விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
இலங்கை அணி அயர்லந்து அணியுடன் 2 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றுகிறது. அதன் பின்னர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணதில் உள்ளூர் அணிகளான எஸ்செக்ஸ்,கென்ட், சச்செக்ஸ் அணிகளுடன் ஒரு நாள் பயிற்சி போட்டிகளிலும், இங்கிலாந்து அணியுடன் ஒரு T20 போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டியிலும் பங்கு பற்றுகிறது.
-
- 48 replies
- 2.6k views
-
-
ஜே.பி.எல். இருபது 20 போட்டிகள் ஆரம்பம் புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014 16:16 ஜே.பி.எல் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் இருபது 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்;டி எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. யுவ பிரண்ட் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த இருபது 20 சுற்றுப்போட்டியில் யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றவுள்ளதுடன், அவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி ஏ பிரிவில் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஸ்ரான்லி, ஸ்கந்தா ஸ்ரார்ஸ், ஸ்ரீ காமாட்சி, மானிப்பாய் பரிஷ் ஆகிய அணிகளும், பி பிரிவில் ஜொலிஸ்ரார்ஸ், கிறாஸ்கோப்பர்ஸ், மூளா…
-
- 9 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு எதிரான இனவெறி வார்த்தைளே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு : டெரன் லீஹ்மன் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இனவெறி வார்த்தைகளே எனது வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்றுநருமான டெரன் லீஹ்மன் தெரிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த லீஹ்மன் வீரர்கள் அறையில் வைத்து இனவெறி வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டிருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது மிச்செல் ஜோன்ஸன் முதல் டேவிட் வோர்ணர் வரையிலான பல்வேறுபட்ட வீரர்களைக் கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கு சிறப்பாக பயிற்சியளித்து வருகிறார் டெரன் லீஹ்மன். …
-
- 0 replies
- 622 views
-
-
பரபரப்பாக நடைபெறும் கால்பந்து போட்டியின் ஒரு முக்கியமான ஆட்டத்தின் மும்முரமான தருணத்தில், ரசிகர் ஒருவர் ஆடுகளத்தில் இருக்கும் வீரரின் மீது வாழைப்பழம் ஒன்றை வீசி எறிந்தால் என்ன செய்வது ? வாழைப்பழத்தை லாவகமாகக் கையாண்ட ஆல்வெஸ் ஆட்டத்தை நிறுத்திவிட்டு வீசி எறிந்தவர் யாரென்று தேடி அவரை வசைபாடலாம், நடுவரிடம் முறைப்பாடு செய்யலாம், வீசி எறியப்பட்ட பழத்தை மீண்டும் ரசிகர்களை நோக்கி வீசலாம் அல்லது போனால் போகட்டும் என்று பழத்தை ஓரமாக எறிந்துவிட்டு ஆட்டத்தைத் தொடரலாம். ஆனால் பார்சிலோனா அணிக்கும் வில்லாரியல் அணிக்கும் இடையே நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தன் மீது வீசிய வாழைப்பழத்தை என்ன செய்தார் தெரியுமா பார்சிலோனா அணியின் வீரர் டானி ஆல்வெஸ்? அனைவரும் ஆச்சரியப்படும்படியாக வீசப்பட்ட பழத…
-
- 1 reply
- 628 views
-
-
யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையேயான "சிவகுருநாதன் கிண்ணத்துக்கான" இருநாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆனந்தாக்கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் நடைபெறுகிறது. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் ஆனந்தா கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான வீ.ரீ.எஸ். சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக இப்போட்டிக்கு சிவகுருநாதன் கிண்ணப் போட்டி என பெயரிடப்பட்டுள்ளது. 3 ஆவது தடவையாக இச்சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன் நடைபெற்ற இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு தடவைவென்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&am…
-
- 20 replies
- 1k views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால உதவி பயிற்சியாளராக ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை அணி விளையாடும் போட்டிகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நீல் சண்முகம் தனது 74 ஆவது வயதில் காலமானார். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவில் இருந்து வந்த நிலையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இலங்கைக்கு அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் அணியில் இடம்பெற்றிருந்த நீல் சண்முகம் 1964 இல் பாகிஸ்தானுக்கு எதிராக பி. சரவணமுத்து ஓவல் மைதானத்திலும் இந்தியாவுக்கு எதிராக அஹமதாபாத்திலும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்த மைக்கல் திசேரா தலைமையிலான இலங்கை (சிலோன்) அணியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E…
-
- 0 replies
- 390 views
-
-
தென் கொரியாவுக்கு எதிராக இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய ஐந்து நாடுகள் (ஏஷியன் ஃபைவ் நேஷன்ஸ்) பிரதான பிரிவு றக்பி போட்டியில் பங்குபற்றும் பொருட்டு இலங்கை றக்பி அணி நேற்றிரவு அங்கு புறப்பட்டுச் சென்றது. ஆசிய றக்பி தரப்படுத்தலில் முதல் ஐந்து இடங்களை வகிக்கும் ஜப்பான், ஹொங் கொங், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய நாடுகள் இப் போட்டியில் லீக் அடிப்படையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். இப் போட்டிகளை முன்னிட்டு இலங்கை றக்பி தெரிவுக் குழுவினரால் 23 வீரர்கள் அடங்கிய இலங்கை றக்பி குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற செரெண்டிப் மும்முனை சர்வதேச றக்பி போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணிக்கு தலைவராக விளையாடிய நாமல் ராஜபக்ஷ, தற்போத…
-
- 0 replies
- 514 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பிய இவர்கள், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் நேற்று (21) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தீர்மானத்தை எடுக்குமாறு ஒழுக்காற்றுக்குழுவிடம் …
-
- 2 replies
- 1.4k views
-
-
அதிபர் சபாலிங்கதிற்கு அருகில் இருப்பவர் யோகி ,அவர் நேர் பின்னே பெனியனுடன் நிற்பவர் பொன்னம்மான் .
-
- 2 replies
- 585 views
-
-
அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அசோசியேட் அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழையும் புதிய திட்டத்தை ஐசிசி வகுத்திருப்பது வாக்கு அரசியலே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்ப்பதாக அது அமையாது என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள பத்தி ஒன்றில் கூறியிர்ப்பதாவது: முதலில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணி, டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் ஆகியவற்றை முன்னேற்றும் வழியை ஐசிசி பார்க்கவேண்டும், புதிய அணியை இந்த நிலையில் கொண்டு வருவது அதன் வேலையாக இருக்க முடியாது. மேலும் புதிய அணி சேர்க்கை என்ற இந்த அலங்காரப் பேச்சு, மற்றும் திட்டம் ஏற்கனவே இருக்கும் அணிகளில் எதுவும் தகுதி இழக்கச் செய்யப்படமாட்டாது என்பதை தெளிவாக பறை சாற்றுகிறது. அயர்…
-
- 0 replies
- 463 views
-
-
பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போதிய அனுசரணையாளர் கிடைக்காத சோகத்தில் உள்ளனர் அணி நிர்வாகிகள். பல்வேறு சர்ச்சைகளை கடந்து, ஏழாவது பிரிமியர் தொடர் ஏப். 16 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. புனே அணி விலகியதை அடுத்து இம்முறை சென்னை, மும்பை உட்பட மொத்தம் 8 அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. இதனிடையே டில்லி அணி வீரர்கள் அணியும் ‘ஜெர்சியில்’ இடம்பெற இன்னும் அனுசரணையாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இருந்த சில தனியார் நிறுவனங்களும் இம்முறை ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை 15 ஆக இருந்த பஞ்சாப் அணியின் அனுசரணையாளர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துவிட்டது. ஐதராபாத் அணிக்கும் 4 அனுசரணையாளர்கள் தான் உள்ளனர். பனசொனிக் நிறுவன இயக்குனர்…
-
- 0 replies
- 608 views
-
-
ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்த முறைமையானது சர்வதேச கிரிக்கெட்டின் மூச்சை நிறுத்திவிடும் என பிரித்தானியாவின் 2014ஆம் ஆண்டின் விஸ்டென் கிரிக்கெட் சஞ்சிகையின் 151ஆவது அல்மனாக் பதிப்பில் கடுமையாக சாடியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) அதிகாரம் மற்றும் வருமானத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று முப்பெரும் நாடுகள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவின் அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த முப்பெரும் நாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை வெளியான கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டென் சஞ்சிகையின் 151ஆவது பதிப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தில் உருவான 'காலணித்துவ…
-
- 2 replies
- 700 views
-
-
வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வதென்பது இதுவே முதல் முறை. ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார். இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எட…
-
- 1 reply
- 640 views
-
-
பாகிஸ்தானை கடைசி 5 ஓவர்களில் சாத்தி எடுத்து பிறகு முதல் 6 ஓவரில் அந்த அணியை போட்டியிலிருந்தே விலக்கிய மேற்கிந்திய அணியின் கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. ஆனால் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியபோது வெஸ்ட் இண்டீஸ் அணி டான்ஸ், கூத்து என்று கடுமையாக கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியது. இதற்குக் காரணம் 'மரியாதை மரியாதை' என்கிறார் மேற்கிந்திய ஆல்ரவுண்டர் வைன் பிராவோ. இது குறித்து அவர் கூறியதாவது: "ஆஸ்ட்ரேலியாவென்றால் நாங்கள் பொங்கி விடுவோம், காரணம் உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன், அந்தப் போட்டி எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி, நாங்கள் எங்களுக்கே எங்களை நிரூபித்துக் காட்டுவதிலும், ஆஸ்ட்ரேலியர்களுக்கும் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவும் தீவிரம் காட்டினோம். அதாவது முடிவில் நாம் க…
-
- 2 replies
- 781 views
-
-
வெட்டலுக்கு ‘லாரஸ்’ விருது மார்ச் 26, 2014. கோலாலம்பூர்: உலகின் சிறந்த வீரருக்கான ‘லாரஸ்’ விருதை, ஜெர்மனி ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதன்முறையாக பெற்றார். ‘லாரஸ் உலக விளையாட்டு விருது’ கடந்த 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு, உசைன் போல்ட்(தடகளம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து), ரபெல் நடால்(டென்னிஸ்), செரினா வில்லியம்ஸ்(டென்னிஸ்), இசின்பெயவா(தடகளம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. சிறந்த வீரருக்கான விருதை, ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் தொடர்ந்து நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், 26, வ…
-
- 0 replies
- 518 views
-
-
பேயார்ன் முனிக் சாம்பியன் மார்ச் 26, 2014. பெர்லின்: ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான பன்டஸ்லிகா( bundesliga ) தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பேயார்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. ஜெர்மனியில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஜெர்மன் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் பேயார்ன் முனிக், ஹெர்தா பெர்லின் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முனிக் அணிக்கு டோனி கிராஸ் (6வது நிமிடம்), மரியோ (14) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பெர்லின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்லின் அணிக்கு ஏட்ரியன் (66) ஒரு கோல் அடித்…
-
- 4 replies
- 553 views
-
-
-
'சர்வதேச இருபது-20, ஓய்வுக்கான காலம் நெருக்குகின்றது" மஹேலவும் ஓய்வு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார ஓய்வை அறிவித்துள்ள நிலையில் மஹேல ஜயவர்தனவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபது-20 உலகக் கிண்ணத் தொடருன் ஓய்வு பெறுவதாக அவரும் குறிப்பிட்டுள்ளார். ஐசிசி. யின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்திலேயே மஹேல ஜயவர்தனவின் ஓய்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் இருபது-20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் ஜேர்சியுடன் ஜோடிய…
-
- 2 replies
- 604 views
-
-
ஓய்வு பெறுகிறார் சங்ககரா மார்ச் 16, 2014. கொழும்பு: சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா. இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36. கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இது, என் கடைசி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர். இம்முடிவு வருத்தமானது என்றாலும், உண்மையானது. இதன்ம…
-
- 9 replies
- 1.7k views
-
-
ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! டெல்லி: ஏழாவது ஐ.பி.எல். போட்டிகளை துபாய், வங்காளதேசம், இந்தியாவில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. 16வது லோக்சபா தேர்தலும், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒரே நேரத்தில் வருவதால், இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் தேர்தல் முடியும் வரை அதற்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஐபிஎல் 7: தெ. ஆப்பிரிக்காவுல இல்லை... துபாய், பங்களாதேஷ், இந்தியாவுல நடக்கப் போகுது! இதனால் 7-வது ஐ.பி.எல். போட்டியை எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது என்பதில் குழப்பம் நீடித்தது. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவ…
-
- 147 replies
- 8.3k views
-
-
மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சுழல் பந்து வீச்சாளர்கள் விருந்தினர் அணிக்கு தலை வலி கொடுத்துள்ளார்கள். மேற்கு இந்திய தீவுகள் : 170/3 இங்கிலாந்து: 143/9 ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவல் http://www.espncricinfo.com/west-indies-v-england-2013-14/engine/match/636536.html
-
- 0 replies
- 457 views
-
-
ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை! [sunday, 2014-03-09 08:42:39] ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. நேற்றிரவு மீர்பூரில் நடந்த போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது. முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர். பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் மட்டைவீச்சின்போது விழுந்த ஐந்து விக்கெட்களையுமே இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கைப்பற்றியிருந்தார்.இலங்கை அணி தனது மட்டை வீச்சில் சிறப்பான துவக்கத்தைக் கண்டது. துவக்க ஆட்டக்காரர் திரிமான்ன சதமடித்திருந்தார்…
-
- 3 replies
- 687 views
-
-
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் கல்லுரி மாணவர்கள் யாழ்.நகர வீதிகளில் இசை வாத்தியங்களோடு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=542892713707566447#sthash.V9LwSHlP.dpuf
-
- 69 replies
- 4.6k views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தர வரிசையில் இடம்பெறும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி புதிதாகப் பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகள் முன்பே வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி - சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசியின் தர வரிசையில் 12ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதினோராவது இடத்தில் அயர்லாந்து அணியும், அதற்கு முன்னால் டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும் தகுதி கொண்ட பத்து நாடுகளும் இந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றிதான் டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறுகின்ற முதல் ஒரு நாள் வெற்றி ஆகும். ஒன்றாம் தேதியன்று ஃபதுல்லா நகரில் நடந்த ஆட்ட…
-
- 1 reply
- 419 views
-