விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
(ஹம்சப்பிரியா) யாழ்ப்பாணம் பிரிமியர் லீக் இருபது20 கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாழ். மாவட்டத்தின் கிரிக்கெட் கழகங்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் இந்தப் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழு ஏ இல் கொக்குவில் சி.சி.சி. விளையாட்டுக் கழகம், மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகம், அரியாலை ஸ்ரான்லி விளையாட்டுக் கழகம், சுன்னாகம் ஸ்கந்தா விளையாட்டுக் கழகம், வண்ணார்பண்னை ஸ்ரீ காமாட்சியம்பாள் விளையாட்டுக் கழகம் ஆகியன இடம் பெற்றுள்ளன. குழு பி இல் யாழ்ப்பாணம் ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம், தெல்லிப்பழை கிறாஸ் கொப்பேர்ஸ் விளை…
-
- 3 replies
- 594 views
-
-
மூன்றாவது தடவையாக ஒரே அணிகள் இறுதியில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என அழைக்கப்படும் ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் 3 ஆவது தடவையாகவும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன. இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை (19) யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 3 ஆவது பருவகால போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானங்களில் நடைபெற்றது. கடந்த ஆண்டுப் போட்டியில் காலிறுதி வரையில் …
-
- 2 replies
- 350 views
-
-
யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவேண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, கிறாஸ்கோப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. யுவ பிரன்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட துடுப்பாட்டக் கழகங்களுக்கிடையில் டுவேண்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. மே மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டியில் 18 அணிகள் பங்குபற்றுவதுடன், முதற் சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் இடம்பெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற முதற்போட்டியில் ஜொலிஸ்ரார்ஸ் அணியினை எதிர்த்து தெல்லிப்பளை யூனியன்ஸ் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ர…
-
- 0 replies
- 467 views
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள…
-
- 1 reply
- 1.3k views
-
-
மத்தி., சேவியர், பற்றிக்ஸ் முன்னேற்றம் IM பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட கால்பந்தாட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நேற்று நடைபெற்றன. அரையிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு. முதலாவது காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்திhலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோ…
-
- 0 replies
- 646 views
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி Published By: DIGITAL DESK 5 08 MAR, 2023 | 10:02 AM "வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 09 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது. 116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. ஆரம்ப நாள் நிகழ்வு வியாழக்கிழமை (09) முற்பகல் 8.30 மணிக்கு இடம்பெற்று போட்டி முற்பகல் 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் எ…
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
28 Sep, 2025 | 05:23 PM இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர். உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
யு.எஸ் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா சாம்பியன் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். டை பிரேக் வரை சென்ற இந்த போட்டியில், 6—1 2—6 11—9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் அபிகெயில் ஸ்பியர்ஸ் மற்றும் மெக்சிகோவின் சாண்டியாகோ கொன்ஸாலஸ் ஜோடியை, பிரேசிலின் புருனோ சோர்ஸ், இந்தியாவின் சானியா ஜோடி வீழ்த்தியது. சோர்ஸ் மற்றும் சானியா கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்திருப்பது இதுவே முதல்முறை. சோர்ஸ் உடன் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ள சானியா, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் இந்த ஜோடி தொடரும் என…
-
- 1 reply
- 436 views
-
-
யு.எஸ். ஓபனில் சாம்பியன் : ஒரே ஆண்டில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று லியாண்டர் சாதனை! அமெரிக்க ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. விம்பிள்டனை தொடர்ந்து அமெரிக்க ஓபனிலும் பட்டம் வென்றுள்ள லியாண்டருக்கு தற்போது 42 வயதாகிறது. அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் அமெரிக்காவின் சாம் கியூரே, பெதானி இணையை லியாண்டர் இணை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை 6-4 என்று லியாண்டர் இணை கைப்பற்றியது. 2வது செட்டை அமெரிக்க ஜோடி வென்றாலும் 3வது செட்டை 10-7 என்ற கணக்கில் லியாண்டர் பயஸ்- மார்ட்டினா ஜோடி வென்று பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆண்டில் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஓபன், வ…
-
- 0 replies
- 257 views
-
-
யுஏஇ-யில் ஆடுவதில் என்ன பிரச்சினை?: பிசிசிஐ-க்கு பாக். கிரிக்கெட் வாரியம் கேள்வி கோப்புப் படம்: ஏ.பி. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் வந்து விளையாட பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை. “இந்தியாவில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷஹார்யார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். “ஏன் யுஏஇ-யில் ஆட முடியாது என்ற காரணத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது. இது எங்கள் தொடர் எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அதாவது யுஏஇ-யில் தான் விளையாடுவோம். …
-
- 0 replies
- 351 views
-
-
யுனைட்டெட்டின் முகாமையாளராக இவ்வாரம் நியமிக்கப்படுகிறார் மொரின்ஹோ மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோ நியமிக்கப்படவுள்ளதாக, பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இவ்வாரத்தில் அவர் நியமிக்கப்படுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்பதாகவே, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துக்கும் மொரின்ஹோவுக்குமிடையிலான இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லூயிஸ் வான் காலின் முகாமைத்துவத்தின் கீழ், சம்பியன்ஸ் லீக் தொடருக்கு மன்செஸ்டர் யுனைட்டெட் அணி தகுதிபெறாமை காரணமாக, மாற்றமொன்றை மேற்கொள்ள, அக்கழக நிர்வாகிகள் முடிவெட…
-
- 0 replies
- 348 views
-
-
யுபுன் அபேகோன்: "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 367 views
- 1 follower
-
-
யுவராஜ் சிங் அணியுடனடான கிரிக்கெட் போட்டியில்5 சிக்ஸர்கள் அடித்து வென்ற யூஸைன் போல்ட்: 100 மீற்றர் ஓட்டத்தில் போல்ட்டை முந்தினார் யுவராஜ் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியனும் ஒலிம்பிக் சம்பியனுமான ஜமைக்கா வீரர் யூஸைன் போல்ட், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தலைமையிலான அணியுடனான கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிபெறச் செய்துள்ளார். இந்தியாவின் பெங்களூர் நகரிலுள்ள சின்னஸ்வாமி அரங்கில் நேற்றுமுன்தினம் இக்கண்காட்சி போட்டி நடைபெற்றது. பியூமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான அணியும் உசைன் போல்ட் தலைமையிலான அணியும் மோதின. தலா 4 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெ…
-
- 0 replies
- 999 views
-
-
யுவராஜ் சிங் பிறந்தநாள்: மறக்க முடியாத 4 போட்டிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,விவேக் ஆனந்த் பதவி,பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும்; தேவைப்பட்டால் ஆட்டத்தில் பந்துவீசவேண்டும்; அற்புதமாக ஃபீல்டிங் செய்ய வேண்டும்; ஃபினிஷராகவும் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லாத் துறையிலும் அந்த நபர் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இப்படி ஒரு 'ஆல்ரவுண்டரை' இந்தியா தேடி…
-
- 0 replies
- 725 views
- 1 follower
-
-
யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் சகலதுறை வீரர் யுவராஜ் சிங்குக்கு அண்மையில் நுரையீரலில் நீர்கட்டி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நீர்கட்டி அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து யுவராஜ் சிங் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் யுவராஜ் சிங்கை புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியான தகவல் என்றாலும் ஆரம…
-
- 4 replies
- 1.2k views
-
-
யுவராஜ், கம்பீர், ஹர்பஜன்.... ஐ.பி.எல் ஏலத்துக்கு வரும் 1,122 வீரர்கள்! Chennai: 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டுள்ளன. மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல் ஏலம் வருகிற 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 1,122 வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏலத்திற்கு வரும் வீரர்கள் பட்டியல் 8 அணிகளின் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. யுவராஜ், கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற இந்தியாவைச் சேர்ந்த முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கும் என்று …
-
- 1 reply
- 395 views
-
-
யுவராஜ், கைஃபின் ‘வாவ்’ சேஸிங்.. ஜெர்சியைக் கழற்றிச் சுழற்றிய கங்குலி..! #OnThisDay #15YearsOfHistoricalChasing மயிர்கூச்செரிதல். இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? எப்போதாவது உங்களுக்கு மயிர் கூச்செரிந்திருக்கிறதா? ஒருவிதப் பரவச நிலையை அடையும் தருணங்களில் மட்டுமே அதை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நேரத்தில் இந்த பரவச நிலை கிடைக்கலாம். ஆனால் நூறு கோடி மக்களுக்கு ஒரே சமயத்தில் அப்படியொரு பரவச நிலை கிடைக்கிறது என்றால் அது எத்தகயதொரு முக்கியமான தருணமாக இருந்திருக்க முடியும்? 1983ல் உலககோப்பையை இந்தியா வென்றது என்பது அன்றைய தினத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரே சமயத்தில் தெரிந…
-
- 0 replies
- 636 views
-
-
யுவி... இனி அவ்வளவுதான் என்றவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள் ஏன்? விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் புற்றுநோய் தாக்கிய சூழ்நிலையிலும் தன்னை நிருபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த யுவிதான் கடந்த , 2014ம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன். சமீபத்திய ஆஸி தொடரில் கடைசி டி20 போட்டியில் கடைசி ஓவரில் சிக்சர், பவுண்டரி என விளாசி 'தெறி' காட்டவும் செய்தார். நுரையீரல் புற்று நோய் தாக்கியவுடன் யுவி இனி அவ்வளவுதான் என கூறியவர்கள். இப்போது அவரை பார்த்து வாயடைத்து நிற்கிறார்கள். இனி யுவராஜ் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பார்வையாளர்தான் என்ற கருத்தும் இப்போது மறைந்…
-
- 0 replies
- 629 views
-
-
யூ டியூப்பில் புதிய சாதனை: 415 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்டு வலைக்குள் விழுந்த கூடைப்பந்து ( வீடியோ) ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் இருந்து ஒரு புதிய சாதனை புறப்பட்டு வந்துள்ளது. சுமார் 460 அடி உயரமுள்ள இந்த அணைக்கட்டின் 415வது அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட கூடைப்பந்து மிகச்சரியாக வலைக்குள் சென்று விழுந்தது. இது ஒரு புதிய கின்னஸ் சாதனையும் கூட. இதற்கு முன் ராட்டர்டாம் நகரில் உள்ள 299 அடி உயரமுள்ள யூரேமாஸ்ட் கோபுரத்தில் இருந்து வீசப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இணையங்களில் மிக வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது. யூடியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் இந்த வீடியோ காட்சி புதிய சாதனை படைத்துள்ளது. http://www.vikatan.com/n…
-
- 0 replies
- 329 views
-
-
பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டன்களான யூசப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் அக்மல் சகோதர்கள் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துகளை சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா…
-
- 1 reply
- 517 views
-
-
யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு லோரியஸ் விருது விழாவில் உயரிய விருதுகள் மோனாக்கோவில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற லோரியஸ் உலக விளையாட்டுத்துறை விருது விழாவில் 2016ஆம் ஆண்டுக்கான அதி உயர் விருதுகளை யூசெய்ன் போல்ட், சிமோன் பைல்ஸ் ஆகிய இருவரும் தமதாக்கிக்கொண்டனர். யூசெய்ன் போல்ட் - சிமோன் பைல்ஸ் எட்டுத் தடவைகள் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட சம்பியனான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதையும் ஐக்கிய அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் அதி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தனர். …
-
- 0 replies
- 269 views
-
-
யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த பிரேஸில் யுவதி 'அவமானத்தினால் சாகிறேன்' என்கிறார் 2016-08-24 15:12:43 உலகின் அதிவேக மனிதரான ஜெமெய்க்காவின் யூசெய்ன் போல்ட்டுடன் இரவைக் கழித்த யுவதி, 'நான் அவமானத்தில் சாகிறேன்' எனக் கூறியுள்ளார். 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சம்பியனாகவும் உலக சம்பியனாகவும் திகழும் யூசெய்ன் போல்ட் கடந்த ஞாயிறன்று தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். யூசெய்ன் போல்ட், காதலி கெசி பெனட் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் கடைசி நாளாகவும் அது அமை ந்தது. அன்றைய இரவில் பிரேஸிலைச் சேர்ந்த ஜேடி துவார்ட்டே என் பவருடன் இரவைக…
-
- 0 replies
- 651 views
-
-
யூனிஸ் கான் - புத்துயிர் தரும் சாதனை நாயகன் யூனிஸ் கான் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள், சர்ச்சைகள் ஏராளம். தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தந்தை மற்றும் இரு சகோதரர்களின் மரணம் என நிறைய இழப்புகளைச் சந்தித்தவர். ஆனால் அவை எதுவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டவர் யூனிஸ் கான். அதுதான் இன்று அவரை பாகிஸ்தானின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக உருவாக்கியதோடு, உலக டெஸ்ட் அரங்கில் அவருக்கென்று தனியொரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. தேர்வாளர்களுக்கு பதிலடி சில நேரங்களில் அவர் சர்ச்சையில் சிக்கியபோது அவரை நீக்கிய பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம், பின்னர் அவர் இல்லாமல் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற …
-
- 1 reply
- 600 views
-
-
யூனிஸ் கான் சாதனை சதம் அக்டோபர் 22, 2014. துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சதம் அடித்தார். இதையடுத்து, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (3), முகமது ஹபீஸ் (0) சொதப்பல் துவக்கம் தந்தனர். பின் இணைந்த அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசார் அலி டெஸ்ட் அரங்கில் 16வது அரை சதம் கடந்தார். மூன்றாவ…
-
- 14 replies
- 1.1k views
-
-
யூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ்க்கையில் அழுகிறார்! பாகிஸ்தான் அணியின் தற்போதைய மூத்த வீரர் யூனிஸ் கான், அண்மையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கைக்கு அணிக்கு எதிராக களமிறங்கிய அவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனால் யூனிஸ் கானின் சொந்த வாழ்க்கை, சோகம் ததும்பியது. தந்தை, இரு சகோதரர்கள், சகோதரி என அடுத்தடுத்து அவர் வீட்டில் நிகழ்ந்த மரணங்கள் யூனிஸ் கானை உலுக்கி எடுத்தன. தற்போது 37 வயதான யூனிஸ்கானின் தந்தை இறந்த போது, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். தந்தை இறந்ததை தொடர்ந்து தாய்நாடு திரும்பினார். தொடர்ந்து உக்ரேனில் நடந்த கார் விபத்தில் யூனிஸ் கானின் மூ…
-
- 0 replies
- 310 views
-