Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. சாபத் நாளில் மட்டும் நடேசன் ( ஆஸ்திரேலியா ) அவுஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து வந்த பின்னர் உணவு விடுதி, தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் முதலான சில இடங்களில் பலரோடு பணியாற்றியிருக்கின்றேன். இந்தப் பணிகள் மிருகவைத்தியராக என்னை நான் இந்த நாட்டில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக இடைக்காலத்தில் மேற்கொண்டவை. இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை கவனித்தவாறு எனது துறையில் படிப்பது என்பது, கடலில் தனியாக படகைச் செலுத்தியபடி வலைவீசி மீன்பிடிப்பது போன்றது. இலங்கையில் ஐந்து பேருக்கு மேலதிகாரியாகவும் கார், மோட்டார் சைக்கிள் என வைத்திருந்து விட்டு சமையலறையில்; வேலை செய்வது இலகுவானதாக இருக்கவில்லை. சப்பாத்தி வட்டமாக போடத் தெரியவில்லை என்று ஒரு பஞ்சாபி முதலாளியிடம் ஏச்சு …

  2. மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும் ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் இரண்டு புத்தகங்கள் மலையாள மூலம் : அசோகன் செருவில் தமிழில் : சுகானா மறுநாள் இரவு தான் கொ…

    • 4 replies
    • 2.8k views
  3. வெளிச்சம் ஜாக்கிரதை திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிரச்னை ஏதும் தோன்றவில்லை. அதன் பிறகு ஓர் இரவு கடிகாரத்தைப் பார்த்தேன்... மணி இரண்டு. அடுத்த இரவு எழுந்தேன்... மணி இரண்டு. அடுத்த இரவு, அடுத்த இரவு... என வாரக்கணக்கில், மாதக்கணக்கில் போய்க்கொண்டிருந்தது. எது காரணமாக இருக்கும்? சீக்கிரம் சாப்பிட்டுப் படுத்தேன். அப்போதும், இரண்டு மணி. தாமதமாகச் சாப்பிட்டுத் தூங்கப் போனேன். அப்போதும் இரண்டு மணிக்கு விழிப்பு வந்தது. என் படுக்கையை திசை மாற்றிப் போட்டேன். இரண்டு தலையணைகள் வைத்துப் பார்த்தேன். தலையணையே இல்லாது படுத்துப் பார…

  4. மீதமிருக்கும் கனவுகளின் ஈரம் ஜிஃப்ரி ஹாசன் களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன் ஒருவனை அநேகமாக சந்திக்கச் செல்வது வழக்கம். அவனும் அதை விரும்பி இருந்தான். எனது பல்கலைக் கழகத் தோழியான மிதிலா பாணந்துறையைச் சேர்ந்தவள். அவளது ஊரைக் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் பாணந்துறை வரும் போது எனக்குள் பதட்டமும் ஒருவித சோகமும் கவிழ்ந்து கொள்கின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னால் அந்த ஞாபங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பது ஓர் ஆழமான அர்த்தத்தில் நான் தோற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன்.…

  5. நியூ யார்க் பயணக் கட்டுரை - 1 மெமோரியல் டே மே 26 அமெரிக்காவில் கொண்டாட படுவதால் அந்நாள் விடுமுறை. ஒரு வருடத்தில் மிக குறைந்த நாட்களே தேசிய விடுமுறையாக US ல் அனுசரிக்க படுகிறது. அதனால் இந்த விடுமுறையை வீணடிக்காமல் நியூ யார்க் நகரம் செல்ல முன்கூட்டியே நானும் மனைவியும் திட்டமிட்டுவிட்டோம். மே 21 கிளம்பி வழியில் ஓர் இரவு தங்கி விட்டு மொத்தம் ஐந்து நாட்களும் நியூ யார்க்கில் கழிக்க திட்டம். நியூ யார்க் நகரத்தில் தாங்கும் விடுதிகளின் வாடகை அதிகம் இருந்ததால் நியூ யார்க் நகர எல்லையில் இருக்கும் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ஆரஞ்சு என்னும் இடத்தில் விடுதி முன்பதிவு செய்து விட்டோம். மே 21 2 மணி அளவில் அலுவகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி வந்துவிட்டேன். மதியம் 2:30 மணிக்கு…

  6. சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். '' 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக ராஜ்ஜியங்கள் பிரிக்கப்படாத காலம். என் அம்மா சரஸ்வதிக்கு 18-வயதில் திருமணமாகி 19-வயதில் நான் பிறந்ததாகச் சொல்வார்கள். சொந்த ஊர், ஆர்யநாடுக்கு அருகிலுள்ள குன்றின் மேல் இருக்கும் நெடுங்காடு. எனக்கு ஏழுவயசு இருக்கும்போது அம்மா, தன் ஊருக்கு அழைத்துப் போனார்கள். அழகிய வயல்வெளி, அடர்ந்த மரங்கள், தென்னை, வாழை, மா, பலா தோப்புகள் கொண்ட நிலம், நூறு அடியில் அழகிய சிறு குட்டை என சாலை வசதிகள் இல்லாத கிராமம். வீடுகள் கூட நூறு அடிக்க…

    • 1 reply
    • 1.4k views
  7. மனித யந்திரம்-புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 ) 1 ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கர…

    • 0 replies
    • 996 views
  8. மழைக்கால இரவு. - தமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான 'மழைக்கால இரவு' இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். - பதிவுகள் - அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிரு…

  9. உபச்சாரம் பொ.கருணாகரமூர்த்தி அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்……. இந்த மாதம் நீ வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்………… ”என்றான் “ஓ……..ஜா…..!” மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான். இரவுமுழுதும் மனைவி லதாவுடன் ஃப்ரான்ஸுக்குப் போவதா, இல்லை சுவிஸுக்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. ஃப்ரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம். கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும…

  10. Started by Athavan CH,

    யுத்தம்- லூய்கி பிரண்ட்லோ (luigi pirandello) தமிழில் நிருத்தன் ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை – பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் – ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த பருமனான பெண்மணி நிமிர்த்தி திணிக்கப்பட்டு ஒரு துணிமூட்டையைப்போல வந்து விழுந்தாள். அவளைத் தொடர்ந்து குட்டியான மெலிந்திருந்த வெறைத்து செத்த முகமும், பேயறைந்தவர்களுக்கான சுவாசமும்.. பளிச்சென மின்னும் விழிகளோடும் அவள…

    • 0 replies
    • 2.4k views
  11. மீன்பிடிப்படகு நீர்கொழும்பில் இருந்து புறப்படுகிறது. உடப்பைச் சேர்ந்த தமிழ்.. முஸ்லீம் இளைஞர்களும்.. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களும்.. தென்பகுதியையைச் சேர்ந்த சிங்கள..இளைஞர்களுமாக.. மொத்தம் 30 பேர் வரை அதில் பயணிக்கிறார்கள். எல்லாரும் குடும்பக் கஸ்டம் காரனமாக.. கடனை உடனை வாங்கி கப்பல் ஏறியவர்கள் தாம். எல்லாருக்கும் கனவு இத்தாலியைச் சென்றடைவதும்.. பின் அங்கு செல்வம் சேர்ப்பதும்.. பின் குடும்பம் குழந்தை என்று.. பெருகி அந்த நாட்டில் நிரந்தரக் குடிகளாகி.. வாழ்வதும்.. வெறும் பந்தாவுக்கு ஊருக்கு ஹொலிடே போவதும் தான். ஆரம்பத்தில் படகுப் பயணம் உற்சாகமாக இருந்தாலும்.. போகப் போக.. அச்சம் கலக்க.. படகும் எங்கெங்கோ எல்லாம் திக்கு திசை மாறிப் போய் 40 நாட்கள் முடிவில் இத்தா…

    • 22 replies
    • 3.3k views
  12. விடுதலைப்புலிகளுக்கும், இரணில் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமாதான காலப்பகுதியில் வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டினை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த இரு சிங்கள ஊடகவியளாளர்கள் பார்வையிட்டார்கள். அவர்களை தமிழ் ஊடகவியளாளர் ஒருவர் அவ்விடத்துக்கு கூட்டிவந்திருந்தார். சிங்கள ஊடகவியளாளர்கள், சிங்களத்தில் தங்களது சந்தேகங்களைக் கேட்க , தமிழ் ஊடகவியளாளர் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். பிறகு அவர்கள் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவு இடமான தீருவிலுக்கு சென்றார்கள். அங்கே ஒரு 11 வயதுமிக்க சிறுவன் ஒருவன், அவ்விடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தான். சிங்கள ஊடகவியளாளர் ஒருவர் சிங்களத்தில் அச்சிருவனைப்பார்த்து ஏன் இவர்கள் இறந்தார்கள் என்று கே…

    • 5 replies
    • 2.3k views
  13. அண்மையில் உளுறு என்ற மத்திய அவுஸ்திரெலியாவின் நகரமொன்றுக்கு சென்றிருந்தேன். மாலைநேரம் அங்கு தங்கிய விடுதியில் இருந்த நீச்சல் குளமொன்றினைச் சுற்றி அமைந்துள்ள கதிரையொன்றில் இளைப்பாறிக்கொண்டிருந்தேன். ஒரு 7 வயதுடைய அவுஸ்திரெலியா ஆதிவாசிகளின் இனமான அபோரிஜினல் இனத்தினைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி , ஒரு வெள்ளைக்கார சிறுவனுடன் நீரினில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுவனுக்கும் 7 வயது இருக்கும். அவர்களின் உரையாடலின் மூலம் அச்சிருமியை, வெள்ளைக்காரக் குடும்பம் சொந்தப்பிள்ளையாக வளர்த்து வருவதை அறிந்தேன். சிறுவனும் சிறுமியும் அங்குதான் முதலில் சந்தித்ததை உணர்ந்தேன். அவர்களின் உரையாடல்களில் சில சிறுவன் - அவுஸ்திரெலியா தினத்தினை நீ கொண்டாடுகிறாயா?. சிறுமி --…

  14. இன்றுடன் ஆறாவது நாள் நான் கடைசியாக சாப்பிட்டு. பச்சைபுல்மோட்டையின் அக்கரையில் காவலரணில் காத்திருக்கும் போராளிகளுள் ஒருவன் நான். வயிறு மூன்றாவது நாளாக என்னுடன் பேசுகிறது. வாயில் ஏதோ ஒரு கசப்புணர்வு. பற்களின் ஈறுகளில் இருந்து வடியும் குருதியை என் நாக்கும் இலையான்களும் போட்டி போட்டுகொண்டு உறிஞ்சுகின்றன. கண்களில் இமைகளுக்கு மேலே ஆயிரம் குண்டுசிகளால் குற்றுவது போன்ற ஒரு வலி. ஒற்றை தலைவலி.மூன்று ஆடிலேறி குண்டுகள் தலைக்குள் இறங்குவது போல ஒரு வலி. வயிற்றின் ஓசையை அடக்க இருந்த ஒரே நீல நிற சாரத்தினை முன்னால் ஓடும் நீரிலே நனைத்து கட்டியிருந்தேன். அதையும் மீறி வயிறு பேசியது. இனி அந்த சரத்தை இறுக்க வயிற்றிலே இடமே இல்லை. T-56 சுடுகருவியின் காட்டியினூடு எதிரி…

  15. எர்னெஸ்ட் பக்லர் தமிழில் : ராஜ் கணேசன். இறுதிச்சடங்கு நடப்பதற்கு முந்தைய நாள் மாலை நானும் எனது அக்காவும் வயல்வெளியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தோம். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வருபவர்கள், தங்கள் சிறுவயது நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பது போல நாங்கள் எங்கள் இளம்பிராயத்து நினைவுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அக்கா என்னிடம், “ஒரு நாள் மதியம் நீ தொலைந்து போனதாக நினைத்து நாங்கள் தேடினோமே உனக்கு நினைவிருக்கிறதா?” என என்னைப் பார்த்து கேட்டாள். எனக்கு அது நன்றாகவே நினைவிருந்தது. அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும். “அன்று நாங்கள் உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா.. ஜெப வீடு, ப்ளுபெர்ரி தோட்டம், இவ்வளவு ஏன் கிணற்றி…

    • 0 replies
    • 1.8k views
  16. இந்நாடகத்திற்காக youtubeஇல் வந்த சில பின்னூட்டங்கள் 1.எமது கலைஞர்களின் வலியை சொல்லும் ஒரு அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி சித்தப்பா.ஒவொரு ஈழத்து கலைஞனின் கஷ்டங்களையும் அற்புதமாக காட்டியுள்ளீர்கள்.வாழ்க உங்கள் கலைப்பணி .எனது சிறு கருத்து இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.உண்மையான ஒரு விடயத்தை வழங்கியமைக்கு நன்றிகள் 2.அருமை பாஸ்கி! உங்களைப்போன்ற யதார்த்தமான கலைஞர்கள் எங்கள் சமூகத்துக்கு மிக மிக அவசியம். நகைச்சுவையாக அதேசமயம் சிந்திக்க வைக்கும் அற்புதமான படைப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள்! தொழிநுட்பத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மிக மிக அபாரமாக இருக்கும். எதிர்காலத்தில் கவனிக்கவும்! 3.ஸ்ரீ அண்ணா மிகவும் அருமையா …

    • 2 replies
    • 1.5k views
  17. Started by Athavan CH,

    கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன். திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக் கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டிற்குத் திருடச்செல்வார்கள். திருடிய பொருட்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு விடிந்த பின்னர் வீடு திரும்புகையில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைத்தும் வேறு சிலரால் களவாடப்பட்டு இருக்கும். இது போலத் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் திருடிக் கொண்டிருந்தார்கள். இப்படியே அனைவரும் மகிழ்ச்சியாக அந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தனர். யாருக்கும் எந்த இழப்பும் குழப்பமும் இல்லை. தங்கள் வீட்டில் ஏதேனும் களவு போனால் அடுத்த வீட்டிலிருந்து திருடிக்கொள்ளலாம் …

  18. "இன்னொரு இடத்தில் பேசுதல்..." உலோகத்தின் எழுத்துக்கள் கற்சுறா இடங்களில் காவிழாய்ச் செடிகள் முளைத்திருந்த இடங்களில் தகரைப்பற்றைகள் முளைத்திருந்த இடங்களில் குப்பைமேனிகள் முளைத்திருந்த இடங்களில்தான் உன்னைக் காலாற நடாத்திப் போனேன். காண்டாவன வெக்கையில் கருகிப்போகாத காலத்தில்தானே உனது கால்களை ஊன்றினாய்? பருவத்தின் கால்கள் இடங்களை அளையாதிருந்ததா? மரணத்தின் வெக்கையில் கருகியதா உன்பாதம்? மரணங்கள் உடலில் நிகழ்வதல்ல. நாட்காட்டிகளால் நினைவுறுத்தும் ஒவ்வொரு நாட்களிலும் மரணத்தைக் கடக்கவேண்டியிருக்கிறது. நினைவுகளால் மரணம் வேறு வேறு நிறங்கள் பூசப்பட்டிருக்கிறது. நாட்களைத் தாண்டுதல் என்பதே நடைபெற்று முடிந்…

    • 2 replies
    • 1.3k views
  19. மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம்- சந்திரபோஸ் சுதாகர் மழைக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றத்தொடங்கியிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் அவனை அவர்கள் கைது செய்தார்கள். சனநடமாட்டம் அதிகமாயிருந்த கடைத்தொகுதியின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் புழுக்களைப் போல மிகமிக அற்பத்தனமாக அந்த நிகழ்வு நடந்தது. கண்களின் மீது இருளடைந்த தெருக்கள் ஊர்ந்தன. மனசிலிருந்த ஓவியங்கள் சிதைந்து போயிற்று. குருதியும் தசையும் மண்டிய புதிய ஓவியங்கள் அவனுள்; தொங்கின. மழை தூறத்தொடங்கிவிட்டது. கடைத்தொகுதியின் இரண்டு பக்க வாயில்களையும் ஒரு வித கட்டளைக்கு கீழிப்படிகின்றவர்களைப் போல அல்லது அவர்கள் தாங்களே அவற்றைப் பிறப்பித்தவர்கள் போல தங்களால் அட…

    • 0 replies
    • 733 views
  20. Started by Athavan CH,

    பாத்திமா - ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஒரு மௌன இரைச்சல் என் மனதைக் கிழிக்கிறது. பிச்சை எடுப்பவளிடம் இத்தனை தன்னம்பிக்கையை எதிர்பார்த்திராததால் பாத்திமா எங்கள் முதல் சந்திப்பிலிருந்தே எ…

    • 0 replies
    • 2.6k views
  21. விடுபடுதல் - மஹாத்மன் மனதை ஒருநிலைக்குள் கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கைவிரல்களின் பதற்றம் போகவில்லை. நேரம் போகப்போக பதற்றம் இன்னும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாய் கண்காணித்து வந்ததில் அப்படியொன்றும் கஷ்டப்படத் தேவையில்லை என்று தெரிந்தும் செயல்படவேண்டிய நேரத்தில் பதற்றம் வந்துதொலைக்கிறது. மென்தாள் ஒன்றை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்து வீசினேன். பார்வையைப் பரவலாகப் படரவிட்டேன். சாலையில் வாகனங்களும் பேருந்துகளும் விரைந்துகொண்டிருந்தன. மனித உருவங்களின் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. கீழ்த்தளக் கடைகளின் இழுவைக் கதவுகள் திறக்கப்படும் ஒலி. எனக்கு நேரெதிரில் சாலையின் அந்தப்பக்கத்தில் பணமீட்பு இயந்திர அறைக்குள் செல்லும் இருவர். முன்பு கிள்ளான் பட்டண…

  22. சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை ஆகிய நாவல்களைப் பற்றிப் பேசும் போதும், கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதியைப் பற்றிப் பேசும் போதும் புனைவெழுத்தும் பின்நவீனத்துவமும் பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் ஏன் மோசமான கதை என்பதையும் விளக்கினேன். நூறு நாற்காலிகளில் தெரிவது வெறும் கண்ணீர். துலாபாரம் சினிமா கண்ணீர். தமிழ் சினிமாவின் க்ளிசரின் கண்ணீர். கண்ணீர்க் கதைகளைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை வாசகரின் கண்ணீரை வரவழைப்பதுதான் நோக்கம் என்பது போல் சொல்வது இலக்கியமாகாது. உள்ளார்ந்த சோகம் ஓ என்ற அலறலுடன் இருக்காது. காசுக்காக ஒப்பாரி வைப்பது உள்ளார்ந்த சோகமாகாது. உள்ளார்ந்த சோக…

  23. எனக்கு அப்போ பதினைஞ்சு வயசு தான் இருக்கும். பூனை மீசை இடைக்கிடை அரும்பி இருந்தாலும், தலைவர் பிரபாகரன் மாதிரி பொட்டு அம்மான் மாதிரி (அந்த காலத்தில் மீசை என்றால் அவர்களது மீசை தான் அழகு) மீசை வர வேண்டும் என்று, அப்பாவின் முகச்சவரஅலகை (சேவிங் பிளேடு தானுங்க ..சும்மா தமிழ்ல சொல்லி பார்த்தேன் ) கள்ளமாக எடுத்து வழிச்சும் பார்த்தாச்சு மீசை வளர்ந்த பாடு இல்லை. எங்கட ஊர் பிள்ளையார் கோவிலில் ஐயருக்கு எல்லாமே நாங்க தான், மணி அடிக்கிறது, மடப்பள்ளி கழுவிறது, சாமி தூக்கிறது, மாலை கட்டுறது ஏன் மேளகாறார் வராவிட்டால் மேளம் அடிக்கிறதும் நாங்கள் தான். அதுக்கு லஞ்சமாக பிள்ளையாருக்கு வைச்ச பொரிச்ச மோதகம் கருவறையின் பின் வாசல் வழியாக எங்களுக்கு எப்பவுமே வந்து சேரும். அண்டைக்கும் அப்படி த…

  24. தங்கமயில் – சிறுகதை -சி.புஷ்பராணி- வெளியிலே நாய்கள் குரைக்கும் சத்தம் அமளியாகக் கேட்டது. தட …தடவென்று யாரோ ஓடிவரும் ஓசை. ‘இது வழக்கமான ஒன்றே… ‘ திரும்பிப் படுத்தேன். எங்கள் வீட்டு ஜெஸியும் குரைக்கும் சத்தம் காதை அறுத்தது. யாரோ கதவைப் பலமாக இழுப்பது போல் இருந்தது… சிறு சத்தமென்றாலே உடனே எழும்புவது நான்தான். தூக்கம் கண்ணைத் திறக்கவிட மறுக்க ”யாரது” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன்…..பதில் வராததால் கையில் டோர்ச்சை எடுத்துக் கொண்டு கதவடிக்குப் போனேன். ஜெஸியும் பின்னாலேயே வந்தாள். இணைப்புச் சங்கிலியைத் திறந்து பார்த்தால், மகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு மிரட்சியுடன் தங்கமயில…

    • 1 reply
    • 930 views
  25. புத்தரின் கண்ணீர் - சித்தாந்தன் சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டுஅமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின்இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள்ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது.பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது.அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.துயரமும், அவமானமும் அவனது இதயத்தைப் பிளந்தன. புத்தரின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அந்த முகத்தில் விரிந்த கருணையும்கண்களின் நிர்மலமும் அவனை மேலும் மேலும் வதைத்தன. பகவானுக்குமுன்னே அமர்ந்து பிரார்த்திக்க தனக்கு தகுதி இல்லையெனநின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.