கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும் நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க கிணிங்ங்ங்................................ அழைப்புமணி. சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான். நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார். இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன் உங்கட வீட்டு வாசலிலை பேப்பர்போடுறவன் நிண்டதை அதுதான் நீங்கள் படிச்சு முடிச்சிருந்தால் நானும் ஒருக்கால் இன்றையப் பத்திரிகையை படிப்பமென்று வந்தனான். அதுசரி மணி பதினொன்றாகுது இன்னமும் வீட்டு உடுப்போட நிக்கிறியள், இன்றைக்கு லீவோ? என்று அடுக்கிக்கொண்டுபோனார். நான் கூடுதலாக இரவிலைதான் வேலை செய்கிறனான் எ…
-
- 0 replies
- 939 views
-
-
ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இரகசியமாக உங்களுக்குமட்டும் பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன். எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன். சில நொடி தாண்டியிருக்காது. அண்ணை! அண்ணை! என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்? எதிர் வீட்டிலிருந்து குரல் வந்தது. அது.... எதோ யோசனையில கவனிக்கேல்லை என்று சமாளிச்சன். பரவாயில்லை. நான் வீட்டிற்குப் புதுத் தொலைபேசி இணைப்பு எடுத்திட்டன் அதுதான் உங்களுக்கும் இலக்கத…
-
- 11 replies
- 2.2k views
-
-
வாசகர்களுக்கு வணக்கங்கள் கதையும் சம்பவங்களும் முழுமையான கற்பனையே. நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக தெரிந்தாலும் உண்மை சம்பவவங்கள் அல்ல. எங்கேயோ எதையோ முடிச்சு போட்டு வேறு விளக்கம் தேடவோ தவறான கற்பித முயற்சியோ வேண்டாம். ஏனெனில் இது கதை மட்டுமே. மெருகூட்டல் எனப்படும் சீர்படுத்துதல் முறை வரவேற்கப்படுகிறது . கதையின் போக்கு மற்றும் ஆலோசனைகள் எழுதினால் மிக்க மகிழ்ச்சி எவர் மனதெனும் புண்படும் படி கருத்துக்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் . நீக்கி விடுகிறேன் . ஆனால் எந்த கருத்தையும் எவர் மீதேனும் திணிக்க இது கருத்துக்களம் அல்ல . கதைக்களம் உரைநடை மற்றும் கதையின் கோணம் முற்றிலும் மாறுபட்டு இருக்க வாய்ப்புள்ளது . ஏனெனில் இது தமிழ் நாட்டை சேர்ந்த எழுத்துமுறைகள் ( …
-
- 5 replies
- 1.8k views
-
-
----------------------------------------------- -----------------------------------------------
-
- 0 replies
- 1.4k views
-
-
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்......................... யாரது காலமை ஒன்பது மணிக்கு அருமையான என்ரை தூக்கத்தைக் கெடுக்கிறது என்ற யோசனையோட மெதுவா எழும்பிப்போய் வாசல்கதவைத் திறந்தன். வணக்கம் அண்ணா! நம்பமுடியாமலுக்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
லண்டனிலை நடந்த ஆர்ப்பாட்ட பேரணியிலை கலந்து கொள்ளவும் வேறை பல சந்திப்புக்களிற்காகவும்.லண்
-
- 25 replies
- 4.4k views
-
-
ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம். ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது. உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது. கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது. உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய். கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்க…
-
- 1 reply
- 1k views
-
-
ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான். அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான். உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று? அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான். குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.? அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும் குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்? அந்த மனிதர்மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா. குருடன்:ஐயா…
-
- 6 replies
- 2.5k views
-
-
. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும். டிரிங் .........டிரிங் .......என்ற மணியோசை அவள் தூக்கத்தை கலைக்க ........எழுந்து தெலிபோனை எடுத்தால் .மறுமுனையில் அவள் தங்கை சாந்தி .........அக்கா என்ன இன்று இவ்வளவு நேரம் படுகிறாயா .............இல்லையாடியம்மா .நேற்று அம்மாவை கனாக்கண்டேன் அது தான் ....இரவு முழுக்க நித்திரையில்லை விடிந்தது தெரியாமல் தூங்கி விடேன் . இப்போது எத்தனை மணி உங்க நாடில்.? .காலை எட்டு மணியாகிறது . அக்கா வார ஞாயிறு ஆவணி இருபத்திநாலு ........அம்மாவின் இறந்த நாள் .........என்று அவர்கள் சம்பாஷனை போனது .........அத்தொலைபேசி உரையாடல் முடிந்தாலும் அவள் நினைவு மட்டும் தாயகதை நோக்கி பறந்தது ........ தமிழ் ஈழத்தின் தீவக பகுதியில் அவள் வா…
-
- 8 replies
- 4.1k views
-
-
எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை... தமிழ்னா பிறந்தது அவ்வளவு தப்பா>? உலகில் இருக்கும் எல்லா உயிர் இனத்துக்கும் நிம்மதி கிடைத்தாலும் எங்களுக்கு கிடைக்க விட மட்டார்கள் போல.. என விம்மி விம்மி அழுதாள் அமுதா?????? கடவுளுக்கு கூட கண் இல்லை போல... எங்களை மட்டும் மீண்டும் மீண்டும் சோதிக்கிறார்... என்ன பாவம் பண்ணினம்.. இன்றுடன் சாப்பிட்டு எத்தினை நாள் வயதான தாயை பார்த்தாள்..பாவம் வயதான காலத்தில் நிம்மதி கூட இல்லாமல் தெரு தெருவாய் ஒட்டம்... இன்று ஆவாது சாப்பாடு வாங்கி குடுக்க வேணும் என்று நினைத்த படி தன் பழைய நினைவில் நோக்கினாள்.. தனது 20வயதிலையே கல்யாணம் பண்ணிய அமுதா ஒரு வருசம் தன் கணவனுடன் இனியமாக சந்தோசமாக வாழ்ந்தாள்..அவளோட வசந்த காலம் எவ்வளவு இனிமையானது... விட்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
எனக்கு புரியவில்லை.... ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்; ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் எமது குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்?{ பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?} மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசின் ஒப்பனை வசனங்கள். ஒரு பக்கம் அம்மா வயதான ஐயாவுக்கு கடிதம் எழுதுகிறாராம் தீர்வு காணவும் போரை நிறுத்தவும் வலியுறுத்துவோம் என்று... இன்னொரு பக்கம் நச்சு வாயுவையும், எரி குண்டுகளையும் எதிர்க்கு பரிசளிப்பாராம். பார்த்துக் கொண்டிருக்கும் வெளி உலகில்…
-
- 0 replies
- 763 views
-
-
புலி நான்!" பொறுப்புகள் இப்போதுதான் அதிகமாகின்றன! அப்பா இருக்கிறார் அவரெல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் எனத் தெம்பாக ஊர் சுற்றிய காலம் இனி இல்லை! அவருக்கு ஒரு சோதனை எனும் போதுதான் என் பணி இன்னமும் தீவிரமாகிறது! என்ன நிகழ்ந்தாலும் என் பிள்ளைகளுக்கு ஒன்றும் நிகழாது என வலம் வந்த அம்மாவால் இனி சும்மா இருக்க முடியாது! இப்போது இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது என்னுள் வேட்கை! தாய்க்குத் தலைமகனாக, தந்தைக்குச் செல்ல மகளாக இனி நானே தலையெடுக்க வேண்டும்! என் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவேண்டும்! அப்பா இப்பவும் எம்மிடையேதான் இருக்கிறார், இப்போதும் எமக்கு அவரே காப்பு என்பதைப் புரியவைக்க வேண்டும்! ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்! துவண்டுவிழக் கூடாது நான் இப்போது! …
-
- 1 reply
- 1.1k views
-
-
பகுதி 1 'கெதியாக் கதவைப்பூட்டு 'அந்த கட்டையைப்போட்டு இறுக்கிச்சாத்து 'என் இரட்டைச்சகோதரி அவசரப்படுத்தினாள். அவசரப்பட்டு செய்ததாலோ என்னவோ கதவு பூட்டப்படவே இல்லை. 'திராங்கைப்போட்டனியே...ச்சோ சந்திக்கு வந்திட்டாங்கள்'...'கையும் நடுங்குது என்னால் சாத்த முடியேல்லை....'ச்ச்சும்மா இறுக்கி மூடிவிட்டுச் சாய்ந்து நிற்பமா...அவங்கள் போற வரைக்கும்...........!!! அவளைப்பார்த்து நெஞ்சு பதறப் பதறப் பதட்டம் மேலோங்கக் கேட்டேன்.. மிகுதி..... http://www.karumpu.com/post/2009/02/22/eelam1.aspx
-
- 17 replies
- 2.9k views
-
-
வாங்க ஒரு கதயப் பற்றிக் கதைக்கலாம்....... சத்யமா வீமன்ற ‘கதை‘யப் பற்றியில்லீங்கோ.... நானும் பல முயற்சிகளப் பண்ணிப்பார்த்து...சலித்து.... சல்லியாகி ...... சரி சொந்தமா இப்ப முடியாங்காட்டிலும்.... எங்காச்சும் 'படிச்சு ரசிச்ச' அல்லது 'பதியப் படிச்ச' கதையொன்ற ஒங்களோட பகிர்ந்துக்கலாம்னு... இரவு பகலா தேடித் தேடி அமுக்கிய இந்தக் கதயயும் (முன்னாங்காட்டி எங்காச்சும் மேஞ்சிருப்பினும்....சலிக்காம மீண்டும் ஒரு வாட்டி மேஞ்சுக்கணும்) பெர்ய மனசோ அல்லது தொறந்த மனசோ பண்ணி ஒரு வாட்டிதான் படிச்சுப் பாத்திடுங்களேன். படிச்சுண்டு, 'பேஷாயிருக்கே' இல்ல 'மொக்கையாயிருக்கே'ன்னு ஒங்களுக்குள்ளாறயே பேசிணிண்டு அப்புறம் பேசாமலே போயிடாம.... எதனாச்சும் இங்கிட்டு ஒங்க பங்குக்கு பதிவுகளயும் வ…
-
- 4 replies
- 1.4k views
-
-
திருந்தா உள்ளங்கள் எம் தொப்புள் கொடி உறவுளகின் அவலங்களை இந்த சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் எம்மவர்களின் உரிமைப் போராட்ட நிகழ்வு ஒன்று ஆர்த்தி வாழும்நாட்டிலும் முன்னெடுக்கப் பட்டிருந்த செய்தியை அவள் அறிந்து அதில் தன்னையும் முழு ழூச்சாக அர்ப்பணித்தவள் மற்ரவர்களையும் அதில் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்பற்காகவும் பல இன்னல்கள் மத்தியில் தன் பள்ளிப் படிப்பையும் கவனிக்காது அயராத பணியை செய்ய தொடங்கினாள். இதனால் வீட்டிற்கு வரும் நேரம் தாமதமாகவே அவள் அம்மா அவளை பார்த்து உனக்கு சோதினை வருகுது சும்மா ஊர் உத்தியோகத்தில திரியுறாய் நாளைக்கு உதே உனக்கு சோறு போட போகுது.... சும்மா விட்டிட்டு உன்ர அலுவலை பார் என திட்டினாள். அவளுக்கு அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் …
-
- 4 replies
- 1.7k views
-
-
ஒரு பேப்பரிற்காக சாத்திரி வழைமை போல நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பவும் கதை அவித்துவிடப்போறன் இது எங்கடை ஊர் கோயில் தருமகத்தாவை பற்றினது. ஊரிலை சிலருடைய தனிப்பட்ட கோயில்களை தவிர பொதுவான கோயில்களை நிருவாகம் செய்ய ஒரு சபை இருக்கிறது வழைமை அதுபோலை எங்கடை ஊர்கோயிலையும் நிருவாகிக்க ஒரு தருமகத்தா சபை இருந்தது. அதிலை ஜந்து பேர் அங்கம் வகிப்பினம் ஒருத்தர் தலைவராயிருப்பார். அதுக்கடுத்ததாய் அவைக்கு உதவி சபை எண்டு ஒண்டும் இருக்கும் அதிலை பத்துப்பேர் அங்கத்தவராயிருப்பினம். எங்கடை நாடு சனநாயகத்தை பெரிதாய் மதிக்கிற நாடு எண்டதாலை (சந்தியமாய் நான் மகிந்தாவின்ரை ஆளில்லை) எங்கடை ஊர் கோயில் நிருவாகமும் சனநாயக முறைப்படி இரண்டு வருசத்துக்கொரு தடைவை தேர்தல் வைச்சு எங்கடை ஊர்…
-
- 16 replies
- 2.7k views
-
-
கல்பனா ஒரு காவியம் ......... அந்த சிற்றூரின் அமைதியை கிழித்து கொண்டு இழவு வீட்டின் பறையொலி ....கேட்டது. அந்த ஊரின் இளைப்பாறிய வைத்தியரின் வளர்ப்பு மகள் இறந்து விடாள். அவள் தான் கல்பனா . கல்பனா , மிகவும் அழகான் சிறு பெண் .நான் என் இள ம வயதில் கண்ட போது வைத்தியரின் வேலைகார சிறுவன் ,இவளின் பாடசாலை ப்பை , தண்ணீர் போத்தல் என்பவற்றை தூக்கி கொண்டு , வெயிலுக்கு மறைப்பாக கையில் குடை பிடித்த படி அழைத்து செல்வதை பார்த்திருக்கிறேன். அவள் ராணி மாதிரி வருவாள். வைத்தியர் செல்வராஜா , மனைவி கமலாவுடன் அந்த ஊருக்கு மாறலாகி வந்தபோது சிறுமி கல் பனா மூன்று வயதிருக்கும் .கால போக்கில் அந்த வைத்தியர் ஊர் மக்களுடன் உறவாடி ஒரு அங்கத்தவர் ஆகினார் .பேச்சு வாக்கில் அவருக்கு குழந்…
-
- 6 replies
- 1.9k views
-
-
பிரபு போட்ட திட்டம் பலிக்கத் தொடங்கியது, இருவரும் ஒரு நன்நாளில் கடை திறந்தார்கள் வியாபாரமும் நன்றாக நடந்தது காலங்கள் ஓடிக்கொண்டே இருந்தன விஷ்ணுவுக்கு அவனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள், திருமணம் முடிந்து ஆறுமாதம் கூட ஆகவில்லை விஷ்ணுவின் மனைவி வைதேகி உன் பெற்றோருடன் இருக்க முடியாது ஒன்றில் நான் இருக்க வேணும் இல்லாட்டி அவை இருக்க வேணும் என்றாள் விஷ்ணு என்ன செய்வதென்று யோசித்தான் மோகம் அவன் கண்களை மறைத்தது தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தான், ஒரு அநாதையான தன்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிப் பார்த்த தன் பெற்றொருக்கு துரோகம் செய்தான் அவர்கள் எவ்வளவு சொல்லியும்,கெஞ்சியும் கேட்காமல் மனைவி சொல்லே மந்திரம் என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து …
-
- 2 replies
- 1.9k views
-
-
பாக்கியம்,அம்மா பாக்கியம் கெதியா வெளிக்கிட சொன்னனான் எல்லே ஏதோ பொண்ணு பார்க்கிறதுக்கு வெளிக்கிடுற மாதிரி இருக்கு சீக்கிரமா வாடி, இதோ ஒரு நிமிசத்திலை வந்துடுறன் ஆமா என்னை வெளிக்கிட சொல்லிட்டிங்கள் ஏன் என்று சொல்லலையே. அதுவா வா சொல்றேன் அது ரகசியம் நீயே நேரிலை பாரு என்றார் சண்முகம் சரி சரி வா நேரம் போட்டுது என்று கூறியவாறே இருவரும் காரில் புறப்பட்டனர். காரும் வந்து நின்றது என்னங்க இங்கை வந்திருக்கிறியள் ?..........ஆம் அது ஒரு அநாதை இல்லம் சண்முகம் பாக்கியம் தம்பதி திருமணம் முடித்து பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பாக்கியம் இல்லை அந்தக்குறையைத் தீர்க்கத்தான் இங்கு வந்திருந்தார்கள். இஞ்சை பாரு பாக்கியம் எத்தனை நாளைக்குத்தான் மழலைக்குரல் கேட்காமல் இருப்பது அதுதான்…
-
- 0 replies
- 857 views
-
-
நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர் நிலையை அடைந்து விடலாம். ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப் பயிற்சி முதலியவற்றில் நெடுங்ககாலம் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். ஆத்திரத்துடன், 'என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்' என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார். யோகி அல்லவா!…
-
- 0 replies
- 1.8k views
-
-
அதை தூக்காதையுங்கோ பிறகு நாரிக்குள் பிடித்துவிடும்,உந்த வயசில ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று மனிசி சொன்னது சுரேஷின் மனசு சிறிது சங்கடப்படதான் செய்தது.இப்ப ஜம்பத்தொன்பது வயசு தானே என்னும் அறுபது ஆகவில்லையே என்று மனதில் எண்ணி கொண்டான்."உந்த வயசு" என்ற வார்த்தையால் அவன் பல தரம் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு பத்து வயது இருக்கும்,பாடசாலையால் வீடு திரும்பும் போது பக்கத்து வீட்டு அக்காவுடன் ஒரு பெடியன் கதைத்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு அதை அம்மாவிடம் சொல்ல,அம்மா சந்நிதானமே ஆடிவிட்டாள் உந்த வயசில உப்படியான கதைகள் ஒன்றும் தேவையில்லை என்று அதட்டி கொண்டு இருக்கும் போது அப்பாவும் அவ்விடத்திற்கு வரவே அம்மா அவரிடம் விடயத்தை சொல்ல அவர் தனது பங்கிற்கு கன்னத்தில் இரண்டு அ…
-
- 22 replies
- 3.6k views
-
-
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே. ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர். அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்…
-
- 12 replies
- 7.2k views
-
-
கல்யாணி என்றாலே எல்லாருக்கும் பிடித்த விஷயம்.. ஆமாம் இந்த கல்யாணியும் அந்த கல்யாணி பூவை போல மணம் வீசியவர்தான்.. .கல்யாணிக்கு ஒரு தங்கை கவிதா.. அப்பா அம்மாவோட யாழில் இருந்தார்கள்.. அவர்களின் வீடு கடல் ஒராமாய் இருந்த படியால் அவள் கடல் அழகை பார்த்து ரசிப்பாள்...எவ்வளவு அமைதியாக இருக்குறது கடல் இப்போது ஆனால் சில நேரம் இந்த சிங்கள வெறி யாளர் களால் கலங்கி போவாது உண்டு..? கல்யாணி பாடசாலையிலும் தென்றலாய் மணம் வீசினாள்.. அவள் வீட்டில் மட்டும் இல்லை படிப்பிலும் சுட்டி பெண்தான்.. எந்த துறையிலும் கல்யாணி பூவை போல மணம் வீசி கொண்டுதான் இருந்தாள்... தாய்க்கு தனது மகள் எல்லா துறையிலும் சிறந்து விழங்குவதை நினைத்து பெரு மிதம் அடைந்தாள்..பெத்த மனசு சந்தோசத்தில் இ…
-
- 8 replies
- 3.3k views
-
-
முதன்முறை எப்போது.. ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது. அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலைக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு. மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்து போனதற்…
-
- 0 replies
- 2.1k views
-
-
அபிதா பெயருக்கு ஏற்ற போல அவளும் அழகிய பெண்..அபிதாவுக்கு ஒரே அண்ணன் வெளி நாட்டில் வேலையில் இருந்தான்.. அபிதா அம்மா அப்பாவோட ஊரில் இருந்தாள்.. அம்மா நான் பாடசலைக்கு போகுறேன்.. என்று சொல்லிய படி தன் தோழி வீடு நோக்கி நடக்க தொடங்கினாள் அபிதா... சுசிதா அபிதாவின் நண்பி இருவரும் ஒரே தெருவில் இருந்தார்கள்.. சிறு வயது முதல் இருவரும் நண்பிகள்.. அதை விட இருவரும் ஒரே பாடசாலையில் படித்தார்கள்... அபி நம்ம பாடசாலை பெடியன்கள் வாறாங்கள்.. அங்க பாரு... அபி அங்க பாரு செந்தில் வாறன்.. உன்னுடன் இப்ப பேசுறது இல்லையா? அப்படி இல்லை சுசி போன் பண்ணி பேசுவான்.. செந்தில் வேறு யாரும் இல்லை அவர்கள் வகுப்பில் படிக்கும் மாணவன்..சுசிதா யாருடனும் அதிகம் பேச மட்டாள்.. அபிதா …
-
- 5 replies
- 3.7k views
-