விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் மு…
-
- 7 replies
- 867 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்; வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு பிற்போடப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு ஜப்பான் மறுத்துள்ளது. அதன்படி ஜப்பானுக்கு வெளியில் இருந்து வரும் பார்வையாளர்களை உள்வாங்காமல் இந்த கோடையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய செய்தித்தாளான மைனிச்சி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, இந்த திட்டம் குறித்த இறுதி முடிவு இம் மாதத்திற்குள் எடுக்கப்படவுள்ளதுடன், இப் பிரச்சினை குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பிற தொடர்புடைய அமைப்புகளுடன் ஜப்பானிய அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது. கொரோனா வைரஸ்…
-
- 0 replies
- 526 views
-
-
கத்தார் ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி வெற்றி தோகா: கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மீண்டும் சர்வதேச டென்னிசுக்கு திரும்பிய இந்திய வீராங்கனை சானியா மிர்சா, சுலோவேனியா வீராங்கனை ஆந்ரேஜா கிளெபக்குடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-4, 6-7 (5-7), 10-5 என்ற செட் கணக்கில் உக்ரைனின் லுட்மைலா கிச்செனோக்- நாடியா கிட்செனோக் இணையை போராடி தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தனர். இந்த ஆட்டம் 1 மணி 38 நிமிடங்கள் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்றில் சிக்கிய சானியா மிர்சா அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து புதிய சீசனை வெற்றியோடு தொடங்கி இருப்பது குறிப்பிடத…
-
- 0 replies
- 618 views
-
-
-
இந்தியக் கிரிக்கெட் அணியின் அஸ்வின் புதிய சாதனை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/116992093_gettyimages-1228368442-3-720x450.jpg இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 400 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின் உலகளவில் 16ஆவது பந்துவீச்சாளர் என் பெருமையையும் பெற்றார். அத்துடன் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை மிக வேகமாக வீழ்த்திய பந…
-
- 0 replies
- 550 views
-
-
இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்…
-
- 2 replies
- 770 views
-
-
முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிச்சிகன் மாநில சட்டமா அதிபர் டானா நெசலின் அலுவலகம் வியாழக்கிழமை பிற்பகல் கெடெர்டின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, கெடெர்ட்டில் 20 மனித கடத்தல், முதல் நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் பொய் சொன்னது போன்ற குற்ற…
-
- 0 replies
- 562 views
-
-
கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டைகர் வூட்ஸுக்கு காலில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "கலிபோர்னியாவில் இன்று (செவ்வாய்) காலை டைகர் வூட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்குண்டார். விபத்தினால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது அறுவை சிகிச்சையில் உள்ளார், உங்கள் தனியுரிமை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார். பெப்ரவரி 23 காலை 7:12 மணியளவில் லாஸ் ஏஞ…
-
- 1 reply
- 611 views
-
-
9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் நோவக் ஜோகோவிச் 3 செட்களில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி 9 ஆவது அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக சர்வதேச டென்னிஸ் அரங்கில் 18 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். பெப்ரவரி 21 (நேற்று) மெல்போர்னின் ரோட் லாவர் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் உலக நம்பவர் வன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். சுமார் 1:53 மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்தார் நோவக் ஜோகோவிச். இதனால் 25 வயதான ரஷ்யாவின் மெட்வெடேவ் தனது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் இரண்டையு…
-
- 0 replies
- 503 views
-
-
இந்திய அணி வெற்றி பெற்றதும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய விராட் கோலி – காரணம் இதுதான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும் முதல் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதவீத ரசிகர்கள் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சிறப்பான வெற்றிக்குப…
-
- 0 replies
- 591 views
-
-
இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி! மின்னம்பலம் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் நேற்று (பிப்ரவரி 15) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 19 ஒவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் 2 ரன்களும், லாரன்ஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியை விட, இங்கிலாந்து அணி 429 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இன்று (பி…
-
- 3 replies
- 639 views
-
-
66 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இங்கிலாந்து அணி; செம சாதனை !! இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூலம் இங்கிலாந்து அணி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து…
-
- 0 replies
- 852 views
-
-
இந்த செயலுக்காக வெட்கப்பட வேண்டும்;ஜாஃப்ரி பய்காட் வேதனை!! by MohamedFebruary 13, 2021 இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாப்ரி பய்காட் இங்கிலாந்து அணியின் தேர்வாளர் எட் ஸ்மித் மற்றும் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். . சமீபமாகஇலங்கைக்கு எதிரான இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது …
-
- 0 replies
- 450 views
-
-
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இலங்கை மேசை பந்து சங்கம் சார்பாக இலங்கைக்கான ரெக்பந்தாட்ட அபிவிருத்தி முகாமையாளர் சிவராஜா கோபிநாத், சம்மேளனத்தின் உயர் அதிகாரிகள் ரஞ்சித் மற்றும் மருத்துவர் கணேசநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். யாழில் மேசைப்பந்தாட்டம் அறிமுகம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 1 reply
- 559 views
-
-
சச்சின் மகன் vs ஆட்டோ ஓட்டுநரின் மகன்... ஒப்பீடும், உண்மையும்! கார்த்தி Arjun Tendulkar Vs Pranav Dhanawade நமக்கு எப்போதுமே, நாம் படிக்கும், பார்க்கும் விஷயங்களில் ஒரு எமோஷனல் வீக்னெஸ் தேவைப்படுகிறதா? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்... 15 வயது சிறுவனான பிரனவ் தனாவடே ஜனவரி 2016-ம் ஆண்டு 1000 ரன்கள் அடித்து மீடியாக்களில் தலைப்பு செய்தியானார். எதிரணயினரின் ஒட்டுமொத்த ஸ்கோர் நூற்றுக்கும் குறைவு என்பதால், அது இன்னும் பெரிதானது. அதன் பின்னர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு மண்டலத்துக்கான அணி அறிவிக்கப்படுகிறது. அதில் சச்சினின் மகன் அர்ஜுன் ஸ்குவாடில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அந்தப…
-
- 0 replies
- 681 views
-
-
இங்கிலாந்து - இந்திய சமர் இன்று சேப்பாக்கத்தில் ஆரம்பம் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி …
-
- 7 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது. 31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள…
-
- 1 reply
- 1.3k views
-
-
குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி? அஷ்வின், சுந்தர், நடராஜன் என நட்சத்திர வீரர்கள் இல்லாத போதும் குஜராத் மண்ணில் தமிழ்நாடு வெற்றிக்கொடி நாட்டியது எப்படி?
-
- 0 replies
- 643 views
-
-
எல்லா திட்டமும் பக்கவா வச்சிருப்பானுக; எச்சரிக்கும் முன்னாள் வீரர் !! இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணி மிகத் தீவிரமாக முயற்சி செய்யும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கோச் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள், 5 t20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.பலம் வாய்ந்த இரு அணிகளும் பங்கேற்க உள்ள இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். 2012 நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-1 என வீழ்ந்தது. இதில் குறிப்பாக அலாஸ்டர் குக் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய…
-
- 0 replies
- 507 views
-
-
சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்…
-
- 1 reply
- 970 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் இலங்கை அணியின் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் முகாமையாளராக ஜெயரத்ன இருப்பார். தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளுடன் அசந்த டி மெல், அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜெரோம் ஜெயரத்ன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு மேலதிகமாக ஜெர்மி ஜெயரத்ன இலங்கை கிரிக்கெட்டின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றுவார். தொழில்முறை பயிற்சியாளரான ஜெயரத்ன முன்னதாக இலங்கை கிரிக்கெட்…
-
- 0 replies
- 668 views
-
-
ஆவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. இன்று மூன்றாவது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். இன்று முதன்முதலாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் களமிறங்கியிருக்கும் நடராஜனுக்கு பல விக்கட்டுக்களை வீழ்த்தி மேன்மேலும் புகழ் சேர வேண்டுகிறேன். BATSMEN R B 4s 6s SR TOTAL (5.4 Ov, RR: 4.58) 26/0 Yet to bat: V Kohli (c), SS Iyer, KL Rahul †, HH Pandya, RA Jadeja, SN Thakur, Kuldeep Yadav, JJ Bumrah, T Natarajan S Dhawan …
-
- 111 replies
- 10k views
- 2 followers
-
-
ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.! சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எ…
-
- 0 replies
- 896 views
-
-
ஐ.பி.எல். தொடரில் மேலும் இரு அணிகள் 2020-12-25 11:34:26 இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இரண்டு புதிய அணிகள் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 2022 ஆம் ஆண்டு முதல் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரும். 2011 ஆம் ஆண்டில் இந்த தொடரில் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அத்துடன் பி.சி.சி.ஐ.யின் 89 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஆஸ்திரேலிய வெற்றி vs இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி... ஏன் இவ்வளவு பாராமுகம் பி.சி.சி.ஐ? ரமணி மோகனகிருஷ்ணன் கிரிக்கெட் இந்திய மகளிர் அணி ஐ.பி.எல் மிகப்பெரும் வெற்றியை எட்டியது. அடுத்து இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடினார்கள். ஆனால், இன்னொரு புறம் பெண்கள் கிரிக்கெட் அணியின் கதை வேறாக இருக்கிறது. கொரோனா காலத்தில் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான போட்டிகளை, ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்று கவனம் செலுத்தி நடத்தாமல், பாராமுகம் காட்டுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்திருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என்று மக்கள் நின…
-
- 1 reply
- 1.1k views
-