கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அது ஒரு கோடைகாலத்தின் மாலை நேரம். சூரியன் பகல் நேரத்துச் சந்திரனைப் போல வானத்தில் வெள்ளயாகத் தன்னை, அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டிருந்தது. கலங்கிய வண்டல் மண் கலந்து மஞ்சள் நிறத்துடன் 'தேம்ஸ் நதி' அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. சந்திரன், அந்த நதிக்கரையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதிரையில் இருந்தவாறே, கலங்கியிருந்த நதியின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில், அடர்த்தியாகத் தாடி வளர்ந்திருந்தது. அவனருகில் ஒரு சிகரெட் பெட்டியோன்று, தனது வாயை அகலத் திறந்த படி, வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கச் சுருள், சுருளாகப் புகை வளையங்கள், அவனது வாயாலும் மூக்காலும் வந்து கொண்டிருந்தன. அங்கு வந்த சில ஜப்பானியர்களுக்கு, அவனது இருப்பு ஒரு இடைஞ்சலாக …
-
- 19 replies
- 1.9k views
-
-
இது எனது கதை இல்லை படித்ததை பகிரும் அரிப்பால் உருவானது .இனி ........................................... இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு. ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம். ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே. என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடா…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஜல்லிக்கட்டு... (1)... எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. 10 மணிக்கே ரோடு வெறிச்சோடிப் போயிருந்தது, ராக்காயியின் இட்லிக் கடையில் மட்டும் கொஞ்சம் கூட்டம் சொச்சமிருந்தது. தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரையின் தெருக்களில் வண்டிகள் தங்கள் டயர்களை செலுத்தி ஒவ்வொரு வீட்டு வாயிலில் போட்ட கோலத்திற்குள் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. பிள்ளைகள் ரோட்டில் ரெயில் வண்டி விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருமுனையில் இளைஞர் சங்கத்தில் தனுஷ் கொலைவெறிப்பாடலை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார். ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லை பூச்சாண்டிகிட்டே பிடிச்சிக்கொடுத்திடவா என்று குழந்தையிடம் போரா…
-
- 4 replies
- 1.9k views
-
-
நினைவுகள் நிஜமாகிறது அந்தத் தரிப்பிடத்தையும் கடந்து பஸ் சென்று கொண்டிருந்து வழக்கமாக இந்தப் பஸ்ஸில்தான் அந்தப்பெண்ணும் பயணம் செய்வாள். ஆனால் இன்று அவளைக் காணாதது சந்துருவின் மனதுக்குள் ஏதோ மாதிரியாக இருந்தது. அந்தப் பெண் இந்தப் பயணப்பொழுதுகளில் மிகவும் வாட்டசாட்டமாகவே காணப்பட்டாலும் அவளது உள்ளத்திலே ஏதோ ஒரு சோகம் குடிகொண்டிருப்பதை மட்டும் அவனால் ஊகித்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. தினமும் அவனுடன் பயணம் செய்யும் அப்பெண்ணோடு அவன் இதுவரை கதைத்ததில்லை. ஆனால் கண்கள் கதை பேசி உதடுகள் உண்மை சொல்ல மறுத்து புன்முறுகல் செய்த நாட்கள் பலவுண்டு. ஆயினும் எப்படியாவது அப்பெண்ணுடன் கதைக்கவேண்டும்.. போல் சந்துருவின் மனம் தவித்தது. இருப்பினும் முன்னுக்குப் ப…
-
- 3 replies
- 1.9k views
-
-
தேவகியும் வந்து சேர்ந்து விட்டாள். வாழ்க்கையில் ஏதோ அர்த்தம் பொதிந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது. வெளி நாட்டு மருத்துவர்களுக்கான 'மொழிப் பரீட்சை'யிலும் சித்தியெய்தி விட்டாள். தேவகி வந்ததும் தனியாக ஒரு சிறிய வீடொன்று வாடகைக்கு எடுக்க வேண்டி ஏற்பட்டதால். செலவுகளும் அதிகரித்து விட்டது. தேவகியின் சில சொந்தங்களும், அடிக்கடி வந்து போகத் தொடங்கின. அவர்கள் கன காலத்திற்கு முன்பு இங்கு வந்தவர்கள்.அவர்களது 'சமூக அந்தஸ்து' மிகவும் உயர்ந்ததாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தேவகியின் காதில் அடிக்கடி குசு குசுப்பார்கள். இதனைப் பெரிதாகச் சந்திரன் கணக்கில் எடுக்கவில்லை. சில வாரங்கள் கழிந்ததும், தேவகிக்கு 'பெர்மிங்கம்; என்னும் இடத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அவளது வேலையி…
-
- 17 replies
- 1.9k views
-
-
லட்டு - ஜி.கார்ல் மார்க்ஸ் ஓவியங்கள் : செந்தில் இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்குமுன்பு, நீங்கள் இந்த ‘லட்டு’ எனும் வார்த்தையை எவ்வாறு உச்சரித்தீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘ட்’ அப்புறம் ‘டு’ என்கிற வார்த்தைகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து அதை உதிரச்செய்து விடாமல் ‘Latdu’ என மென்மையாக, அதேசமயம் Laddu என்று நீர்த்துப் போனதாகவும் அல்லாமல், வாஞ்சையாக அதை உச்சரிக்க முடிந்தால், இந்தக் கதை உங்களுக்குப் பிடித்துவிடும். “மென்மை, வாஞ்சை போன்ற வார்த்தைகள் ரொம்பவும் க்ளிஷேவானவை ஆயிற்றே... எதற்காக ஒரு கதையை இப்படித் தொடங்குகிறான்...” என்று உள்ளுக்குள் எழுந்துவரும் எரிச்சலை மறைத்துக்கொண்டு, “சரி சரி... மேலே சொல்...” என்று வாசிப்பதைத் தொடர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
பாடசாலை விடுமுறை என்றபடியால் சிவகுமார் தனது குடும்பதாருடன் விடுமுறையை செலவிட பிரபல சுற்றுலா மையதிற்கு சென்றிருந்தான் சிறுவர் அதிகம் விரும்பும் சிறுவர் விளையாட்டிற்கு டிக்கட் எடுத்து அவனும் மனைவியும் வெளியில் இருந்து அவர்களை கவனித்து கொண்டு இருந்தார்கள். " காய் யூ ஆர் மிஸ்டர் சிவகுமார் வுரோம் ஜவ்னா "என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க திடுகிட்டவனாய் யேஸ் என்றான் சிறிது நேரம் முழித்து கொண்டு இருந்த சிவாவை பார்த்து நான் தான் சந்திரவதனி உங்களுடன் படித்தனான் நினைவில்லையா என்று கேட்டா பிறகு தான் அவளை அடையாளம் காணமுடிந்தது சிவாவிற்கு.சிவா தனது கீதாவிற்கு சந்திரவதனியை அறிமுகபடுத்திவிட்டு மூவரும் கதைத்து கொண்டிருந்தார்கள் "சிவா நீங்கள் அப்படியே பாடசாலையில் படிக்கும் போது இருந்த …
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆனந்த குமாரசாமி முகாமின் K வலயத்தின் அந்த வீடுக்கு முன்னால் வரிசையாக சனம். அதில் ஒருவராக நானும் அக்காவும். ஏதோ நிவாரணத்துக்கான வரிசையோ, அல்லது இராணுவம் பதிவு செய்யும் வரிசையோ இல்லை. எல்லோருடைய கையிலும் ஒரு வெத்திலை. அந்த வெத்திலை கூட அந்த வீட்டுக்கு முன்னால் இருக்கும் கடையில் தான் வாங்கபட்டது. கொளுத்தும் வெய்யிலை பொருட்படுத்தாது சனம் வரிசையில் ஊர்ந்தபடி இருந்தார்கள். இது என்ன எங்களுக்கு புதுசே கிளிநொச்சியிலே இருந்து எதுகெடுத்தாலும் வரிசை தானே. "அக்கா எனக்கெண்டால் இதிலை கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை வா போவோம்." "கொஞ்சம் பொறுடா எல்லாரும் இந்த சாத்திரி உண்மை சொல்லுறான் என்று தானே இவ்வளவு கூட்டமா நிக்கிறாங்கள். கொஞ்சம் பொறு வந்தது தான் வந்தோம் ஒருக்கா கேட்டிட…
-
- 8 replies
- 1.9k views
-
-
மான்டேஜ் மனசு 8 - விண்ணைத் தாண்டி வருபவர்கள்! ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான். டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான். ''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான். என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஸீட்! தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் ரமேஷ்! - கண்ணன் பணம் பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்... இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத டீச்சர்! - கட்டுமாவடி கவி கண்மணி தமிழன்டா! சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்... “அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!” - சுந்தரம் ராமசாமி திருட்டு! ``பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க’’ எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், `‘திருடுறது தப்பு... `பென்சில் வேணும்’னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொ…
-
- 0 replies
- 1.9k views
-
-
கல்பனா ஒரு காவியம் ......... அந்த சிற்றூரின் அமைதியை கிழித்து கொண்டு இழவு வீட்டின் பறையொலி ....கேட்டது. அந்த ஊரின் இளைப்பாறிய வைத்தியரின் வளர்ப்பு மகள் இறந்து விடாள். அவள் தான் கல்பனா . கல்பனா , மிகவும் அழகான் சிறு பெண் .நான் என் இள ம வயதில் கண்ட போது வைத்தியரின் வேலைகார சிறுவன் ,இவளின் பாடசாலை ப்பை , தண்ணீர் போத்தல் என்பவற்றை தூக்கி கொண்டு , வெயிலுக்கு மறைப்பாக கையில் குடை பிடித்த படி அழைத்து செல்வதை பார்த்திருக்கிறேன். அவள் ராணி மாதிரி வருவாள். வைத்தியர் செல்வராஜா , மனைவி கமலாவுடன் அந்த ஊருக்கு மாறலாகி வந்தபோது சிறுமி கல் பனா மூன்று வயதிருக்கும் .கால போக்கில் அந்த வைத்தியர் ஊர் மக்களுடன் உறவாடி ஒரு அங்கத்தவர் ஆகினார் .பேச்சு வாக்கில் அவருக்கு குழந்…
-
- 6 replies
- 1.9k views
-
-
மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு ''முன்னாடி மாசத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவே. இப்போ ரெண்டு மாசம் ஆனாலும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேங்குறியே ராசா.'' ''சீக்கிரம் வர்றேன் பாட்டிம்மா''. ''ஊர்ல மாரியம்மன் திருவிழா. ஒரு எட்டு வந்துட்டுப் போகலாம்ல.'' ''சரிம்மா. அவசியம் வர்றேன்.'' பாட்டியிடம் போனில் பேசியதில் இருந்து எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருவிழா என்பதால் ரொம்ப நாளாய் பார்க்க முடியாத நண்பர்களையும் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஊருக்குச் சென்றேன். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது. என் நண்பர்கள் நால…
-
- 0 replies
- 1.9k views
-
-
செஞ்சோலை -என் ஞாபகப்பதிவிலிருந்து ஒரு பேப்பரில் இருந்து சுதந்திரா http://www.orupaper.com/issue53/pages_K__Sec2_34.pdf http://www.orupaper.com/issue53/pages_K__Sec2_35.pdf
-
- 4 replies
- 1.9k views
-
-
மான்டேஜ் மனசு 1 - அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்! | நிஜம் - நிழல் - புனைவு அடங்கிய புதிய ஆன்லைன் தொடர் | ஆறு வருடங்கள் கழித்து அவளிடமிருந்து இப்படி போன் கால் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ'' குரல் கேட்ட சில நொடிகளிலேயே அவள்தான் என்பதை உணர முடிந்தது. ஆனால், நம்ப முடியாதவனாய் சிறிது நேர மவுனத்துக்குப் பின் ஹலோ என்றேன். பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, எதையோ சொல்ல வந்தவள் தயங்கித் தயங்கி நின்றாள். அந்த ஒரு நிமிடத்துக்குள் நான் அவளை... முதன்முதலாகப் பார்த்த 22 வயசுப் பையனாகவே மாறியிருந்தேன். நெருடல் உடைத்து சரளமாகப் பேசினேன். ''மணி கிட்டே பேசினேன்'' என்றாள். …
-
- 0 replies
- 1.9k views
-
-
செங்கற்களாலான பழையது என்றோ, புதியது என்றோ கூற முடியாத நடுத்தரக் கட்டிடம். சீமெந்தால் அழுந்திப் பூசாமல், செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீமெந்தால் ஒட்டியதுபோன்ற வெளித் தோற்றச் சுவர்களாலான கட்டிடம். மூன்று மாடிகள். ஒவ்வொரு மாடியிலும் மும்மூன்றாக மொத்தம் பன்னிரண்டு வீடுகள் அந்தக் கட்டிடத்துக்குள் அடக்கம். அதில் ஒரு வீடு வெறுமையாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, வெளிநாட்டவருக்கு, அதுவும் ஆசிய நாட்டுக் கறுப்பினத்தவனுக்கு வாடகைக்குக் கொடுப்பார்களா என்று குழம்பி, தயங்கி, எதற்கும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு, அது சரிப்பட்டு, ஏதோ சாதனை புரிந்த பெருமிதத்துடன் அங்கு குடிவந்து ஒரு மாதந்தான் ஆகிறது. அருகில் சிறுவர்கள் விளையாடவென அமைக்கப்பட்ட சாதனங்களுடன் கூடிய பொழ…
-
- 15 replies
- 1.9k views
-
-
அப்பா ‘‘பா.... மழ நின்னுடுச்சுப்பா... பட்டாசு வெடிக்க போகலாம். வாங்கப்பா...’’ கதிரவனின் கையைப் பிடித்து மழலை மொழியில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஐந்து வயது லிஜி. எதையும் கண்டுகொள்ளாத மாதிரி சிலையைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘வாங்கப்பா... நாளைக்கு தீவாளிப்பா. ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இப்பவே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...’’ பக்கத்து தெருவுக்கு கேட்கிற மாதிரி கத்தினாள் லிஜி. அப்போதும் கல்லைப் போல வெறுமனே அமர்ந்திருந்தான் கதிரவன். ‘‘அப்பாவால இப்ப வரமுடியாது செல்லம்... அம்மாவை கூட்டிட்டு போ’’ தொய்வான குரலில் கதிரவன் சொல்லச் சொல்ல அணுகுண்டின் வெடிச் சத்தம் காதைப் பிளந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு கதற…
-
- 0 replies
- 1.9k views
-
-
அதிதி நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: ஸ்யாம் இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது. காற்றின் போக்குக்கு ஏற்ப, சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டியின் தாள்கள் அசைந்துகொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந் தவர்களை போர்வைக்குள் இருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்த வர்கள் மீது நீல வண்ணம் கவிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து அவரின்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இணைவு - ஜெயமோகன் [1 ] கொல்லம் படகுத்துறையில் இறங்கி நேராக என் சாரட் நோக்கி ஓடினேன். ஸ்காட் மிஷனில் இருந்து எனக்காக அனுப்பப் பட்டிருந்த வண்டி.என்னுடன் என் பெட்டியை தூக்கியபடி மாத்தன் ஓடிவந்தான். நான் மூச்சிரைக்க ஏறி அமர்ந்ததும் அவன் பெட்டியை என் அருகே வைத்தான். வண்டிக்காரன் மாத்தனிடம் “எங்கே?” என்றான். நான் உரக்க “பன்னிரண்டாம் ரெஜிமெண்ட்… பன்னிரண்டாம் ரெஜிமெண்டின் தலைமை அலுவலகம்” என்றேன். அவன் திரும்பி “பொதுவான வண்டிகளை உள்ளே விடமாட்டார்கள்” என்றான். “என்னிடம் கர்னல் மெக்காலேயின் ஆணை இருக்கிறது… போ” என்று நான் சொன்னேன். மாத்தன் “டாக்டர் அலெக் பெய்ன்ஸ்” என்று முறைப்படி அழைத்தான்.“நான் இப்போது என்ன செய்யவேண்டும்?” “நீ மெதுவாக அங்கே வா…
-
- 4 replies
- 1.8k views
- 1 follower
-
-
புதுச்சப்பாத்து... (இந்தவார ஒருபேப்பரிற்காக எழுதியது) தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெ…
-
- 11 replies
- 1.8k views
-
-
பேரழகியின் புகைப்படம் - நாராயணிகண்ணகி ஞாயிறன்று அம்மாவுடன் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். மணமகன் தேவையில் லதாவின் புகைப்படத்தைப் பார்த்த அம்மா உறைந்த மாதிரி ஆகிவிட்டாள். கண்கள் பழைய நினைவுகளுக்கு ஓடி விட்டது. என்றாலும் எதையோ வென்றுவிட்ட ஆர்ப் பரிப்பு மௌனத்திலும் வெயிலாய் சுட்டிருக்க வேண்டும். அடுத்த நபரின் புகைப்படம் தொலைக்காட்சியில் வந்தும் நெஞ்சில் லதாவின் பிம்பம் அகலவில்லை. தேவதை என்று சொல்வதை விட மேலான வார்த்தை உண்டா? அழகி எனும் சொல்லிற்குள் சுருக்கி விட விருப்பம் இல்லை. பேரழகி என்று சொல்வதே குறைவான மதிப்பீடு போல்தான் படுகிறது. அழகு என்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் விளக்கங்கள். அந்த ஆயிரங்களையும் தாண்டும் சில அழகுக்குறிப்புகள் இருக்கிறது. கா…
-
- 1 reply
- 1.8k views
-
-
நேரம் போய் விட்டதை அப்பொழுது தான் உணர்ந்தான் .அதை துரத்தி பிடிக்கும் நினைப்பில் அவசரத்தில் அவன் செய்யும் காரியங்களை பார்க்க அவனுக்கே ஒரு நகைப்பாக இருந்தது.ஒரு கணம் சுதாகரித்து தனது அடுத்தடுத்த வேலைகளை செய்ய தயாரானவனை றேடியோவில் சரியாக இப்ப ஏழு மணி என்று கொண்டு இசை முழக்க பரிவாரங்களுடன் வந்த கே.எஸ் ராஜா இடை மறித்தார்.கிழக்கு பறவை மேற்கு வானில் பறக்க பார்க்குது என்று ஏதோ சொல்லி ஓடாத படத்தை ஓட்டுவதற்க்காக கூவுவதை பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது .உந்த வானொலி நிகழ்ச்சி முடிய அரை மணி நேரம் எடுக்கும் அதுக்கு முதல் அவன் அந்த எக்ஸ்பிரஸ் பஸை பிடிக்கவேண்டும் அதற்காக அந்த அரை மணித்தியாலத்துக்குள் கால் மைல் தூரத்தில் உள்ள சந்தியை அடைந்தே தீரவேண்டும் அதுக்குள் எல்லாம் முடிக்கவேண்டும்…
-
- 20 replies
- 1.8k views
-
-
நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர் நிலையை அடைந்து விடலாம். ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப் பயிற்சி முதலியவற்றில் நெடுங்ககாலம் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். ஆத்திரத்துடன், 'என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்' என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார். யோகி அல்லவா!…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரபு போட்ட திட்டம் பலிக்கத் தொடங்கியது, இருவரும் ஒரு நன்நாளில் கடை திறந்தார்கள் வியாபாரமும் நன்றாக நடந்தது காலங்கள் ஓடிக்கொண்டே இருந்தன விஷ்ணுவுக்கு அவனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள், திருமணம் முடிந்து ஆறுமாதம் கூட ஆகவில்லை விஷ்ணுவின் மனைவி வைதேகி உன் பெற்றோருடன் இருக்க முடியாது ஒன்றில் நான் இருக்க வேணும் இல்லாட்டி அவை இருக்க வேணும் என்றாள் விஷ்ணு என்ன செய்வதென்று யோசித்தான் மோகம் அவன் கண்களை மறைத்தது தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவெடுத்தான், ஒரு அநாதையான தன்னை எடுத்து வளர்த்து ஆளாக்கிப் பார்த்த தன் பெற்றொருக்கு துரோகம் செய்தான் அவர்கள் எவ்வளவு சொல்லியும்,கெஞ்சியும் கேட்காமல் மனைவி சொல்லே மந்திரம் என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து …
-
- 2 replies
- 1.8k views
-
-
நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
விமல் போத்தலை ஓப்பின் பண்ணச் சொன்னதும் சற்றுக் குனிந்து முன்னாலிருந்த 'ரெமி மார்ட்டின்' போத்தலை எடுத்துத் திறந்து இரண்டு கிளாஸிலும் பாதியளவுக்குக் கொஞ்சங் குறைவாக விஸ்கியை ஊற்றினான். "மச்சான் உனக்கு ஏற்ற மாதிரி கோக் மிக்ஸ் பண்ணடா" என விமலிடம் சொன்னவன்... தனது கிளாஸிற்குள் நாலைந்து ஐஸ்கட்டிகளை மட்டும் எடுத்துப் போட்டுக்கொண்டான். அப்படிக் குடிப்பதுதான் அவனது வழக்கமாயிருந்தது. தனது கிளாஸிற்குள் கோக்கைக் கலந்தபடியே... "அஞ்சலிக்கும் உனக்கும் என்ன மச்சான் நடந்தது...?" என அவனைப் பார்க்காமலேயே கொஞ்சம் தாழ்ந்த குரலில் பேச்சை ஆரம்பித்தான் விமல். அவன் அவ்வாறு கேட்டதும், வழக்கமான 'சியர்ஸ்' எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் தனது கிளாஸை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சியபடியே வ…
-
- 6 replies
- 1.8k views
-