நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம். மசாலா டீ: ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்தும் இந்த பொடியையும் தேயிலையுடன் சேர்த்துப் போட்டு கொதித்ததும் சீனி, பால், சேர்த்து வடிகட்டி அருந்தவும். இது குளிர்காலத்திற்கு சூடு கொடுக்கும் அருமைய…
-
- 2 replies
- 1.6k views
-
-
துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods “ரசம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே... மிளகு ரசம் தமிழர்களின் அன்றாடச் சமையல…
-
- 2 replies
- 1.6k views
-
-
மீனாட்சி. ஜெ பிபிசிக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், The Washington Post தோசை. தென் இந்தியர்களின் தினசரி காலை உணவாக எப்போது மாறியது என்று தெரியாது. ஆனால், காலை மட்டுமல்ல, எந்த வேலையாக இருந்தாலும் தோசையை சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தோசை, சென்னை பாரிமுனையில் இருந்து, பாரிஸ் லே சேபல் வரைக்கும் மிகவும் பிரபலமான ஒரு சர்வதேச உணவாக இன்று மாறியிருக்கிறது. நெய் ஊற்றி சுட்ட தோசைக்கு மிளகாய் பொடி, நல்லெண்ணெய், சட்னி, சாம்பார் ஆகியவற்றை தொட்டு சாப்பிடுவது தென் இந்தியர்களி…
-
- 2 replies
- 706 views
-
-
ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்தைகள் கீரைகளை சாப்பிட மறுப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு கீரையை சட்னி போன்று செய்து கொடுத்தால், நிச்சயம் சாப்பிடுவார்கள். இங்கு வல்லாரைக் கீரையைக் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதனை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். தேவையான பொருட்கள்: வல்லாரைக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்து, நீரில் அலசியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) வர மிளகாய் - 3 பூண்டு - 5 பற்கள் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்…
-
- 2 replies
- 1.8k views
-
-
இஞ்சி பெப்பர் சிக்கன் விடுமுறை நாள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நன்கு வாய்க்கு சுவையாக பிடித்த சமையலை சமைத்து சாப்பிட முடியும். அதில் பெரும்பாலானோர் அசைவ உணவைத் தான் செய்து சுவைப்பார்கள். இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைத்தால், இஞ்சி பெப்பர் சிக்கன் செய்யுங்கள்.இங்கு அந்த இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (நறுக்கியது) க…
-
- 2 replies
- 945 views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன் சிக்கனில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து சூப்பரான சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு - 10 கிராம் முட்டை - ஒன்று மைதா மாவு - 50 கிராம் கார்ன்ஃப்ளார் - 100 கிராம…
-
- 2 replies
- 907 views
-
-
-
[size=6]அருமையான... காளான் சில்லி[/size] [size=6][/size] [size=4]காளான் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அது மழைக்காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியில் பல்வேறு இடங்களில் முளைப்பதால், நிறைய பேருக்கு அதை சாப்பிடப் பிடிக்காது. மேலும் இந்த காளான் பொதுவாக சைனீஸ் உணவில் அதிகம் பயன்படுத்தப்படும். அப்படி உணவில், நல்ல நிலையில் வளர்க்கப்பட்ட காளானையே பயன்படுத்துவர். இத்தகைய காளானை வீட்டில் இருக்கும் அனைவரும் சுவைத்து உண்ணும் படி செய்ய ஒரு அருமையான, காரசாரமான வகையில் ஒரு ரெசிபி இருக்கிறது. அதுதான் காளான் சில்லி. இதனை சாதத்திற்கும், சப்பாத்திக்கும் வைத்து சாப்பிடலாம். சரி, அது எப்படியென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்க…
-
- 2 replies
- 1.7k views
-
-
-
-
- 2 replies
- 859 views
-
-
கந்தரப்பம் செட்டிநாட்டின் மிக முக்கியமான பலகரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய பலகாரம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1/2 கப் உளுந்து - 2 மேஜைக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி ஏலக்காய் - 3 தேங்காய் துருவியது - 1 மேஜைக்கரண்டி எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு வெல்லம் - 1 கப் பொடித்தது செய்முறை: அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல…
-
- 2 replies
- 985 views
-
-
தேவையான பொருட்கள்: 1 ½ கப் பாசுமதி அரிசியை கழுவி தண்ணியில் அரை மணித்தியாலம் விடவும். 1 மேசைக்கரண்டி ஏதாவது சமையல் எண்ணை , 1 மேசை கரண்டி நெய், 1 றாத்தல் அல்லது ½ கிலோ பழுத்த தக்காளி பழம் , 10 பல்லு உள்ளி நீட்டாக பெரிய துண்டுகளாக வெட்டியது, 2 மேசை கரண்டி இஞ்சி உள்ளி அரைத்தது . 5 பச்சை மிளகாய் நீட்டாக வெட்டியது ½ றாத்தல் சிவப்பு வெங்காயம் மெல்லிய நீட்டு துண்டுகள், கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை விருப்பிய அளவு. 1 ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தனி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள் , 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், உப்பு , 3 கராம்பு , சின்னத்துண்டு கறுவா, கொஞ்ச பெருஞ்சீரகம். செய்முறை: எண்ணை , நெய் இரண்டுயும் தாச்சியில் விட்டு கராம்பு, கறுவா, பெருஞ்சீரகம் …
-
- 2 replies
- 567 views
-
-
கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் வெள்ளிக்கிழமை வந்தாலே அனைவரது வீட்டிலும் சாம்பார், ரசம், பொரியல் என்று ஓர் குட்டி விருந்து தயார் செய்வோம். அதிலும் ஆடி மாதம் என்றால், கட்டாயம் வெள்ளிக்கிழமைகளில் ஓரே ஜாலியாக இருக்கும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் நன்கு வயிறு நிறைய சாப்பிடும் வகையில் பல சமையல்களை சுவைக்கலாம். உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து அலுத்துப் போயிருந்தால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை செய்து சுவையுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 1 (நறுக்கியது) வெண்டைக்காய் - 4 (நறுக்கியது) கேரட் - 2 (துண்டுகளாக்கிக்…
-
- 2 replies
- 758 views
-
-
-
புதிய தலைமுறைக்கு, உகந்த தோற்றத்தில்... அம்மிக்கல். மற்றும் ஆட்டுக்கல்.
-
- 2 replies
- 1.2k views
-
-
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்! தேவையான பொருட்கள்: பட்டாணி - 100 கிராம் கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பனீர் - 100 கிராம் வதக்கி அரைக்க புதினா - ஒரு கட்டு கொத்து மல்லி - அரை கட்டு கருவேப்பிலை - கால் கட்டு பச்ச மிளகாய் - நான்கு இஞ்சி - ஒரு லெமென் சைஸ் பூண்டு - 5 பல் வெங்காயம் - முன்று தக்காளி - நன்கு எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க: எண்ணை - தேவையான அளவு சீரகம் - சிறிதளவு செய்முறை: * முதலில் எண்ணையை காயவைத்து …
-
- 2 replies
- 1.1k views
-
-
தர்பூசணி நீர்மோர் தேவையானப்பொருட்கள்: தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப் தயிர் - 1/2 கப் எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை புதினா - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும். கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும். கவனிக்க: வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கிட்னி கூட்டு தேவையான பொருட்கள் ஆட்டு கிட்னி - கால் கிலோ வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி சீரக தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - முக்கால் முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு) பச்ச மிளகாய் - ஒன்று கொத்து மல்லி தழை - சிறிது எண்ணை - நான்கு தேக்கரண்டி பட்டை - ஒரு சிறிய துண்டு செய்முறை 1. ஆட்டு கிட்னியை நன்கு சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும். 2, வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. ஓர…
-
- 2 replies
- 771 views
-
-
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப) சோளமாவு: 1 தே. கரண்டி முட்டை : 1 பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப) இஞ்சி : ஒரு சிறு துண்டு டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி சோயா சாஸ் : 2 தே. கரண்டி சில்லி சாஸ்: 1 தே.கரண்டி மஞ்சள் தூள் : சிறிதளவு உப்பு தேவையான அளவு எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி செய்முறை *கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். *ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி …
-
- 2 replies
- 934 views
-
-
சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது) வறுத்து அரைப்பதற்கு... சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு மிளகு - 1 டீஸ்பூன் கிராம்பு - 4 ஏலக்காய் - 4 வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 2-4 குழம்பிற்கு... சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 …
-
- 2 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள் : சிக்கன் – 250 கிராம், வெங்காயம் – 2 சீரகத் தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கு கொத்தமல்லி தழை – சிறிதளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை : 1 சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும் 2.கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் 3. சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 4.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், மிளகு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். 5.வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன், சீரகம் தூள், மிளகு தூள…
-
- 2 replies
- 705 views
-
-
பட்டாணி காளான் மசாலா காளான் பிரியர்களுக்கு அற்புதமான ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் பட்டாணி மற்றும் காளான் சேர்த்து செய்யப்படும் மசாலா. இந்த மசாலா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் வகையில் எளிமையான செய்முறையைக் கொண்டிருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். சரி, இப்போது பட்டாணி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: காளான் - 1 கப் பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ…
-
- 2 replies
- 757 views
-
-
சிக்கன் லிவர் மசாலா ப்ரை சிலருக்கு சிக்கன் லிவர் பிடிக்காது. ஆனால் அந்த சிக்கன் லிவரை மசாலா போன்று செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் ரசம் சாதத்துடன் சேர்த்து இதனை சாப்பிட்டால், ருசியாக இருக்கும். இங்கு சிக்கன் லிவர் மசாலா ப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்களேன்... தேவையான பொருட்கள் சிக்கன் லிவர் - 200 கிராம் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 ட…
-
- 2 replies
- 864 views
-
-
சால மீனும் கத்திரிக்காயும் தேவையானவை: சால மீன் - முக்கால் கிலோ எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 2 கத்திரிக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு புளி - 10 கிராம் உப்பு - தேவையான அளவு மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் செய்முறை : மீனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள், பாதியளவு மல்லித்தூள் (தனியாத்தூள்), மற்றும் மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலந்து கொள்ளவும். சுத்தம் செய்த மீனை இதில் புரட்டி எடுக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு மீனை சேர்த்து இருபுறமும் வேக விட்ட…
-
- 2 replies
- 860 views
-