நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சாதத்திற்கு அருமையான காளான் மிளகு மசாலா சாதம், தோசை, நாண், சப்பாத்தி, சாம்பார் சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் மிளகு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் காளான் - 250 கிராம் பூண்டு - 4 பல் வெங்காயம் - 1 குடை மிளகாய் - பாதி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப …
-
- 1 reply
- 935 views
-
-
சாதத்திற்கு சூப்பரான வான்கோழி குழம்பு வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இப்போது வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மசாலாவிற்கு... எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 1/2 டே…
-
- 3 replies
- 840 views
-
-
நெடுக... ஒரே முறையில், உணவை தயாரிக்கும் போது, அந்த உணவை உண்ண சிறிய குழந்தைகள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவர்களை கவர... சிரமம் இல்லாமல், உணவை அலங்கரிக்க சில வழிகள்.
-
- 3 replies
- 928 views
-
-
செய்முறை தேவை...................... வித்தியாசமான் " சான்விச் " செய்யும் முறை யாராவது பதிந்து விடுவீர்களா? டுனா ( tuna ) பச்சை வெங்காயம் ( வெங்காய் தாள் என்று ஊரில் சொல்வோம்) உப்பு மிளகு தூள் மயோனிஸ் ...( செய்தாயிற்று ) deli meat ( இறைச்சி பேப்பர் போல் இருக்கும்) chicken beef pork ,,(,,ஏதாவது ) சாலட் (letuce ..)மயோனிஸ். தக்காளி ...சேர்த்து செய்தாயிற்று. அவித்த முட்டை பிடிக்காது ............ வேறு எதாவது செய்முறை தரவும்.
-
- 4 replies
- 6.8k views
-
-
சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு... வேப்பிலை... கறிவேப்பிலை; அதை ஏன் சாப்பிட வேண்டும் என்று நினைத்து தினமும் சாப்பாட்டில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை உண்ணாமல் தூக்கி எறிபவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது; கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர் முர்ராயா கொயிங்கீ (Murraya Koengii) கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் எனப் பல ரகங்கள் உள்ளன. இந்தியச் சமயலறைகளில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழக…
-
- 0 replies
- 862 views
-
-
* வாழைத்தண்டு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அத்துடன் மிளகுப்பொடி, உப்பு மற்றும் தக்காளிப் பழம் கலந்து சூப்பாக அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது. * அரிசி, பயிறு போன்றவற்றை வறுத்து ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை முளை கட்டி காயவைத்து ரவையாக உடைத்துக் கொண்டால் தேவையானபோது உடனடியாக கஞ்சி தயாரிக்கலாம். * டீ போடும்போது முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடானபால் சேர்த்தால் டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு டீ போட பயன்படுத்தும் பாத்திரமும் கறுத்துப் போகாது. * சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாயை ஒன்று சேர்த்து மிக்ஸியிஸ் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய்ச் சட்டியில…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 602 views
-
-
-
- 0 replies
- 996 views
-
-
-
- 2 replies
- 531 views
-
-
-
சாப்பாட்டு அசுரன்....இந்திய தெருவோர உணவகங்களில்
-
- 1 reply
- 650 views
-
-
நான் கடந்த வருடம் ஊருக்கு போனபோது, எனது நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி வல்வெட்டிதுறையில் உள்ள ஒரு கொத்து ரொட்டி கடைக்கு இரவு சாப்பிட போனோம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது. மிக சிறிய கடைதான் ஆனாலும் எமக்கு இடம் கிடைக்க ஒரு 20 நிமிடம் காத்து இருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டம். சிக்கன் கொத்து, முட்டை கொத்து மற்றும் மரக்கறி கொத்து மட்டும் தான் கிடைக்கும். வேறு ஒரு சாப்பாடும் இல்லை. இங்கை ஒரு விசேடம் என்னவென்றல், மரக்கறி கொத்து தனி அடுப்பு வைத்துதான் போ…
-
- 29 replies
- 4.6k views
-
-
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சமஸ் அவர்களின் சாப்பாட்டுப்புராணம். பாலஹனுமான் அவர்களின் பதிவுகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை பகிர்ந்திருந்த போது வாசித்தவுடன் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது எதுவும் நினைவில் இல்லை. எதேச்சையாக ஒரு பதிப்பகத்தில் (எங்கு என்று நினைவில்லை! பாலகுமாரன் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தனவே? நர்மதாவா?) பார்த்தவுடன் வாங்கிக் கொண்டேன். (வாங்கிக் கொடுத்த சீனுவுக்கு நன்றி. காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை) திருச்சி வந்தவுடன் என்னவரும் நானுமாக மாற்றி மாற்றி வாசித்து ருசித்தோம்! தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுரையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் …
-
- 3 replies
- 4.5k views
-
-
சாமைக் காரப் புட்டு (தினம் ஒரு சிறுதானியம்-13) சத்தான சிறுதானியங்களில் தினமும் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு சாமை. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ட்ரைகிளசரைடு என்ற கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளது. பலன்கள் சாமையை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால், செல் சிதைவடைவது கட்டுப்படுத்தப்படும். பொதுவாக வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைதான் பெரிய சிக்கலாகவே இருக்கிறது. உடலிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணியாக அமைந்துவிடும். சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள், மலச்சிக்கலைத் தடுப்பதுடன் வலுவைக் கூட்டும் உணவாகவும் இருக்கிறது. வயிறு …
-
- 0 replies
- 782 views
-
-
ஒன்கார் கரம்பேல்கர், பிபிசி மராத்தி வேகவைத்த பருப்பு, புளி, முருங்கைக்காய், தக்காளி, கேரட், பூசணி மற்றும் பச்சை கொத்தமல்லி - இவை அனைத்தையும் சேர்த்து இதில் மசாலா பொருட்களும் சேர்க்கப்பட்டு சாம்பார் தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய சாம்பார் இந்தியா முழுவதிலும் பரவியுள்ளது. அது ஏற்கனவே இந்திய எல்லைகளையும் தாண்டிவிட்டது. சாம்பார், இட்லியின் தவிர்க்க முடியாத தோழன். சிலர் சாம்பாருடன் சாதம் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். சாம்பார் எவ்வாறு உருவானது? சாம்பார் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இது போன்ற பல கேள்விகளை நாம் ஆராய வேண்டும். சில நேரங்களில் சில உணவுகள் நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் ஒருங்கிணைந்ததாக மாறும். அதன் மூலத்தை நாம் ஆராயத…
-
- 18 replies
- 1.4k views
-
-
சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு! தமிழர்களையும் சாம்பாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகம் என்றாலே இட்லி, சாம்பார், சட்னிதான் நினைவுக்கு வரும். பிரிட்டன் மகாராணி முதல் ஆப்பிரிக்கர்கள் வரை தமிழகம் வந்தால், ஒரு முறையாவது சாம்பாரை டேஸ்ட் பார்க்காமல் போக மாட்டார்கள். பல ஹோட்டல்களில் சாம்பாரின் சுவைக்காகவே இட்லி சாப்பிடும் வட இந்தியர்களை, வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். முருங்கைக்காய் சாம்பார், பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சாம்பார், அவரை சாம்பார் என இப்போது விதவிதமாகச் சமைக்கிறோம். சாம்பார் இல்லாத எந்த விஷேச நிகழ்வும் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே நடந்துவிடாது. விருந்திலிருந்து அன்றாட உணவு வரை …
-
- 2 replies
- 931 views
-
-
சாம்பார் பொடி தேவை என்றாலே நாம் கடைக்குச் செல்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே சுவையான சாம்பார் பொடி தயார் செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி என்று பார்ப்போம்.... தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) - 1/2 கிலோ மிளகு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் வெந்தயம் - 5 கிராம் பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது …
-
- 1 reply
- 3k views
-
-
சால மீனும் கத்திரிக்காயும் தேவையானவை: சால மீன் - முக்கால் கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 2 கத்திரிக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு புளி - 10 கிராம் உப்பு - தேவையான அளவு மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை : மீனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், பாதியளவு மல்லித்தூள் (தனியாத்தூள்), மற்றும் மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலந்து கொள்ளவும். சுத்தம் செய்த மீனை இதில் புரட்டி எடுக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு மீனை சேர்த்து இருபுறமும் வேக விட்ட…
-
- 2 replies
- 863 views
-
-
தேவையான பொருட்கள்: மஷ்ரூம் – 250 கிராம், கார்ன்ஃப்ளார், மைதா – தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 வெங்காயத் தாள் - 1 பொடித்த இஞ்சி, பூண்டு – தலா 1 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1 சிவப்பு மிளகாய் விழுது - தேவைக்கேற்ப சோயா சாஸ், வெள்ளை மிளகுத் தூள் – தேவைக்கேற்ப சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: 1. மஷ்ரூமை நன்கு கழுவி, இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதை மைதா, கார்ன் ஃப்ளார், உப்பு கலவையில் பிரட்டி, எண்ணெயில் பொரித்துத் தனியே எடுத்து வைக்கவும். 2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துப் பச்ச…
-
- 0 replies
- 707 views
-
-
சப்பாத்திக்கு அருமையான சாஹி மட்டன் குருமா மட்டனை வைத்து பிரியாணி, குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று கொஞ்சம் வித்தியாசமாக சாஹி மட்டன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் - 600 கிராம் வெங்காயம் - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 கிராம்பு - 4 இலவங்க பட்டை - 1 மிளகு - 7 இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன் மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூ…
-
- 1 reply
- 868 views
-
-
[size=5]சாஹி மட்டன் குருமா![/size] [size=5][/size] [size=4]மட்டன் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அந்த மட்டனை இதுவரை குழம்பு, வறுவல் என்று செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த மட்டனை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்து நல்ல பாராட்டைப் பெற, சாஹி மட்டன் குருமா சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]எலும்பில்லாத மட்டன் - 600 கிராம் வெங்காயம் - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 கிராம்பு - 4 இலவங்க பட்டை - 1 மிளகு - 7 இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன் மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் முந்திரி பேஸ்…
-
- 0 replies
- 895 views
-
-
காளான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இத்தகைய காளானை நாம் காளான குழம்பு, காளான வறுவல் என்றெல்லாம் செய்திருப்போம். இவை அனைத்து சுவையுடன் இருக்கும். அதேப்போல் சாஹி மஸ்ரூம் என்னும் ரெசிபியும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த சாஹி மஸ்ரூமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் வெங்காயம் - 4 (நறுக்கியது) தக்காளி - 5 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் ப்ரஷ் க்ரீம் - 1 கப் முந்திரி - 1/2 கப் (அரைத்தது) நெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது …
-
- 2 replies
- 834 views
-
-
சிக்கன் - 65 தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் இஞ்சி - 25 கிராம் பூண்டு -4 பல் மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய்- தேவையான அளவு. மிளகாய்த்தூள் -1 1/2 தேக்கரண்டி மசாலா பொடி - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு (மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்). செய்முறை: 1. சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும். 2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும். 3. மிளகுத்தூள், மிளகாய்த்…
-
- 26 replies
- 11.5k views
-
-
தேவையானபொருட்கள் சிக்கன் - 1/2கிலோ வத்தல் தூள் - 4தேக்கரண்டி மல்லித்தூள் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4தேக்கரண்டி எலுமிச்சைசாறு - 5தேக்கரண்டி தயிர் - 2தேக்கரண்டி இஞ்சிபூண்டுவிழுது - 1தேக்கரண்டி ஆரஞ்சு கலர் 1/4 தேக்கரண்டி உப்பு - 1தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் கொத்தமல்லிதழை - 4 கொத்து செய்முறை சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..............ஒரு பாத்திரத்தில் வத்தல் தூள்,மல்லி தூள்,உப்பு,கரம்மசாலா,கலர்பவு
-
- 6 replies
- 3.1k views
-
-
சிக்கன் 65 (Chicken 65) தேவையான சாமான்கள்: கோழி-400கிராம், இஞ்சி-1 துண்டு, மிளகாய்த்தூள்-2தேக்கரண்டி, வினிகர்-1 மேசைக்கரண்டி, உள்ளி-10 பல், எண்ணை-1 கோப்பை, உப்பு-தேவையான அளவு செய்யும் முறை: 1. கோழியைத் தோலை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி கழுவிக்கொள்ளவும். 2. இஞ்சி, உள்ளி அரைத்து உப்பு சேர்த்து வினிகருடன் கலக்கி, மிளகாய்த்தூளைச் சேர்த்து கோழித்துண்டுகளில் தடவி முன்று மணி நேரம் உற வைக்கவும். 3. பிறகு கோழித் துண்டுகளை அரை அவியலாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும். 4. பாத்திரத்தில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கோழித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இப்போது சிக்கன் 65 ரெடியாக உள்ளது. (இப்போது தான் பறவைக் காய்ச்சல் ந…
-
- 31 replies
- 9.8k views
-