கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
இருபத்தியிரண்டு ஆண்டுகளாக உலக அரங்கில் விடுதலை கோரிய நாடு ஒன்று, இன்றைய கால கட்டத்தில் தென் சூடான் எனும் நாமத்தோடு சுதந்திரக் குழந்தையாகப் பிறந்திருக்கிறது. முப்பது வருடத்திற்கும் மேலான ஆயுதப் போராட்டத்தில்- உலகின் பல விடுதலை அமைப்புக்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ வேண்டியவர்கள் எனச் சொல்ல்லப்படும் ஈழத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்று அமைப்பு- வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதுமின்றி வேரோடு வெட்டிச் சரிக்கப்பட்டிருக்கிறது. தென் சூடானில் ஈழத்தினைப் போலப் பல்வேறு சிறு சிறு பிரிவினைவாதக் குழுக்கள்- துணைக் குழுக்கள் இல்லாமையும், சுய நலம் கலந்த மக்கள் இல்லாது பொது நலத்தோடு போர் செய்து விடுதலை எனும் நாமத்தைத் உயிரணுவில் ஏற்றி வாழ்ந்தோரும் வாழ்ந்ததால் தான் இவை சாத்தியப்பட்டது எனலாம…
-
- 10 replies
- 2.3k views
-
-
எனது முகப்பு புத்தகத்தினூடாக பேராசிரியர் காலமாகிய செய்தி அறிந்து நீண்ட காலமாக தொடர்புகள் இல்லாத எனது பள்ளி தோழனுக்கு தொலைபேசி செய்தேன். தொலைபேசி அழைப்பு அமைந்த பொழுது எனது குரலை அறிந்து கொண்ட அவனது குரலும் வறண்டு கர கரத்தது . அவன் எனது பெயரை விளித்து நீ அறிந்தியோ தெரியாது .என்று தொடங்க. விசயம் அறிந்து தான் எடுத்தேன் என்று சொல்வதுடன் சம்பாசணை தொடங்கியது.சம்பாசணையில் அவரை பற்றிய நினைவுகளும் விவரங்களும் வேறு விடயங்களும் தொடர்ந்தது.அவன் வேறு யாருமல்ல சிவத்தம்பி அவர்களின் நெருங்கிய உறவினன்.அவன் ஹாட்லி கல்லூரியில் உயர்தர வகுப்பில் என்னோடு ஒன்றாக படித்தவன்.உயர்தர, வகுப்பு படிக்கும் பொழுது தான் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு 16 அல்லது 17 வயதுகள் தான் …
-
- 0 replies
- 757 views
-
-
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன. ‘த்துப்..’ பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அடுத்த நொடி, ‘சர்ர்க்’ என்று ஒரு சத்தம். படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னுமாக இழுத்தாள். அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.’’ …
-
- 27 replies
- 9.6k views
-
-
. என்ரை பிள்ளையளை எடுங்கோ நான் அவரோடை போப்போறன். அவளுக்கு வயது 28. 3குழந்தைகள். மூத்த குழந்தைக்கு வயது 11. கடைசிக் குழந்தைக்கு வயது 5. அவளைவிடவும் 12வயதால் மூத்த அவளது கணவன் தடுப்பில் இருக்கிறான். பிள்ளைகளை உறவினருடன் விட்டுவிட்டு…., வவுனியாவில் பெண்கள் சிலருக்காக ஒரு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அவள் வேலையில் இணைத்துக் கொள்ளப்பட்டாள். வாரத்தில் 2நாட்கள் வேலை வழங்கிய இடத்திலிருந்து விடுமுறை அவளுக்கு. அந்த நாட்களில் ஊருக்குப் பிள்ளைகளைப் பார்க்கப் போய்விடுவதாகப் போய்விடுவாள். திங்கள் காலை அல்லது ஞாயிறு இரவு திரும்பும் போது தனது வளவு மரக்கறிகள் என பெரிய சுமையோடு திரும்புவாள். திங்கள் முதல் வெள்ளி வரை வேலையில் இருப்பாள் பொழுது இருண்டா…
-
- 1 reply
- 1.6k views
-
-
கொலையுதிர்காலம் http://www.mediafire.com/?w93xkvto8y3x88q
-
- 3 replies
- 2.3k views
-
-
விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து… (இவ்விடயம் ஊர்ப்புதினம் பகுதியில் இணைத்தேன். ஆனால் கதைப்பகுதியில் இந்தக் கைதியின் விடயம் கடந்த வருடம் பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணியிருந்தது. கடந்தவருடம் கதையில் வந்து கருத்தாடிய இதயங்கள் மனமிரங்கி இவனுக்காக உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு இணைக்கிறேன்.) சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான். இந்தக் கைதியின் கைதுபற்றி 200…
-
- 7 replies
- 2.2k views
-
-
எம் இனத்திற்கு ஏன் இந்தநிலை,எம்மை காக்க ஒருத்தரும் இல்லையா என்று எண்ணிக்கொண்டு வானொலியை ஒன் செய்தேன் .b.b.c தமிழோசையில் செய்தி போய்கொண்டிருந்தது."சிறிலங்காவில் இரு இராணுவத்தினர் சுட்டுக்கொலை, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் நடாத்தபடும் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி தனியாக பிரிந்து செல்ல போவதாக அறிவித்துள்ளனர்".இந்த செய்தியை கேட்டவுடன் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது. காலப்போக்கில் அதன் தலைவரும் எனைய போராளிகளும் செய்த போராட்டங்கள்,இராணுவத் தாக்குதல் தியாகங்கள் போன்றவற்றால் அந்த அமைப்பின் மீது அளவுகடந்த பிடிப்பை ஏற்படுத்தியது.இனக்கலவரங்கள் நேரில்…
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
என்ர நிலமையை முதலாவதா எழுது… XXXXஅக்காவும் XXXXXXஅண்ணையும் இங்காலை வாங்கோ…. உங்களைத்தான் இங்காலை வாங்கோ…. அத்தனைபேருக்குள்ளும் அவளையும் அவனையும் இனம்காட்டி அழைத்தவன் எதிரியின் இனத்தைச் சேர்ந்தவனில்லை. இவர்கள் பணியாற்றி அரசியல் பிரிவில் அவனும் பணியாற்றியவன். தூXXன் என்ற பெயரைக் கொண்டவன். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவன். யுத்தம் முடிந்து நிராயுதபாணிகளாய் நிரையில் நின்றவர்களில் பலரை புலிகள் என்பதை இனங்காட்டி மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான் அவன். எதிரியின் இதயக்கூட்டையே தொட்டுத்திரும்பிய விடுதலையமைப்பின் பலம் நம்பிக்கை யாவும் இன்று தவிடுபொடியாய்…..புலியே புலியைக்காட்டிக் கொடுக்கும் நிலமைக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
எழுதியவர் உமா வரதராஜன் இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி என்றைக்குமே பேசாது என்பது போல நின்றது அது, கோயிலை வளைத்துக் கடை வீதி, கரிமண் கிளறிக் கிளறி நடைபோடும் ஜனங்கள். ஒவ்வொரு கடையிலும் தேனடையை மொய்க்கும் ஈக்களாகிக் குழுமி நிற்கும் ஜனங்கள். எறும்புகளாகி முட்டியும், மோதியும் விலகிப் போகும் ஜனங்கள். ஜனங்கள். ஜனங்கள். எதிர்வெயிலை வாங்கி தம் முகம் நோக்கித் துப்பியெறிகின்றன அலுமினியப் பாத்திரங்கள். மெல்லிய கைகளைப் பற்றி வளையல் அணிவிப்பதில் காலத்தைக் கரைக்கிறார்கள் காப்புக்கடைப் பையன்கள். இந்த உச்சக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் கச்சான் கொட்டை விற்பவர்களும், கடலை வண்டிக்க…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
90களின் காலைப்பொழுது எப்பொழுதுமே ரசிக்க கூடியதாகவோ, அல்லது சேவல் கூவல்களுடனோ திருகோணமலைக்கு விடிவது இல்லை. திருமலைக்கு மட்டுமல்ல பல இடங்களுக்கும் அப்படிதான். இதே போன்ற ஜூன் மாதத்தில் ஒருநாளும் அப்படித்தான் துப்பாக்கி வேட்டுக்களின் அதிரல்களுடன் திருமலை நகரமே திடிரெண்டு விழித்து கொண்டது. ஆனால், ஒருவனுக்கு மட்டும் அன்றைய இரவு தூக்கம் இல்லாமல் வெறும் கனவுகளால் மட்டும் நிரம்பி இருந்தது. அவனது செல்ல குழந்தை அவனை தூங்க விடாது, அவனது கனவுகளை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது. இந்த குழந்தையை எப்படி வளர்ப்பது? என்ன படிக்க வைப்பது? என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்ற கனவுகளுக்கு மத்தியில் அந்த குழந்தையின் சிறு சிறு அழுகை சினுங்கல்களையும், தன் மனைவியின் தாய்மை உணர்வுகளையும் ரசித்தவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
April 23rd, 2011 நேற்று என்னுடைய பிறந்தநாள். அரைநூற்றாண்டை நெருங்குகிறேன், [22-4-1962] , கருவிவிலே திரு என்று சொல்லி அரைநூற்றாண்டு இலக்கியவாழ்க்கை என்று உரிமைகோரரலாம்தான். ஒருசில நண்பர்கள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள். அருண்மொழி காலையிலேயே கூப்பிட்டு வாழ்த்துச்சொன்னாள். இங்கே எலமஞ்சிலி லங்காவில் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து வெறுமே பனிவெளியில் வரையப்பட்டதுபோல வெளியே விரிந்துகிடக்கும் கோதாவரியின் பெருந்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். படிகத்தின் மென்மையான உள்ளொளி போன்று ஒரு வெளிச்சம். பின்பு காலைச்சூரியனின் கதிர்களில் நீர்ப்பரப்பு உருகிய வெள்ளியாக ஒளிவிட ஆரம்பித்தது. நீரில் படகுகள் மெல்ல நகர்ந்துசெல்லும்போது நதி மௌனமாக உதடுவிரியப் புன்னகைத்து அடங்குவதுபோல் இருந்…
-
- 60 replies
- 6.4k views
-
-
லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்…
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 923 views
-
-
தாய் மனம் - வனிதா "டேய் கணேசா... இன்னும் வேலைக்கு கிளம்பல? உனக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன், எடுத்துட்டு போடா. வேல முடிஞ்சதும் ஊர சுத்தாம வீடு வந்து சேரு. சரி... நான் கிளம்பறேன் நேரமாச்சு, கொஞ்சம் நேரமானாலும் அந்தம்மா கத்தும்." என்று அவசர அவசரமாக கிளம்பினாள் ரேவதி. "அம்மா..." "என்னடா..." "இன்னைக்கு தான் அண்ணனுக்கு கல்யாணம்... அண்ணன் துபாயில் இருந்து வந்திருக்குமில்லம்மா...." "நீ வேலைக்கு கிளம்பு. நேரமாச்சு" என்று சொல்லி வாசலுக்கு வந்தாள். செருப்பை போட போகும் போது தான் நினைவுக்கு வந்தது, நேற்றே அது அறுந்து போனது. "அட... இதை தெச்சு வாங்க நினைச்சேன், மறந்து போச்சு. செருப்பில்லாமலே நடக்க ஆரம்பித்தாள். நினைவுகள் பல மனதில் ஓடியது.…
-
- 2 replies
- 3.7k views
- 1 follower
-
-
ஏன்டா உந்த படிகளிற்க்கு கீழ் நீங்கள் நின்று கதைக்கிறீயள்,எல்லோரும் வகுப்பு அறைக்குள் செல்லுங்கோ என ஆசிரியர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்றுவிட்டோம்.அந்த பாடசலை ஒரு கலவன்(ஆண் பெண் இரு பாலரும்)பாடசாலை.பிரித்தானிய காலத்தில் உருவாக்கபட்டது,அதன் பின்பு அமெரிக்கன் மிசனால் நடாத்தப்பட்டது.அது ஒரு இரு மாடிகள் கொண்ட கட்டிடம்.அதன் படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதுக்கு என்று ஒரு கூட்டம் அந்த பாடசாலையில் இருந்தது.10ஆம்,11 ஆம் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதற்க்கு அடிபடுவதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் ஒன்று கூடுவோம். வகுப்பு பாடங்கள் தொடங்குவதற்க்கு 10 நிமிடத்திற்க்கு முதல் அந்த படிக்கட்டுக்கு கீழ் போய் நிற்போம்.வகுப்பறைக்க…
-
- 22 replies
- 5k views
- 1 follower
-
-
அன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன்? நல்லாச்செய்யிறான்? யார் அந்த கதாநாயக வில்லன் ? அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர…
-
- 15 replies
- 2.7k views
-
-
5. அரசி "......பசிக்குப் பிச்கை கேட்க யா¡¢டமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்...." - மெளனி நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் இன்று பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்…
-
- 17 replies
- 4.3k views
- 1 follower
-
-
அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக…… பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது. அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந…
-
- 5 replies
- 1.5k views
-
-
குஞ்சுகள் இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது. "எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன். "இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன். "ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் …
-
- 5 replies
- 867 views
- 1 follower
-
-
ஜெக் கெவார்க்கியன்! இந்தப் பெயரைக் செய்திகளில் கேள்விப் படும் போதெல்லாம் என் மனதில் பலவாறான எண்ணங்கள் இழையோடும்.இந்த எண்ணங்களில் வியப்பும், விரக்தியும் சில சமயம் மனித வாழ்க்கையின் நொய்மையான தன்மை பற்றிய சலிப்பும் கலந்திருக்கும். இன்று காலை முதல் "டாக்டர் டெத்" என்று அழைக்கப்படும் ஜெக் கேவார்க்கியனின் பெயர் மறுபடியும் ஊடகங்களில் மிதந்து வருகிறது-அதுவே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. டாக்டர் ஜெக் கேவார்க்கியன் 83 வயதில் இன்று இயற்கையான காரணங்களால் காலமானார் என்பது தான் செய்தி. ஆனால், அமெரிக்காவின் மிச்சிகன் மானிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை தீர்ப்பளிக்க முதலே தன் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி மரணத்தை அளித்த ஒருவர் தான் ஜெக் கேவார்க்கியன். ஆர்மேனியப்…
-
- 5 replies
- 975 views
- 1 follower
-
-
அது ஒரு மீன் பிடிக்கிராமம் எனைய எழுத்தாளர்கள் போல அழகிய மீன்பிடிகிராமம் என்று புகழமாட்டேன்,மீன் மணமும்,காகங்கள் மீன்களின் குடல்களை கொத்தி திண்றுகொண்டிருக்கும்,படகுகள் ,இயந்திர படகுகள் நிறைந்த அந்த கிராமம் .அதில் நானும் வாழ வேண்டிய சூழ்நிலை ,காரணம் அந்த மீன்பிடி வாசிகள் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு தங்களது கல்லால் கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள்,எனது உறவுகாரர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவர் கொழும்பில் பணிபுரிந்தாலும் அங்கு வீட்டு வாடகை அதிகம் என்ற படியால் நீர்கொழும்பை தெரிவு செய்தார் ,மற்றும் அங்கு தமிழ் பேசக்கூடியவர்கள் வாழ்ந்தமை .அந்த கிராமத்தில் பெற்றோர்கள் தமிழில் பேசுவார்கள் ஆனால் பிள்ளைகள் சிங்களத்தில் பேசுவார்கள் ,சிங்கள பாடசாலையில் கல்வி கற்…
-
- 21 replies
- 3.9k views
-
-
என் அரூயிர் நண்பனுக்கு, நான் நலம். உன் நலம அறிய ஆவல் இருந்தாலும், இங்க நடக்கிற இளுபடியாளால், நீண்ட நாட்களாக கடிதம் போட முடியவில்லை. மன்னிக்கவும். வளத்த கடா எல்லாம் முட்ட வருகுது. இரத்தத்தில் சீனியும், கொளுப்பும் வேண்டா விருத்தாளிகளாக வந்து குடியெறிவிட்டுது. சமைக்கிற பஞ்சியில உங்களுக்கு சுகர், உந்த பாணை போட்டு சாப்பிடுங்கோ, என்ற குரல் சுப்பிரபாதம் ஆகிவிட்டது. துரித உணவுகள், அன்றடா அத்தியவாசியம் ஆகிவிட்டது. அவசர வாழ்க்கையில், பிள்ளைகளின் குறும் செய்தி மட்டுமே கிடைக்கிறது. எனிந்த வாழ்க்கை என்று எண்ணும் போதெல்லாம், நாமடித்த லூட்டிகள் கொஞ்சம் மனசை பலமூட்டுகிறது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஜயர் வீட்டுக்கு புது மீன் காரனை அனுப்பினோம். அம்மா மீன் கொண்டராட்டாம், நான் கா…
-
- 1 reply
- 1.5k views
-
-
கடைசிச் சடலம் யோ.கர்ணன் ஓவியங்கள் : ஸ்யாம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளதுஇ ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டுஇ வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அவரது வயிறு பிளந்து இருந்தது. பெரிய உடம்புக்காரரான அவர்இ ஒரு விலங்கைப்போலத் துடித்துக்கொண்டு இருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே இறந்துபோனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவதுஇ பிளந்த வயிறுஇ மரண ஓலம்இ அவரில் இருந்து பெருகிய ரத்தம் தவிரஇ வேறு எதுவும் நினைவில் இல்லை. நா…
-
- 6 replies
- 3.2k views
- 1 follower
-
-
குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது. அவளின் பிரச்சினை (சிறுகதை) -ஆனதி- தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்க…
-
- 20 replies
- 3.8k views
- 1 follower
-