கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது. தென் சூடானில் ஈழத்தினைப் போலப் பல்வேறு சிறு சிறு பிரிவினைவாதக் குழுக்கள்- துணைக் குழுக்கள் இல்லாமையும், சுய நலம் கலந்த மக்கள் இல்லாது பொது நலத்தோடு போர் செய்து விடுதலை எனும் நாமத்தைத் உயிரணுவில் ஏற்றி வாழ்ந்தோரும் வாழ்ந்ததால் தான் இவை சாத்தியப்பட்டது எனலாம…
-
- 10 replies
- 2.3k views
-
-
"அப்பாவின் பேனா..!" அப்பாவின் படம் சுவரில் அழகாக தொங்குகிறது. அதில் அவரின் சட்டை பையில், அந்த பேனா எட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்று அவரின் நினைவு தினம். நான் அவரின் அந்த படத்துக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு, அவரின், அவர் என்றும் தன்னுடன் எடுத்து செல்லும் அந்த பேனாவை, அவரின் படத்துக்கு அருகில் கொழுந்துவிட்டு எரியும் தீபத்தின் ஒளி அதிலும் படக்கூடியதாக வைத்தேன். அப்படி என்ன இந்த பேனாவில் உள்ளது? இந்த பேனாவின் வலிமை உண்மையில் என் அப்பாவின் எண்ணத்தின் வலிமை, அவரின் சொல்லின் வலிமை! ஆமாம். என் அப்பாவின் பேனா நீதி பேசும் , கதை சொல்லும், கவிதை பாடும், ஏன் புரட்சி கூட செய்யும்!! அது தான் அதன் பெருமை!! பேனா என் அப்பாவின் வாழ்வில் இரண்டறக் கலந்த்துடன் அவரை யா…
-
- 0 replies
- 447 views
-
-
[size=5]அந்த வீடு பூட்டி இருந்தது . .மூன்று தரம் வாசற் கதவு பெல் அடித்தும் நாலுதரம் தட்டி பார்த்தும் ஆறு தரமோ அதுக்கு மேலேயும் சத்தம் போட்டும் எந்த விதமான மறுமொழியும் காணமால் ..இப்ப கொஞ்சம் முந்தி தானே இறங்குகிறேன் அரை மணித்தியலாத்தில் வந்து விடுவேன் என்று சொன்ன பொழுது ..வரவா ஸ்டேசனுக்கு என்று கேட்டானே என்ற கேள்வி குறியோடு மொபைலில் தொடர்பு கொள்ள முயற்சித்தான். எத்தனை தரம் முயன்றாலும் திரும்ப திரும்ப ஒரே பதிலை சொல்லி கொண்டு இருந்தது.இப்ப என்ன செய்வம் என்று திரும்பி பார்த்த பொழுது தூரத்தில் மலை பாங்காக தெரியும் பகுதியில் இவனை இறக்கி விட்டு சென்ற டாக்சி போய் கொண்டிருந்தது சுற்ற வர மலை பாங்கான இடத்தின் அடியில் இருக்கும் அந்த ஆங்கில தேசத்தின் ஒரு கிராமம் அவன் ந…
-
- 15 replies
- 1.1k views
-
-
மான்டேஜ் மனசு 5 காதல் கொண்டவர்களின் கதை! மனசுக்கு சுகமில்லாதபோது செல்வராகவன் படங்களைப் பார்ப்பது என் வழக்கம். அப்படி ஒரு மழை நாளில்தான் 'காதல் கொண்டேன்' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பிளஸ் 2 முடித்த தருணத்தில் காதல் கொண்டேன் ரிலீஸாகி இருந்தது. படம் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன் ஈஸ்வரன் 'படம் பிரமாதம்' என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவ்வளவு சீக்கிரம் எந்தப் படத்தையும் ஓஹோ என சொல்லமாட்டான். வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷை எழுப்பும் புரொபசர் , ''அந்த கணக்கை சால்வ் பண்ணு'' என திட்டி தீர்ப்பார். எந்த அலட்டலும் இல்லாமல் கணக்கு போட்டுவிட்டு கடைசி பெஞ்ச்சில் தூங்குவான் தனுஷ் என சிலாகித்துக்கொண்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நானென்னடி பிசாசா? என்ர மூச்சுக் காத்தை உடம்பை விட்டு வெளியாலயும், வெளிக்காத்தை உடம்புக்கு உள்ளயும் எடுக்க முடியாம, ஒருவழியா திணறிக் குளறி? அட சத்தியமா நான் குளறினன் சத்தம் வரவே இல்லை. ஊப்ஸ்...... ஒருவேளை நான் செத்துப் போட்டனோ? பாழ்படுவார் அடிச்ச செல்லில காயந்தானே பட்டன். அதுவும் இந்தக் காலில கொஞ்சம் இரத்தம் ஓடுது. இதுக்குப் போய் நான் செத்துப் போவனே?.. ஆ…… ஐயோ இதென்ன என்ர கால் முழங்காலுக்குக் கீழ அரைச்ச இறைச்சிமாதிரிக் கிடக்கு “ஐயோ என்ர கால் போட்டுது.. ஐயோ என்ர கால் போட்டுது. ஆராவது என்னைத் தூக்குங்கோடா. அடுத்த செல்லுகளை கட்டையில போவாங்கள் குத்த முன்ன என்னைத் தூக்கிக் கொண்டு போங்கோடா.. எனக்கும் பெண்டு பிள்ளைகள் இருக்கடா….” “அடேய் அடேய் மொல்ல …
-
- 10 replies
- 1.7k views
-
-
சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” அட்ரஸை கேட்டு வாங்கினேன். சயந்தன், c/o கே ஆர் வாணிபம், உடையார்கட்டு, முல்லைத்தீவு என்ற அதே பழைய முகவரி. கே. ஆர் வாணிபம், கடை அவனது கொட்டிலிலிரு…
-
- 1 reply
- 839 views
-
-
ஆலமரத் துயில் - சிறுகதை சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் ஆகாயத்தை விடவும் பரந்து விரிந்த அல்லிகுண்டம் கண்மாய், இப்படி ஒட்டுமொத்தமாய் வறண்டு போகுமென ஊரில் ஒருவரும் நினைத்திருக்கவில்லை. கோடை, மனித உடலின் கடைசி துளிக் குருதியையும் வியர்வையாய்க் குடித்துக்கொண்டிருந்தாலும் இந்த ஒற்றைக் கண்மாயை நம்பி இருக்கும் பதின்மூன்று கிராமங்களின் வயல்களில், சம்சாரிகள் காய்ந்த பயிர்களை இன்னும் நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரேயொரு மழை பெய்தாலும் மிச்சம் மீதி இருக்கும் பயிர்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால், இறங்கிவர மனமின்றி இயற்கை இறுக்கமாகவே தான் இருந்தது. சதுரகிரி மலையில் துவங்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்த அடிவார கிராமங்களெங்கும் க…
-
- 0 replies
- 3.1k views
-
-
ஒரு நிமிடக் கதை சாட்டிங் சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத். ‘‘டே சிவா, பிஸியா?’’ ‘‘இல்லை பரத், சொல்லு!’’ ‘‘இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?’’ ‘‘ஆமா!’’ ‘‘எனக்கொரு ஹெல்ப்...’’ ‘‘சொல்லுடா?’’ ‘‘வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க...’’ ‘‘நைஸ்... கங்கிராட்ஸ்!’’ ‘‘பொண்ணு ெடல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.’’ ‘‘நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?’’ ‘‘இல்லை... அவ சென்னைக்கு வந்துடுவா!’’ ‘‘நான் என்ன பண்ணணும்?’’ ‘‘அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!’’ ‘‘டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் பண்ணிடு!’’ ‘‘டன்!’’ ஒரு வாரம் கழித்து... ‘‘என்னடா ஆச்சு? ஸ்நேஹாவைப் பார்த்தியா?’’ ‘‘ம்...’’ ‘‘எப்படி இருக…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாரையும் எதிர்பாக்காதிங்க...யாரையும் எதிர்பார்க்க வைக்காதிங்க
-
- 0 replies
- 394 views
-
-
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை - சிறுகதை 19 டிசம்பர் 2023 கொஞ்ச நாட்களாக அம்மாவில் சில மாறுதல்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானிப்பு என்னையும் மீறி வளர்ந்துகொண்டே போனது. அம்மா இப்போ இடையிடையே தன்பாட்டில் சிரிக்கிறார். தனது அலங்காரங்களில் அதிக அக்கறை செலுத்துகிறார். முன்பெல்லாம் நான் நினைவூட்டி நெருக்கும்போதுதான் தலைக்கு சாயம் தீட்டுவார். இப்போது மாதம் இரண்டு தடவை, சிலவேளைகளில் மூன்றுதடவையும் கூட நடக்கிறது. தொலைபேசி சத்தம் கேட்டால் அம்மா பரபரப்பாக ஓடுகிறார். கையில் என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தடவைகள், சமைத்துக் கொண்டிருக்கும்போதும் இப்படி…
-
-
- 6 replies
- 1.1k views
-
-
வைகாசி பிறந்தவுடன் தலைக்கச்சான் தொடங்கிவிடும். தென்மேற்குத் திசையிலிருந்து சீறிக்கொண்டுவரும். சித்திரை வெயில் புழுக்கத்தில் கிடந்தவர்களுக்கு சீதளக்காற்று சுகமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த வாரமே வெம்மை கூடிவிடும். மரங்களைத் தலைவிரித்தாட்டிவிடும். பூவையும் பிஞ்சுகளையும் விழுத்திவிட்டு வாழை இலைகளை நார் நாராகக் கிழித்துவிடும். கானல் பயிர்கள் விளைந்து முற்றி விழுவதும் இந்த நாட்களில்தான். வட்ட விதானையின் மனைவி, அம்பலவி மாமரத்திற்கு கீழ் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இலைகொள்ளாமல் பிடித்திருந்த பிஞ்சுக் காய்களை புரட்டி எடுத்து விழுத்திவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் விழுந்து, மண்ணில் புரண்டு கிடந்ததை நெஞ்சு பதறப் பார்த்தாள்……. பனையாற்றுக்கு மேலே நாணல்…
-
-
- 1 reply
- 371 views
- 1 follower
-
-
நான் வெளிநாடு வந்து பதினைந்து வருடமாச்சு. இத்தனை நாள் அம்மா சகோதரங்கள் எண்டு ஊரிப்பட்ட பிரச்சனை. மூன்று தங்கைகளுடனும் ஒரு பொறுப்பில்லாத ஊதாரி அண்ணனுடனும் பிறந்தால் இப்பிடித்தான். வயதும் முப்பத்தஞ்சு ஆச்சு. நானும் அண்ணன் மாதிரி இருந்திருந்தால் எப்பவோ குழந்தை குட்டி பெற்று சந்தோசமா இருந்திருப்பன். அனால் என்னால முடியேல்லை அண்ணை மாதிரி பொறுப்பற்று இருக்க. கூடிப் பிறந்தவையை எப்பிடி நடுத்தெருவில விடுறது. சரி ஒரு மாதிரி எல்லாரையும் கரை சேர்த்தாச்சு. இப்பவாவது அம்மாக்கு என்ர வாழ்க்கையைப் பற்றி ஞாபகம் வந்திது. செல்வன் தனக்குத் தானே நினைத்துக்கொண்டான். செல்வனின் தாயார் இப்போதுதான் அவனின் சாதகத்தைக் கையில் தூக்கியிருக்கிறார். அதுக்கும் சுவிசில் இருக்கும் மகள் சொல்லி. மகள் கூடத் த…
-
- 72 replies
- 5.3k views
-
-
ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம். ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது. உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர். கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது. கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது. உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய். கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்க…
-
- 1 reply
- 1k views
-
-
கிறிஸ்மஸ் பரிசு ................. யாழ் நகரத்தின் மையப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருந்தது . அந்தக் கன்னியர் மடம். அங்கு இருபகுதிகளாக் பாடசாலையும் விடுதியுமாக பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர் மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை. அந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன் கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின் உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வ…
-
- 4 replies
- 2.2k views
-
-
டேம்ரூஸும் டிசம்பர் மாதமும்! ஹேமி கிருஷ் அதிகாலையில் ஜன்னல் திரையை விலக்கினேன்.பனிபடர்ந்த தோட்டத்தையும் ,பறவைகளின் சப்தங்களை கேட்கும்போதும் ,அந்த ரம்யமான பொழுது மிகவும் இனிமையாக இருந்தது.எனக்கு மிகவும் பிடித்த மாதம் இந்த டிசம்பர் மாதம்.ஏனோ டேம்ரூஸ் ஞாபகம் வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.இதே டிசம்பர் மாதத்தில்தான் தன் காதலை சொன்னான் டேம்ரூஸ். இள நிலை முடித்ததும் முது நிலை படிக்க விருப்பம்.ஆனால் அப்பா” என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அடுத்த வருடம் சேர்த்து விடுகிறேன் என்றார்.ஒரு வருடம் சும்மா இருக்க பிடிக்கவிலை.எங்கள் ஊர்லே ஒரு பள்ளியில் ஆசிரயையாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது.முதல் நாள் இன்டர்வியூ சென்றேன்.அந்த மேடத்திற்க…
-
- 0 replies
- 842 views
-
-
கனா கண்டேனடி..! - சிறுகதை ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஹாசிப்கான் அது, வித்தியாசமான ஒரு விடியற்காலை கனவு. கனவிலும் விடியற்காலைதான். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் தெப்பக் குளத்துப் படிக்கட்டில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அருகில் 'பாட்டுப் பாடவா..?’ ஜெமினி கணேசன் உட்கார்ந்து, பொரி உருண்டையை உடைத்து, தெப்பக்குளத்து மீன்களுக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார். மீன்கள், கூட்டம் கூட்டமாக வந்து பொரிகளைத் தின்னும் காட்சி அற்புதமாக இருந்தது. 'உன் பேர் என்ன?' என்றபடி ஜெமினி பொரி உருண்டை ஒன்றை என்னிடம் நீட்டுகிறார். நான், ''ஸ்ரீராம்' என்றபடி வேகமாகப் பொரி உருண்டையை வாங்கி வாயில் வைத்துக் கடிக்கிறேன். ''நீ திங்கிறதுக்கு இல்லை. மீனுக்குப் போட…
-
- 0 replies
- 1.5k views
-
-
மழையே... மழையே... உச்சி வெயில் நெருப்பாய் சுட்டெரித்தது. கையில் பூக்கூடையுடன், காலை இழுத்து இழுத்து நடந்தபடி, மரத்தடி நிழலில் ஒதுங்கினாள், பொன்னம்மா. அவளின் ஒரு கால் பிறவி ஊனமாகவும், ஒரு கண், மாறு கண்ணாக இருந்ததாலும், அவளின் இயக்கம் மந்தமாகவே இருந்தது. அத்துடன், மன வளர்ச்சி கூட சிறிது குறைவு தான். ஆனாலும், தினந்தோறும், பூ மார்க்கெட் சென்று, பூ வாங்கி, கட்டி, தெருத் தெருவாய் விற்று, அந்த பணத்தில், சமைத்து சாப்பிடுவாள். இரக்கப்பட்டு யாராவது எதையாவது தந்தால் வாங்க மாட்டாள். எப்போதும், வெயிலிலும், மழையிலும் போராடுபவளாயிருந்தும், இந்த ஆண்டு வெயிலை, எல்லாரையும் போல் அவளாலும் தாங்க முடியவில்லை. காடு, கழனிகள் காய்ந்து விட…
-
- 0 replies
- 865 views
-
-
என்குறிப்பு.. என்னுடைய பயணத்தொடரில் அதிகமாக அரசியல் கலந்துவிட்டது என்றும் அதனாலேயே சுவாரசியமான விடயங்களிற்கும் கருத்துக்களை பகிர முடியவில்லையென பலரும் குறைப்பட்டிருந்தனர். எனவேதான் அரசியல் கொஞ்சமும் கலக்காத அனைவரும் கருத்துக்கள் பகிரக் கூடியதானதொரு குறுந்தொடரை எழுதியிருக்கிறேன். இக்கதையை எழுதிய பின்னர் எனக்கு இரண்டு பிரச்சனைகள் ஒன்று குறுங்கதையாகத்தான் எழுத முடிவெடுத்திருந்தேன்.எழுதி முடித்தபின்னர் பார்தால் அது நீண்டுகொண்டேயிருந்தது.அதனால் குறுந்தொடராக்கிவிட்டேன்.அடுத்தது கதையை எழுதி முடித்துவிட்டு திரும்பப் படிக்கும் போது இதனை கதைகதையாம் பகுதியில் இணைக்கலாமா அல்லது பேசாப்பொருள் பகுதியில் இணைக்கலாமா என்கிற சந்தேகம் வந்துவிட்டது.ஆனாலும் முடிந்தளவு விசரம் இல்லா…
-
- 79 replies
- 13.5k views
-
-
அஸ்தமன வானில்....... இளவேனிற் காலத்து இதமான தென்றலின் தாலாட்டில் மேபிள் மரங்களெல்லாம் மெல்லச் சிலிர்த்துக் கொண்டன. பூங்காவின் வாங்கில் சாய்ந்து அமர்ந்திருந்த கற்பகத்தின் பார்வை அடிவானத்து அந்திச் சிவப்பில் லயித்துக்கிடந்தது. ஆங்காங்கு அருகருகே அமர்ந்திருந்த இளம்சோடிகள் தமக்குள் ஏதேதோ பேசிச் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். முதியவர் சிலர் தம்மால் முடிந்தளவு தூரம் நடந்துகொண்டிருந்தனர். பூச்சியங்களைத் தாண்டி புவியீர்ப்பு மையத்தைத் தொடும் குளிரில் விறைத்துக் கிடந்த உடல்கள் இங்கு சற்று தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டன. மழலைகள் புற்றரையில் பந்தை உருட்டுவதும் ஊஞ்சலில் ஆடி ஆடி அலுத்து மீண்டும் படிகளில் ஏறி ஏறி வழுக்குவதுமாக விளையாட்டில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தனர். சி…
-
- 6 replies
- 1.7k views
-
-
தலைமுறை நிழல்கள் இளைய அப்துல்லா ஓவியங்கள் : ஸ்யாம் லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. 'மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது. மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த கையோடு அவருக்கு வந்த முதல் பிரச்னை... இரண்டு கைகளிலும் தோல் உரிய ஆரம்பித்தது. பின்னர், உடம்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
சுவர் முகம் August 4, 2025 ஷோபாசக்தி பாரிஸ் நகரக் காவல்துறைத் தலைமையகத்தில் அந்தச் சுவர் இருக்கிறது. சுவரோடு சேர்த்து அய்ந்து மனிதர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய மேலங்கியிலும் வட்டமாக இலக்கத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. மூன்றாவது இலக்கத்தின் பெயரை ‘டேவிட்’ என வைத்துக்கொள்வோம். வயது 46. கருப்பு நிறம். உயரம் 5 அடி 8 அங்குலம். தலைமுடி படிய வாரப்பட்டுள்ளது. நரையேறிய தாடி. ஒல்லியான உடல்வாகு. இலங்கையைச் சேர்ந்தவர். 2009-இல் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். டேவிட் இதற்கு முன்னரும் சிலதடவை இவ்வாறு சுவரோடு நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் பிரான்ஸுக்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்திருந்தபோது, காவல்துறையிடமிருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு தனது …
-
-
- 3 replies
- 658 views
-
-
உபச்சாரம் பொ.கருணாகரமூர்த்தி அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்……. இந்த மாதம் நீ வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்………… ”என்றான் “ஓ……..ஜா…..!” மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான். இரவுமுழுதும் மனைவி லதாவுடன் ஃப்ரான்ஸுக்குப் போவதா, இல்லை சுவிஸுக்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. ஃப்ரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம். கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும…
-
- 8 replies
- 2k views
-
-
பர்மா ராணி சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் 2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம். வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மூடிக்கிடந்த கடந்த காலத்தின் ரகசியப் பக்கங்கள், இந்தத் தேடலின் ஒவ்வொரு தருணத்திலும் திறந்துசெல்வதைக் கண்கூடாகப் பார்த்தான். அவன் தேடும் தனியொரு மனிதராக அல்லாமல், ஒரு நூற்றாண்டின் ரகசியமாகவே மாறியிருந்தார் ஜாவேத். புதிய புதிய சுவாரஸ்யங்களைத் தந்த அந்த ரகசியத்தின் எழுதப்படாத, விநோதமான பாத்திரம் இவன். `தமிழ் சினிமா – நேற்றின் நிழல்’ என்னும் பெயரில், சினிமாவின் கடந்த காலத்தைக் கொண்டாடும்விதமாக நடக்கும் நிகழ்வின் அபூர்வமான ஒரு தருணத்தில்தான், ஜாவேதைப் பற்றி முதலில் தெரிந்துகொண…
-
- 1 reply
- 2.3k views
-
-
“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல் கொரோனா வந்ததும் வந்தது இன்னும் மனிசர பாடாய்ப் படுத்திக் கொண்டு இருக்கு’ முன் வீட்டு பரமேஸ் அக்கா முணங்கிக் கொண்டே கதவடியில் வந்து நின்றாள். கொழும்பில் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருக்கும் தொடர் மாடி வீடுகளில் அவரவர் கதவடியில் வந்து நின்றாலும் நமது வீட்டுக் கதவடியில் வந்து நிற்பது போல் தான் இருக்கும். முகத்தினை துணியினால் பொத்திக் கொண்டு நின்ற பரமேஸ் அக்காவைப் பார்க்க பாவமாகக் கிடந்தது. ‘ஏன் அக்கா என்னாச்சு’ என்று கேட்ட என்னை மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு ‘ஏன் உமக்கு கத தெரியாதே… நம்மட மல்காந்தி இப்போ கோல் எடுத்தவா. அவவும் மற்ற பிளட் ஆக்களோட சேர்ந்து கீழே போய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போறாவாம். நியூஸ்ல காட்றவை தா…
-
- 0 replies
- 575 views
-
-
தேவ இரகசியம் - படித்ததில் பிடித்த கதை ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருந்தாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி “அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்றான். இந்த எமதூதன் “ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக் கொண்டு போய்விட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று தாயின் உயிரைக் கவராமல் திரும்பி விட்டான். நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை, அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள். எமதூதன…
-
- 1 reply
- 767 views
-