நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
நன்டோஸ் ஸ்பைஸி றயிஸ்("Nandos" Spicy Rice) சமைப்பது எவ்வாறு?
-
- 1 reply
- 659 views
-
-
போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும் நன்றி
-
- 36 replies
- 8.1k views
-
-
தேவையானவை : பாவக்காய் - 2 எண்ணை - 3 ஸ்பூன் கடுகு - 1/4 ஸ்பூன் வெந்தயம் - 10 சீரகம் - 1/4 ஸ்பூன் வெங்காயம் - 1 பூண்டு - 6 பல் புளிக்கரைசல் - 1/2 எலுமிச்சை அளவு புளி கரைசல் மஞ்சள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் டொமடோ கெச்சப் - 2 ஸ்பூன் ஆய்ஸ்டர் சாஸ் - 2 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு முதலில் பாவற்காயிலுள்ளள விதைகளை நீக்கி வட்ட வட்டமாக அரிந்து வைக்கவும் பின்பு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம்,சீரகம் சேர்த்து தாளிக்கவும் பின்பு வெங்காயம்,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு பாவக்காய் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கி புளிக்கரைசல்,தூள்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் பின்பு மூடியிட்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சுரைக்காய் தோசை + பூண்டு சட்னி.. தேவையானவை: புழுங்கலரிசி - 100 கிராம் பச்சரிசி - 100 கிராம் சுரைக்காய் - 200 கிராம் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 5 பல் வரமிளகாய் - தேவையான அளவு செய்முறை: பச்சரிசி , புழுங்கல் அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து மூழ்கும் அளவு நீரில் ஊற வைக்கவும் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு ஊற வைத்த அரிசியையும், சுரைக்காய் (சிறு துண்டுகள் ), இஞ்சி, பூண்டு, வரமிளகாய் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது க்ரைண்டரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்து வைத்து, குறைந்தது 1 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு தோசையாய் வார்த்…
-
- 0 replies
- 4.6k views
-
-
-
http://tamiltaste.com/recipe.php?img=admin/img/soya%20kulambu.png
-
- 0 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள்: மாசித்தூள் - 3 டீஸ்பூன் பெரிய அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன் கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை : காய்ந்த மாசித்துண்டை இடித்து தூளக்கவும்.வெங்காயம் தக்காளி,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தூள் செய்த மாசியை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்…
-
- 1 reply
- 796 views
-
-
சிக்கன் கறி தோசை தேவையான பொருட்கள்: தோசை மாவு - 1 கப் கறி மசாலா செய்ய: சிக்கன் கொத்துக்கறி - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன் கரம் மசாலா தூள் 1/4 டீ ஸ்பூன் சீரகபொடி - 1/2 டீ ஸ்பூன் கொத்தமல்லி தழை சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு சோம்பு, பட்டை தாளிக்க சிறிதளவு உப்பு தேவையான அளவு மசாலா செய்முறை சிக்கனை பொடியாக நறுக்கி வாங்கவும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை …
-
- 0 replies
- 651 views
-
-
மஞ்சள் இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. கொத்தமல்லி உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது. கறிவேப்பிலை உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்…
-
- 19 replies
- 3.1k views
-
-
பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா... அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்... தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 1/2 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - அரை இன்ச் தனியா - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: * பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். * பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். *…
-
- 4 replies
- 1.4k views
-
-
வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்... அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க....! தேவையான பொருட்கள்: மசாலா அரைத்துக்கொள்ள: வெங்காயம் - 2 பேல் பூரி - 1 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் - 5 மஞ்சள் பொடி - 1 சிட்டிகை செய்முறை: * வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். * காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும். * வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
தேவையானவை மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம் கருவாடு - 100 கிராம் கறித்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி பால் - 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் - பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் - 30 கிராம் செத்தல் மிளகாய் - 3 கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - அரை தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி செய்முறை வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கருவாட்டை 10 நிமிடங்கள் சூடான தண்ணீரில் போட்டு ஊற வைத்து நன்கு கழுவி சுத்தம் செய்து சிறுத் துண…
-
- 4 replies
- 1.7k views
-
-
பாம்பே சட்னி தேவையான பொருட்கள் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 பூண்டு - 10 பல் கடலை மாவு - 3 மேசைக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு - 1/4 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1/2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 மேசைக்கரண்டி கருவேப்பில்லை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். கடலைமாவை தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கருவேப்பில்லை போட்டு பொரிய விடவும். பின்பு உளுதம்ப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். வெங்காயம் பூண்டு சேர்த்து சிவக்க வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். பிற…
-
- 3 replies
- 3.3k views
-
-
சமையல் குறிப்பு: நண்டு ரசம் தேவையான பொருட்கள்: கால்கள் – 10 புளி – எலுமிச்சை அளவு முழு பூண்டு – 1 ரசப்பொடி – 3 தேக்கரண்டி மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 4 கொத்துமல்லி கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு, எண்ணை – தாளிக்க செய்முறை: நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்திற்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடுங்கள். புளிக்கரைசலில் நண்டுகால்கள், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, பூண்டு விழுது ஆகியவற்றைப் போடவும் வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்த வுடன் கடுகைப் போடவும…
-
- 3 replies
- 1.3k views
-
-
தேவையான பொருள்கள் : இறால் - 10 உடைத்த கடலை - ஓரு ஆழாக்கு பச்சை மிளகாய் - 5 வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 தேக்கரண்டி பூண்டு - 5 பல் இஞ்சி - சிறிய துண்டு கறிவேப்பிலை - 1 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய் - 400 கிராம் மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி உப்பு - - தேவையான அளவு செய்முறை : இறாலை உரித்துக் கழுவிச் சுத்தம் செய்து அதில் பாதி அளவு உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து 1 கோப்பை தண்ணீரில் வேக வைக்கவும். வேக வைத்த இறாலை நன்றாக அரைத்துக் கொள்ளவும். உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை நசுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணல…
-
- 3 replies
- 1k views
-
-
ட்ரFவல் - Truffel - உலகின் அதி விலை கூடிய உணவு ? மேலை நாடுகளில் பல அதி விலையுயர்ந்த உணவுப்போடுட்கள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. - இது காளான் வகையை சேர்ந்த உணவு. நிலத்திற்கு கீழே வளரும் ஒரு கிழங்கு, அதேவேளை இது 'பங்கஸ்' கூட. - அநேகமாக மரங்களின் கீழே விளைகின்றது. - இதை தேடி நிலத்திற்கு கீழே இருந்து எடுப்பதற்கு இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை பயன்படுத்துகின்றனர் (முன்னர் பன்றிகளை பாவித்தனர், ஆனால் அவை அவற்றை சாப்பிட்டுவிடும் ) ஐரோப்பாவில் இந்த உணவுவகை பாரம்பரரீதியாக வளர்க்கப்படுகின்றது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது. ஆனால், பிரான்ஸ் மற்றும் வட இத்தாலியில் தரம் கூடிய வகை காணப்படுகின்றது. …
-
- 2 replies
- 850 views
-
-
எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்! தேவையான பொருட்கள்: பட்டாணி - 100 கிராம் கேரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பனீர் - 100 கிராம் வதக்கி அரைக்க புதினா - ஒரு கட்டு கொத்து மல்லி - அரை கட்டு கருவேப்பிலை - கால் கட்டு பச்ச மிளகாய் - நான்கு இஞ்சி - ஒரு லெமென் சைஸ் பூண்டு - 5 பல் வெங்காயம் - முன்று தக்காளி - நன்கு எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன் தாளிக்க: எண்ணை - தேவையான அளவு சீரகம் - சிறிதளவு செய்முறை: * முதலில் எண்ணையை காயவைத்து …
-
- 2 replies
- 1.1k views
-
-
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அசைவ உணவா? - சாப்பிடாதீங்க! உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார…
-
- 9 replies
- 3.9k views
-
-
கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள்: (2 - பேருக்கு) இன்ஜி - 1/2 விரல் நீளம் பூண்டு - 1 பல்லு பச்சைமிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 2 கொத்தமல்லி தழை - 1 கட்டு புளி - 1 துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி கருவேப்பில்லை - 5 இலைகள் கடுகு - 1/2 தேக்கரண்டி சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமைக்கும் முறைகள்: வாணலியை அடுப்பில் வைக்கவும். எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும். இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும். ஒரு நிமிடம் வதக்கியவுடன் ஆற வைக்கவும். ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியி…
-
- 5 replies
- 4.2k views
-
-
ஈரல் வறுவல் தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 வர மிளகாய் - 4 இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன் மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன் பட்டை, இலை - தாளிக்க செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் …
-
- 22 replies
- 8.2k views
-
-
உலகெங்கும் கிறிஸ்துமஸின் போது கோழி, மட்டனை விட டர்கி எனப்படும் வான்கோழியை அதிகமாக சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றனர். நீங்களும் இந்த கிறிஸ்துமஸூக்கு இதை ட்ரை பண்ணிப் பாருங்களேன்.. ரொம்ப வித்தியாசமாக அபார சுவையுடன் இருக்கும்! தேவையான பொருட்கள்: பாஸ்மதி (அ) ஜீரக சம்பா பச்சரிசி - 3 கப் வான்கோழியின் பக்கவாட்டு பாகங்கள் - 900 கி மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன் வெங்காயம் - 2 தக்காளி - 2 நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி நறுக்கிய புதினா இலை - 1 கைப்பிடி இஞ்சி பேஸ்ட் - 2 டீ ஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன் பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன் தேஜீபட்டா (லவங்க செடியிலை) - 2 லவங்கப்பட்டை - 2 அங்குலம் ஏலக்காய் - 2 லவங்கம் - 4 தயிர் - 1 கப் நெய் - 2 டேபிள் ஸ்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நேற்று மார்க்கம் & டெனிசன் பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் ஆட்டுக்குடலை பார்த்தவுடன் ஆசையில் வாங்கி கொண்டு வந்து விட்டேன். இப்ப அதை எப்படி கழுவுவது, சமைப்பது என்று தெரியவில்லை. ஆருக்கும் தெரிந்தால் உடனடியாக சொல்லவும்..
-
- 25 replies
- 22.2k views
-
-
நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும் நண்டு மசாலாவா... சொல்லவே வேணாம்... நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க....! தேவையான பொருட்கள்: நண்டு - 2 பெரியது தேங்காய் (துருவியது) - 1/2 கப் சின்ன வெங்காயம் - 25 மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு கடுகு - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை: * நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். * தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய…
-
- 36 replies
- 7.1k views
-
-
பயத்தம் பருப்பு தோசை.. வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ. தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 பெருங்காயம் - சிறிது வெங்காயம் - 1 (பெரியது) தேங்காய் - 1 மூடி (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும். இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும். அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போ…
-
- 4 replies
- 3.7k views
-