2][size=4]தேவையான பொருட்கள் :[/size][/size] [size=2][size=4]புளி-ஒரு எலுமிச்சையளவு காய்ந்தமிளகா-நான்கு தனியா-இரண்டு தேக்கரண்டி சீரகம்-ஒரு தேக்கரண்டி வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி வெங்காயம்- ஒன்று முழு பூண்டு-ஒன்று தக்காளி-ஒன்று கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை-ஒரு கொத்து எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி உப்பு-தேவைகேற்ப[/size][/size] [size=2][size=4]செய்முறை :[/size][/size] [size=2][size=4]புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,[/size] [size=4]பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்ட…
-
- 8 replies
- 4.9k views
-
-
அவல் தோசை ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (17:22 IST) தேவையான பொருட்கள்: கெட்டி அவல் - ஒரு கப் புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் பொடியாக ஒரு சுற்றுச் சுற்றி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, தோசைமாவு பதத்துக்கு கரைத்து நிதானமான தீயில் தோசைகளாக வார்க்கவும். விருந்தினர்கள் வந்தால் இந்த தோசையை உடனடியாக செய்து அசத்தலாம். புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளலாம். அபார ருசியுடன் மெத்தென்று இருக்கும். http://tamil.webdunia.com/article/making-of-dishes-in-t…
-
- 8 replies
- 1.9k views
-
-
வட்டிலப்பம் என்ன வேணும்: முட்டை 10 கித்துள் பனங்கட்டி 750 g முந்திரிகொட்டை ( கஜூ ) 100g தேங்காய்ப்பால் 2 கப் ஏலக்காய் தேவையான அளவு பட்டர் தேவையான அளவு கூட்டல்: கித்துள் பனங்கட்டியை சின்னதாய் வெட்டி தேங்காய் பாலுடன் நன்றாக கரையுங்கோ . முட்டையை நன்றாக அடிச்சு வையுங்கோ . பின்பு ஏலக்காயை பொடிசெய்து அடிச்ச முட்டையோடை சேருங்கோ . முந்திரிக்கொட்டையை சின்னதாய் வெட்டி கலவையிலை போடுங்கோ . பின்பு தேங்காய்பால் கலவையையும் ஒன்றாய் கலக்குங்கோ . இப்போ வட்டிலப்பதின்ரை கலவை தயார் . இந்த கலவையை பட்டர் பூசின சின்ன கிண்ணங்களிலை ஊத்தி நீராவியிலை ( steamer ) வேகவையுங்கோ . மைத்திரேயி 18/07/2013
-
- 8 replies
- 1.3k views
-
-
-
- 8 replies
- 4.8k views
-
-
பீட்றுட் வறை _____________ தேவையான பெருட்கள் 2பீட்றுட் 1 வெங்காயம் (சின்னனாக வெட்டப்படல்) 3பொல்லம் உள்ளி(சி--ன்-வெட்டப்படல்) கறிவேப்பிலை வறைக்குஅளவு தேவையான உப்பு (தே--எண்ணெய் தேவையான மஞ்சல் 3 செத்தல்மிளகாய் ( சி.ன்--வெட்டப்படல்) சிறிதளவு பெ--சீரகம் உடன் தேங்காய்புூ சிறிதளவு பீட்றுடை மேல்தோலை சீவிஅகற்றுங்கள் ( சீவிய பீட்றுட்டை நன்றாக தண்ணீரில் கழுவுங்கள்பின்னர் (பீட்றுட்டை சின்னனாக சிவுங்கள் (கரட் எப்படிசிவுறிங்களோ அதை மாதிரி (பீட்றுட்டை சிவுங்கள்) பின்னர் அதனுள் தேவையான ---தேங்காய்ப்புூ--உப்பு---மஞ்சல்---இவற்றை சேர்த்து பிசைந்து ஒரு 3நிமிடம் வையுங்கள் செய் முறை பாத்திரத்தை அடுப்பில் வைத்து தே-எண்ணெய் சிறிது விட்டு கொதித்து வரு…
-
- 8 replies
- 3.5k views
-
-
Please subscribe to my channel to support me. Thanks https://youtu.be/D1q4ayFXs5Y
-
- 8 replies
- 1.1k views
-
-
புத்தூர் ஜெயராமன் பிரான் பிரை.. நன்றி : நியுஸ் 7 தமிழ்
-
- 8 replies
- 1.5k views
-
-
கணவா மீன் - 500 கிராம் வெங்காயம் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு/உள்ளி - பாதி இஞ்சி - அரை அங்குலத்துண்டு கறித்தூள் - 3 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி எலுமிச்சை/தேசிக்காய் - பாதி கறிவேப்பிலை - 2 கொத்து உப்பு - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 மேசைக்கரண்டி தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கணவா மீனை சுத்தம் செய்ய அதன் தலைப்பகுதியைப் பிடித்து இழுத்தால், அப்படியே பிரிந்து வரும். அதில் கறுப்பு பை போல் உள்ள பகுதியில் மை போல் இருக்கும். அதை உடையாமல் பிரித்தெடுத்தெடுக்கவும். உடைந்தால் எல்லாம் கறுப்பாகிவிடும். அதே போல் கண்பகுதியையும் மெதுவாகப் பிரித்து விடவும். அதிலும் மை இருக்கும். பின்னர் தலைப்பகுதியை வெட்டினால் ஒரு …
-
- 8 replies
- 6.5k views
-
-
வெண்டைக்காய் ஃப்ரை வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுத்தால், அவர்களின் மூளை நன்கு செயல்படும். அத்தகைய வெண்டைக்காளை சற்று வித்தியாசமாக ராஜஸ்தான் ஸ்டைலில் ஃப்ரை செய்து கொடுத்தால், உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு அந்த ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 20 உள்ளே வைப்பதற்கு... கடலை மாவு - 1 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மஞ்…
-
- 8 replies
- 1.7k views
- 1 follower
-