கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சிவகுமாரின் அன்பு கட்டளைக்கு இணங்கி கலை நிகழ்ச்சிக்கு போவதிஸ்கு ஆயத்தமானான் சுரேஷ் கனடாவில் இருந்து வந்த சுரேசிற்கு சிட்னி வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறை கொஞ்சம் நல்லதாகவே இருந்தது அவன் வந்த போது காலைநிலை வேறு இலங்கையில் உள்ளது போன்று இருந்தபடியால் அவனுக்கு மேலும் சிட்னி பிடித்திருந்தது. கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் சுரேஷ்,நான் சிவகுமார் மச்சான் ரெடியா என்று வாசலிலே நின்ற படியே கூப்பிட்டான்.இருவரும் கிளம்பினார்கள் படைபாளிகள் சங்க கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வதிற்கு. பட்டு சேலைகள்,கதர் வேட்டிகள் என்று தமிழ் மக்கள் கூட்டத்தை கண்ட சுரேஷிற்கு தானிருப்பது ஊரிலா என்று ஒரு சந்தேகம் ஒரு கணம் தோன்றியது.அ…
-
- 10 replies
- 2.3k views
-
-
கண்ணாடிக் குருவி நாலு சுசியாப்பம், ஒரு சுருள்போளி வாங்கி வந்திருந்தான் நாகராசு. அதை தேவியிடம் கொடுத்து அக்காளிடம் கொடுக்கச் சொல்லியிருந்தான். பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து வந்ததில் கலைந்திருந்த தலைமுடி, அரும்பிய வியர்வை, இன்னபிற ஒப்பனைகளை தன் இருகைகளாலும் சரிசெய்து கொண்ட தேவி, நாகராசுவிடமிருந்து வாங்கிய பலகாரப் பொட்டலத்தை, ஸ்டைலாக விரல் நுனியில் கோர்த்துக் கொண்டாள் ""மதனீ...'' வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் முன்பாக குயில்போல ஒரு குரல் விடுத்தாள்,தேவி. பின்னால் நாகராசு நின்றான். சட்டென உள்ளே நுழைய முடியா வண்ணம் நிலைப்படிவரைக்கும் வீட்டுக்குள் ஒருகும்பல் குடியிருந்தது. உள்ளே கலைஞர…
-
- 0 replies
- 856 views
-
-
கண்ணாடிப் பந்து - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் “லைஃப்... நம்ம எல்லோருக்கும் மூணு பந்துகளைத் தந்திருக்கு. அதுல ரெண்டு... ரப்பர் பந்துகள். ஒண்ணு... கண்ணாடிப் பந்து. You know what all?” நான் உற்சாகமாகவும் கம்பீரமாகவும் மாதாந்தர பிராஞ்ச் மீட்டிங் நடத்தும் போதெல்லாம், பணியாளர்கள் ரொம்ப ஆர்வமாகப் பங்குபெறுவார்கள் அல்லது பங்குபெறச் செய்துவிடுவேன். நான் புத்தகங்களில் படித்த, அவதானித்த, என் பாஸிடமிருந்து கற்றுக்கொண்ட... என எல்லாவற்றையும் கலந்துகட்டி அவர்களுக்குச் சொல்லி, மோட்டிவேட் செய்வதில் கைதேர்ந்தவன் எனும் பெயர் பெற்றிருந்தேன். `அந்த மூன்று பந்துகள் என்னென்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினேன்... எனக்கு எ திரே அமர்ந்து என்னைப் பார்த்துக்…
-
- 0 replies
- 2.4k views
-
-
கண்ணான கண்ணே ...... 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா.... ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......' கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள். அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது. அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள் ஆரதியும் கையசைத்து விடைகொடுப்பதான பிரேமையுடன் இரு காதோரங்களிலும் இருசொட்டுக்கண்…
-
- 22 replies
- 3.1k views
-
-
கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம் ``சார், சொல்லச் சொல்லக் கேட்காம வெளியே அருணகிரி உங்க காரைக் கழுவிக்கிட்டு இருக்காரு. என்ன செய்றதுனு தெரியலை’’ என்றான் உதவி இயக்குநர் ஸ்ரீ. மகேந்திர குமாருக்கு ஆத்திரமாக வந்தது. ``அந்த ஆள் என்ன எழவுக்கு இங்கே வந்து உசுரை எடுக்கிறான். அவனை யாரு கார் கழுவச் சொன்னது?’’ எனக் கத்தினான். ``ஆளு செம போதை. சட்டைகூடப் போடலை. வெறும் பனியனோட வந்திருக்கார்’’ என்றான் சேகர். ``இருக்கிற இம்சை போதாதுனு இது வேறயா?’’ - சலிப்புடன் அறைக் கதவைத் திறந்து படி இறங்கி கிழே வரத் தொடங்கினான் மகேந்திர குமார். அவன் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து ஆறு வெற்றிப் படங்களைத் தந்த உச்ச இயக்குநர். கீழே அவனது காரைத் துடைத்துக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
வசந்த் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். வதனியிடம் காதலைச் சொல்லிவிட்ட பின் நடக்க இருக்கும் முதல் சந்திப்பை எண்ணி எண்ணி அவன் மனம் பூரித்துப் போயிருந்தான். இருக்கத்தானே செய்யும்.. இந்தக் காதலைச் சொல்ல அவன் பட்ட பாடு. அவளை பின் தொடர்ந்த நாட்கள்.. நாளிகைகளுக்கு கணக்கே இல்லையே. அவளைக் காண..கோவில்கள்.. தெருக்கள். பள்ளிக்கூடங்கள் என்று அவன் அலையாத இடங்களும் இல்லை. சிங்கள இராணுவத்தின் அந்த பொம்பர் அடிக்குள்ளும்.. ஷெல் அடிக்குள்ளும் அவன் அவளைத் தேடிப் போன நாளிகைகள்.. அந்த நாளிகைகளில் மனம் கொண்டிருந்த அசாத்திய துணிச்சல்களை அவன் கண்டு வியந்திருக்கிறான். புலிப் போராளிகளுக்கும் இப்படித்தான் மண்ணின் மீது காதல் இருக்குமோ. அதனால் தான் சாவை எண்ணாது.. எதிரியைத் தேடிச் சென்றனரோ.. எ…
-
- 32 replies
- 4.8k views
-
-
கண்ணோடு காண்பதெல்லாம் ..... வினாயகம் வேகமாக வீதியோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தார். குளிர்கால ஆரம்பத்தின் அறிகுறியாய் மெல்லிய குளிர்காற்று சில் என்று முகத்தில் மோதியது. பாடசாலை ஆரம்பித்து விட்டதால் வீதியின் இருமருங்கும் பாடசாலை மாணவரின் அவசர ஓட்டமும், தம்மைக் காப்பகத்தில் விடுவதற்காக அழைத்துச் செல்லும் பெற்றவரின் கையை இறுகப் பற்றியபடி விழிகளில் வழியும் ஏக்கப் பார்வையுடன் செல்லும் மழலைகள் மறுபுறமும், எதையும் பார்க்கவோ ரசிக்கவோ நேரமின்றி கையில் கோப்பிக் கோப்கைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்குச் செல்வோரின் அவசரமும், வீதியில் வரிவரியாகச் செல்லும் வாகன வரிசைகளும் ரொறன்ரோவின் காலைநேரக் காட்சிகளாக கண்முன் விரிந்திருந்தன. வினாயகம் ஒருவினாடி தன…
-
- 22 replies
- 4.7k views
-
-
பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர். மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது. பிற்காலம் அநுராதபுரத்தில் இரு…
-
- 5 replies
- 5.3k views
-
-
கதலி - சிறுகதை எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: ஸ்யாம் சாதுலாலின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவரது வலது இமையை அவன் பார்க்க முயற்சிசெய்தான். சாதுலாலைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முதலில் தெரிவது, அவருடைய வலது இமையும் அதன் மேல் இருக்கும் மருவும்தான். சாதுலாலுக்கு பிறவியிலே வலது கண் இமைக்கு மேலாக மரு ஒன்று இருந்தது, அவருடைய அழகுக்குக் காரணமாக அமைந்தது. வயதான காலத்தில் அந்த மரு, பழுத்தக் கனி ஒன்று மரத்தின் கிளையில் இருந்து தொங்கிக்கொண்டிருப்பதுபோல, அவருடைய இமையில் இருந்து பூமியைப் பார்த்தபடி அல்லது சாதுலாலின் பெருவிரலைப் பார்த்து தலை குனிந்திருப்பதை, அவன் இரண்டு முறை பார்த்திருக்கிறான். ஹரிக்கு இரண்டு முறை சாதுலாலை அருகே சென்று…
-
- 3 replies
- 3.2k views
-
-
கதலியும் மாங்கனியும் மஞ்சள் பூசி, உடல் மினுக்கி, மாந்துணரில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மாங்கனியாள் மனதில் மட்டிட முடியாத மமதை! செக்கச் சிவந்த மேனி குறித்த செருக்கு! ஏனையோர் எல்லாம் எளியோர் என்ற எக்காளம்! வாய்க்கால் வழி ஓடிவரும் நீர் பருகி மதாளித்து வளர்ந்து நிற்கும் கதலி வாழைக் கனியாள்களுள் ஒருத்தி, அந்தக் கர்வம் பிடித்தவளிடம் ஒருநாள் கதைகொடுத்தாள். ‘முக்கனிக் குடும்பத்தின் மூத்தவளான உனக்கு, இவ்வளவு மூர்க்கம் ஏனக்கா?’ ‘முறைப்படி மணமாகி, மகரந்தச் சேர்க்கையால் தன் வயிற்றில் கருவாக்கி உருவாக்கி என்னைப் பெற்றெடுத்தாள், என் அன்னை. முறையான கருக்கட்டல் இன்றிக் கள்ளத் தனமாக உன் தாயால் பெற்றெடுக்கப்பட்ட கன்னிக் கனிகளடி நீங்கள். முறைதவறிப் பிறந்த உனக்கு எப்படியடி நான்…
-
- 5 replies
- 1.1k views
-
-
கதிரி எழுதியவர் மானிடப்பிரியன் "இப்பத்தான் வந்தனாங்கள். விசாவல்லோ தந்திற்றாங்கள். "அப்பா! இப்பதான் மனதுக்கு சந்தோசமாக இருக்கு. இதை எப்பவோ எடுத்திருக்கலாம். நீங்கள் பார்த்த வேலையால இவ்வளவு காலம்போச்சு. "அதுக்கு நாங்களென்ன செய்யிறது? அந்தாள் வெறியில பிறந்த திகதியை மாத்தி எழுதிப்போட்டுது. "அந்தாள் எழுதினால் உங்களுக்கு எங்க போச்சு? அறிவு திருப்பிக்கிருப்பிப் பார்க்கிறதில்லையே? ஏ. எல். படிச்ச அறிவாளி! "இதை எத்தனை தடவைகள் ரெலிபோனில சொல்லிப் பேசிப்போட்டியள்." அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள். என்ன செய்யிறது? நான் உங்களைப்போல அறிவாளியில்லைத்தான். எல்லாத்திற்கும் அம்மா சொன்னமாதிரி காலநேரம் வரவேண்டும். பாட்டி இஞ்ச ரெலிபோன் பில் …
-
- 5 replies
- 1.7k views
-
-
மனிதநேயம் என்றபெயரில் புகழ்ச்சி தேடும் கரங்கள் ******************************************* மாலைநேர வகுப்பிற்கு சென்றுவந்த மகள் அறைக்குள் சென்று சத்தமாக அடித்து கதவைச் சாத்துவது கேட்டது,ஒருநாளும் இப்படி கோபப்படாதவள்,இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறாள்..? ஏதோ நடந்திருக்கு என்று மட்டும் ஊகிக்க முடிந்தது என்னால்,போய் கதவில் தட்டி எழில் கதவைத்திறவம்மா என்று கூப்பிட்டேன்,வெளியே வந்தவள் அம்மா எனக்குப் படிக்கப்போக சைக்கிள் தேவை. யாரிட்டயாவது வாங்கித்தாங்கோ என்று உங்களிட்ட கேட்டனா.,?எனக்கு பள்ளிக்கூடத்துக்கும் பின்னேர வகுப்புக்கும் நடந்துபோகத் தெரியாதா என்று கேட்டாள்..? ஏன் பிள்ளை என்ன நடந்தது சொன்னால்த்தானே தெரியும் என்றேன்,எனக்கு சைக்கிள் தந்த போட்டோவை பத்திரிகையி…
-
- 11 replies
- 1.8k views
-
-
அவனது மாசறாட்டி நிறுத்தப்படுவதற்கு முன்னரே ஓடிவந்து காத்து நின்ற வலே சாவிகளைப் பற்றிக்கொள்ள, மகசீன் ஒன்றின் அட்டைப் படத்தில் இருந்து விழுந்தவர்களாக அவனும் அவளும் அந்த ஆடம்பர உணவகத்துள் நுழைகிறார்கள். மேற்றடீ ஓடிவந்து அவனது பெயரைக்கூறி அதியுச்ச மரியாதையினை உடல்மொழியில் காட்டி வரவேற்று, அவளையும் குழைந்து, அவர்களது இருப்பிடம் அழைத்துச் செல்கின்றான். உணவகத்தில் அமர்ந்திருந்த அவனை ஒத்த தரத்தினர் உடல்மொழியில் அவன் தங்கள் தரத்தவன் என்பதை காட்டிக்கொள்கின்றனர். பலர் அவனின் தம்மை நோக்கிய பார்வையினைத் தமக்கான அங்கீகாரமாகக் கருதுவது வெளிப்படையாய்த் தெரிகிறது. அவனும் அவளும் அமர்ந்து கொள்கின்றனர். ஆர்மானி சூட்டின் பொத்தானைக் கழட்டியபின் ஒரு கையின் கவ்ளிங்ஸ்சை மறுகரத்தால் உறுட்டியபடி அவ…
-
- 24 replies
- 1.9k views
-
-
-
பிரபஞ்சனின் சிக்கின் பிரியாணியும் சிறிதேவி சினிமாவும் என்ற கதையை ஒரு எழுத்தாளனின் பார்வையினூடாக கேட்கலாம் -தியா -
-
- 0 replies
- 704 views
-
-
கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
-
- 0 replies
- 793 views
-
-
கதை சொல்லவா? (06)/ சிறுகதை/ யாழ் சுமந்த சிறுவன்- தீபச்செல்வன்/ திரு தியா காண்டீபன் தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை
-
- 0 replies
- 673 views
-
-
-
- 0 replies
- 903 views
-
-
கதை சொல்லவா? (08)/வெறும் நாய் - கு. அழகிரிசாமி/ திரு தியா காண்டீபன்
-
- 0 replies
- 946 views
-
-
ஜுன் 20 / உலக அகதிகள் தினம் ========================= ஈழத்தமிழ் அகதிகளின் வலிகளைக் சொல்லும் தமிழ்நதி அவர்களின் "என் பெயர் அகதி" சிறுகதை
-
- 0 replies
- 709 views
-
-
-
- 46 replies
- 4.3k views
-
-
எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.
-
- 0 replies
- 585 views
-
-
ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான். “ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்…
-
- 3 replies
- 4.7k views
-
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கடலோடி கழுகு --------------------------- சூர்யா -------------- கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி. அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கி…
-
- 4 replies
- 3.4k views
-