நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பால் றொட்டி மற்றும் சீனி அரியதரம் செய்முறை இருந்தால் தாருங்கள்
-
- 3 replies
- 2.7k views
-
-
தாபா சிக்கன் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோழி துண்டுகள் - கால் கிலோ வெண்ணெய் மற்றும் எண்ணெய் - தலா 2 மேசைக்கரண்டி பூண்டு மற்றும் இஞ்சி - தலா அரை மேசைக்கரண்டி தக்காளி - கால் கிலோ மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சீரக தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி கெட்டி தயிர் - அரை கப் கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு - அரை மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 (விருப்பமிருந்தால்) மல்லி இலை, இஞ்சி - அலங்கரிக்க உப்பு - தேவையான அளவ…
-
- 0 replies
- 929 views
-
-
முட்டை பிரியாணி : செய்முறைகளுடன்...! தேவையானப் பொருட்கள் முட்டை - 5 பிரியாணி அரிசி - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 3 இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி மிளகாய்தூள் - ஒரு கரண்டி கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் -150 கிராம் தேங்காய்ப்பால் - 150 கிராம் உப்பு - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்+நெய் - 100கிராம் பட்டை - சிறிய துண்டு கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு செய்முறை : அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும். முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக் கொள்ளவும். அதை லேசாக கீறிக் கொள்ளவும்…
-
- 0 replies
- 612 views
-
-
உங்களுக்கு உறைப்புத் தேவையாயின் LEE KUM KEE பிராண்ட் CHIU CHOW CHILI OIL சேர்க்கலாம். இது நல்ல உறைப்பான சோஸ்! போத்தலின் படத்தைப் போட விடுகுதில்லையப்பா.
-
- 1 reply
- 709 views
-
-
ஸ்நாக்ஸ்களில் சமோசா மிகவும் அருமையாக இருக்கும். அத்தகைய சமோசா வகைகளில் பல உள்ளன. அவை வெஜிடேபிள் சமோசா, பன்னீர் சமோசா என்பன. அதிலும் இந்த மாதிரியான சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உள்ளே வைப்பதற்கு.... உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது) பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மாவிற்கு.... மைதா - 2 கப் எண்ணெய் - 3 கப் உப்பு - 1 சிட்டிகை தண்ணீர் - 2 கப் செய்முறை:…
-
- 0 replies
- 851 views
-
-
மீனாட்சி. ஜெ பிபிசிக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், The Washington Post தோசை. தென் இந்தியர்களின் தினசரி காலை உணவாக எப்போது மாறியது என்று தெரியாது. ஆனால், காலை மட்டுமல்ல, எந்த வேலையாக இருந்தாலும் தோசையை சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தோசை, சென்னை பாரிமுனையில் இருந்து, பாரிஸ் லே சேபல் வரைக்கும் மிகவும் பிரபலமான ஒரு சர்வதேச உணவாக இன்று மாறியிருக்கிறது. நெய் ஊற்றி சுட்ட தோசைக்கு மிளகாய் பொடி, நல்லெண்ணெய், சட்னி, சாம்பார் ஆகியவற்றை தொட்டு சாப்பிடுவது தென் இந்தியர்களி…
-
- 2 replies
- 714 views
-
-
-
ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்தைகள் கீரைகளை சாப்பிட மறுப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு கீரையை சட்னி போன்று செய்து கொடுத்தால், நிச்சயம் சாப்பிடுவார்கள். இங்கு வல்லாரைக் கீரையைக் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதனை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். தேவையான பொருட்கள்: வல்லாரைக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்து, நீரில் அலசியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) வர மிளகாய் - 3 பூண்டு - 5 பற்கள் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்…
-
- 2 replies
- 1.8k views
-
-
காராசேவு ********** தேவையான பொருட்கள்:- புழுங்கல் அரிசி - 800 கிராம் கடலை மாவு - 800 கிராம் மிளகு - 2 ஸ்பூன் பூண்டு பல் - 10 உப்பு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:- அரிசியை ஊறவைத்து உப்பு, பூண்டு, மிளகு சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இந்த மாவுடன் கடலை மாவையும் சேர்த்து நன்கு பிசைந்து தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். காரா சேவு/Kaara Sevu காரா சேவு தேவையான பொருட்கள் : கடலை மாவு : 1/2 கிலோ ப…
-
- 1 reply
- 3.1k views
-
-
புளியோதரை என்ற புளிசோறு.. தேவையான பொருட்கள். புளி - இரண்டு கோலி உருண்டை பெருங்காயம் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி- தேவையான அளவு வெந்தயம் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது) சீரகம் - 1 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் (தேவையானால் வேர்கடலையும் சேர்த்து கொள்ளலாம்..) உளுந்தபருப்பு - 1 ஸ்பூன் எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: அன்றனறு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொஞ்சம் மீந்துவிடும் அல்லவா அதற்கான வழிமுறைகளை தொகுத்து தரலாம் என உத்தேசித்துள்ளேன் போக இந்த தோழர் சோத்துவத்தல் பற்றி தனியே பதிவு பதிவு செய்யபடும்.. இங்கிட்டு புளியோதரைக்கு வருவம்.. முதலி…
-
- 3 replies
- 5.5k views
-
-
-
- 0 replies
- 893 views
-
-
என்னென்ன தேவை? சிக்கன் - அரைக் கிலோ வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்: வர மிளகாய் - 8 மல்லி - 4 தேக்கரண்டி சோம்பு - 2 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 3 இன்ச் அளவு பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 10 தேங்காய் - ஒரு கப் தாளிக்க தேவையான பொருட்கள்: பட்டை - 2 துண்டு கிராம்பு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 3 எப்படி செய்வது? சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, …
-
- 3 replies
- 761 views
-
-
இறால் வடை இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான அசைவ உணவாகும். இறாலில் வடை எப்படி செய்யமுடியும் என குழம்பி இருப்பவர்கள், ஒரு முறை இந்த உணவை செய்து சுவைத்தால், தினமும் உங்கள் வீட்டில் இறால் வடைதான். தேவையானவை இறால் - 1 கப் துருவிய தேங்காய் - 1 கப் இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 4 உப்பு - தேவைகேற்ப வெங்காயம் - 1/2 கப் மிளகு தூள் - 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப செய்முறை துருவிய தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். சுத்தம் செய்த இறால்களை தனியாக அரைத்து, ஏற்கனவே அரைத்துவைத்த மசாலா கலவையுடன் கலக்கவும். இந்த கலவையில் தேவைகேற்ப உப்பு, மிளகு தூள் சேர்த்து வடைகளாக தட…
-
- 18 replies
- 2.9k views
-
-
-
ஒடியல் புட்டு செய்முறை தேவையான பொருட்கள் : ஒடியல் மா தேங்காய்ப் பூ தண்ணீர் உப்பு (சிறிதளவு ) விரும்பினால் கத்தரிக்காய் கீரை பச்சை மிளகாய் நெத்தலி செய்முறை ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும். பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும். இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அ…
-
- 15 replies
- 2.2k views
-
-
பிரியாணி வகைகளில் நிறைய உள்ளன. அவற்றில் ஒருசில பிரியாணிகளுக்கு என்று பிரியர்கள் இருப்பார்கள். இப்போது அந்த பிரியாணி வகைகளில் ஒன்றான ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1கிலோ பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) கொத்தமல்லி - 1 கப் (நறுக்கியது) புதினா - 1 கப் குங்குமப்பூ - 1 டீஸ்பூன் பால் - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் சிக்கன் ஊற வைப்பதற்கு... பச்சை மிளகாய் - 4 (அரைத்தது) இஞ்சி பூண்டூ பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் தயிர் . 1/2 கப் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு..…
-
- 4 replies
- 3.9k views
-
-
சூப்பரான மதிய உணவு மசாலா காளான் ரைஸ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சூப்பரான சத்தான மதிய உணவு கொடுத்தனுப்ப நினைத்தால் மசாலா காளான் ரைஸ் செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் சாதம் - 2 கப், காளான் - 100 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், சோம்பு - தலா கால் டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவ…
-
- 0 replies
- 764 views
-
-
இறால் B.B.Q தேவையானவை: இறால் - 30 ஒலிவ் ஒயில் - 1/2 கப் உள்ளி - 4 எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு ஒரேஞ் பழ சாறு - 1 உப்பு போட மறந்திடாதிங்க ;) 1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர) 2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க. 3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள். 3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும். 4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள். பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம். நன்றி
-
- 17 replies
- 4.9k views
-
-
கோழிக்குழம்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மிளகுக்கோழி குழம்பின் செய்முறையை சற்றேறக்குறைய 25 நிமிடங்கள் என் அம்மாவிடம் தொலைபேசி வழியாக கேட்டு குறிப்பெடுத்து, இன்று அலுவலகத்திற்கும் 2 மணி நேரம் காலந்தாழ்த்தி வருவதாக கூறி விட்டு வெற்றிகரமாக செய்துமுடித்தேன். நண்பர்களும் முயற்சித்து பார்க்கலாம் முதலில் நாம் செய்முறைக்கான பொருட்களை எடுத்துகொள்வோம். தோல் நீக்கிய கோழி 500 கிராம் மிளகு : 25( காரம் குறைவாக விரும்புவோர் 15 மிளகுகள் போட்டால் போதும்) இஞ்சி : 1 பெரிய துண்டு மஞ்சள் தூள் : 2 தேக்கரண்டி மல்லி தூள் : 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் : 1 வெண்ணெய் : 100 கிராம் உங்களின் தேவைக்கேற்ப உப்பிட்டு கொள்ளவும் எலுமிச்சம…
-
- 22 replies
- 7.8k views
-
-
பருப்பு ரசம் மதிய வேளையில் பலருக்கு ரசம் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் எப்போதும் ஒரே மாதிரி ரசம் செய்து சாப்பிடாமல், அவ்வப்போது வித்தியாசமான ரசத்தையும் செய்து சுவைக்கலாம். அதில் ஒன்று தான் பருப்பு ரசம். இந்த பருப்பு ரசம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் சுவையானதாகவும் இருக்கும். சரி, இப்போது பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி - 1 (பெரியது மற்றும் நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்து லேசாக மசித்தது) புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 5 பற்கள் ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்…
-
- 0 replies
- 817 views
-
-
http://tamiltaste.co.../koonsundal.png டின்களில் கிடைக்கும், இரண்டுமுறை குளிர்ந்த நீரில் கழுவி வடித்தபின் சற்று உலரவிட்டு செய்தால் நன்றாக இருக்கும். இல்லாவிடின் இப்போது சில இடங்களில் இதுபோன்றும் கிடைக்கும் வாங்கி சுண்டல் செய்து சாப்பிட்டுப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். *காரம் உங்களுக்கு ஏற்றவாறு கூட்டிக்கொள்ளுங்கள் *
-
- 10 replies
- 1.5k views
-
-
-
இஞ்சி பெப்பர் சிக்கன் விடுமுறை நாள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நன்கு வாய்க்கு சுவையாக பிடித்த சமையலை சமைத்து சாப்பிட முடியும். அதில் பெரும்பாலானோர் அசைவ உணவைத் தான் செய்து சுவைப்பார்கள். இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைத்தால், இஞ்சி பெப்பர் சிக்கன் செய்யுங்கள்.இங்கு அந்த இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (நறுக்கியது) க…
-
- 2 replies
- 950 views
-
-
செய்யத் தேவையான பொருட்கள்; முட்டை இறால் சின்ன,சின்னதாக வெட்டியது எண்ணெய் கரட்,லீக்ஸ்,கோவா,செலரி,சிகப்பு வெங்காயம்,ப.மிளகாய் சின்ன,சின்னதாக வெட்டியது செய்முறை; முட்டையை நன்றாக அடிக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,மிளகு விரும்பினால் சேர்க்கவும். அத்தோடு இறாலையும்,வெட்டிய மரக்கறிகளையும் சேர்க்கவும். வாணலியை சூடாக்கி,சூடானதும் எண்ணெய் விட்டு கொதித்ததும்,அந்தக் கலவையை இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். சூடான,சத்தான ஓம்லெட் தயார் இறாலுக்குப் பதிலாக நண்டின் சதையை எடுத்தும் செய்யலாம்
-
- 20 replies
- 1.6k views
-
-
அசைவ உணவுகளில் ஒன்றான சிக்கனை பல வகைகளில் சமைக்கலாம். அதிலும் சிக்கனை நன்கு கார மாக சாப்பிட வேண்டும் என்று தான் பலர் விரும்புவார்கள். அத்தகைய சிக்கன் ரெசிபியில் ஒன்றான தவா சிக்கனை இதுவரை ரெஸ்ட்டாரண் ட்டில் தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த தவா சிக்கனை வீட்டிலே யே சூப்பராக சமைத்து சாப்பிடலாம். அதன் செய்முறையைப் பார்ப் போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் – 500 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவியது) வெந்தயம் – 1 டீஸ்பூன் வர மிளகாய் – 2 வெங்காயம் – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி – 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் …
-
- 0 replies
- 609 views
-