கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
அழகான காலைநேரம், கடற்கரை ஓரமாக காலாற நடந்துவந்தேன். என்ன அழகு கண்ணுக்கு எட்டியதூரம்வரை நீலக்கடல் கரையும் தெரியவில்லை, ஆள்நடமாட்டமும் இல்லை. இன்னும் சிறிதுதூரம் நடந்தேன் கொள்ளைஅழகு கண்ணுக்கு எட்டியதூரம்வரை பச்சைபசேல்என்று வயல்வெளிகள் அதைத்தொடர்ந்து சிறுபற்றைக்காடுகள். ஒருபுறம் நீலக்கடல் மறுபுறம் பச்சைஎன்று இவ்வழகை ரசித்தவாறு வந்த என்னை சிறுசலசலப்பு இவ்வுலகுக்கு கொண்டு வந்தது. அருகில் சென்று பார்த்தேன். ஒரு வாட்டசாட்டமான ஆளை கட்டிவைத்து சிலர் அடித்தபடி இருந்தனர். பக்கத்தில் செல்ல முற்பட்டேன். ஆனால் சுத்தியிருப்பவர்கள் முகங்களில் பயத்தைக்கண்டேன். அதையும் மீறி முன்னேற முற்பட்டபோது அதிலிருந்தவர் ஏதோ கேட்க முற்பட்டார். அடித்துக்கொண்டிருந்தவர்களிலொரு…
-
- 21 replies
- 2.6k views
-
-
அனிதா தற்கொலையில் உள்ள அரசியல் பின்னணி சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அரியலூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி இருக்கைக்காக போட்டி போட்டு கொண்டு இருந்த தமிழ்நாட்டின் அரசியல் புள்ளிகள். இறுதியில் காற்றில் கலந்தது அனிதாவின் உயிரும், அவரது கனவும்.
-
- 0 replies
- 876 views
-
-
மழலை தெளிவத்தை ஜோசப் திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா, பெரியப்பா, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக் கொண்டு அது நடந்துதான் இருக்கிறது. அதுவும் திடீரென்று யாருமே எதிர் பார்த்திராத விதத்தில். இரண்டு வயதுப் பெண் பிஞ்சின் குஞ்சு விரல்களுக்கு எட்டும் உயரத்தில் குள…
-
- 0 replies
- 736 views
-
-
மீசைக்காரர் - சிறுகதை சிறுகதை: ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம் மீசைக்காரரின் பிரேதத்தை முதன்முதலில் நான்தான் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு பெரிய உருவம், மரத்தி லிருந்து உதிரவிருக்கும் பழுத்த இலைபோலக் காற்றில் முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தது. வாசலின் விட்டத்தில் தொங்கியதால் கூடுதல் அதிர்ச்சி. அப்படியே காம்பவுண்டு இரும்புக்கதவில் மோதிக்கொண்டேன். பலரும் சொல்வதுபோல, கண்கள் பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளி. . . போன்ற கோரமெல்லாம் இல்லை. ஏதோ கண்ணா மூச்சி விளையாட்டு காட்டுவதுபோல இமைகளை மூடித்தான் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது இடுப்பு வேட்டி பாதம் வரை இறக்கிவிடப்பட்டிருந்தது. அதன் நுனி, அறுபட்ட பல்லியின் வாலாய், வீசும் காற்றின் வேகத்திற்கே…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஒரு நிமிட கதை: கண்டிஷன் “மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள். “அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங் களா? சர…
-
- 0 replies
- 926 views
-
-
சின்னச் சின்ன கதைகள் "எப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது யூனிப்பார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிப்பார்ம் எடுங்கப்பா." தேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வோன" கடுப்பானான் மாரி. "ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ் எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத" பொருமினாள் அஞ்சலை. வாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு நின்றிருந்தான். 'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்ட…
-
- 15 replies
- 6.2k views
-
-
மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்! (ஜீ உமாஜி) pro Created: 31 October 2016 வாழ்வின் மிக நீளமான ஆண்டு எது? அதை எப்படித் தீர்மானிப்பது? யோசித்துப் பார்த்தால் குறிப்பிடத்தகுந்த அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய இடங்களை, மறக்கமுடியாத பயணங்களை மேற்கொண்ட ஆண்டு மிக நீளமானதாயிருக்கும். எனக்கு தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு மிக நீளமானதாயிருந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த வருடமும்! தொண்ணூற்று ஐந்தாமாண்டில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு பாரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதல் இரண்டு தவணைகள் மட்டுமே பாடசாலை நடைபெற்றது. அதில் நான்கு விடுமுறைகள் வேறு. ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கை தோற்றதும், இராணுவத்தின் அடுத்த நடவடிக்கை 'ரிவிரச' ஆரம்பிக…
-
- 1 reply
- 525 views
-
-
யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் 1 யானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான். பாடசாலை பயிற்சிப் புத்தகத்திலும் உப்புக்குளம் பிள்ளையார் கோவில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்திலும், கோயில் கோபுர அடியிலுள்ள சிற்பத்திலும் யானைகளைப் பார்த்திருக்கிறான். தும்பிக்கைகளை வளைந்து சுருட்டி பூக்களை ஏந்தியவாறு இரண்டு பக்கமும் ஒன்றையொன்று பார்த்தவாறு இரண்டு யானைகள்…
-
- 2 replies
- 1.3k views
-
-
என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள் வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் ஓ அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஓ ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை கார் பழுதடைந்திருந்ததால், ஆட்டோவில் பயணித்தாள் சாவித்திரி. இது வரை எத்தனை கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்து போயிருக்கிறாய்? ஆட்டோ டிரைவர் கோவிந்தனிடம் ஆவலோடு கேட்டாள். குறைஞ்சது இருபது பேராவது இருக்குமாம். உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்காங்களா? தினமும் ஒரு ரவுண்டு வருவா கர்ப்பிணி பெண்கள் அமர்ந்த ஆட்டோவில் உட்கார்ந்தாலாவது ஒரு குழந்தை பிறக்காதாங்கற ஆதங்கம் தான் அதுக்கு காரணம். கோவிந்தனின் பதிலில் நம்பிக்கையும் ஏமாற்றமும் கலந்திருந்தது. அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிறுத்த சொல்லி தன் விஸிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள். நீ செய்றது பெரிய தொண்டு உன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாமலிருக்க நீயும்.…
-
- 0 replies
- 782 views
-
-
விடாமுயற்சி - கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் ஜோடி கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலு முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தன.. ஆண் குருவியும், பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.. ஒரு நாள் பெரும் காற்று வீசியது.. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன.. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது.. குருவிகள் மனம் பதறிக் கதறின.. கடல் நீரில் விழுந்து, கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபட…
-
- 4 replies
- 43.3k views
-
-
பிச்சை ஏ.எம். சாலன் அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பாலச்சந்திரன் தன் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேற சாயந்திரம் 5.30 மணிக்கு மேலாயிற்று. வழக்கமாக அவன், ஞாயிற்றுக் கி-ழமைகளில் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவான். ஆனால், இன்று அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்க மறந்ததால் வசமாக மாட்டிக் கொண்டான். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் வேலை நடைபெறுவதுண்டு. நான்கு அஞ்சல் பிரிப்பாளர்களும், ஒரு தலைமைப் பிரிப்பாளரும் இருப்பார்கள். இம்மாதிரி ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வார ஓய்வு நாளாக வேறொரு நாள் கொடுக்கப்படும். பாலச்சந்திரன் வேலை பார்க்கும் முதல் பிரிவில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு வேண்டும் என்ற பேச்…
-
- 1 reply
- 949 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேச்சு ``வாட்ஸ்அப்ல அப்படி என்னதான் பேசிப்பீங்க” என்ற அம்மாவிடம், ``ஒன்லி வீடியோதாம்மா” என்றாள் பொன்னி. - கே.சதீஷ் இங்கிதம் சுமாரான புடவை, சிம்பிளான அலங்காரத்துடன் கிளம்பினாள், வேலைக்கார அம்மாவின் வீட்டு விசேஷத்துக்கு. - ராம்ஆதிநாராயணன் சிரிப்பு முதல்வரைப் பார்த்து, 32 எம்.எல்.ஏக்களும் தெரிய சிரித்தார் தலைவர். - கிணத்துக்கடவு ரவி சமையல் ``சாப்பாடு பிரமாதமா இருக்கு. சமைச்சவருக்குக் கை குடுக்கணும். மாஸ்டர் எங்கே இருக்காரு..?’’என்ற கஸ்டமரிடம், ``வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்காரு சார்..’’ என்றார் சர்வர்! - சி.சாமிநாதன் பில்டப் ``கார் பார்க்…
-
- 0 replies
- 1.3k views
-
-
முகவரி தொலைத்த முகங்கள். மலைகள் இதளிற்காக.. சாத்திரி..பிரான்ஸ் ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள் பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு இறந்து போயிருந்தாள். இப்போ இந்த வீட்டில் வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை வரதன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது மகள் ரைகர் என்று வைப்போம் என…
-
- 26 replies
- 3.4k views
-
-
. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - - வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு ப…
-
- 0 replies
- 927 views
-
-
"அடோ என்ன ரோட்டில நிக்குது ஒடு ஒடு வீட்டுக்கு"என்று பொலிஸ்க்காரன் அரை குறை தமிழில் திட்டி பொல்லால் அடிப்பது போல கிட்ட வர எடுத்தோம் ஒட்டம்.அவன் போனபிறகு மீண்டும் ஒன்று கூடினோம்.இவன் சிங்களவன் எங்கன்ட இடத்தில வந்து சண்டித்தனம் காட்டுறான் ,உவங்களுக்கு வெடி வச்சாத்தான் சரி என்று வீரவசனம் பேச கூட நின்ற எனையவர்களும் சேர்ந்து சம்மதிப்பது போல உசார் ஏத்தினார்கள். நாங்கள் ஒன்றுகூடுவதும் பொலிஸ் ஜீப்பை கண்டால் ஒடி ஒழிப்பதுமாக காலங்கள் சென்றன.சிவாவை சில நாட்களாக காணவில்லை,என்ன நடந்தது என்று புரியாமல் இருந்தோம்,அவன் இயக்கத்தில சேர்திட்டானாம் என்று குமார் சொன்னான் ,ஆனால் நணபர்களால் நம்பமுடியவில்லை. ஒருநாள் இரவு 9 மணியளவில் வீட்டை வந்தான்,உந்த சிங்களவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வே…
-
- 27 replies
- 4.3k views
-
-
மோன் (சிறுகதை ) அகரமுதல்வன் கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால இருந்த பாலைமரத்தில தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெருமூச்சாகத் தான் வெளியேறியது. அந்தப் பெருமூச்சில் இழப்பின் பெயரிடாத சொல்லொன்றுமிருந்தது. இயக்கம் ஏன் மாமாவைச் சுட்டது என்று நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இயக்கத்தின் சூடுகள் அவசரமாகவும்,தவறாகவும் சிலரைக் கொன்றிருக்கிறது என்று பெரிய ஆக்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். தேங்காய் திருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் ஏன் சுட்டார்கள் என்று கேள்வியாய்க் கேட்டுவிட்டேன்.”அது நீளமான கதையடா ஆறுதலாய்ச் சொல்லுறன்” என்று சொல்லமறுத்துவிட்டாள். அம்மாவின் மூன்று தம்பிகளில் இப்ப உயிரோட இருக்…
-
- 4 replies
- 892 views
-
-
காஞ்சனை - புதுமைபித்தன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட் கார் A 4 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டயர்களைத் தேய்த்தபடி நின்றது. லேசான கால் நடுக்கத்தோடு பின் இருக்கையிலிருந்து ஜானகி பாட்டி இறங்கினாள். உடல் ஒரு ஆட்டம் ஆடி சம நிலைக்கு வந்தது. "அய்யோ பாட்டி கீழே விழுந்து கிழுந்து வெச்சுடப்போற... நில்லு, என் கைய புடிச்சுகிட்டு வா" போனில் தன் ப்ரமோஷனுக்குத் தேவையான பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் காக்கி உடையை விட அதிக மொறமொறப்புடன் விழித்துக் கண்களை உருட்டினார். ஒரு பக்கத்து ஐப்ரோவையும் ப்ரியா வாரியர் கணக்கா மேலே தூக்கி என்ன விஷயம் என்று பேசாமல் பேசினார். "இந்த அம்மா, ரோட…
-
- 1 reply
- 1k views
-
-
காட்சிப் பிழை மறுபடியும் மாடி ஜன்னல் வழி எட்டிப்பார்த்தபோது அந்த இளைஞன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். அவனை முன்னே பின்னே இதற்குமுன் சபாபதி பார்த்ததில்லை. தூங்கி எழுந்த கையோடு ஜன்னல் திண்டிலிருந்த செடிக்கு தண்ணீர் விடுகையில் தற்செயலாக அவனைப் பார்க்க நேர்ந்தபோது பெரிதாக எதுவும் தோன்றவில்லை. அந்த வேப்ப மர நிழலில் இரு சக்கர வாகனங்கள் இருப்பதோ.. அவற்றின் மீது சாய்ந்தவாறே இளைஞர்கள் நிற்பதோ புதிய காட்சி இல்லை. ஆனால் இன்னமும் அங்கேயே நிற்கும் இவன்? காலை உணவை மென்றவாறே மறுபடி ஜன்னலோரம் வந்தபோதும்.. அவனைக் காண முடிந்ததில்... மனசுள் ஏதோ பொறி தட்ட, குழப்பத்தோடே சாய்வு நாற்காலி பக்கம் திரும்பினார். …
-
- 0 replies
- 788 views
-
-
உறைந்த நதி -இளங்கோஅவன் 999 பக்கங்களில் எழுதத் திட்டமிட்ட தனது நாவலை பின்பக்கங்களிலிருந்து எழுத விரும்பினான். கனவிலும், காதலியைக் கொஞ்சும்போதும் நாவலைப் பற்றி சிந்தனைகள் ஓடுவதால் 999 பக்கங்களில் நாவலை எழுதுவது அவனுக்கு அவ்வளவு கடினமானதாய் இருக்கவில்லை. மேலும் எல்லாப் புகழ் மிகுந்த புனைகதையாளர்களும் சொல்வதுபோல இந்த நாவலை அவனல்ல, வேறு எதுவோ தான் எழுதவைத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் அவன் நம்பத் தொடங்கியிருந்தான்.பின்பக்கங்களிலிருந்து எழுதத்தொடங்குகின்றேன் என்றவுடன் தனது வாசகர்கள் வேறு விதமான வாசிப்பைச் செய்யக்கூடுமென்பதால், 'பின்புறங்களில் அழகியல்-ஒரு தத்துவார்த்தமானஆய்வு' என்று தான் எழுதி, தன…
-
- 1 reply
- 915 views
-
-
வாசகியாயிருத்தல் மோகனா இசை படுக்கை வசதி கொண்ட பேருந்திலேயே சென்று பழக்கப்பட்டதால் இருக்கை வசதி கொண்ட பேருந்தும், குண்டும் குழியுமான பாதைகளும் அயர்ச்சியைத் தந்தது. படுக்கை வசதி கொண்ட பேருந்தில் கூட இந்த சாலையில் வசதியாக பயணம் செய்துவிட முடியப்போவதில்லை என்று தொன்றியது. எது எப்படியோ பயணங்கள் இனிமையானவை தான், எந்த ஒரு காரணமும் இல்லாமலேயே கூட, ஆனால் இனிமையான காரணத்துடனான இந்த பயணத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது மனம். பயணத்தை அனுபவித்து செய்வதின் இன்பம் அந்த பயணத்திற்கான காரணமாக இல்லாமல் வேறதாக இருக்க முடியும்? ஒரு எழுத்தாளனை பார்க்க சென்று கொண்டிருக்கும் இந்த பயணம் என்னளவில் வித்யாசமான அனுபவம் தான். என் நண்பனும் இன்னும் காதலை சொல்லிக்கொள்ளாததால் நண்பனாக உடனிருந்தான், மிகவு…
-
- 0 replies
- 1k views
-
-
"காதலா ? காமமா ??" வவுனியா காட்டின் ஒரு எல்லையில் அமைந்த ஒரு குக் கிராமம் அது. பொதுவாக அங்கு எல்லா வீடுகளும் மண் வீடாக இருக்கும் பொழுது ஒரு வீடு மட்டும் கல் வீடாக அங்கு தனித்து காணப்பட்டது. அந்த வீட்டின் இளவரசி தான் எம் கதாநாயகி. அழகிலும் அதே நேரத்தில் படிப்பிலும் சிறந்து விளங்கிய அவள், அருகில் உள்ள பாடசாலையில் உயர் வகுப்பில், விஞ்ஞான பிரிவில் கற்று வந்தாள். அவளின் அழகும் நளினமும் மற்றும் உடையும் கண்டு மயங்காத ஆண் மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லலாம். அதே பாடசாலையில் குழப்படி பையன் என பெயர்பெற்ற, ஆனால் கம்பீரமான மிடுக்கான ஒரு பையன் இருந்தான். அவன் ஏற்கனவே உயர்தர பரீட்சை எடுத்து இரு முறையும் கோட்டை விட்டவன். என்றாலும் பாடசா…
-
- 0 replies
- 520 views
-
-
ஊசியிலை மரங்களுடன் கூடிய ஐரோப்பிய மண்ணில் உள்ள இங்கிலாந்தில் பாகிஸ்தானிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவள் றுக்சானா (Ruksana) என்ற அந்தச் சிறுமி. எல்லா இங்கிலாந்துச் சிறுவர் சிறுமியர் போல அவளும் சுதந்திரச் சிட்டாக பள்ளிக் காலத்துக்குள் நுழைகிறாள். அவள் பள்ளியில் துடிப்புடன் செயற்பட்டு சிறந்த மாணவியாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய மூன்று பாடங்களிலும் set 1 (உயர்நிலைக்குரிய) மாணவியாகவே இருந்து வந்துள்ளாள். 15 வயதை அடைந்து பருவமும் அடைகிறாள். 15 வயதில் ஒரு சிறுமிக்குள் என்னென்ன அழகிய கனவுகள் ஓடுமோ அத்தனையும் இவளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்.. பாகிஸ்தானிய பூர்வீகப் பெற்றோர் இவளை சுற்றுலாவுக்கு என்று பாகிஸ்தான் அழைத்துச் ச…
-
- 32 replies
- 5.5k views
-
-
எனக்குப் பிடித்த மிகநல்ல மொழிபெயர்ப்பு உருவகக் கதை ஒன்று...எங்கள் துப்பாக்கி முனைகளின் கீழ் நசுக்கப்படும் வாழ்க்கையை உருவகித்து இந்தக் கதையை வாசித்துமுடிக்கையில் எண்ணிப்பாருங்கள்..மீதி நான் கூறாமலே உங்களுக்கு புரியும்... _____________________________________________________________________________________ ஏதோவொரு நாளில்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் [size=5]தமிழில்: விமலாதித்த மாமல்லன்[/size] [size=5]மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி …
-
- 0 replies
- 606 views
-