Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. காதலில் விழுவது. [நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.] நியூயார்க் நவம்பர் 10,1958 அன்புள்ள தோம்: உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள். John steinback with his son முதலில் நீ காதலிக்கிறாய் என…

  2. சின்னப்பன்றி: அகரன் அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும். பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை ய…

  3. நட்சத்திரங்களின் வாக்குமூலம் by பிரசன்ன கிருஷ்ணன் இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது இம்முறை மன வேலியை கடந்து சென்று விட வேண்டும் என்றெண்ணி முனைப்புடன் கூடலில் ஈடுபடலானான். மேலுள்ளாடையையும் அவிழ்த்து அவள் மார்பகங்களைத் தற்போது, அரிதாக நடைபெறும் ஒரு நிகழ்வை கண்டதைப் போல் வெறித்துக் கொண்டிருந்தான். …

  4. ஒரு நீதிக்கதை August 30, 2021 முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார். அவர் வீட்டில் வளர்ந்துவந்த பூனை இந்த ஓவியத்தின் சிறப்பு குறித்துத் தன் நண்பர்களான காட்டு விலங்குகளிடம் சொன்னது. காட்டு விலங்குகள் வீட்டுப் பூனை மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தன. ஏனென்றால், பூனை நல்ல கல்வியறிவும், கலாச்சார அறிவும் பெற்றிருந்தது. மேலும், அது காட்டு விலங்குகளுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசும், அவர்கள…

    • 7 replies
    • 1k views
  5. அந்தரிப்பு கார்த்திக் பாலசுப்ரமணியன் ‘க்ளிங்’ என்ற ஓசையெழ வந்து நின்ற மின்னஞ்சலைத் திறந்து பார்த்த மீராவுக்கு ஒரு நொடி தூக்கிவாரிப் போட்டது. படம் ஓடிக்கொண்டிருக்க கிடைத்த சின்ன இடைவெளியில் மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது இது வழக்கமாகிவிட்டது. பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வாட்ஸப்பிலோ பேஸ்புக்கிலோ ஏதாவது புதிய செய்தியோ பதிவோ வந்திருக்கிறதா என்று பார்ப்பது ஓர் அனிச்சைச் செயலைப் போல் நிகழ்கிறது. சனிக்கிழமை மதியப் பொழுது ஏதாவது படம் பார்க்கலாம் என்று பரத் வம்படியாய் இழுத்து உட்கார வைத்துவிட்டான். அச்சுக்குட்டியும் இம்முறை அவனோடு சேர்ந்துகொண்டாள். கவனம் சிதறாமல் முழுதாக ஒரு படத்தை இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்ப்பதெல்லாம் இப்போது அத்தனை எளிதாக இருப்பதி…

  6. கடுப்பான முகம்! அவன் துணைவியாரோடு அங்காடிக்குச் சென்று இது ஐந்தாவதுகடை என்பாதாலும் ஒரு பிஸ்கற் பெட்டிக்காக இருவரும் ஏனென்றுவிட்டுத் துணைவியார் பொருட்கள் வேண்டச் செல்ல, இவனோ வெக்கையால் சிற்றுந்தை விட்டிறங்கி வீதியை விடுப்புப் பார்க்கலானான். அந்த வீதிவழியே ஒரு கரும்திராட்சையும் வெண்திராட்சையுமாக மகிழ்வோடு சென்றுகொண்டிருந்தனர். கருந்திராட்சைக் கறுப்பழகி நான்குமுழ வேட்டி உடுத்துவதுபோன்ற அரைப்பாவாடை அணிந்திருந்தாள். அது காற்றிலே பறந்து அவளது அழகைப் பறக்கவிட்டவாறு சென்றுகொண்டிருக்க, அவளது இதழ்களோ அவள் கையிலிந்ருந்த ஐஸ்கிரீமைப் பதம்பார்த்தவாறு கரங்களை இணைத்தவாறு நடந்துகொண்டிருந்தனர். அவர்களை எதிர்த் திசையிலிருந்து ஒரு வெள்ளைப்பெண்மணி கடந்தாள். அவளின் முகம் கடுப்பானதோடு ஒரு வி…

    • 0 replies
    • 633 views
  7. மோகனம் : அனோஜன் பாலகிருஷ்ணன் 1 “ஹலோ…மிஸ்டர் சதாஷிவம்?” எதிர் முனையில் இனிய நடுத்தரவயது பெண்ணின் குரல் ஒலித்தது. தொலைக்காட்சியின் ஒலியை தொலையியக்கியால் குறைந்தேன். “எஸ்…” “நாங்கள் வூட்கிரீன் பொலிஸ் பிரிவிலிருந்து தொடர்பு கொள்கிறோம்” வழுக்கிச் செல்லும் தூய பிரித்தானிய உச்சரிப்பில் வார்த்தைகள் ஒலித்தன. பொலிஸ் என்றவுடன் என் உடல் என்னையும் மீறி சிறிதாக விழிப்புக் கொண்டது. “சொல்லுங்கள்,” “உங்கள் மகனது பெயர் செந்தூரன்தானே?” “ ஆமாம்” “உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. செந்தூரனும், அவரது நண்பர் கெல்வினும் ஸ்டாவூட் பூங்காவில் தாக்கப்பட்டுள்ளார்கள். சிறிய வன்முறைச்சம்பவம்…” “ஹோ…என் மகனுக்கு?” முடிந்தவரை பதட்டத்தை வெளிக்காட்டாமல் என்னை நிதானித்த…

  8. சுய தண்டனை அவளை நான் இறுதியாகப் பார்த்து ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இருக்கலாம். எனது நினைவுகளில் நான் அவள் குறித்து பதித்து வைத்திருந்த கோலங்களையெல்லாம் கண்ணீர்கொண்டு அழித்து முழுவதுமாகத் துடைத்து வைத்திருந்தாள். வசீகரமான புன்னகை, கவிதைபாடும் கண்கள், மழலைகளின் மொழிபேசும் அவளது இனிமையான குரல் என்று எல்லாமுமே அவளிடமிருந்து முற்றாக மறைந்துபோயிருக்க என் முன்னே அவள் நின்றிருந்தாள். கண்கள் தொலைவில் இல்லாதவொன்றை வெறித்துப் பார்த்திருக்க எனது பேச்சைக் கேட்பதுபோல் ஏப்போதாவது ஓறிருமுரை தலையை மெதுவாக அசைப்பதுடன் எனது சம்பாஷணையில் அவளது பங்களிப்பு முற்றுப்பெற்றுவிடுகிறது. ஆறு வருடங்களுக்கு முன்னர் அவளிடமிருந்த ஆசைகள், நம்பிக்கைகள், எதிர்…

  9. வெப்பச் சூத்திரம்: சக்கரவர்த்தி ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் “எனது பெயர் ஷாரிகா. எனது அம்மாவின் பெயரைச் சொன்னால் என்னைத் தெரிந்து கொள்ள இன்னும் உங்களுக்கு இலகு. விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் மருத்துவர் ராஜினி திரணகமவின் மகள். ஷாரிகா திரணகம.” பேச்சின் ஊடாக உணர்வுகளைப் பகிர நான் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. மௌனம்தான் எனது ஊடகம். மௌனத்தின் ஊடாக மட்டுமே ஊணர்வுகளை பகிரத் தெரியும். புத்தர்தான் மௌனத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். இரண்டாயித்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் மௌனப் பிரசங்கம் செய்த சோனாலியில், இலைகளின் சலனம் இல்லாத அதே அரச மரத்தடியில் என்னை மட்டும் தனியே அமர்த்தி, இருபத்தைந்து ஆண்டுக…

  10. சொர்க்கத்தின் பாவிகள் -நிரூபா நாகலிங்கம் உயிரைக் கையில் ஏந்தியவாறு மண்டியிட்டிருந்தான் அந்தோணியோ. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் அளவிடமுடியாத உயரத்திலும் அகலத்திலும் எழுந்து நின்றது அந்த சுவர். அவன் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்த சுவரைப் பார்த்தவாறு இருந்தனர். அந்த சுவருக்கு ஒரு கதவும் இருந்தது. அது எப்போது திறக்குமென்றுதான் அவர்கள் காத்திருந்தனர். அந்தோணியோ வருடக் கணக்கில் இங்கு காத்திருக்கின்றான். சுவருக்கு மறுபக்கம் சொர்க்க பூமி இருக்கின்றதென்று அந்தோணியோவும் பல ஏழை மக்களும், யுத்தநாடுகளின் பல அப்பாவி மக்களும் நம்பிக்கொண்டிருந்தனர். அந்தோனியோவைப்பொறுத்தவரையில் அவன் தாங்கிப் பிடித்திருக்கும் அவன் நேசிக்கும் உ…

  11. இரண்டு சம்பவங்கள் சம்பவம் ஒன்று---இன விரோதம் மே மாதம் 1983. பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்---ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு---முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம். மலையின் உச்சியில் இருக்கும் 'ஜே.பி' விடுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாங்கள் அதில் ஏறி இறங்குவதற்கு இரண்டே இரண்டு பாதைகள…

    • 1 reply
    • 753 views
  12. த்வந்தம் by பா. திருச்செந்தாழை நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன். ஊதிய புகை ஒருகணம் எதிர்காற்றில் திகைத்து பிறகு நெஞ்சில் பனியைப்போல் பரவி சட்டென மறைந்தது. தூங்காமலிருக்கப் பழகிவிட்டிருந்த எனது கண்களில் எழுந்த எரிச்சலைக் கசக்கி நீவியபடி, உள்ளே பார்த்தேன். ஜன்னலோரம் முன்சிகைப் பிசிறுகள் முகத்தில் துடிக்க லீ…

    • 1 reply
    • 958 views
  13. நள்ளிரவு. மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார். சுதாரித்துக் கொண்டவள், தைரியத்தை வர வழைத்துக் கொண்டு ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நில்..! நெருங்காதே, என்னைக் கொல்லப் போகிறாயா?’ என்றாள். ‘ஆமாம்! எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாத்! நீ உயிரோடு இருக்கக் கூடாது!’ நெருங்கினான். ‘இதோ பார், நான் கொரானாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப் பட்டிருக்கேன்…! உனக்கும் தொற்று பரவிவிடப் போகிறது…! உன் கையால் சாவது எனக்கு சந்தோஷம்தான். நான் சாகலாம்..! ஆனால், நீ சாகக்கூடாது. உன்னை எந்த அளவு காதலித்திருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.!’ அவள் பேசப் பேச, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது, …

  14. மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, வயற்காட்டுக்குப் போகும் வழியில், ஒரு குடிலில் முனிவர் ஒருவர் ஒரு சிறிய பெருமாள் விக்கிரகத்தை வைத்து, அதைத் துளசி இலைகளால் பூஜைகள் செய்வதை பார்த்துக்கொண்டே போவான். அப்போதெல்லாம் முனிவரின் மீது ஒரு பக்தி கலந்த மரியாதை ஏற்படும். ஒருநாள் மாணிக்கம் கீரைகளைப் பறிக்கும் போது, அதன் அருகே சில துளசிச் செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் ஞாபகம்தான் வந்தது. உடனே ‘நாமும் அந்த …

    • 1 reply
    • 924 views
  15. புத்தரின் மௌனம்: நெற்கொழுதாசன் ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் பிற்சேர்க்கை புளோமினில் அடுக்குமாடியொன்றில் வசித்துவந்த பங்களாதேசை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்டமுறை பிரான்ஸ் போலீசாரை அதிர்ச்சிக்குளாக்கி இருந்தது. அவள் தோளிலிருந்து இடைப் பகுதிவரை கூரிய ஆயுதமொன்றால் பிளந்து குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தாள். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபபட்டதாகவும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. 0 பல்பொருள் அங்காடியில் அவனைக் கண்டபோது விலகிச்சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டிருந்தான். மிக நெருக்கமாக வந்து “நீங்கள் றஞ்சித்தானே?” எனக் கேட்டான். நான் அவனை அடையாளம் கண்டுகொள்ளாதவன் …

  16. ஒரு கனவு ஒரு கனவு இது என்ன சார் பிழப்பு, இவங்களை பார்த்தா அப்படியே பணிஞ்சு போகணுமாம், இல்லையின்னா விலகி நிக்கணும், இரண்டும் செய்யாம இருந்தா கண்டபடி பேசி திட்டுவாங்கலாம். சார் இவங்க எண்ணம் எல்லாம் நம்மளை நம்பி இருக்கறவங்கதானே, கூப்பிட்டா வரணும், அப்படீங்கற எண்ணம். கிடக்கட்டும் சார், ஏதோ கூலியா கொடுக்கறாங்க, கொடுக்கறாங்க என்ன போடறாங்க, இந்தா பிழைச்சு போ அப்படீங்கற மாதிரி, நாங்களும் வெட்கமில்லாம அதை ஏத்துக்க வேண்டியிருக்குதே. என்னுடைய அனுபவத்துல சொல்றேன் சார் எப்பவும் ஒரு இடத்துல இருந்துட்டே இருந்தா நம்மளை மதிக்க மாட்டாங்க சார், இடம் விட்டு இடம் மாறிகிட்டே இருக்கணும். ஆனா பயமா இருக்கே சார், வேற இடத்துக்கு போயி செட்டிலாகலாமுன்னா அங்கிருக்கறவங்க, நம்மளை எதிரியா ப…

  17. விடாமுயற்சி - கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் ஜோடி கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தன.. ஆண் குருவியும், பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.. ஒரு நாள் பெரும் காற்று வீசியது.. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன.. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.. குருவிகள் மனம் பதறிக் கதறின.. கடல் நீரில் விழுந்து, கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபட…

  18. எனது பாடசாலை நண்பன் ஒருவன் நீண்ட நாட்கள் மத்திய கிழக்கில் வேலை செய்தான். இரு பிள்ளைகள், பெண் மணமுடித்து தாயுடன் கொழும்பில்- மகன் மணமுடித்து லண்டனில். பாடசாலை நண்பன் பலவருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் விபத்தொன்றில் அகப்பட்டு நரம்புத் தொகுதி பாதிக்கப் பட்டு தனியே பருத்தித்துறையில் இருக்கிறான். இரண்டு விடயங்களை ஒன்றாக சிந்திக்க முடியாது அவனால். உதாரணமாக மந்திகைக்கு சைக்கிளில் போனேன் என்று அவனால் ஒரேயடியாக சொல்ல முடியாது. மந்திகைக்கு போனதையும் சைக்கிளில் போனதையும் தனித்தனியே தான் அவனால் சொல்ல முடியும். இரண்டையும் சேர்க்க வெளிக்கிட்டால் ஒரேயடியாக குழம்பி விடுவான். அத்துடன் அவனால் எழுத முடியாது, ஆனால் வாசிப்பான்; கதைப்பான். சொல்ல வந்த விடயம் என்னவென்றா…

  19. வியாபாரத்தில் தர்மம் பார்க்கலாமா? http://www.muthukamalam.com/images/2021/vegetablesaleswomen.jpg தெருவொன்றில், ஒரு பெண் கீரை விற்றுக் கொண்டு சென்றாள் . வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிட்டு, "ஒரு கட்டு கீரை என்ன விலை...?" என்று கேட்டாள். "ஐந்து ரூபாய்" என்றாள் கீரைக்காரி. “ஐந்து ரூபாயா...? மூன்று ரூபாய்தான் தருவேன்... மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டுப் போ" என்றாள் அந்தப் பெண்மணி. "இல்லம்மா... அந்த விலைக்கு வராதும்மா" என்றாள் கீரைக்காரப் பெண். “அதெல்லாம் முடியாது. மூன்று ரூபாய்தான்...” பேரம் பேசினாள் அந்தத் தாய். பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தப் பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறித…

  20. டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட், பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று மணி நேரம் நடைபெறக்கூடியது, ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபான தயாரிப்பில் காண்பது ஒரு தனித்துவமான அனுபவம், ஸ்ட்ராட்போர்ட்டில் ஆண்டு முழுவதும் …

    • 1 reply
    • 802 views
  21. தேவ இரகசியம் - படித்ததில் பிடித்த கதை ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான். இந்த எமதூதன் “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக் கொண்டு போய்விட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று தாயின் உயிரைக் கவராமல் திரும்பி விட்டான். நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். எமதூதன…

  22. "பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" *************************************** குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்... நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சம…

  23. மாபெரும் தாய் –அகரமுதல்வன் 01 வானிலை அற்புதமாக இருந்தது. குளிரில் குழையும் காற்று புன்முறுவல் பொங்கி வீசியது. அந்தியின் வாசனை உறக்கத்திலிருக்கும் ஆச்சியின் கனிந்த உடல் மீது எறும்புகளாய் ஊரத்தொடங்கியது. ஒதிய மரத்தின் பழுத்த இலைகள் உதிர்ந்து ஆச்சியைத் தீண்டின. உறக்கம் அந்தரங்கத்தின் பெருமழை. மின்னல் ஒளியும் பேய் இடியும் பிறந்து கொண்டேயிருக்கும் இந்த உறக்கம் ஆச்சியின் உடலை அத்துணை துல்லியமாக வந்தடைந்திருந்தது. புராதனக் கலத்தைப்போல அசைவின்றியிருந்த ஆச்சி கீர்த்திமிக்க வரலாற்றைப் போல சாந்தம் வழிய புரண்டு படுத்தாள். கிளித்தட்டு விளையாடி முடித்து வீடுகளுக்குத் திரும்பும் இக்கிராமத்தின் இளந்தாரிகள் ஒதியமரத்தைக் கடந்து போகையில் “ஆச்சி எழும்பன,உன்ர மந்திரக்கத்தியை எடுத்த…

  24. கலந்துரையாடல் - சுரேஷ்குமார இந்திரஜித் என் பெரியப்பா தா. ச. மயில்வாகனன் தீவிர சைவர். ‘நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க’ என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். “ராமன் வழிபட்ட தெய்வம் அவன்” என்பார். “சிவன் தப்பு செய்துவிட்டு முழிக்கும்போது பெருமாள்தானே அவரைக் காப்பாற்றினார்” என்பார் பெரியம்மா. பெரியப்பா என்றால் என் தாயாரின் உடன்பிறந்த அக்காவின் கணவர். தாயாரின் குடும்பம் சைவ சமய இலக்கியங்களில் பரிச்சயம் உடைய சிவவழிபாட்டுக் குடும்பம். வைணவக் கடவுள் படங்கள் எதையும் நான் அவர்கள் வீடுகளில் பார்த்ததில் லை. தந்தையின் குடும்பம் நாத்திகக் குடும்பம். சாமி படங்களே கிடையாது. பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஓரளவு நவீன இலக்கியங்களிலும் பரிச்சயம் உட…

  25. திண்ணை வீட்டுப் பிச்சாயி பாட்டி - ஒரு தலைமுறையின் அடையாளம்! - சிறுகதை #MyVikatan விகடன் வாசகர் பாட்டி ( Representational Image | Pixabay ) வைக்கோலில் வேய்ந்த இந்தத் திண்ணை வீடுதான் இக்கிராமத்தில் தன் அடையாளத்தை இழக்காமல் இன்னும் இருக்கிறது. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! பிச்சாயி பாட்டி வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தாள். சுகமாய் காற்று அடித்துக்கொண்டிருந்தது. …

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.