நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கீமா வறுவல் என்பது மட்டன் உணவிலேயே மிகவும் சுவையானது. இதை உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் அசைவ உணவுகள் என்றாலே காரம் தான். அந்த காரம் ஆந்திரா உணவுகளில் சொல்ல முடியாத அளவில் இருக்கும். இப்போது அந்த வகையான ஆந்திரா ஸ்டைலில் கீமா வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் கீமா (கொத்துக்கறி) - 800 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - 10 வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறித…
-
- 1 reply
- 780 views
-
-
பால் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அத்தகைய பால் பொருட்களை வைத்து எந்த ஒரு ரெசிபி செய்தாலும், சுவையாக இருக்கும். இப்போது அதில் பன்னீரை வைத்து குழந்தைக்கு பிடித்த வகையில் ஒரு ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அந்த பன்னீர் ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 2 கப் (துருவியது) மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது) கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மை…
-
- 0 replies
- 909 views
-
-
பரோட்டா என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அத்தகைய பரோட்டாவில் ஒரு வகையான ஆலு மட்டர் பரோட்டாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். என்ன பெயர் வித்தியாசமாக உள்ளதென்று பார்க்கிறீர்களா? இது வேறு எதுவும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை வைத்து செய்யக்கூடியது தான். இப்போது அந்த ஆலு மட்டர் பரோட்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கோதுமை/மைதா மாவு - 2 கப் தயிர் - 3 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு உள்ளே வைப்பதற்கு... உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1 கைப்பிடி (வேக வைத்தது) மாங்காய் பொடி - 1 டீஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு (துருவியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் க…
-
- 3 replies
- 2.4k views
-
-
கதம்ப முறுக்கு தேவையான பொருட்கள்: அரிசி மாவு : 1 கப் கோதுமை மாவு : 1 கப் மைதா மாவு : 1 கப் சோள மாவு : 1 கப் பொட்டுக் கடலை மாவு : 1/2 கப் மிளகாய் தூள் : 2 ஸ்பூன் பெருங்காயப் பொடி : 1 சிட்டிகை உப்பு : தேவையான அளவு நெய் : 1/2 குழி கரண்டி நல்லெண்ணெய் : 2 ஸ்பூன் எண்ணெய் : பொறிக்கத் தேவையான அளவு செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயப் பொடி, உப்பு, நெய், நல்லெண்ணெய் என இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவும். அதன்பின் தண்ணீர் கலந்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். எண்ணெய் சூடாவதற்கு முன்னதாகவே, தயாராக உள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்…
-
- 5 replies
- 882 views
-
-
அவல் பர்ஃபி தேவையான பொருட்கள்: அவல் : 250 கிராம் சர்க்கரை : 400 கிராம் முந்திரி பருப்பு : 7 நிலக்கடலை : ஒரு குழிக் கரண்டி நெய் : 100 கிராம் செய்முறை: ஒரு அடிகனமான பாத்திரத்தில் அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும், தோல் நீக்கிய நிலக்கடலையையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தனித் தனியே மிக்ஸியில் கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை காய்ச்சவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும். அவல் பாதி வேக்காடு வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், நிலக் கடலையையும் க…
-
- 0 replies
- 1k views
-
-
சைனீஸ் உணவுகளில் ஹக்கா நூடுல்ஸ் தான் மிகவும் பிரபலமானது. இந்த மாதிரியான ஹக்கா ரெசிபிக்கள் கிழக்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தெற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாக உள்ளது. சொல்லப்போனால், இந்த மாதிரியான ஹக்கா ரெசிபிக்கள் ஹக்கா உணவகங்களில் தான் கிடைக்கும். ஆனால் தற்போது அந்த சைனீஸ் ரெசிபியை வீட்டிலேயே ஈஸியாக தயாரிக்கலாம். இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 6-7 (லெக் பீஸ், சிறியதாக நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் மல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
-
- 22 replies
- 3.1k views
-
-
[size=4]வாங்கின உழுந்தம் மா காலாவதியாகப் போகின்றது இன்னும் இரண்டு மாதத்தில் (கவனிக்காமல் வாங்கிவிட்டேன் ) என்னடா செய்யலாமென்ற போது கிடைத்தது இது, நாளை செய்து பார்க்கனும்.[/size] [size=4]2kg உழுந்த மா இருக்கு வேறு என்ன செய்யலாமென்று கூறுங்கள்[/size][size=4] ??[/size] உழுந்துமா பிடி கொழுக்கட்டை உழுந்துமா பிடிககொழுக்கட்டை கொழுக்கட்டைகள் பலவிதம். இது சிறுவர்கள் தாங்களும் கூடவே வந்து பிடித்துத் தயாரிப்பதில் பங்களித்து மகிழக் கூடியது. இடியப்ப மற்றும் புட்டு மா மிஞ்சினால் அவற்றை வீணாக்காது கொழுக்கட்டையாகப் பிடிப்பதுண்டு. பலரும் அரிசி மாவில் செய்வர். உள்ளே பருப்பு வைத்துச் செய்வது மற்றொரு வகை. இது அரிசி மாவுடன் உழுந்து மா கலந்து செய…
-
- 14 replies
- 4.9k views
-
-
[size=4]கடல் உணவுகளில் அதிகமான அளவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், கடல் உணவுகளை சமைத்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். அதிலும் இறால் மிகவும் அருமையாக இருக்கும். இதுவரை மஞ்சூரியனை கடைகளில் தான் சாப்பிட்டிருப்போம். அதுவும் கோபி மஞ்சூரியன் தான் அனைவருக்குமே தெரியும். ஆனால் இறால் மஞ்சூரியனை கேள்விப்பட்டதுண்டா? இப்போது அந்த இறால் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...[/size] [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு - 2 பச்சை மிளகாய் - 2+3 (நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 2 பல் (நறுக்கியது) தக்காளி கெட்சப் - 1…
-
- 0 replies
- 848 views
-
-
-
- 0 replies
- 653 views
-
-
பிள்ளைகள், யாராவது சைவக் கேக் (முட்டை போடாத கேக்) செய்முறை தருவீர்களா? நன்றி
-
- 5 replies
- 8.6k views
- 1 follower
-
-
.......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் .... ... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!! ... அது என்ன கோழிப்புக்கை????? .... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ...…
-
- 12 replies
- 5k views
-
-
உங்களில் யாருக்காவது சுவையான வாய்ப்பன் எண்ணெய் குடிக்காமல் செய்யும் முறை தெரியுமா?...நிறைய வாழைப்பழம் பழுத்து கனிந்து போய் இருக்குது.சும்மா பழம் என்டால் எறிந்து விடலாம் ஆனால் இந்தப் பழத்தை எறிய மனமில்லாமல் இருக்குது ஆகவே யாராவது வாழைப்பழத்தில் செய்யக் கூடிய பலகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ.செய்ய வேண்டும்...நன்றி
-
- 14 replies
- 7.4k views
-
-
[size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோடா உப்பு - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]முதலில் ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.[/size] [size=4]அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும்.[/size] [size=4]பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்தி…
-
- 0 replies
- 789 views
-
-
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். அத்தகைய ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து, விடுமுறை நாட்களில் நிம்மதியாக ரசித்து ருசித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த ஆந்திரா ஸ்டைலில் ஃபிஷ் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மீன் - 8 (வங்கவராசி அல்லது வாவல் மீன் போன்ற ஏதாவது பொதுவான மீன்) கறிவேப்பிலை - 5 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]மசாலாவிற்கு...[/size] [size=4]வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் சீரகம் - 1 டீஸ்பூன் மல்லி - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - …
-
- 1 reply
- 2.4k views
-
-
வணக்கம், நல்ல சலாட் செய்வது எப்படி? எவ்வளவு தான் முயன்றாலும் சரிவருகின்றது இல்லை. வெறும் இலைகளை வெட்டிப் போடுவதாலும் என்ன source போட வேண்டும் என்று சரியாகத் தெரியாததாலும் சரியாகவே வருகின்றது இல்லை. 1. மரக்கறி சலாட் 2. கோழி சலாட் (Checken Salad) 3.. சமன் மீன் சலாட் போன்றவற்றை எப்படி செய்வது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லித் தாருங்கள். நன்றி
-
- 16 replies
- 6.3k views
-
-
அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்கு குளிர்ச்சியை தருவது. அதிலும் இந்த மட்டனை எந்த மாதிரியான வகையில் சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவையே அருமையாக இருக்கும். மேலும் அசைவ உணவுகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்டைல் உணவு தான் பிரபலமானது. இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் எப்படி மட்டனை வறுவல் செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மட்டன் கலவைக்கு...[/size] [size=4]மட்டன் - 500 கிராம் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செட்டிநாடு மசாலாவிற்கு...[/size] [size=4]பேபி வெங்காய…
-
- 7 replies
- 4.1k views
-
-
தேவையானவை: புழுங்கலரிசி 1 கப் பச்சை அரிசி 1/2 கப் உளுத்தம்பருப்பு 1/2 கப் வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன் வெங்காயம் 2 பச்சைமிளகாய் 4 இஞ்சி 1 துண்டு உப்பு, நல்லெண்ணை தேவையானது தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை 1 கொத்து செய்முறை: புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும். ---- குழிப்ப…
-
- 10 replies
- 5.5k views
-
-
தேவையான பொருட்கள்: ரவை - அரை கிலோ அல்லது அதற்கு மேல் நெய் - அரை கிலோ பால்கோவா - 1000 கிராம் சர்க்கரை - 800 கிராம் அல்லது அளவுக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும். பிஸ்தா,கிஸ்மிஸ் - 200 கிராம் ஏல அரிசி பவுடர் - 4 கரண்டிகள் சிறிதளவு எலுமிச்சை சாறு. செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றவும். ரவையைச் சேர்த்து ஓரளவுக்குக் கிளறவும். பிறகு பால்கோவா சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று கலந்தபிறகு அதனை அடுப்பிலிருந்து எடுத்து வைக்கவும். பிறகு வேறு பத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து சர்க்கரைப் பாகு காய்ச்சவும். எலுமிச்சை சாறு வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம் எலுமிச்சை சேர்த்தால் சர்க்கரயில் உள்ள அழுக்குப் போய்…
-
- 0 replies
- 1.7k views
-
-
[size=4]குழந்தைகள் எப்போது தோசை, இட்லி வேண்டும் என்று கேட்பார்கள் என்பதே தெரியாது. அவ்வாறு அவர்கள் திடீரென்று கேட்கும் போது, வீட்டில் மைதா மாவு மற்றும் அரிசி மாவை வைத்து, சூப்பராக தோசை விட்டு தரலாம். இப்போது அந்த தோசையை எப்படி செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]மைதா மாவு - 1 கப் அரிசி மாவு - 1 கப் மோர் - 1/4 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, மோர், சீரகம், கொத்தமல்லி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.[/size] [siz…
-
- 7 replies
- 2.6k views
-
-
[size=5]1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்[/size] [size=5]1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்[/size] [size=5]1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்[/size] [size=5]குவித்து ஒரு தேக்கரண்டி சீனி[/size] [size=5]பெரிய பாதித் தேங்காய்[/size] [size=5]1 தே.க. உப்புத்தூள்[/size] [size=5]1/3 தே.க. அப்பச்சோடா[/size] [size=5]பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட…
-
- 11 replies
- 1.5k views
-
-
தற்போது பருவநிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் உடலால் அந்த பருவநிலைக்கு ஈடு கொடுக்க முடியாமல், சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை வந்துவிடுகிறது. சிலருக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால் சரியாக செரிமானம் நடக்காமல், வயிறு உப்புசத்துடன் இருக்கும். இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் ஒரு வழி என்னவென்றால் அது இஞ்சி சூப் சாப்பிடுவது தான். இப்போது இந்த இஞ்சி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]இஞ்சி விழுது - 5 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]* மு…
-
- 3 replies
- 621 views
-
-
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது அத்தகைய மங்லோரியன் ரெசிபிகளில், சிக்கனில் சூப்பராக இருப்பது என்னவென்றால், அது கோரி ரொட்டி தான். என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறதென்ற பார்க்கிறீர்களா? சாதாரணமான பெயர் தான். அதாவது கோரி என்றால் சிக்கன், ரொட்டி என்றால் சப்பாத்தி என்று அர்த்தம். ரொட்டி எப்போதும் சற்று கடினமாக இருக்கும். அதனை சிக்கன் கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால், சற்று மென்மையாகிவிடும். எனவே தான் இதற்கு இந்த பெயர் வந்தது. இப்போது அந்த கோரி ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! [size=4] [/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]சிக்கன் - 1 கிலோ (சுத்தமா…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண முறையில் செய்யும் மென்மையான கோதுமை மா றொட்டி செய்முறை யாராவது தருவீர்களா??
-
- 29 replies
- 11.6k views
-
-
[size=3][size=4]தேவையான பொருட்கள் : [/size][/size] [size=3][size=4]* மைதா – 1 கப் (200 கிராம்), * பெரிய வெங்காயம் – 1, * குட மிளகாய் – 1, * மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, * சோயா சாஸ் – 1 தேக்கரண்டி, * தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி, * சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி, * இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, * எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, * சர்க்கரை – 1 தேக்கரண்டி, * உப்பு – தேவையான அளவு.[/size] [size=4]செய்முறை : * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.[/size] [size=4]* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.[/size] [siz…
-
- 1 reply
- 913 views
-