விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
கடந்த காலங்களில் இந்திய அணியில் தமிழர்கள் இடம்பெறுவது மிக குறைவாகவே இருந்தது . 80௦களில் ஸ்ரீகாந்த் ஆரம்ப ஆட்ட காரராக கலக்கிய பின் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இடம்பெறவில்லை. இப்போது அதே ஸ்ரீகாந்த், இந்திய அணி தெரிவு குழுவின் தலைவாராக இருக்கிறார் . மீண்டும் பல தமிழர்கள் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர் . குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு முக்கிய பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். சுப்பிரமணியம் பத்ரிநாத் நம்பிக்கைக்குரிய நடு வரிசை துடுப்பாட்ட வீரராக இடம்பெற்றுள்ளார். முரளி விஜய் ஆரம்ப துடுப்பாளராக டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். அபினாவ் முகுந்த் என்ற தமிழ்நாடு இளம் வீரரும் டெஸ்ட் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர் விஜயுடன் சேர்ந்து ஆரம்ப துடுப்பாளராக இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊக்கமருந்து சோதனையில் உபுல் தரங்க தோல்வி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது மேற்கொள்ளப்பட்ட தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வீரர் உபுல் தரங்க தோல்வியுற்றமை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்தவுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இடது கை வீரரான உபுல் தரங்க அண்மைக் காலங்களில் சிறப்பாக விளையாடியவர். ஆனால் உலகக்கிண்ணப் போட்டிகளின்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, Prednisolone எனும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தாரங்கவிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரிகளில் காணப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. ஒருவரின் மாற்று மருத்துவத்துறை மருத்துவர் ஒருவர் சிபாரிசினால் இம்மருந்தை அவர் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்திருப்பதாக …
-
- 1 reply
- 932 views
-
-
வீரர்களின் ரகசியங்களை வெளியிட்ட ஐ.பி.எல். நடன அழகி நீக்கம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் `சியர்ஸ் லீடர்ஸ்' என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது. போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங…
-
- 25 replies
- 3.1k views
- 1 follower
-
-
பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 வெம்பிளி மைதானத்தில் நடந்த சம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியில் பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 என்ற ரீதியில் ஸ்பெயின் நாட்டின் கழகமான பார்சலோனா வென்றது. ஆர்ஜெண்டீனியரான லயனல் மெசி சிறந்த வீரராக தெரிவானார். Lionel Messi: 'Tremendous' Barcelona want to keep winning trophies The Argentine striker, who was named as Man of the Match in the Champions League final, issued an ominous warning that his side will not rest on their laurels http://www.goal.com/en-gb/news/2914/champions-league/2011/05/29/2508176/lionel-messi-tremendous-barcelona-want-to-keep-winning Champions League 2011 Final Manchester United…
-
- 5 replies
- 1.2k views
-
-
IPL 2011 போட்டிகளை பிரித்தானியாவின் ITV4 இலவசமாக நேரடி ஒலிபரப்பு செய்கின்றது... நாளை 08/04/2011 போட்டிகள் ஆரம்பிக்கின்றன... விருப்பமானவர்கள் பார்க்கலாம்... இதை பிரித்தானியாவுக்கு வெளியில் இணையத்தில் பார்க்க முடியுமா தெரியவில்லை... http://www.itv.com/sport/indianpremierleague/?intcmp=NAV_SPORT7_INDIANPR6 நேரடி ஒளிபரப்பு... http://www.itv.com/sport/indianpremierleague/watchlive/ இது இப்போ வேலை செய்தால் எப்போதும் வேலை செய்யும்...
-
- 44 replies
- 3.4k views
-
-
கிரிக்கெட் - பாக் அழைப்பு இலங்கை நிராகரிப்பு கிரிக்கெட் போட்டிகள் விளையாட வரும்படி இலங்கைக்கு பாகிஸ்தான் விடுத்த அழைப்பை பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி இலங்கை நிராகரித்துள்ளது. லாகூர் நகரில் 2009 ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்த இலங்கை அணியினர் பயணித்த பேருந்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியும் இடம்பெறவில்லை. எதிர்வரும் அக்டோபர் மாதம் தமது நாட்டுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வருமாறு இலங்கைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், தமது அணியினரின் பாதுகாப்பு குறித்த கவலைகள் இருப்பதால், அங்கு பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்க…
-
- 0 replies
- 632 views
-
-
இலங்கை அணியினரின் பஸ்ஸில் பெற்றோல் திருட்டு இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அ…
-
- 2 replies
- 1.6k views
-
-
திங்கட்கிழமை, 9, மே 2011 (17:39 IST) ஜூலையில் இலங்கையில் எல்.பி.எல்! ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை போல 20 ஓவர் போட்டி நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு இலங்கை பிரிமீயர் லீக் என பெயரிடப்பட்டுள்ளது. ஜுலை மாதம் இறுதியில் தொடங்கும் போட்டி 18 நாட்கள் நடைபெறுகிறது. முதல் கட்ட போட்டியில் 7 அணிகள் இடம்பெற உள்ளன. லெவன் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 7 உள்ளூர் வீரர்கள் இடம் பெறுவார்கள். ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். இதில் தகுதி பெறும் 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். போட்டி கொழும்பு பிரமதேசா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டிக்கு தகுதி பெறும். இலங்கை பி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மஞ்சு வன்னியாராச்சியின் தங்கப் பதக்கம் பறிபோயிற்று தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையால் இலங்கையின் குத்துச் சண்டை வீரர் மஞ்சு வன்னியாராச்சி பெற்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதாக கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தீர்பளித்துள்ளது. அவருடைய சிறுசீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்டுள்ளமை உறுதிபடுத்தப்படடுள்ளதையடுத்தே அவரது பதக்கம் பறிக்கப்படடுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டியின் போது மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் வீரரை வீழ்த்தி சுமார் 72 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றை வென்றுக் கொடுத்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31461
-
- 0 replies
- 936 views
-
-
சர்ச்சையில் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பை போட்டி குறித்த சர்ச்சைகள் அதற்குள்ளாகவே தொடங்கிவிட்டன. பதினோராவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நடத்தவுள்ளன. அந்த உலகக் கோப்பை போட்டிகளின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் 10 நாடுகள் மட்டுமே பங்கு பெற முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலான ஐ சி சி எடுத்துள்ள முடிவுக்கு, அந்த அமைப்பில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் விளையாடாத ஐ.சி.சியின், உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் அடுத்த தலைவரை நியமிக்கும் முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகியிருப்பதற்கு இனவாதமே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற உலகக் கிண்ண துடுப்பாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய சிறிலங்கா அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது. இதையடுத்து, சிறிலங்கா அணியின் தலைவர் பதவியில் இருந்து குமார் சங்ககாரவும், அதையடுத்து அணியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து மகேல ஜெயவர்த்தனவும் விலகிக் கொண்டனர். இந்தநிலையில் புதிய அணித் தலைவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது அரவிந்த டி சில்வா தலைமையிலான சிறிலங்கா துடுப்பாட்டச் சபையின் தெரிவுக்குழுவும் பதவி விலகியது. சிறிலங்கா அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்றே தெரிவுக்க…
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கை கிரிக்கெட் சபையை சாடுகிறார் முரளிதரன் வீரர்களுக்கு மே 20 ஆம் திகதிவரை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது என நான் எண்ணுகிறேன். திடீரென இடையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர் லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர்லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இலங்கைக் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளதை முத்தையா முரளிதரன் குறைகூறியுள்ளார். தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட முரளிதரனும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்திய கிரிக்கெட் சபை குறித்து ஐ.சி.சியிடம் புகாரிடப்படும்: விளையாட்டுத்துறை அமைச்சர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின்போது இலங்கை அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடத்திய விதம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ.சி.சி) முறையிடவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய இணை நாடு என்ற வகையில் ஏனைய நாடுகளின் அமைச்சர்களை இலங்கை நடத்திய விதத்திற்கும் எமது அமைச்சர்களை இந்திய கிரிக்கெட் சபை நடத்திய விதத்திற்கும் முரண்பாடு உள்ளது. இது குறித்து நான் திருப்தியடையவில்லை. இறுதிப்போட்டியை பார்வையிட எமது நாட்டிலிருந்து 20 அமைச்சர்கள் சென்றனர். விளையாட்டுத்துறை அமைச்சரான நானும…
-
- 0 replies
- 4.1k views
-
-
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வரும் நிலையில் அந்த விருதை சச்சினால் வாங்கவே முடியாது என்கிறார் அரசியல் சாசன சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் என்பவர். ஒரு வேளை சச்சினுக்கு விருது கொடுத்தே ஆக வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், விருது பெறத் தகுதிடையவர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 1954ம் ஆண்டு பாரதரத்னா விருது ஏற்படுத்தப்பட்டது. அதுமுதல் இதுவரை 41 பிரபலங்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்களில் ஒருவர் கூட விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர் கிடையாது. காரணம், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருதை அளிக்க முடியாது. அப்படி உள்ளன…
-
- 1 reply
- 1.3k views
-
-
குஷியாக்க வந்துவிட்டார்கள் சியர்லீடர்ஸ் வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் சியர் லீடர்கள் எனப்படும் உற்சாகமூட்டும் அழகிகள் என்ற கான்செப்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் நிர்வாகம்தான். 2008ம் ஆண்டு நடந்த முதலாவது ஐபிஎல் தொடரின்போதுதான் இந்த சியர் லீடர் அழகிகளை இந்தியா கண்டு களித்தது. http://tamil-friend.blogspot.com/2011/04/blog-post_8599.html ஒவ்வொரு அணிக்கும் தனித் தனி குழுவாக அழகிகளைக் களம் இறக்கினர். வீரர்கள் ஃபோர், சிக்ஸ் அடிக்கும்போது இந்த அழகிகள் எழுந்து ஆடியதை பார்த்து குஷியானார்கள் ரசிகர்கள். இந்த அழகிகள் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் அறிமு…
-
- 1 reply
- 1.3k views
-
-
போல் ஒக்டோபஸ்ஸின் ஞாபகார்த்தமாக சிலை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது போல் ஒக்டோபஸ்ஸிற்கு 2 மீற்றர் உயரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சிலை ஜெர்மனியில் Oberhausen என்னுமிடத்திலுள்ள நீர்வாழினக் காட்சியகத்தில் ஞபகார்த்தமாக வைக்கப் பட்டுள்ளது. --- http://www.bbc.co.uk/news/world-europe-12247183 --- Paul the Octopus memorial statue unveiled in Germany A monument to the memory of Paul the Octopus, who correctly predicted the results of matches at the World Cup last summer, has been unveiled at an aquarium in Germany. The Sea Life Centre in Oberhausen, Germany was the home of the psychic octopus who became a global star. The tribute shows a ver…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐபிஎல் 4வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கப்டன் தோனி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கப்டன் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது புதிய அணி பற்றியும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு டோணி கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் சீசனில் சிறப்பாக விளையாடும். அணியில் ஏற்கனவே இருந்த வீரர்கள் பலர் உள்ளனர். முரளிதரன் இல்லாதது வருத்தம் தான். எங்கள் அணி சிறப்பாக அமைந்துள்ளது. பேப்பரில் பார்ப்பதற்கு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. மைதானத்தில் எப்படி விளையாடுகிறது என்பது தான் முக்கியம். இதைத் தான் நான் முன்பும் கூறினேன். வீரர்களின் உடல் நலம் வெற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் வாசகர்களிற்கு இனிய வணக்கங்கள், நீண்ட காலத்தின் பின் உங்களுடன் மீண்டும் உறவாடுவதில் மகிழ்ச்சி. வருகின்ற 19ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் 2011 உலக கோப்பை துடுப்பாட்டம் சம்பந்தமாக 'நண்பர் அரவிந்தன்' யாழ் உறவுகளிடையே வைக்கின்ற சுவாரசியமான போட்டியில் பின்வருமாறும் எழுதினார்கள். மேற்கண்ட போட்டியில் நான் பங்குபற்றவில்லையாயினும், உலககோப்பை துடுப்பாட்ட போட்டி 2011 சம்பந்தமாக ஓர் இரசிகன் எனும் வகையில் எனது சில எதிர்பார்ப்புக்களை, எதிர்வுகூறல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகபடுகின்றது. உலககோப்பை துடுப்பாட்டம் பற்றிய கீழ்வரும் தரவுகளை முதலில் பார்வையிடுங்கள்=> தரவு மூலம்: cricinfo.com, நன்றி. விளையாட்டில் எதுவு…
-
- 70 replies
- 5.2k views
-
-
குமார் சங்கக்கார இலங்கை அணித் தலைவர் பதவியை துறக்கத் தீர்மானம்:- அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது:- இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார தமது தலைவர் பதவியை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார். பதவியை இராஜினாமா செய்வது குறித்த தீர்மானத்தை இலங்கை கிரிக்கட் சபை நிர்வாகிகளிடம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தாம் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து குமார் சங்கக்கார இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். அணித் தலைவர் பதவியை வேறும் ஒருவர் ஏற்றுக் கொள்வதற்கு இதுவே சிறந்தத் தருணமாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித…
-
- 0 replies
- 887 views
-
-
வரலாறு படைத்தது இந்தியா 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இந்தியா. இந்திய கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். கம்பீர் 97 ரன்கள் எடுத்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜாகீர் கான் முதல் 5 ஓவர்களில் 3-ல் இலங்கை வீரர்கள் ரன் ஏதும் எடுக்…
-
- 6 replies
- 2.4k views
-
-
-
தமிழீழம் காரைநகர் களபூமியை பிறப்பிடமாக கொண்ட திரு. திருமதி. சிறிஸ்கந்தராசா தம்பதிகளின் புதல்வி செல்வி. நிருசா பிரான்சு நாட்டில் பிறந்து இப்பினி சூ சென் என்னும் இடத்தில் வளர்ந்து கல்வி கற்று வரும் இவர் சதுரங்கப்போட்டியில் il du france அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2011 ஆண்டுக்கான சிறந்த சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே champiton de france ஆக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் 2007ம் ஆண்டு இவர் வாழும் இப்பிணி சூ சென் மாநகரசபையாலும், அதன் முதல்வர் Hervé CHEVEAU அவர்களால் Sportif Méritant என்ற மதிப்பளிக்கப்பட்டது. ஐரோப்பிய ரீதியில் 15 வயதிற்குட்பட்டோரின் பிரிவில் சுவிஸ்ல் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் கலந்து க…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..! இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..! மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு..! தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு..! (சரணம் - 1) சச்சின் அடிக்கும் பந்து எல்லாம் ராக்கெட் ஆகும் நொடியில..! ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில..! அடி அடி சச்சின் அடி... ஷேவாக் அடி வாணவெடி..! காம்பீர் அடிக்கும் பந்தை எல்லாம் பிடிக்கத்தான முடியல..! கோஹ்லி விரட்டும் பந்தை எல்லாம் தடுக்க கூட வழியில்ல..! அடி அடி பந்தை அடி... பவுண்டரியை பார்த்து அடி..! யுவராஜ் சிங்கு அடிப்பதெல்லாம் சிக்ஸராகும் கைப்புள்ள..! ரெய்னா வந்தால் சுத்தியடிப்பார் யாரும் பிடிக்க வழியில்ல..! அடி அடி யுவராஜ் அடி... அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இறுதி ஆட்டம் இலங்கைக்கு மாற்றம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது இறுதி ஆட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக இந்த இடமாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இலங்கை இந்திய வீரர்கள் பிரத்தியேக விமானம் ஒன்றில் இலங்கை நோக்கி பயணமாகக்கொண்டீருக்கிறார்கள் இப்பிடி என்னுடைய நண்பர் தனது சிங்கள நண்பர் சொன்னதாகச் சொன்னார் ஏப்ரல் முதலாம் திகதி கப்சாவாக இருக்கலாம்
-
- 0 replies
- 1.1k views
-
-
முரளிக்காக உலக கிண்ணம்! ஆனால் முரளி அணியில் இல்லை! ஜனாதிபதி இந்தியா செல்கிறார் ஜ வியாழக்கிழமைஇ 31 மார்ச் 2011இ 11:51.14 யுஆ புஆவு ஸ இலங்கை கிரிக்கட் அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இந்த போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள முத்தையா முரளிதரனுக்கு வழங்கும் கௌரவமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரியவருகிறது. முத்தையா முரளிதரனும் அஞ்சலோ மெத்தியூஸம் காயம் அடைந்துள்ளமையால் அவர்களுக்கு…
-
- 0 replies
- 1.3k views
-