நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பல, முகம் காட்டும்.. புட்டு. புட்டிற்கு மற்றய எந்த உணவையும் விட சில விசேட தன்மையுண்டு. அரிசிமா புட்டு, கோதுமை மா புட்டு, புடிப் புட்டு, பால் புட்டு, குரக்கன் புட்டு, ஒடியல் புட்டு, இறால் புட்டு, மரவள்ளி மா புட்டு என்று காலை, மாலை உணவாக இடையில் சாப்பிடும் சிற்றுண்டியாக சாப்பாட்டிற்கு மேல் சாப்பிடும் இனிப்பு பண்டமாக சோற்றுடன் கலந்து சுவை சேர்க்கும் சேர்ந்தியங்கும் தோழனாக. இடையிடையே அரிதாக சாப்பிடும் உணவாக என்ற பல முகம் புட்டிற்கு உண்டு. புட்டில் மாவையும் தேங்காய் பூவையும் காதலன் காதலி போல் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக கலந்த இடையிடையே இணைந்தும் தனித்துவம் காட்டும் இயல்புகள் கலந்தே இருக்கும். நீத்துப் பெட்டி, புட்டு குழல் என்று இய…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் இலகுவா செய்ய கூடிய 3 வகை வெங்காய சம்பல்கள் செய்வது பார்க்க போகின்றோம்.இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். அதுவும் மரக்கறி உணவுகளோடையும் பிரியாணியோடையும் சேர்த்து சாப்பிடேக்க மிகவும் ருசியா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 663 views
-
-
வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்டு+அன்னாசிப்பூ 1+ நட்சத்திர மொக்கு பாதி + சோம்பு 2 டீஸ்பூன்+பிரியாணி இலை 2 சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு பெரிய தக்காளி, தலா ஒரு கைப்பிடி,மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு பிரியாணி தாளிக்கும் பொழுது வெங்காயத்துடன் வதக்க விருப்பம் .அதனால் இங்கு சேர்க்கவில்லை. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதங்கிய பின்பு ஒரு டீஸ்பூன் மல்…
-
- 1 reply
- 701 views
-
-
ஆட்டு கால் சூப்பு (எ) எலும்பு ரசம் செய்யத்தேவையானவை: ஆட்டு எலும்பு: 1/4 கிலோ,கொழுப்பு விருப்பபட்டால் சேர்த்துக்கொள்ளாம். இஞ்சி,பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி இஞ்சி-சிறு துண்டு(தட்டிக்கொள்ளவும்) சாம்பார் வெங்காயம்- 10(சிறிதாக தட்டிக்கொள்ளவும்) பூண்டு- 8 பல் (சிறிதாக தட்டிக்கொள்ளவும்) சோம்பு-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) சிரகம்-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) மிளகு-2 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) மஞ்சள் தூள்-2 தேக்கரண்டி மிளகாய் தூள்-காரத்துக்கு மல்லி தூள்-1 மேசைக்கரண்டி மல்லி இலை- 1 பிடி கறிவேப்பிலை- 1 கொத்து புதினா இலை- 1 கொத்து(விரும்பினால்) தக்காளி -3 நறுக…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 1 reply
- 3.8k views
-
-
வான்கோழி குழம்பு வான்கோழி பிரியாணி, வான் கோழி வறுவல் என்று வான்கோழியை பலவாறு சுவைத்திருப்பீர்கள். ஆனால் வான்கோழி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த வான்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: வான்கோழி - 1/2 கிலோ உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மசாலாவிற்கு... எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேப…
-
- 1 reply
- 450 views
-
-
-
- 1 reply
- 557 views
-
-
-
- 1 reply
- 3k views
-
-
தேவை: 1 1/2 கி. இளசான ஆட்டுக்கால் துண்டுகளாக்கியது; 500 மிலி. தேங்காய்ப் பால்; 150 கிராம் பொடிக்கப்பட்ட முந்திரி பருப்பு; 4 பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்; ; 4 சிவப்பு மிளகாய்; 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது; 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது; 3 லவங்கப் பட்டை; 8 கிராம்பு; 2 ஏலக்காய்; உப்பு; 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்; 3 உருளைக் கிழங்கு பெரிய துண்டுகளாக்கி பொறித்தது. செய்முறை: முதல் நாள் இரவு 3 மணி நேரம் ஆட்டுக் காலில் இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் விழுது, ஆகியவற்றைத் தடவி வைக்கவும். தேங்காய்ப் பாலில் முந்திரி பருப்பு விழுதைச் சேர்த்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, லேசான தீயில் வெங்காயம், ஏலக்காய், லவங்கப்பட்டை மற்றும் கிரா…
-
- 1 reply
- 795 views
-
-
-
வீட்டிலேயே செய்திடலாம் முட்டை பப்ஸ்...! தேவையான பொருட்கள்: மைதா மாவு - கால் கிலோ நெய் - ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சைரசம் - ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் - அரை தேக்கரண்டி தண்ணீர் - அரைக்கோப்பை நெய் - நூறு கிராம் முட்டை - நான்கு வெங்காயம் - ஒன்று பச்சைமிளகாய் - ஒன்று கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி …
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆத்தூர் மட்டன் மிளகு கறி மட்டன் பிரியர்களுக்கான எளிய முறையில் செய்யக்கூடிய மிகவும் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு புதினா, கொத்தமல்லி, சிறிதளவு மசாலாவுக்கு : மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1/2 ஸ்பூன் வரமிளகாய் - 4 மல்லித்தூள்(அ)முழு மல்லி - 1 ஸ்ப…
-
- 1 reply
- 1k views
-
-
இராசவள்ளிக் கிழங்கு – 1 சீனி – 1 – 11/2 கப் உப்பு – தேவையான அளவு தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப் •இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். •கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து தீயின் அளவை குறைத்து வைத்து 3 அல்லது 4 தடவை கிளறி விடவும். •சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். •பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். •ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். •சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
இறால்தொக்கு தேவையானவை: இறால் 250 கிராம் (சுத்தம் செய்தது) பெரிய வெங்காயம் 3 சீரகம் ஒரு டீஸ்பூன் தக்காளி 2 பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்கா…
-
- 1 reply
- 885 views
-
-
-
தேவையான பொருட்கள்: கோழிக்கறி — அரை கிலோ (எலும்பில்லாதது) மிளகு — 15 பச்சை மிளகாய் — 3... பெரிய வெங்காயம் — 4 (நடுத்தரமானது) இஞ்சி — ஒரு அங்குலத் துண்டு பூண்டு — 6 பல் குடை மிளகாய் — ஒன்று (நடுத்தரமானது) தயிர் — ஒரு கப் ஃப்ரஷ் க்ரீம் — 3 மேசைக்கரண்டி கார்ன் ஸ்டார்ச் — ஒரு மேசைக்கரண்டி முட்டை — ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்) கரம் மசாலாத்தூள் — அரை தேக்கரண்டி ஏல…
-
- 1 reply
- 821 views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
அதிசய உணவுகள் - 19: ஸ்நேக் ஒயின்! ஸ்நேக் ஒயின் | சுவிப்லெட்ஸ் சூப் ‘‘நல்ல உணவை சாப்பிடுவதற்கு உனக்கு வெள்ளிக் கரண்டி தேவையில்லை!’’ - பால் புருடோம் ஹாங்காங் நாட்டில் நானும் என் கணவரும் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தோம். இந்த நாட்டுக்கு மேற்கில் 60 நிமிட படகு பயணத்தில் இருக்கும் மக்காவு நாட்டுக்கு செல்ல பேராவல் கொண்டு அதற்கான விசாவை எடுத்திருந்தோம். மக்காவு, 16-ம் நூற்றாண்டில் இருந்து 1999 வரை போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1999, டிசம்பர் 20-ம் தேதி மக்காவுனுடைய ஆட்சி தலைமை உரிமையை சீன மக்கள் குடியரசு எடுத்துக்கொண்டது. இன்று சீன நாட்டின் ஒரு அங்கமாக மக்காவு இருந்தாலும் ஒரு நாடு, இரு அமை…
-
- 1 reply
- 1.2k views
-
-
மாங்காய் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - 1 கிண்ணம், மாங்காய் (பெரியது) - 1, பேபி கார்ன் - 2, பட்டாணி (தோல் உரித்தது) - 1 கிண்ணம், கடுகு - கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - சிறு துண்டு, புதினா - சிறிதளவு, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். பேபி கார்னைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். பிறகு பட்டாணி, நறுக்கிய பேபி கார்ன், உப்பு சேர்…
-
- 1 reply
- 729 views
-
-
தேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் முட்டை – 5 ஏலக்காய்த்தூள் – அரைதேக்கரண்டி கஜூ – 30 கிராம் பிளம்ஸ் – 30 கிராம் ஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி(விரும்பினால்) மாஜரின் – ஒரு தேக்கரண்டி செய்முறை: தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும். எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் அள்ளி இக்கலவையின் மேலே போடவு…
-
- 1 reply
- 728 views
-
-
மீன் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மீன் - 500 கிராம் இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 7 வெ. பூண்டு - 6 பல் கடுகு, உளுந்தம்பருப்பு, உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை இட்லி கொப்பரையில் வேகவைத்து உதிர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், வெ. பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வதக்கவும். பின்னர் மீனை உப்பு கலந்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான மீன் புட்டு ரெடி! இதில் விரும்பினால் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
-
- 1 reply
- 755 views
-
-
பிரெட் பீட்சா : செய்முறைகளுடன்...! என்னென்ன தேவை? துருவிய கரட் - – சிறிது குடை மிளகாய் - – 1 நெய் -– 1 தே.க வெங்காயம் - – 1 துருவிய சீஸ் –- தே.அ பிரெட் - – 2 துண்டு பீட்சா ேசாஸ் - – தே.அ எப்படிச் செய்வது? பாத்திரத்தில் நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் கரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிரெட் ஸ்லைஸை வட்ட வடிவமாக வெட்டி, அதில் 1 தே.க பீட்சா சோஸை பரவலாக ஊற்றவும். அதன்மீது வதக்கிய காய்கறிகளைப் போட்டு, சீஸ் தூவவும். இதை மைக்ரோவேவ் அவனில் 1-2 நிமிடம் வைத்து, சீஸ் உருகியவுடன் எடுக்கவும். பிரெட் பீட்சா ரெடி.
-
- 1 reply
- 839 views
-
-
தேவையான பொருட்கள் : சிக்கன் -அரை கிலோ பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கி கொள்ளவும்) இஞ்சி துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பூண்டு துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) பச்சை மிளகாய் துண்டு -1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) உருளைக் கிழங்கு -1 (பெரியது) – (வேகவைத்து, தோல் நீக்கி பிசைந்து கொள்ளவும்) கருவேப்பில்லை ,புதினா தழை -தேவையான அளவு கரம் மசாலா அல்லது மீட் மசாலா -1 டீஸ்பூன் முட்டை -1 (நன்கு அடித்து வைத்துகொள்ளவும்) பிரட் தூள் -தேவையான அளவு உப்பு -தேவையான அளவு செய்முறை : முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை ,சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர…
-
- 1 reply
- 902 views
-
-
-
- 1 reply
- 883 views
-
-
குழந்தைகளுக்கு காளானை இப்படிச் சமைத்துக் கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். தேவையானவை: காளான் - 1 பாக்கெட் பெரிய வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 தக்காளி - 2 மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 தேக்கரண்டி சீரகத்தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி - சிறிது வெங்காயத்தாள் - 1 எண்ணெய் - 1 தேக்கரண்டி துருவிய சீஸ் - அரை கிண்ணம் செய்முறை: காளானைச் சுத்தம் செய்து மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தாளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வ…
-
- 1 reply
- 807 views
-