Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. காந்தாமணி – மதுமிதா பிரார்த்தனையிலும் காமத்திலும் தான் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஒரு புள்ளியில் குவியும்னு சொல்வாங்க. அதில் படைப்புத் தொழிலான சினிமாவையும் சேர்த்துக்கிறேன். கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார் மகேந்திரன். இயக்குநர் மகேந்திரனின் புகைப்படத்துடன் வெளிவந்த அவரின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்த பிரபல வாரப்பத்திரிக்கையை மூடினேன். காந்தாமணியின் வார்த்தைகள் செவிகளில் எதிரொலித்தன. அம்மா காமங்கறதை தப்பா பாக்கிறீங்க. எல்லா அவயங்களும் மனமும் ஒண்ணு சேருற தருணமுல்ல. தியானமில்லீங்களா அது. நம்ம சமூகத்தில் எல்லாம் தப்பிதங்களா கற்பிக்கப்பட்டிருக்கு. எப்படி வாழணும்னு எல்லோரும் கத்துக்கணும். ஆனா, அதை யாரும் நமக்குச் சொல்லித் தர்றதில்லை. நாமளே தான் கத்துக்கணும்…

  2. Started by putthan,

    பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும்…

    • 25 replies
    • 2.4k views
  3. அவன் கே.ஜே.அசோக்குமார் அவனைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை எனப் பொதுப்படையாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவனைப் பற்றிச் சொல்ல அதிகமும் இருக்கவே செய்கிறது என எப்போதும் தோன்றும். அவனுக்கொன்று சில கொள்கைகள், செய்கைகள், பழக்கவழக்கங்கள் என்று தனித்து உண்டு. ஆனால் அவைகளை அவன் அதிகம் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. என்னை அவனிடமிருந்து பிரிப்பது இந்த ஒரு விஷய‌ம்தான் என அவ்வப்போது நினைத்து கொள்வேன். அவனை என்னிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடியான‌ அன்யோன்யம் என்றாலும் சில விஷய‌ங்களுக்காக அவன் என்னைவிட்டு விலகிச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. எனக்குப் புரியாத பல விஷய‌ங்கள் அவனுக்குப் புரிவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எனக்குப் புரிந்த சில விஷய‌ங்கள் அவனுக்குப் புரியாததும்,…

  4. எனது கிறுக்கல் –( facebook இல் லொள்ளு விடும் ஆண்களுக்கு சமர்ப்பணம்) வரதட்சனைக்கு முன் வரையறைகள் ராத்திரி நான் படுக்க போக முதல் "நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள் " எண்டு facebook இல message ஒண்டு போட்டிட்டுத்தான் படுத்தனான் , என்ன காரணம் என்று போட நிறையத்தயக்கம் அது என்னவாயிருக்கும் எண்டது உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் , சும்மா சொல்லகூடாது பாருங்கோ நான் “இனிய காலை வணக்கம்” எண்டு ஒரு மெசேஜ் போட்டாலே அதுக்கு குறைஞ்சது நூ று லைக்ஸ் உம் ஒரு பத்து comments உமாவது வரும் , இன்றைய நாள் இனிய நாளாகட்டும் எண்ணுவினம் , ரண்டு வரிலை கவிதை எழுதுவினம் , சினிமப்பாட்டில இருந்து சில வரிகளை எடுத்து விடுவினம் ...அதுவும் இரவில ‘குட் நைட்’ எண…

    • 0 replies
    • 965 views
  5. சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ் என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை‌ டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த‌ எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க‌, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க. இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ…

    • 5 replies
    • 2.7k views
  6. வட் இஸ் திஸ் .! வெரி நைஸ் ..! :- யோகு அருணகிரி June 28, 2013 11:09 am பதிந்தவர் Supes By யோகு அருணகிரி நாட்டில இருத்து படாத துன்பம் எல்லாம் பட்டு பிறந்ததில் தொடங்கி இடம் பெயர்ந்து மாறி மாறி குடிசை போட்டு கறையான் புற்றிலும் பாம்பு புற்றிலும் கரப்பான் பூச்சியுடனும் வாழ்க்கை நடத்திய எமக்கு வெளிக்கிட்டு வெளிநாடு வந்து ஒரு ஐந்துவருடம் போயிட்டா நாங்க காட்டுற அலப்பாரை இருக்கே தாங்கமுடியாது பாருங்கோ … மார்க்கிலதான் உடுப்பு போடுவம் சப்பாத்து போடுவம் விலை உயர்ந்த போன்தான் பாவிப்பம் …. பொரும்பாலும் தமிழை தவிர்ப்பம் …. தெரியுதோ தெரியாதோ இங்கிலுசுதான் கதைப்பம் நோ ..யெஸ் ..யா..சோ .வெள்ளையைவிட நாங்கதான் அதிகமா பாவிப்பம் பாருங்கோ . இப்படி ஒரு குடும்பம் நமக்கு பக்கத்தில் இருக்குற…

    • 5 replies
    • 1.4k views
  7. சேவலும் முயலும் சேவலும் முயலும் நீண்டகால நண்பர்கள். அடர்ந்து செறிந்த பற்றைக் காட்டில் அடிக்கடி சந்தித்து, இருவரும் ஒன்றாகவே இரைதேடி அலைவார்கள். அன்று நீண்டநேர அலைச்சலின் பின்னர் களைப்பாறவென்று, பச்சைப் பசேலெனக் கிளைபரப்பி வளர்ந்திருந்த புன்னைமர நிழலை நாடிச் சென்ற இருவருக்கும் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஓநாயொன்று புன்னை மரத்தடியில் கண்ணை மூடி நிஷ்டையில் மூழ்கி இருந்தது! ஓநாயாரின் தெய்வீகக் கோலத்தைத் தூர இருந்தே பார்த்த சேவலும் முயலும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றன. அன்பே உருவான சாந்த சொரூபியாய் தியானத்தில் சமைந்திருந்த ஓநாயாரின் திருவுருவில் தன்னை இழந்த முயலோ, பக்தி சிரத்தையோடு தன் பின்னங் கால்களில் குந்தியிருந்து, பவ்வியமாகச் சிரந்தாழ்த்தி முன்னங் கால்…

  8. by யோகு அருணகிரி. by யோகு அருணகிரி. பாரிஸ் வந்து பலவருடம் ஆகிட்டு இன்னும் முசு ..சவாவுடன்(தமிழில் வணக்கம்,எப்பிடி இருக்கிறியள் என்று அர்த்தப்படும்) வாழ்க்கை சிரிச்சு கையை காலை காட்டி ஓடுது.வெளியில நிண்டு பார்க்குறவனுக்கு அவன் நல்லா பிரெஞ்ச்சு கதைப்பான் என்கிற எண்ணம் வரும் நாங்க கண்ணாடி ரூமில நிண்டு செய்யும் கைஅசைவு ஒரு கோலிவுட் பட டைரட்டர் கணக்கா அக்க்ஷன் போட்டு கதைப்பம். காரணம் சைகையிலதான் நம்ம பாசையே கதைக்குறம் என்பது எப்படி புரியும் வெளியில் நிக்கும் நபருக்கு. இப்படியே ஊரை பேய்க்காட்டி கொண்டு திரியிற நமக்கு ஒரு சூப்பர் மாக்கெட் வேலை. சரி எவளவோ பண்ணிட்டம் இதை சமாளிக்க மாட்டமா எண்டு தலையை ஆட்டி எனக்கு வேலை தெரியும் மொழி அத்துப்படி எண்டு உள்ள போயாச்சு. முதல்நா…

  9. கதலியும் மாங்கனியும் மஞ்சள் பூசி, உடல் மினுக்கி, மாந்துணரில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த மாங்கனியாள் மனதில் மட்டிட முடியாத மமதை! செக்கச் சிவந்த மேனி குறித்த செருக்கு! ஏனையோர் எல்லாம் எளியோர் என்ற எக்காளம்! வாய்க்கால் வழி ஓடிவரும் நீர் பருகி மதாளித்து வளர்ந்து நிற்கும் கதலி வாழைக் கனியாள்களுள் ஒருத்தி, அந்தக் கர்வம் பிடித்தவளிடம் ஒருநாள் கதைகொடுத்தாள். ‘முக்கனிக் குடும்பத்தின் மூத்தவளான உனக்கு, இவ்வளவு மூர்க்கம் ஏனக்கா?’ ‘முறைப்படி மணமாகி, மகரந்தச் சேர்க்கையால் தன் வயிற்றில் கருவாக்கி உருவாக்கி என்னைப் பெற்றெடுத்தாள், என் அன்னை. முறையான கருக்கட்டல் இன்றிக் கள்ளத் தனமாக உன் தாயால் பெற்றெடுக்கப்பட்ட கன்னிக் கனிகளடி நீங்கள். முறைதவறிப் பிறந்த உனக்கு எப்படியடி நான்…

  10. மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு. இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் , மனிதநேயம்மிக்க மனிதன். 2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இ…

  11. நவீனத் தமிழ் இலக்கிய நட்சத்திரமாக ஆவதற்கு பத்து டிப்ஸ்கள் (ஆண் எழுத்தாளர்களுக்கானது) 1. நான் பிறக்கும்போதே பேனாவுடன் பிறந்தவன்; எனது மூதாதைகள் லத்தீன் அமெரிக்கா/ ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்கள். 2. தமிழில் எனக்கு முன்னோடிகள் கிடையாது; நான் தமிழ் இலக்கியங்களை வாசித்ததுமில்லை, வாசிப்பதுமில்லை; என்னைத் தவிர தமிழ் இலக்கியத்தில் கொம்பன்கள் எவனும் கிடையாது. 3. தமிழில் எனக்கு முன்பு கவிதையோ சிறுகதையோ இல்லை; நகுலன் மட்டுமே அதற்கான முயற்சிகளைச் செய்து பார்த்துத் தோற்றுப் போயிருந்தார். -இவை நீங்கள் விட வேண்டிய அதிரடி அறிக்கைகள். இனி, உங்களுக்கான தகுதிகள்: 4. தமிழ்ச் சொற்களையும் வாக்கியங்களையும் இலக்கணப் பிழையோடு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். உப்பு…

  12. ரொறொன்ரோ பெண் - அ.முத்துலிங்கம் முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம். கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.) ‘நான் வசிக்கும் சிறிய வீடு. ஒரு முற்றமும், பூட்டக்கூடிய சாமான் அறையும், வெளியே சமைக்கவும் குளிக்கவும் வசதிகள் கொண்டது. வெள்ளையடித்த உள் சுவருக்கு மேல் சாய்ந்து கிடக்கும் கூரை மழைத் தண்ணீரை முற்றத்தில் கொட்டும். வீட்டின் முழுப்பரப்பும் 18 X 30 அடி இருக்கலாம். தெற்குப…

  13. பஸ் பயணம் என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான் எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும் என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக ப…

  14. இருண்ட நிலவு - நிலாதரன் அம்மா பசிக்குது பசிக்குது என்ற குழந்தைகளின், அழுகுரலை இனிமேலும் தாங்கமுடியாது. அது இதுவெண்டு சொல்லி இனியும் சமாளிக்கவும் முடியாது, கடைசியாக மிஞ்சியிருந்த இந்த தோட்டையாவது விற்று சமைக்க வேண்டும். குழந்தைகள் இரண்டையும் பக்கத்து வீட்டு சரஸ்வதியாச்சியோடு விட்டிட்டு கிளிநொச்சி நகருக்குள் வந்து சேர்ந்த போது எல்லாமே அவளுக்கு புதிதாகவும் சூனியமாகவும் இருந்தது. புதிதாக புனரமைக்கப்பட்ட நெடுவீதிகளும் ஆங்காங்கே எழுந்து நிற்கும் புத்தம்புதிய கட்டிடங்களும் புதிபுதிதாய் முளைத்திருக்கும் கடைகளும் அதன் அலங்காரங்களும் பீறேமாவை ஒரு கணம் திக்குமுக்காடச் செய்தது. என்ன தான் இருந்தாலும் கிளிநொச்சி முன்பிருந்த செழிப்பையும் அதன் அழகையும்இ இழந்து செயற்கைத்தனமாய் கா…

  15. உங்களுக்குக் கேட்டதா? கார்த்திக் பாலசுப்பிரமணியன் என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார். மீண்டும் ஒரு முறை அவரிடம் அழுத்திக் கேட்டேன். “அதாங்க டி.வி, ஜன்னல் இல்லாத ஒரு ரூம் வேணும். மூணு நாளைக்கு. இருக்குதா? ” என்றேன். வழுக்கைத் தலை. ஒடிசலான தேகம். நெற்றியை நிறைத்த பட்டை. அவரைப் பார்த்தால் அந்த லாட்ஜில் வேலை செய்பவர் போன்றுதான் தெரிந்தது. “கொஞ்சம் இருங்க.. பாத்துதான் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஒரு நீளமான நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார். அந்த நோட்டைப் பார்த்ததை விட என்னை நோட்டம் விட்டதுதான் அதிகம். ” ஐயா.. நீங்க பயப்படுற மாதிரி…

  16. மானிப்பாய் மருதடி பிள்ளையார் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைவரும் அறிந்திருப்பார்கள்.மானிப்பாய் சந்தியில் நடுநாயகமாக ,வயலும் வயல் சார்ந்த இடத்தில் வயலை பார்த்தபடி சிவனே என இருந்தார் ,இருக்கின்றார், இருப்பார்.எனது பெற்றோருக்கு அவர்களின் பெற்றோர் அறிமுகம் செய்து வைக்க அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.சிறு வயதிலிருந்து சென்று வருகின்றேன். அந்த ஊருக்கு அவர் சைவ மன்னர்களால் அறிமுகமானாரா அல்லது தனிநபரகளின் மூலம் அறிமுகமானாரா என ஞான் அறியேன் பராபரனே. பயம் இருக்கும் வரை பக்தி இருக்கும்.அது தனிநபர் ஆகட்டும் சமுகமாகட்டும்.யாழ்நகரில் பல கோவில்கள் போரினால் பாதிக்கப்பட்டது.மீண்டும் அவை புனர்நிர்மானம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது.இதில் புலம்பெயர்ந்த மக்களின…

  17. எதிர்ப்பு - ஈழநாதன் "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு ம…

  18. தேவகிருபை இந்தியில் சரத் உபாத்யாய் தமிழில் நாணற்காடன் நகரத்தைத் தாண்டி நதிக்கரையில் அந்தச சிறிய கோயில் இருந்தது. பிரகாரச் சுவர்கள் நாலாப்புறமும் உயரவுயரமாக இருந்தன. வலது சுவரையொட்டிச் செல்கிற அந்தச் சாலை மரங்களடர்ந்த புதருக்குள் ஒளிந்துகொள்கிறது. சாலையின் மறுபக்கம் சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அந்தி மசங்கும் நேரத்தில் கோயிலுக்கு வரும் மக்கள் பெஞ்சுகளை நிரப்பிவிடுவார்கள். பெஞ்சுகளையொட்டி இரண்டு மரங்கள் இருந்தன. அதற்கும் சற்றுத் தள்ளி கருவேலம் புதர். அந்த மரங்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய உருவம் கொண்டு அடர்ந்திருக்கவில்லை. இருவர் மட்டுமே உட்கார்ந்துகொள்ளும் அளவிற்கு சிக்கனமாக நிழல் தந்தன அவை. அந்த மரத்தடியில் தான் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். இருவரும் தம்…

    • 2 replies
    • 1.1k views
  19. ஒரு மனைவியின் கதை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி. அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அரசியல், சமூகச் சிந்தனைகள், …

  20. “என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும். நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும். நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை. என் மரணத்தின் பத்து நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்.” மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை. தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகி…

  21. மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன். அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள். ""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.'' என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் வித்யா. ""அம்மாவும், அப்பாவுமாக இருந்தவரைக்கும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு தராமல் இரண்டு பேருமாக இருந்துட்டாங்க. இனி, அப்பாவின் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு அண்ணி. இனி, அவ…

  22. முள்ளில் ஒரு சேலை விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத இடத்திலே ஒரு தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உன்னை வளர்த்து இப்படியொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்த மனுசன். ஓடி வந்து என்ரை காலிலே விழுகிறாய்! போ போ பிள்ளை. அம்மா இப்படித்தான் சொல்லுவாள் என்று விமலிக்குத் தெரியும். அப்படியிருந்தும் அம்மாவின் காலிலே தான் முதலில் விழுந்து கும்பிட்டாள். அவர் அவரென்று அம்மா சொல்வது அக்காளின் கணவனை. அவளின் அத்தானை. அத்தான்! அவர் அக்காளுக்கு மட்டும் அத்தானாக நடக்க நினைத்திருந்தால் வாய் குளிரக் கோடி முறை அத்தான் அத்தானென்று விமலி கூப்பிட்டிருப்பாள்.…

  23. Started by கிருபன்,

    சகபயணி இரவி அருணாசலம் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். பதினெட்டு! கணக்கும் வழக்கும் சொல்ல வாழ்க்கை என்ன வகுப்பறையா? அம்மா இல்லாத எங்கள் குடும்பத்தின் நால்வரும் தேவாலயத்தில் தஞ்சமானோம். அப்படி நின்ற ஒரு நூறு பேருக்குப் பாணும் தேநீரும் கிடைத்தன. தாடிவளர்த்த அருட் தந்தையின் ஆறுதல் வார்த்தையும் கடற்கரை வெக்கையை மேவிக் குளிர்வித்தது. “ஓடு ஓடு” என்று மனம் சொன்னது. அப்பாவையும், தம்பி, தங்கைகளையும் விட்டுவிட்டு எப்…

    • 5 replies
    • 1.2k views
  24. அவரவருக்குச் சொந்தமான நிலம் குலசேகரன் ஓவியங்கள்: ரவி அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும் மணல் பரவியிருந்த ஆறு பெரிய பாலைவனமாகத் தோற்றமளித்தது. எண்ணற்ற கா…

  25. காட்சி 1 ஒரு நாள் இரவு மனைவி காதுக்குள் கதைக்கத்தொடங்கினாள். (முன்பெல்லாம் இந்த தலையணி மந்திரத்துக்கு காது கொடுப்பதில்லை. அனுபவத்தால் அவளது சில தகவல்களைக்கேட்காது விட்டு வாழ்வில் சில விடயங்களில் வாங்கிக்கட்டியதாலும் மக்களது நலன் சார்ந்தும் தற்பொழுது காது திறந்து விடப்பட்டுள்ளது) மனைவி : அப்பா இவன் பெரியவன் அடிக்கடி வெளியில் போகின்றான். இரவு நேரம் சென்றுதான் வீட்டுக்கு வருகின்றான். எனக்கு கொஞ்சம் பயமாக்கிடக்கு. (தற்பொழுது அவர்கள் குழுவாக படிக்கும் காலம். அடிக்கடி பரீட்சைகளும் இருக்கு. இது எல்லோருக்கும் தெரியும்) எனக்கு தாயின் கவலையைப்புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் இதை தொடரவிடக்கூடாது. அது இருவருக்கும் நல்லதல்ல. நான் : அவனுக்கு இப்ப எத்தனை வயசு? மனைவி : …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.