கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சண்டியர்கள் ஒரு பேப்பருக்காக அண்மையில் முகத்தார்ஜேசுரட்ணம் அவர்களின் ஒலிநாடா வடிவில் இருந்த சில நாடகங்களை இறுவட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.அப்பொழுது
-
- 14 replies
- 3.2k views
-
-
அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள். அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே …
-
- 4 replies
- 872 views
-
-
சதைகள் – அனோஜன் பாலகிருஷ்ணன். குருநாகல் புகையிரத நிலையத்தில் நியோன் வெளிச்சத்தில் நுளம்புகளை விரட்டிக்கொண்டு நின்றேன். குலுங்கலுடன் சிலுப்பி அதிர்ந்து புகையிரதம் பிளட்ஃபோமில் என் கால்விளிம்பருகே பாரிய உலோக அதிர்வுடன் நின்றது. அதிஷ்டவசமாக ஜன்னல் இருக்கை கிடைத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தேன். வேகமாக இருட்டில் பதுங்கிய தென்னைமரங்கள் நீண்ட இலைகளுடன் என்னைக் கடந்துகொண்டிருக்க, தடக் தடக் ஒலிகள் காதின் சவ்வுகளை அதிர்வித்துக்கொண்டிருந்தன. சூடான மூச்சுக்காற்று என் மூக்கிலிருந்து புறப்பட்டு என் நெஞ்சில் மையம்கொண்டது. நேரத்தைப் பார்த்தேன் ஏழுமணியைக் கடந்திருந்தது. கொட்டுவை போய்ச்சேர பதினொரு மணியாகும். புகையிரதக் குலுங்கல் மத்தியிலும் பக்கத்திலிருந்த சிங்களவர் மூக்குக் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
கடந்து போன ஒரு கணத்தைப் போல இந்தக் கணம் இல்லை. அப்போது சுவாசித்த காற்று வேறு, இப்போது சுவாசிக்கும் காற்று வேறு. அப்போது உடலில் இருந்த அணுக்களின் எண்ணிக்கையல்ல இப்போது இருப்பது. கடந்த வினாடியை விட ஒரு வினாடி வயது அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு கணத்தின் பிறப்பும் முந்தைய கணத்தின் இழப்பிலிருந்தே பிறப்பெடுக்கிறது. இழப்புகள் வலிமிகுந்தவை. அவை வார்த்தைகளுக்குள் அடங்காமல் திமிறிச் சிதறுகின்றன. மனதின் பரணில் அடைகாக்கும் நினைவுகள் கால்நூற்றாண்டுத் தூசிகளுடன் பத்திரமாய் இருக்கின்றன. உதறுகையில் எழும் தும்மலில் காலங்கள் கண்களுக்கு முன்னால் விரியும். ஒவ்வொரு முறை கிராமத்து வீட்டுக்குச் செல்லும் போதும் எனக்குள் எழும் கலவையான உணர்வுகளை இனம் காண முடிவதில்லை. அந்த ஓட்டு வீட்டின் முற்றம…
-
- 2 replies
- 893 views
-
-
சத்திய போதிமரம்!… ( சிறுகதை ) கே.கணேஷ். November 05, 2018 in: கதைகள் சிறப்புச் சிறுகதைகள் (17) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – கே.கணேஷ் எழுதிய ‘சத்திய போதிமரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என…
-
- 2 replies
- 1.2k views
-
-
‘சத்ரு’ – பவா செல்லதுரை அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள். அவன் பிடிவாதமாய் கண் திறக்காமல் கிடந்தான். ரங்கநாயகி கிழவி தனி பொம்பளையாகப் பதட்டமின்றி, அவன் தலைமாட்டில் குந்தி இருந்தாள். அவள் நிதானத்தில் அனுபவம் குழைந்திருந்தது. மௌனம் எல்லோருக்கும் பொதுவாய் பரவி இருந்தது. அந்தச் சின்னக் குடிசை,தன் உள்புறம் இதற்குமேல் ஒரு ஆளையும் அனுமதிக்காத பிடிவாதத்தில் இருந்தது. வீட்டின் வெளி, புதுசாய் பார்க்கிற எவரையும் பயமுறுத்தும். நீண்டு, அகன்று பரவியிருந்த பாறைகளின் நடுவில் ஒதுங்கியிருந்த மண்திட்டில், கட்டியிருந்த கூரையின் வெளியில் நின்று பார்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
சந்தியா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் - புவனா ஸ்ரீதர் விமானம் ஒரு மணி நேரம் தாமதம். அதுவரை மொபைல்தான் துணை. ஃபேஸ்புக்கில் சந்தியா புகைப்படத்துக்கு லைக் போட்ட படி, ‘எப்படி இருக்க வேண்டியவ... அடையாளம் தெரியாத அளவு மாறிட்டா...’ என நினைத்துக் கொண்டேன்.. சந்தியாவைப் பார்க்கத்தான் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நானும் என் எட்டு வயது மகளும் பயணப்படுகிறோம். அப்படியே சந்தியாவின் நினைவில் மூழ்கினேன்... இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு. சந்தியாவுக்கு பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் அவார்ட் கிடைத்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் ஒரே கம்பெனிக்குத் தேர்வானோம். சந்தியா, வசதியான குடும்பத்தில் ஒரே பெண். என் குடும்பத்தில் நான் வேலைக்குப் போகவேண்…
-
- 2 replies
- 2.4k views
-
-
சனல் – 4 – வெற்றிச்செ்ல்வி (”காணாமல் போனவனின் மனைவி” சிறுகதை தொகுப்பு, சோழன் படைப்பகம், 2012, இந்தியா) சனல்-4 கானொளியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் முகுந்தாவிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அவள், அறியாத, காணாத, கேள்விப்படாத மரணங்களா அதில் புதிதாக இருந்துவிடப் போகின்றன? யுத்தம் முடிந்ததாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டாலும்; அவள் கண்ட பிணங்களின் கோலங்கள் மட்டும் நினைவில் நின்ற இடத்திலேயே நிற்கின்றன. அழிக்க முடியாத பதிவுகளாய் மூளையில் பதிந்துவிட்ட அவை மரணம் தாண்டியும் அந்த ஆத்மாவை அமைதியாக வாழ விடுமா தெரியவில்லை; மறந்துவிட வேண்டும். கொஞ்ச நாட்களுக்காகவாவது மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பம். முடிகிறதா? இதோ நிமலன் தொலைப…
-
- 0 replies
- 2.2k views
-
-
அன்ரி எங்க சேன்ஸ்பரில இருந்தோ வாறீங்கள். என்ன ஒபர் (Offer) போட்டிருக்காங்கள்...?! என்ன வழமை போல.. வாழைப்பழமும்.. ஒரேஜ்சும்.. அப்பிள் பையும் தான்.. பை வன் கெட் வன் பிறி என்று போட்டிருக்கிறாங்கள். அவ்வளவு தானா. அது சரி அன்ரி.. இன்றைக்கு இரவு சனல் 4 இல ஊரைப் பற்றி வீடியோ காட்டப் போகினமாம்.. பார்க்கல்லையோ..??! பார்த்து என்னத்த தம்பி ஆகப் போகுது. அவங்களும் காட்டிறதை காட்டிறாங்கள்.. உலகம் ஒன்றும் உருப்படியா செய்யுதுல்லையே. இப்படியே இவன் காட்ட பதிலுக்கு அவன் தான் ஒன்றைக் காட்ட..எண்டு எங்கட பிரச்சனை இழுபட்டுக் கொண்டெல்லோ போகுது. நாங்கள் அவசரப்படுறது போல.. உலகம் ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவுத்தன் என்று ஒன்றும் செய்யேலாது தானே அன்ரி. இந்தியா.. சீனா.. ரஷ்சியா என்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
சபாபதி சார்! ஊரிலிருந்து மாமனாரும், மாமியாரும் வந்தாலே, கண்மணிக்கு மனதில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். காரணம், பிரச்னை அவளுக்கும், அவர்களுக்கும் அல்ல; அவள் கணவன் கண்ணனுக்கும், மாமனார் சபாபதிக்கும் தான். அப்பாவும், பிள்ளையும் ஏதாவது வாக்குவாதம் செய்வதும், மாமியாரும், மருமகளும் அவர்களைச் சமாதானப்படுத்துவதும், அவர்கள் இங்கு வரும் போதெல்லாம் நடப்பது, வாடிக்கை. வழக்கமான, மருத்துவ சோதனைக்காக, ஊரிலிருந்து அவர்கள் வந்து இறங்கியதுமே, ஒரு வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது; அது முடிந்து, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின், இப்போது, மாலையில் தான், ஒருவாறு வீட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த நேர…
-
- 0 replies
- 998 views
-
-
சப்பறம் பாக்கலாம் ஒரு பேப்பரிற்காக கடந்த ஞாயிறன்று பாரிஸ் மாணிக்க பிள்ளையார் கோவில் தேரிற்கு சென்றிருந்த வேளை ஊர் நண்பனுடன் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா ஞாபகங்களை நினைத்து பேசிய பொழுதுதான் வாழ் நாளில் எப்படி எங்கள் சில நகைச்சுவை அனுபவங்களை மறக்க முடியாதோ அது போலவே எங்களால் ஏதோ ஒரு சில காரணங்களிற்காக சில நகைச்சுவையான அல்லது வேடிக்கையான மனிதர்களையும் வாழ் நாளில் மறக்க முடியாது. அப்படியான ஒரு உறுவுக்காரர் எங்கள் ஊரில் இருந்தார்.கதைக்காக அவரிற்கு ராசா பெயர் வைக்கிறேன். ராசா நன்றாக படித்து புகையிரத ஓட்டுனராக வேலையும் செய்தார். ஆனால் அவருக்கு தண்ணியிலை கண்டம். நான் சொல்லுறது கடல் தண்ணி ஆத்து தண்ணியில்லை இது அடிக்கிற தண்ணி. இவர் காங்கேசன்…
-
- 13 replies
- 2.9k views
-
-
சப்பாத்து – குமார் மூர்த்தி – என் துரதிர்ஷ்டத்தை மறுபடியும் நிரூபிக்கும் சம்பவமாகிவிட்டிருந்தது அது. பலமுறை யோசித்திருந்தேன். மிகவும் கவனம் எடுத்திருந்தேன். அதைவிட நடக்காது என்றும் நம்பினேன். எல்லாமே பொய்யாகி அது நடந்தேவிட்டது. மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்தச் சப்பாத்தை வாங்குவதற்கு நான் பலவழிகளில் கரிசனம் எடுத்திருந்தேன். உண்மையில் இது ஒரு சிறிய விடயம் என்று மற்றவர்கள் ஒதுக்கிவிட்டாலும் எனக்கு இது ஒரு பெரிய விடயமாகவே எப்போதும் இருந்து கொண்டிருக்கும். சப்பாத்தோ, செருப்போ மனதுக்குப் பிடித்த மாதிரி பொருந்தி வருவது எனக்கு மிகவும் அபூர்வம். அப்படிப் பொருந்தி வந்தாலும் என்னை அது சீக்கிரமே கழட்டிவிட்டுவிடும். இருந்தும் நீண்ட நாட்களாகவே எனக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை சிறுகதை: மாத்தளை சோமு, ஓவியங்கள்: செந்தில் இருள் கலைந்து வெளிச்சம் வருவதைச் சொல்வதைப்போல் வெளியே சேவல் தன் சிறகுகளை அடித்து உரத்துக் கூவும் சத்தம், குடிசையில் படுத்துக்கிடந்த நாதனுக்குக் கேட்டது. ஒரு விநாடி, அந்தச் சேவலை தன் மனக்கண்ணால் மீட்டுப்பார்த்தான். வவுனியாவில் இருக்கும் மணியம், குஞ்சாகக் கொடுத்த சேவல். இன்று அது வளர்ந்து ஒரு குட்டி மயிலைப்போல் இருக்கிறது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மனைவி கௌரியைக் கேட்டபோது, ``ஆமிக்காரன் போட்ட குண்டுகளால கோழி, குருவி, ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் செத்திட்டுது. மனுஷரே சிதறிப்போறப்ப பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்? எத்தனை கோழிகள் இருந்த வீடு... இப்ப வெளியில வா…
-
- 2 replies
- 2k views
-
-
சமரசம் மலர்ஸ் by நெற்கொழு தாசன் July 31, 2022 என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி மீண்டும் ஒருமுறை மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் கொடுத்துவிட்டு …
-
- 3 replies
- 986 views
-
-
சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும்…
-
- 0 replies
- 274 views
-
-
சமூகக்குற்றம்! எழுதியவர்: கடல்புத்திரன் ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. 'டாக்ஸி'யில் இருக்கிற ஓட்டி 'ஒவனு'க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம். 'டாக்ஸி' விரைவு வீதியில் விரைந்து கொண்டிருந்தது.'பிளக்பெரி' வந்த பிறகு பயணியின் தொண தொண அலட்டல்கள் எல்லாம் இல்லை. எங்கட பிரச்சனையே தீறவில்லை. இவர்களூக்கு எங்கட அரசியலும் தெரியாது.அதை அறிவதிலும் அக்கறை காட்டுவதில்லை . இவன் தனக்கென கீறின வட்டத்தை விட்டு வெளிய போவதில்லை. இந்த நிலையில் இவன்ட வியாபாரமும் பிரச்சனையும், எமக்கு மட்…
-
- 0 replies
- 732 views
-
-
சமையல் கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்த ‘சமையல் திலகம்’ சரஸ்வதி, அரக்கப் பரக்கக் குளித்து ஒரு வாய் காபி மட்டும் போட்டுக் குடித்தாள். நேற்று இரவு ஒரு சமையல் போட்டிக்கு நடுவராகச் சென்றவள் வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமில்லை. முகம் உப்பியிருக்க, மிதமான மேக்கப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். சரஸ்வதியின் கார் அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைந்தது. அவசர அவசரமாய் அடுத்த வார ‘நளபாகம்’ எபிசோடுக்கு ஆயத்தமானாள். கேமரா முன் சிரித்தபடியே, ‘மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?’ என்று செய்து காட்டினாள். முடித்ததும் மணியைப் பார்த்தால் மதியம் பன்னிரண்டு. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது தலையைச் சுற்றியது. ஸ்டூடியோவில் கொடுத்த கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி சிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ``தொடர்ந்தாப்ல ஸ்கூல வெச்சு ஏன்தான் உயிர வாங்குறாங்களோ'' என்று அலுத்துக்கொண்டாள் சம்ரிஷ்தா. படுக்கை அறையில் இருந்து அவளை எழுப்பி, கூடத்துக்கு அழைத்துவருவது பெரும்பாடாக இருந்தது அப்பாவுக்கு. ``பின்ன எப்படி ஸ்கூல் வைக்கிறதாம்?'' என்று அவளிடம் கேட்டார். ``திங்கள்-செவ்வாய் ஸ்கூல், புதன் லீவு; வியாழன்-வெள்ளி ஸ்கூல், சனிக்கிழமை லீவு'' என்று கூறினாள். குரலில் அவ்வளவு சந்தோஷம். ``அப்ப, ஞாயித்துக்கிழமை ஸ்கூல் வைக்கலாமா?'' என்று கேட்டார். ``லூஸாப்பா நீ? ஞாயித்துக்கிழமை வார விடுமுறைனுகூடவா தெரியாது உனக்கு?'' - அதைக் கேட்டு அனைவரும் சிரி…
-
- 0 replies
- 1.2k views
-
-
இப்போது சயந்தன் எழுதியிருக்கும் ஆறாவடு நாவலும் மிக முக்கியமான ஆவணங்கள் இந்த மூன்றுமே ஈழ சினிமாவுக்கான கதைக் களத்தைக் கொண்டிருக்கின்றன. அதிலும் தோழர் கோவிந்தனின் நாவலும், சயந்தனின் நாவலும் மிக மிக முக்கியமான பதிவைச் செய்திருக்கின்றன. இதை திரைப்படமாக்குவது தொடர்பாக நான் ஆறாவடு நாவலை எழுதிய சயந்தனிடம் பேசினேன். மேலும் சில நண்பர்களுடன் பேசினேன். தமிழ் சினிமா இயக்குநர்களால் ஈழ மக்களுக்கான சினிமாவை எடுக்க முடியாது.-அருள் எழிலன் http://www.globaltam...IN/article.aspx
-
- 5 replies
- 1.3k views
-
-
சயனைடு - சிறுகதை ப.தெய்வீகன் - ஓவியங்கள்: ஸ்யாம் சயனைடு உட்கொள்வதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பது என்பது, அப்போது எங்கள் கூட்டத்தில் மிக முக்கிய விவாதமாக இருந்தது. சயனைடை அதிகம் பயன்படுத்தும் போராளிகள் எப்போதும் அதைக் குப்பியில் அடைத்து, கழுத்தில் கட்டியிருப்பர். ஆபத்து நெருங்கும் தருணத்தில் அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றி சயனைடு தூளை வாயில் போட்டு விழுங்கி இறந்துவிடுவர் என்பது சுதா, தான் படித்த ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டிச் சொன்ன கதை. மணிவண்ணன், தனது பக்கத்தில் வேறொரு தகவலை வைத்திருந்தான். ``எதிரிகள் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் தருணங்களில், சயனைடு மூடியைக் கழற்றி வாயில் போட்டு விழுங்குதற்கெல்லாம் போராளிகளுக்கு நேரம் கிடைக்க…
-
- 0 replies
- 2.4k views
-
-
சயனைட்டைச் சாப்பிட்டிட்டான். Visit My Website இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான். இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள். என்ன தம்ப…
-
- 8 replies
- 3k views
-
-
சரவணன் மனசுல சுகந்தி சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான். நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் 'ஊத்துக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சரி பின்னக் காதலிப்பம்... அவளுக்குப் பயமாகவிருந்தது. எப்படி இந்த இரவைக் கழிப்பது? எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. உடல் கூசத் தன் சேலையால் போர்த்துக் கொண்டாள். அவனை ஒரு தரம் நினைத்துப் பார்த்தாள். முரடனாயிருப்பானோ? மனம் கிடந்து தவித்தது. "சே! சே! இதென்ன கலியாணம்? முன்பின் தெரியாதவனோடு ஒரு முதலிரவு. நான் எப்படி வளர்ந்தேன்? எப்படி வளர்க்கப்பட்டேன்? எப்படி ஒரு ஆணின் நிழல் கூட என்னில் படாமல் பார்ர்த்துக் கொண்டேன்? திடீரென்று இதென்ன. . .?" பெரியவர்கள் எல்லாம் பார்த்துப் பேசி எல்லாம் முடித்து விட்டார்கள். தாய் தந்தை பெரியவர்களின் சொல்லைத் தட்டக் கூடாதென்பதற்காகத்தானே நான் இந்தக் கலியாணத்திற்குச் சம்மதித்தேன். இப்போத…
-
- 22 replies
- 3.1k views
-
-
சரித்திரங்கள் திரும்புகின்றன! - சிறுகதை ஆனந்த விகடன் 9.10.1988 இங்கிலாந்து. 1795-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் -ஆம்; அந்த மாதம் முழுவதுமே வேல்ஸ் இளவரசனின் மாளிகை விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. பல வண்ணக் கண்ணாடி விளக்குகளின் தகத்தகாய ஒளியில், தங்க இழை நிறைந்த பட்டுத் திரைகள் பளபளத்துக்கொண்டிருந்தன. தாழ்வாரங்கள், கைப்பிடிச் சுவர்கள் அனைத்திலும் நிறத்துக்கொன்றாக. மலர்க்கொத்துகள் அழகுகாட்டிக் கொண்டிருந்தன. வெண்பட்டு ஆடைகள் அணிந்த சேடியர், கரங்களில் ஏதாவது ஒரு பொன்னாலான பொருளைத் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் பரபரத்துக்கொண்டிருந்தனர். ஆயுதமேந்திய காவலர்களின் முரட்டுக் காலணிகளின் ஒலி, ஒருவிதத் தாள ஓசைபோல ஓரத்துத் தாழ்வாரங்களில் கே…
-
- 0 replies
- 1.4k views
-