விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா மெஸ்ஸியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரர் கேரி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகியோர் அர்ஜென்டினா அணியின்போட்டி திறமை பிரேசில் அணியுடன் எப்படி இருக்கிறது என்பது பற்றி விவாதித்தனர். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா கலந்து கொண்டு பேசினார். மரடோனா கணித்தது போல் மெஸ்ஸி உலகக்கிண்ணத்தை வெல்வாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது என் கையில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாய் சே குவேராவை பொறித்துள்ளேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். பின்னர் நாங்கள் மிக உயரமாக கட்டப்பட்ட மூன்று மேடைகள் வைத்துள்ளோம். ஒன்று ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ …
-
- 0 replies
- 827 views
-
-
பிரேசில் வீரர் நெய்மரை காயப்படுத்திய கொலம்பிய வீரரருக்கு பிரேசில் ரசிகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காலிறுதிப் போட்டியில் கொலம்பியா- பிரேசில் அணிகள் மோதின. இதில் நெய்மரை கொலம்பிய அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கினார். இதனால் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நெய்மர் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இதனால் பிரேசில் ரசிகர்கள் கொலம்பிய வீரர் ஜூவான் ஜூனிகா மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் பிரேசில் ரசிகர் ஒருவர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் பல ரசிகர்கள் மோசமான வார்த்தைகளால் திட்டிவருகின்றனர். இதற்கிடையே நெய்மரை முதுகில் தாக்கியதற்காக வருத்தம் தெரிவித்த ஜூனிகா கூறும் போது, ‘‘நா…
-
- 0 replies
- 635 views
-
-
உதைபந்தாட்ட உலகக்கிண்ணம் 2014 அடுத்த சுற்றுக்கான விளையாட்டுக்கள் இங்கே அருகருகே சோடியா இருக்கும் அணிகள் முதலில் அடுத்த சுற்றிலும் முறையே காலிறுதி அரையிறுதி என விளையாடி வெற்றி அடையும் அணி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் பிரேசில் எதிர் சிலி கொலும்பியா எதிர் உருகுவே பிரான்ஸ் எதிர் நைஜீரியா ஜேர்மனி எதிர் அல்ஜீரியா மேலுள்ள எட்டு அணிகளில் ஒரு அணியும் கீழே உள்ள எட்டு அணிகளில் ஒரு அணியும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறுவார்கள் ஒல்லாந்து எதிர் மெக்சிக்கோ கோஸ்ரா ரிக்கா எதிர் கிரேக்கம் ஆர்ஜெண்டீனா எதிர் சுவிஸ் பெல்ஜியம் எதிர் அமேரிக்கா இறுதி ஆட்டம் இப்படியும் அமையலாம் பிரேசில் எதிர் ஆர்ஜெண்டீனா பிரேசில் எதிர் ஒல்லாந்து அல்லது ஜேர்மனி எதிர் ஒல்லா…
-
- 10 replies
- 708 views
-
-
காயமடைந்து வலியால் துடிக்கும் நெய்மார். | படம்: ஏ.பி. பிரேசில் நட்சத்திரம் நெய்மார் காயமடைந்து இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள செய்தி பிரேசிலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவுக்கு எதிராக இன்று அதிகாலை நடைபெற்ற ஹை வோல்டேஜ் காலிறுதியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் ஜெர்மனியை சந்திக்கிறது. ஆனால் ஜெர்மனிக்கு எதிரான முக்கியமான அரையிறுதிப் போட்டியில், கோப்பை வெல்லும் கனவுடன் ஆடி வரும் பிரேசில் அணிக்கு அடிமேல் அடி விழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் போட்டியின் போது கீழே தள்ளிவிடப்பட படுகாயம் அடைந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். இவர் இனி இந்த உலகக் கோப்பை ப…
-
- 1 reply
- 805 views
-
-
சச்சின், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிகளுக்கிடையில் விற்பன்னர்கள் கிரிக்கெட் போட்டி நாளை; லோர்ட்ஸ் விளையாட்டரங்கின் 200 வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் முன்னாள் கிரிக்கெட் விற்பனர்களையும் சமகால கிரிக்கட் வீரர்களையும் உள்ளடக்கிய இரண்டு அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப் போட்டியில் விளையாடும் மெரில்போன் கிரிக்கெட் கழக (எம்.சி.சி.) அணிக்கு உலக கிரிக்கெட் சாதனை சிகரம் சச்சின் டெண்டுல்கரும் உலக அணிக்கு அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ஷேன் வோர்னும் தலைவர்களாக விளையாடவுள்ளனர். இங்கிலாந்து நேரப்படி காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்கை ஸ்போர்ட் தொலைக்காட்சி சேவைகளில் நேரடியாக ஒளிபரப்ப…
-
- 0 replies
- 441 views
-
-
வடமாகாணத்தின் சிறந்த அணியாக சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தின் 19 வயதுப்பிரிவு சிறந்த துடுப்பாட்ட அணியாக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கர் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாகாணத்தின் சிறந்த அணிகளுக்கான தெரிவிலேயே சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வடமாகாணத்தில் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது கடந்த ஜுன் 30 ஆம் திகதி கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் வைத்து வழங்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றினைக் கொண்ட வடக்கின் மாபெரும் போர்களில் பங்குபற்றும் அணிகளில் ஒன்றான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, இவ்வருடம் இடம்பெற்ற வடக்கின் மாபெரும் போரில் வெற்றிபெற்றிருந்தது. வெளிமாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில் மவுண்டன்லெவினி…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கில் இன்று ஆஸி.இளைஞர் அணியுடன் யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணியினர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுவுள்ளது. யாழ்.மாவட்டக் கிரிக்கெட் தெரிவு அணிக்கும்,ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்துள்ள இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது .பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி.அணி20 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து படுதோல்வியை தழுவியது. யாழ்ப்பாணத்தில் கிரி…
-
- 0 replies
- 454 views
-
-
சுவிஸ் பயிற்சியாளர் ஒற்மார் ஹிற்ஸ்வெல்ட்விடைபெற்றார் சுவிட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் ஓய்வு பெற்றார். தனது சகோதரர் வின்பிரெட் (81) இறந்த துக்கத்துக்கு இடையிலும் அர்ஜென்டீனாவுக்கு எதிராக ஆடிய சுவிட்சர்லாந்து வீரர்களை உற்சாகப்படுத்திய ஹிட்ஸ்பெல்ட் கனத்த இதயத்துடன் விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அர்ஜென்டீனாவுடனான இந்தத் தோல்வி 1999 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது. எனது இதயம் முழுவதும் உணர்ச்சி வசத்தால் நிரம்பியுள்ளது. இதுபோன்ற உணர்ச்சிபூர்வமான தருணங்கள் கால்பந்து விளையாட்டில் மட்டுமே கிடைக்கும். அதனால்தான் கால்பந்தை விரும்புகிறேன்” என்றார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளை…
-
- 4 replies
- 513 views
-
-
உலகக்கோப்பையை வென்றால் நெதர்லாந்துக்கு விநோத வெகுமதி :விண்வெளிப் பயணம் உலகக் கோப்பையை நெதர்லாந்து வென்றால் அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் 23 வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம் என அந்நாட்டைச் சேர்ந்த விண்வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கு வீரர் களை ஊக்கப்படுத்தினால் மட்டும்போதாது, அவர் களுக்கு மிகப்பெரிய வெகுமதியை அளிக்க வேண்டும் என நெதர்லாந்தைச் சேர்ந்த விண் வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனமான ரியூம்டீவார் பெட்ரிப் எஸ்எக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினுக்கு எத…
-
- 1 reply
- 441 views
-
-
சிலி அணிக்கு எதிரான நோக்-அவுட் சுற்றுப் போட்டியில் பெனால்டி கிக் முறையில் பிரேசில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு அதன் முன்னணி வீரர்கள் நெய்மார், கோல் கீப்பர் சீசர், டேவிட் லூயிஸ், கேப்டன் தியாகோ சில்வா உள்ளிட்ட வீரர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டனர். இது பிரேசில் கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல பிரேசில் அணியின் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர் ஸ்கொலாரி ஆகியோரையும் சற்றே நிலைகுலையச் செய்தது. இப்படி உணர்ச்சிவசப்படும் மன நிலையில் உள்ளவர்கள் உலகக் கோப்பையை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பயிற்சியாளர் ஸ்கொலாரிக்கு பழக்கமான ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட் ரெஜினா பிராண்டோ பிரேசிலுக்கு …
-
- 0 replies
- 919 views
-
-
கிரிக்கெட் இனி... 1843இல் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடும் ராணுவ தளபதி கிரிக்கெட் ஒரு காலனிய ஆட்டம். நியுசிலாந்து, இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தின் வழிகாட்டலின் கீழ் ஆடிய ஒரு பண்பாட்டு பங்கேற்பு நிகழ்ச்சி. ஒரு காமன்வெல்த் நாடு என தன்னை இருத்திக் கொள்வதை தாண்டி இவ்விளையாட்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இங்கிலாந்தின் கையில் இருந்து ஆட்சிக்கட்டிலை அது பறித்தது. இதைச் சொல்லும் போது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஆட்டத்தை இங்கிலாந்து தான் ஆடி வளர்த்தெடுத்தது என நினைவில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து மே…
-
- 1 reply
- 552 views
-
-
வில்லியம்சன் சதம்: நியூசிலாந்து அபாரம் ஜூன் 09, 2014. கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில், வில்லியம்சன் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி செல்கிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜமைக்காவில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு புல்டன் (1) ஏமாற்றினார். பின் இணைந்த டாம் லதாம், வில்லியம்சன் ஜோடி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம்பார்த்தனர். பொறுப்பாக ஆடிய லதாம் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த போது, ஷில்லிங்போர்டு ‘சுழலில்’ லதாம் …
-
- 5 replies
- 546 views
-
-
உலக கோப்பை கால்பந்தில் தோல்வி: கேமரூன் அணி மீது சூதாட்ட விசாரணை உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்த கேமரூன் அணி தனது 3 லீக் ஆட்டத்திலும் தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேமரூன் அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடையும் என்று சூதாட்டத்தில் தண்டனை பெற்ற சிங்கப்பூரை சேர்ந்த புரோக்கர் வில்சன் ராஜ் பெருமாள் தெரிவித்ததாக ஜெர்மனி பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து கேமரூன் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஏதேனும் ஈடுபட்டார்களா? என்பது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து கேமரூன் கால்பந்து சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘உலக …
-
- 1 reply
- 478 views
-
-
இலங்கை வந்தடைந்தது தெ.ஆபிரிக்க அணி 0 Submitted by Priyatharshan on Mon, 06/30/2014 - 16:11 இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பாக ஒருநாள் போட்டிக்கு ஏ.பி. டிவில்லியர்ஸ{ம் டெஸ்ட் போட்டிக்கு ஹசிம் அம்லாவும் தலைமை தாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் போட்டி ஜூலை மாதம் 9 ஆம் திகதி பகலிரவு போட்டியாக கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்த…
-
- 1 reply
- 452 views
-
-
சர்வீஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் மீது செக். குடியரசு நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ரசூல் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் 2-வது சுற்று ஆட்டத்தில் லூகாஸை நடால் தோற்கடித்தார். இதன் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய லூகாஸ், சர்வீஸ் செய்வதற்கு நடால் வேண்டுமென்றே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். முன்னணி வீரர்கள் இதுபோன்ற தவறை செய்யும்போது நடுவர்களும் அவர்களைக் கண்டு கொள்வது இல்லை. இது தவறான முன்னுதாரணம். அதே நேரத்தில் வளர்ந்து வரும் வீரர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சர்வீஸ் செய்கிறார்கள். முன்னணி வீரர்கள் என்பதால் விதிகளை மீற அனுமதிக்கலாமா? இதனை யாரும் கண்டுகொள்ளா…
-
- 3 replies
- 515 views
-
-
ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் குக்: மீண்டும் ஷேன் வார்ன் கடும் விமர்சனம் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார். டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது. குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்…
-
- 0 replies
- 448 views
-
-
இதற்கு முன்னால் தோற்றதேயில்லையா? ஜேம்ஸ் ஆண்டர்சன் கண்ணீர் ஏன்?- கூறு போடும் பீட்டர்சன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக முதன்முதலாக டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணியினரிடத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியின்மை இருக்கிறது என்கிறார் கெவின் பீட்டர்சன். லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், எரங்காவின் ஷாட் பிட்ச் பவுன்சரில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் அவரது கண்களில் கண்ணீர். இதற்கு முன் தோற்றபோதெல்லாம் கூட ஜேம்ஸ் ஆண்டர்சன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதில்லை. இங்கிலாந்தின் மனோநிலை குறித்து பீட்டர்சன் தனது டெய்லி டெலிகிராப் பத்தியில் எழுதுகையில், “இலங்கைகு எதிராக 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் நிலையிலிருந்தனர். ஆனால் கோட்டைவிட்டனர். சீனியர் வீரர…
-
- 0 replies
- 327 views
-
-
பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், அனுமதிக்கப்படாத உள்ளாடையொன்றை உலக கிண்ண போட்டி மைதானத்தில் பகுதியளவில் வெளிப்படுத்தியமை தொடர்பாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீஃபா) விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரஸிலியா நகரில் நடைபெற்ற கமரூன் அணியுடனான போட்டியில் 4:1 விகிதத்தில் பிரேஸில் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு கோலக்ளை அடித்த நெய்மர், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து கெமரூன் வீரர் ஒருவருடன் ஜேர்ஸியை பரிமாறிக்கொண்டார் நெய்மர். அதன்பின் நெய்மர் தனது காற்சட்டையை சற்று கீழிறக்கியபோது அவர் அணிந்திருந்த உள்ளாடை பகுதியளவில் வெளிப்பட்டது. சாதாரணமாக இது ஒரு பிரச்சினையாக கருதப்பட்டிருக்க மாட்டாது. ஆனா…
-
- 7 replies
- 939 views
-
-
லூயிஸ் சுவாரஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூயிஸ் சுவாரஸுக்கு ஆதரவாக கடி வாங்கியவர் குரல் கொடுத்துள்ளார். எதிரணி வீரரைக் கடித்தார் என்பதற்காக உருகுவே நாட்டின் சுவாரஸுக்கு நான்கு மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா நேற்று அறிவித்தது. ஆனால் ஃபிஃபாவின் இந்த தண்டனை மிகவும் கூடுதலானது என்று, அவரிடம் கடிவாங்கிய ஜியார்ஜியோ ச்சீலீனி கூறியுள்ளார். சுவாரஸும், ச்சீலீனியும் இது தவிர, தமது நாட்டின் மிகப்பெரும் கால்பந்து நட்சத்திரமான சுவாரஸை உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெ…
-
- 2 replies
- 558 views
-
-
பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், அனுமதிக்கப்படாத உள்ளாடையொன்றை உலக கிண்ண போட்டி மைதானத்தில் பகுதியளவில் வெளிப்படுத்தியமை தொடர்பாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீஃபா) விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரஸிலியா நகரில் நடைபெற்ற கமரூன் அணியுடனான போட்டியில் 4:1 விகிதத்தில் பிரேஸில் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு கோலக்ளை அடித்த நெய்மர், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து கெமரூன் வீரர் ஒருவருடன் ஜேர்ஸியை பரிமாறிக்கொண்டார் நெய்மர். அதன்பின் நெய்மர் தனது காற்சட்டையை சற்று கீழிறக்கியபோது அவர் அணிந்திருந்த உள்ளாடை பகுதியளவில் வெளிப்பட்டது. சாதாரணமாக இது ஒரு பிரச்சினையாக கருதப்பட்டிருக்க மாட்டாது. ஆன…
-
- 0 replies
- 633 views
-
-
இங்கிலாந்தில் ஈட்டப்பட்ட வெற்றிப் பயணத்தை தொடர முடியும் என மெத்தியூஸ் நம்பிக்கை இங்கிலாந்தில் ஈட்டிய மகத்தான வெற்றியையிட்டு முழு அணியினரும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். ஆசிய நாடுகள் ஆங்கிலேய மண்ணில் சாதிப்பது அரிதான விடயம். அங்கு எங்களுக்கு நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தோம். அவற்றை வெற்றிகொள்வதற்கான தந்திரோபாயங்களைப் பிரயோகித்ததன் மூலம் வெற்றி எம்மை நாடி வந்தது. இந்த வெற்றி வீரர்கள் அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சிப் பிரவாகத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த வெற்றிப் பயணத்தை தென் ஆபிரிக்காவுக்கு எதிரான தொடர்களின்போது தொடர முடியும் என நான் வெகுவாக நம்புகின்றேன். இவ்வாறு இங்கி…
-
- 0 replies
- 548 views
-
-
கடி வாங்கிய இத்தாலி வீரர் சியெலினி, தடை செய்யப்பட்ட சுவாரேஸ். | படம்: ஏ.எஃப்.பி. இத்தாலி வீரர் சியெலினியை தோள்பட்டையில் கடித்த உருகுவே வீரர் சுவாரேஸிற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் உட்பட 4 மாதங்களுக்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது ஃபிஃபா. இந்தத் தடையினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய உருகுவே அணிக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காரணம் முதல் போட்டியில் கோஸ்டா ரிகாவுக்கு எதிராக சுவாரேஸ் காயம் காரணமாக விளையாடவில்லை, மாறாக அவர் விளையாடிய அடுத்த 2 போட்டிகளில் அவர் கோல்களை அடித்து அணியை அடுத்தச் சுற்றுக்கு இட்டுச் சென்றார். இவர் 4 மாதங்களுக்கு கால்பந்து தொடர்பான பயிற்சி, விளையாட்டு மற்றும் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாது. உலகக் கோப்பை அடுத்த சுற்று…
-
- 0 replies
- 379 views
-
-
இலங்கை அணி அயர்லந்து அணியுடன் 2 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றுகிறது. அதன் பின்னர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணதில் உள்ளூர் அணிகளான எஸ்செக்ஸ்,கென்ட், சச்செக்ஸ் அணிகளுடன் ஒரு நாள் பயிற்சி போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் ஒரு T20 போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டியிலும் பங்கு பற்றுகிறது.
-
- 48 replies
- 2.6k views
-
-
மஹேல, சங்கா இருவரும் தலா 11,493 டெஸ்ட் ஓட்டங்களுடன் ; நண்பர்களின் மற்றொரு ஆச்சரிய ஒற்றுமை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காரவும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்குத் தெரியும். தற்போது அவ்விருவரும் டெஸ்ட் போட்டிகளில் சம எண்ணிக்கையான (11,493) ஓட்டங்களுடன் உள்ளனர் என்பது வியக்கத்தக்க ஓர் ஒற்றுமையாகும். தற்போது நடைபெறும் இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டிக்கு முன் மஹேல ஜயவர்தன 11,392 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 11,359 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில்; மஹேல ஜயவர்தன முதல் இன்னிங்ஸில் 22 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 79 ஓட்டங்களையும் பெற்றார். அதேவேளை குமார் சங்கக்கார முதல் இன்ன…
-
- 1 reply
- 523 views
-
-
கராச்சி அல்ல... ராஞ்சி... - நகைச்சுவை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட தோனி தனது கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப காலங்களில் தனது ஊர் ராஞ்சி என்றால் மக்களுக்கு அது பற்றி புரியவில்லை, அதனை கராச்சி என்றே கருதி வந்ததாகவும், தற்போது கிரிக்கெட் மூலம் ராஞ்சி சர்வதேசப் புகழை எட்டியுள்ளது என்று கூறினார் தோனி. ஜே.எஸ்.சி.ஏ. ஸ்டேடியத்தில் கண்ட்ரி கிரிக்கெட் கிளப் தொடக்க விழா நிகழ்ச்சியில் தோனி பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது: எனது முதல் போட்டிக்கு முன்பாக நான் கென்யாவில் இருந்தேன், நான் அங்கு ஒரு சதம் எடுத்தவுடன் ரசிகர்கள் என்னிடம் நான் எந்த ஊர் என்று கேட்டனர், நான் ராஞ்சி என்றேன், உடனே நாடு பிரிக்கப்பட்டப் பிறகு என் பெற்றோர்கள் இங்கு வந்து விட்டன…
-
- 0 replies
- 426 views
-