கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பாண்டிபஜார் பீடா 'ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க... முதல் போணியாகட்டும்' என்று பீடாக்கடை கோபாலகிருஷ்ணா சொன்னான்.''ஏன்... என்னுதே முதல் போணியா இருக்கட்டுமே?'' என கடைக் கண்ணாடி அலமாரி மீது ஒரு ரூபாயை எடுத்துவைத்தார் வெங்கையா.இரண்டு ஸ்பெஷல் பீடாக்களை ஒரு காகிதத் துண்டில் பொட்டலம் கட்டி வெங்கையாவிடம் கொடுத்தான் கோபாலகிருஷ்ணா. கடை கல்லாப்பெட்டியில் சில்லறை இல்லை. அவன் சட்டைப் பையில் இருந்து அரை ரூபாய் நாணயத்தை எடுத்து, வெங்கையாவிடம் கொடுக்க வந்தான்.'உன்கிட்டேயே இருக்கட்டும். நாளைக்குப் போணி' எனச் சொல்லிவிட்டு, பாண்டிபஜார் பக்கம் வந்தார் வெங்கையா.அப்போதுதான் ஒவ்வொரு கடையாகத் திறந்துகொண்டிருந்தார்கள். கீதா கபேயும் அதன் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடையிலும் மட்டும், …
-
- 1 reply
- 601 views
-
-
சாலையெங்கும் மக்கள் வெள்ளம், ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு, சில ஆரவாரம். சிறைச்சாலை வாயிலில் இருந்து அரண்மனை வாசல் வரை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஊர்ந்துச் சென்றது ஒரு மாட்டுவண்டி அனைவரது கண்களும் அவன்மேல். வண்டியின் மத்தியில் நடப்பட்டக் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் ஓர் இளைஞன், தினவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, அழகிய முகம், முறுக்கிய மீசை, உடலெங்கும் காயத்தழும்புகள் அவன் வீரத்தைப் பறைசாற்ற, கோபத்தால் சிவந்த கண்களின் வெறித்தப்பர்வை மட்டும் அரண்மனையை நோக்கியபடியே. விசாரணை மன்றம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, அரசன் பலபீமனும், முதல் மந்திரியாரும் ஆலோசனையில் இருக்க, பிற மந்திரிகளும் மக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டதால் மன்றமெங்கும் இ…
-
- 0 replies
- 601 views
-
-
"தலை தீபாவளி" எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை நன்றாக எனக்கு முதலிலேயே தெரியும் . அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்கு தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். குறிப்பாக தமி…
-
- 0 replies
- 597 views
-
-
"கூட்டுக்குடும்பம்" நான் யாழ், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருக்கும் மதகுவில் குந்தி இருக்கிறேன். எனக்கு என் அம்மா மேல் சரியான கோபம் கோபமாக இருக்கிறது. எமது அம்மா மிகவும் நல்லவர் ஆனால் கொஞ்சம் பிடிவாதமும் உண்டு. அவருக்கு எல்லோரும் ஒன்றாய் பக்கத்தில் இருக்க வேண்டும். ஒரு கூட்டுக் குடும்பம் போல் வாழவேண்டும். அதற்கு தானே தலைவி போல இருக்கவேண்டும். தான் தெரிவு செய்பவரையே திருமணம் செய்ய வேண்டும். இப்படி சில சில கொள்கைகள் உண்டு. எனது மூன்றாவது அண்ணா, மற்றும் மூன்றாவது அக்காவின் திருமணத்தின் பின், நானும் தம்பியும் தப்பி இருந்தோம். நான் அப்பொழுது பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு கொழும்பு கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியல் விரிவுரையாளராக…
-
- 0 replies
- 597 views
-
-
காணாமற்போனவர்கள்- பொ.கருணாகரமூர்த்தி நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஒராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “ ஐயோ ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். யாரோ நாதாரியள் எங்கட பிள்ளை பார்த்தனன்தான் செம்மியனைப் போட்டவன் என்று கொடுத்த அநியாயத்தகவலால்………. அவனை உங்கட தாசந்தான் பிடிச்சு வைச்சிருக்கிறாராம். அந்த அப்பாவிக்குழந்தையை எங்களிட்ட மீட்டுத்தந்திடுங்கோ ஐயா…………” என்றபடி அவரின் கால்களில் விழுந்தனர். செம்மியன் பார்த்தனனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அவனது ஐந்து இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டதால அவன்மீது கோபத்தில இருந்தவன்தான், ஆனாலும் அருளல் மறைத்தல் போன்ற சாங்கியங்களில் இறங…
-
- 0 replies
- 596 views
-
-
மீள்.... வாழ்த்து --- ரிஷபன் சற்று ஒடிசலான கையெழுத்தில், மாதவி கிருஷ்ணன் என்று எழுதிய வாழ்த்து தபாலில் வந்திருந்தது. எங்கள் திருமண நாளைப் பத்து வருடமாய் ஞாபகம் வைத்திருக்கிற ஜீவன். அலுவலகத்திலிருந்து திரும்பியவனிடம் புவனா காபியையும் வாழ்த்தையும் கொடுத்தாள். "காலைல தபால்ல வந்திச்சு." "வேற போஸ்ட்…?" என்றேன். "இல்ல." அலுப்பில், காபிக்கு முதல் உரிமை கொடுத்தேன். குடித்த சுறுசுறுப்பில் வாழ்த்தைப் பிரித்தேன். ‘அன்புடன்… மாதவி கிருஷ்ணன்!’ "மறக்காம அனுப்புறா!" என்றேன் வியப்புடன். "அவங்களுக்கு எப்ப மேரேஜ் டே?" இது புவனாவின் கேள்வி. "ஞாபகம் இல்ல. ஜூன்லயா… ப்ச்… தெரியல!" பத்தாவது வாழ்த்து இது. வருடம் முழுவதும் வேறு …
-
- 0 replies
- 593 views
-
-
ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறும…
-
-
- 3 replies
- 592 views
-
-
அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர் வீரர்களிடம் சொன்னார், “எனக்கு நீங்கள் நான் கேட்கப் போகும் உதவிகளைச் செய்ய வேண்டும்.நான் இறந்த பின் என்னைச் சவப் பெட்டியில் தூக்கிச் செல்லும் பொது என் இரு கைகளையும் வெளியே தொங்கப் போட்டவாறு எடுத்துச் செல்ல வேண்டும். எனக்கு மருத்துவம் பார்த்த உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் சவ ஊர்வலத்தின் முன்னே செல்ல வேண்டும். நான் சேகரித்த வைரங்களையும் வைடூரியங்களையும் ஊர்வலப் பாதையில் போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.” அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார், ”நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும், இறந்தப…
-
- 0 replies
- 590 views
-
-
"வேதனை தீரவில்லை" "வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான்" என்று பாடிச் சென்றாள் மூதாட்டி அவ்வையார். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என இலங்கை அரசாங்கம் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பாவிக்க வேண்டும் என்று திடீரென மறுமலர்ச்சி என்று கூறி இரசாயனப் பசளை இறக்குமதிக்கு முற்றாக ஜூன் 2021 இல் தடை விதித்தது. இதை அடுத்து அங்கு இரசாயன உரம், கிருமி நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் சேதனப்பசளையும் போதிய அளவு இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அதன் உபயோகமும் பயிற்றுவிக்கப் படவில்லை. அந்த இக்கட்டமான காலத்தில் தான் ந…
-
- 0 replies
- 589 views
-
-
[size=6]மழையின் கொலை....[/size] [size=5]- மாறணி[/size] [size=4]வானுக்கு பூமியிடம் என்ன கோபமோ தெரியவில்லை. அதிகாலை 3மணிக்கு பெய்யத் தொடங்கிவிட்டது மழை. இடியும் மின்னலும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்க அந்த சத்தத்தால் வந்த தூக்கமும் பறந்து போனது. தூக்கம் வரவில்லை. பலயோசனைகள் எழ கண்ணை மூடியும் உறங்காது விழித்திருந்தேன். அப்போதுதான் ஆற்றோரம் வாழும் லலிதாப் பாட்டியின் ஞாபகம் மூளைக்குள் தட்டியது. ஐயோ அந்தப் பாட்டி பாவம். பெய்த மழைக்கு வெள்ளம் பாறைகளையும் புரட்டிக்கொண்டல்லவா போகும். இந்த முறை நிச்சயம் லலிதா பாட்டியின் வீடு வெள்ளத்துக்குள் அகப்பட்டுப்போயிருக்கும். அவளால் ஓடவும் முடியாதே. கடவுளே லலிதா பாட்டியைக் காப்பாற்று என்று கடவுளை வேண்டியவாறு அருகில் படுத்திருந்த …
-
- 0 replies
- 588 views
-
-
"வறுமையின் நிறம் சிவப்பு" கொழும்பு, காலி முக திடலில், வறுமையை ஒழிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்து ஐம்பது நாள் தாண்டியும் மக்களின் போராட்டம் முடிவற்று இன்னும் தொடர்கிறது. சிவப்பு கொடிகள், கருப்பு கொடிகள் பல அங்கு மக்கள் ஏந்தி அமைதியான ஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) செய்கிறார்கள். கருப்பு கொடி துக்கத்தை குறிக்கும் என்றாலும், சிவப்பு கொடி எதற்க்காக ?. கூட்டத்தில் நானும் ஒருவனாக இன்றுதான் இணைந்தேன். என் மனதில் முதல் தோன்றியது அது தான். ஏன் சிவப்பு ? எல்லோரையும் பார்க்கிறேன், அவர்களின் வறுமை எல்லையை தாண்டி இருப்பதை அவர்களின் கண் காட்டுகிறது. கோப ஆவேசத்தில் அது சிவந்து இருப்பதை காண்கிறேன்! மா சே துங் [M…
-
- 0 replies
- 586 views
-
-
எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.
-
- 0 replies
- 585 views
-
-
"சத்தம் போடாதே" இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer] எடுத்துக் கொண்டு சீட்டு…
-
- 0 replies
- 585 views
-
-
❤️ அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார். ரவீந்தர், அங்கு …
-
- 0 replies
- 582 views
-
-
சிறுகதை எப்படி எழுத வேண்டும், அதன் கட்டமைப்பு பற்றி ஒரு வழிகாட்டலை தந்தால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்
-
- 1 reply
- 580 views
-
-
ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம் திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு. இரவு எட்டு மணி ‘அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூமில்’ ஒரு பெண் தனியாகச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஓர் ஆங்கில வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது. பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த ஜம்பு, வெயிட்டிங் ரூமிலிருக்கும் அந்தப் பெண் யாரென்பதை வாசலுக்கு எதிரே நின்று கொண்டு சிகரெட் பற்ற வைப்பது போல் ஓரக் கண்ணால் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் மெதுவாக நகர்ந்தான். ‘டிக்கெட் வாங்கிட்டேன் பாப்பா…..வா, போகலாம்’ என்…
-
- 0 replies
- 579 views
-
-
எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர். அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தா…
-
-
- 3 replies
- 578 views
-
-
மனிதனும்... மனிதமும்! பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் கிடையாது. பெற்ற பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வூதியத்தில் நிம்மதியான வாழ்க்கை. நான் தினம் காலை 4.45 க்கு எழுந்து முகச்சவரம் செய்து, பல் துலக்கி, கழிப்பறை இயற்கை உபாதை வேலையை முடித்து விட்டு சரியாய் 5.20 மணிக்கு பொல பொலவென்று விடியும் பொழுதில் என் தெரு திருப்பத்தில் இருக்கும் சாலையில் கிழக்குப் பக்கம் த…
-
- 0 replies
- 578 views
-
-
வஸ்திராபகரணம் - ரா. செந்தில்குமார் ரயில் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. வார விடுமுறைக்கு ஊருக்கு வந்து, சென்னைக்குத் திரும்பும் இளைஞர்கள் சிலர், பிளாட்பார்மில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். மிளகாய்ப்பொடி தூவிக் கொண்டுவந்திருந்த இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவனிடம் கொடுத்தார். அதிலிருந்து மிளகாய் காரத்துடன் கலந்த நல்லெண்ணெய் வாடை வீசியது. பின்புறம் நிற்கும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறுவதற்கு ஒரு வயதான அம்மா வேகமாக நடக்க முயன்று, மூச்சு வாங்கினார். அவருக்குச் சிறிது தூரம் முன்பு சென்ற அந்தம்மாவின் கணவர், அவ்வபோது நின்று, பின்பக்கம் திரும்பி, ”வேகமா வாங்குறேன்.. ஆடி அசைஞ்சு வந்த…
-
- 1 reply
- 577 views
-
-
ஒரு காட்டில் வயசாகி போன🐱 புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு🐜 வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்மூர்ல பணம் படைச்சவனுக்கு தோணுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். ப…
-
- 1 reply
- 572 views
-
-
கரண்டி ஏந்திய... 3000 பேர். குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கான்டிராக்டர் திடீரென்று ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது. துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது. இனி மண்வெட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்? துரத்தி விட்டார். 40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள். 2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள். புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது. வேகமாக வேலை செய்தது. "புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மண்வெட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியி…
-
- 1 reply
- 572 views
-
-
விடியுமா? - கு.ப.ரா. தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள். எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்…
-
- 1 reply
- 571 views
-
-
“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல் கொரோனா வந்ததும் வந்தது இன்னும் மனிசர பாடாய்ப் படுத்திக் கொண்டு இருக்கு’ முன் வீட்டு பரமேஸ் அக்கா முணங்கிக் கொண்டே கதவடியில் வந்து நின்றாள். கொழும்பில் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருக்கும் தொடர் மாடி வீடுகளில் அவரவர் கதவடியில் வந்து நின்றாலும் நமது வீட்டுக் கதவடியில் வந்து நிற்பது போல் தான் இருக்கும். முகத்தினை துணியினால் பொத்திக் கொண்டு நின்ற பரமேஸ் அக்காவைப் பார்க்க பாவமாகக் கிடந்தது. ‘ஏன் அக்கா என்னாச்சு’ என்று கேட்ட என்னை மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு ‘ஏன் உமக்கு கத தெரியாதே… நம்மட மல்காந்தி இப்போ கோல் எடுத்தவா. அவவும் மற்ற பிளட் ஆக்களோட சேர்ந்து கீழே போய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போறாவாம். நியூஸ்ல காட்றவை தா…
-
- 0 replies
- 570 views
-
-
தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம். சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. கொரோனாக் காலத்தில் முகிழ்விட்ட ஒரு புதிய முயற்சிதான் இது. கேட்டுச் சொல்லுங்கள். பிள்ளைகளைக் கேட்கவும் செய்யுங்கள். உங்கள் ஊக்கத்தின் திறனில் மலர் அடுத்த கதையை வெகு சீக்கிரம் சொல்வாள்.... http://www.4tamilmedia.com/videos/youtube-corner/17878-2020-04-07-21-48-23
-
- 1 reply
- 569 views
-
-
பிரசன்னம் சிவநேசனுக்கு வயது அறுபத்தி நான்கு முடிந்து ஏழு மாதம் பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டன. அன்றுதான் அந்த பிரசித்தி பெற்ற சம்பவம் நிகழ்ந்தது. நாம் நேரடியாகவே கதைக்குள் நுழைந்து விடலாம். சிவநேசனுக்கு கடவுள் நம்பிக்கை நிரம்பவே இருந்தாலும், சாமியார்கள், மந்திரவாதிகள் இன்னபிற‘கள்’ மேல் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் எந்த சாமியார் எங்கே உதயமானாலும், கைக்காசில் பஸ் டிக்கெட் செலவழித்துப் போய் பார்ப்பார். ஆனால் அந்த சாமியார்/ரிணி ஏதாவது அற்புதங்கள் செய்து காட்டுபவராக இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் அற்புதங்களை திரும்பத் திரும்ப கூர்ந்து கவனிப்பார். சில மணி நேரங்களில், சில சமயம் சில நாட்களில், அந்த அற்புத வித்தையின் சூட்சுமம் என்னவென்று தெரிந்து போ…
-
- 1 reply
- 569 views
-