நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பொதுவாகவே எம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அதாவது தினமும் முறையே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய காலை,மதிய,இரவு உணவை உண்பதை தவிர்ப்பது அல்லது நேரம் தவறி சாப்பிடுவது. ஆனால் நொறுக்கு தீனி என்றால் குளிர்சாதனப்பெட்டியில் அது இருந்த சுவடே இல்லாமல் ஆகும் வரை தொடர்ந்து சாப்பிடுவது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவை உடலுக்கு நல்லதல்ல என்பது எமக்கு தெரிந்தும் உண்பது தான். அப்படி எம்மை மயக்கிய சில தீனிகளில் பின்வருவன அடங்கும்: சொக்கிளட் குளிர்களி (ஐஸ்கிரீம்) பொரித்தவை (சிப்ஸ்) மைக்ரோவேவில் வைத்த சோளம் (பொப் கோர்ன்) டோனட்ஸ் பேஸ்ற்றீஸ் பிஸ்கட்ஸ் இனிப்புகள் நெய்யில் செய்த பண்டங்கள் இவை அனைத்தும் நிச்சயம் தவிர்க்க/குறைக்க பட வேண்டியவை. ஆனால் இவை இல்லா…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்த விட்டு வெளிய நிக்கிற பல பேர் கேக்கிற ஒரு சாமான் இந்த மிளகாய் தூள், அத எப்பிடி வீட்டிலேயே நீங்க செய்யலாம் எண்டு பாப்பம் வாங்க . பாத்திட்டு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 546 views
-
-
பட்டர் நாண் என்னென்ன தேவை? மைதா - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் தயிர் - 2 டீஸ்பூன் பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெண்ணெய், உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். தவாவை சூடாக்கி பிறகு சிம்மில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது…
-
- 2 replies
- 846 views
-
-
சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தயிர் வெண்டைக்காய் பூரி, புலாவ், பிரியாணி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அருமையான இருக்கும் இந்த தயிர் வெண்டைக்காய். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - கால் கிலோ, தக்காளி - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப்…
-
- 0 replies
- 673 views
-
-
-
- 34 replies
- 3k views
-
-
சிம்பிள் வெஜ் புலாவ் தேவையான பொருட்கள் ; சீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - அரைகிலோ எண்ணெய் - 50- மில்லி நெய் - 50 மில்லி இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் ஏலம் - 2 கிராம்பு - 2 பட்டை - 2 சிறியதுண்டு பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது புளிக்காத மோர் - ஒரு கப் வெங்காயம் - 1 தக்காளி - சிறியது-1 மிளகாய் -2 கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ மல்லி புதினா - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும். புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி…
-
- 0 replies
- 8.8k views
-
-
(தேவைகேற்ப அளவை மாற்றிக்கொள்ளுங்கள்) தேவையான பொருட்கள்: (10 கிலோ மஸ்கோத் அல்வா தயாரிக்க) சர்க்கரை - 5 கிலோ, தரமான தேங்காய் - 30, மைதா மாவு - ஒன்றரை கிலோ, முந்திரிப் பருப்பு - 400 கிராம். செய்முறை: முதல் நாளே, மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பரோட்டா பதத்துக்கு உருட்டி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கைகள் இரண்டிலும் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். இனி உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடம் இரண்டு கைகளாலும் மாவை நன்றாக பிசைய வேண்டும். அதிலிருந்து பால் மெதுவாக வெளியேறும். தண்ணீர் கலந்த இந்த பாலை, வேறு ஒரு பெரிய பாத்திரத்தில…
-
- 1 reply
- 2.8k views
-
-
[size=4]குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எப்போது பார்த்தாலும் தோசை, இட்லி என்று செய்து கொடுத்து, அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு போர் அடித்திருக்குமோ, இல்லையோ, அதை சமைத்துக் கொடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக போர் அடித்திருக்கும். ஆகவே அந்த தோசை, இட்லிக்கு பதிலாக அவர்களுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது. இந்த தக்காளி சாதத்தில், தக்காளி அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும். இப்போது அந்த தக்காளி சாதத்தை செய்வது எப்டியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]அரிசி - 2 கப் தக்காளி - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆஹா, என்ன மணம்... அடடா, என்ன ருசி! கம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்... அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா?!’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்... ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு - மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, ஒரு `பிரியாணி மேளா’வையே இங்கு நடத்திக்காட்டி அசத்துகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.…
-
- 0 replies
- 3.1k views
-
-
இன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம். எமது வீட்டில் இடைஇடை செய்தாலும் எல்லா நேரங்களிலும் சரியாக வராது.அளவு என்று ஒன்றும் இதுவரை இல்லை. சரி காணொளிகளைப் பார்த்து செய்வோம் என்று எண்ணி முதலில் யாழ்களத்தில் உறுப்பினராக உள்ள தாமரை என்பவரது கொணொளியை பார்த்தால் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. இன்னொரு காணொயைப் பார்த்தால் சுலபமாகவும் இருந்த பொருட்களுடனே செய்யலாம். அந்த காணொளியையும் மேலே இணைத்துள்ளேன். அதில் எல்லாமே அவ சொன்ன மாதிரி செய்தேன்.ஆனாலும் தண்ணீருக்கு பதிலாக பால் விட்டேன்.தின்றது தான் தின்றது கொஞ்சம் ருசியாக சாப்பிடுவமே என்று தான். அடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்…
-
- 14 replies
- 2k views
- 1 follower
-
-
வணக்கம், நல்ல சலாட் செய்வது எப்படி? எவ்வளவு தான் முயன்றாலும் சரிவருகின்றது இல்லை. வெறும் இலைகளை வெட்டிப் போடுவதாலும் என்ன source போட வேண்டும் என்று சரியாகத் தெரியாததாலும் சரியாகவே வருகின்றது இல்லை. 1. மரக்கறி சலாட் 2. கோழி சலாட் (Checken Salad) 3.. சமன் மீன் சலாட் போன்றவற்றை எப்படி செய்வது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லித் தாருங்கள். நன்றி
-
- 16 replies
- 6.3k views
-
-
-
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டிலேயே பலவாறு மட்டன் குழம்பை சமைக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் சேலம் மட்டன் குழம்பு. இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும். இப்போது சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 3/4 கிலோ சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பட்டை - 2 மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் தேங்காய் - 1 மூடி (துருவியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் …
-
- 0 replies
- 666 views
-
-
-
மலாய் ஃபிஷ் டிக்கா மசாலா என்னென்ன தேவை? ஷீலா மீன் - 500 கிராம், பச்சைமிளகாய் - 2, ஹங்க் கர்ட் - 50 கிராம் (கெட்டியான தயிரை மஸ்லின் துணியில் கட்டி தொங்க விட்டு, அதில் உள்ள அதிக தண்ணீர் வடிந்து கிடைக்கும் கெட்டியான தயிர்), கொத்த மல்லித்தழை - சிறிது, இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1/2 மூடி, வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் மீனை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும். கொடுத்துள்ள அனைத்து மசாலாக்களையும் கலந்து, மீனுடன் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். பின்பு கிரில் அல்…
-
- 0 replies
- 418 views
-
-
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் விருப்பமான கொத்துக்கறியை வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி தேவையானவை கொத்துக்கறி - தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) - 1 கப் தக்காளி (நறுக்கியது ) - 1/2 கப் இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன் சீரக தூள் - 1 டீஸ் ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ் ஸ்பூன் மிளகாய் தூள் - 1டீஸ் ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு …
-
- 0 replies
- 686 views
-
-
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – பத்து... மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைகேற்ப கடுகு – ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன் வறுத்து பொடிக்க: கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன் தனியா – இரண்டு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – ஐந்து செய்முறை: …
-
- 0 replies
- 734 views
-
-
வேர்கடலை சட்னி வேர்க்கடலை சட்னியை விரைவாகவும் ருசியாகவும் செய்து இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.. தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் உரித்தது) தேங்காய் - 4 பத்தைகள் காய்ந்தமிளகாய் - 4 எண்கள் உப்பு - தேவைக்கேற்ப புளி - பட்டாணி அளவு தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: ஒரு கடாய் வைத்து அதில் சில சொட்டு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்பல்லாக நறுக்கி மிக்சி ஜாரில் போடவும். அத்துடன் வேர்க்கடலை, வறுத்த மிளகாய், உப்பு, புளி அனைத்தை…
-
- 8 replies
- 8.2k views
-
-
சுவையான நண்டு உருளைக்கிழங்கு மசாலா இருமல், சளிக்கு நண்டை நல்லா காரமா வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும்-னு சொல்வாங்க. அந்த நண்டை நல்லா காரமா, ஒரு மசாலா செஞ்சு சாப்பிடலாமா!!! தேவையான பொருட்கள் : நண்டு - ஒரு கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் - இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன் தனியாத்தூள் - ஒரு ஸ்பூன் தேங்காய் - அரைமூடி சீரகம் - ஒரு ஸ்பூன் மிளகு - ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு - தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - தேவையான அளவு செய்முறை : முதலில் நண்டை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]தேவையானவை :[/size] [size=4]பூண்டு தோல் உரித்தது - ஒரு கப் (100 கிராம்)[/size] [size=4]பால் - ஒரு கப்[/size] [size=4]பனங்கற்கண்டு - ஒரு தேக்கரண்டி[/size] [size=4]பூண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி சிறு தீயில் கொதித்து வற்றவிடவும்.[/size] [size=4]வெந்தவுடன் கரண்டியால் மசித்து விட்டு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்கவும். மசிக்காமல் முழுப்பூண்டாகவும் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.[/size] [size=3]Note:[/size] [size=3]பூண்டு இருதயத்திற்கும், செரிமானத்திற்கும் சிறந்தது. இதை வாயுத்தொல்லை உள்ளவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். ஒரு மாதம் சாப்பிட்டால் சுத்தமாக வாயு போய்விடு…
-
- 0 replies
- 2.4k views
-
-
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர் உடல் பலமிழந்து சோர்ந்து கிடப்பவர்களுக்கு கார், நாவறட்சியால் தவிப்பவர்களுக்கு குண்டு சம்பா, வாதக் குறைபாடு கண்டவர்களுக்கு குன்றுமணிச் சம்பா, பசியில்லாமல் உடல் மெலிவோருக்கு சீரகச்சம்பா, சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களால் வதைபடுவர்களுக்கு செஞ்சம்பா, வாதம், பித்தம், சிலேத்தும நோய் கண்டு தவிப்பவருக்கு கோடைசம்பா, பார்வைக்கோளாறு உள்ளவர்களுக்கு ஈர்க்கு சம்பா... இப்படி மருந்தாகவே விளங்கிய அரிசி ரகங்களை விளைவித்துச் சாப்பிட்டு நெடுவாழ்வு வாழ்ந்த சமூகம் நம்முடையது. உணவே மருந்து என்பதுதான் நம் வாழ்வியல் கோட்பாடு. ஆனால், அத்தகைய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, பின்பற்றி வந்த உணவு வழிகளில் இருந்து வெகு…
-
- 10 replies
- 7.7k views
-
-
https://youtu.be/fVhP4jZ5TjU
-
- 27 replies
- 2.6k views
-
-
பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா பஞ்சாபி வைபவங்களில் பன்னீர் முக்கிய இடம் பெறுகின்றது. இங்கே மிகவும் வித்தியாசமான பன்னீர் குல்சாவின் செய்முறை குறிப்பை உங்களுக்காக கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: மைதா அல்லது கோதுமை மாவு - 3 கப் சர்க்கரை - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி வெண்ணெய் - 5 டீஸ்பூன் பால் - 1 கப் உப்பு ஸ்டப்பிங்கிற்கு : பன்னீர் - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி சாட் மசாலா - 2 தேக்கரண்டி …
-
- 0 replies
- 601 views
-
-
-
சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்ய...! தேவையான பொருட்கள்: பரோட்டா - 2 முட்டை - 1 வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 உப்பு - தேவைக்கு எண்ணெய் - 4 ஸ்பூன் கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி பூண்டு - 8 பல் கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத…
-
- 11 replies
- 2.8k views
-