விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
உலகக் கோப்பையை வென்றதன் நினைவாக கொழும்புவில் 96 மாடி கோபுரம் கடந்த 1996ஆம் ஆண்டு உலக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது. அதுவரை உலக கிரிக்கெட் அரங்கில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட இலங்கை அணி விசுவரூபம் எடுத்தது இப்படிதான். அந்த வெற்றியை என்னென்றும் நினைவு கொள்ளும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில்,பிரமாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது. சுமார் 363 மீட்டர் உயரத்தில் 96 அடுக்குகளுடன் உருவாகும் இந்த கட்டிடம்தான் இலங்கையிலேயே மிக உயரமாக கட்டிடமானது ஆகும். இந்த கட்டிடத்தில் பொழுது போக்கு மையம், வணிக வளாகம், நீச்சர் குளம், உடற்பயிற்சி மையம், உள்ளிட்ட 366 அறைகள் அமைக்கப்படும்…
-
- 2 replies
- 267 views
-
-
உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் 3 ஆவது முறையாக தங்கம் வென்றார் உலகின் அதி வேக மனிதர் ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார். http://www.virakesari.lk/article/10205
-
- 2 replies
- 400 views
-
-
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள் (நெவில் அன்தனி) கத்தாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கான பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் ஈட்டுபட்டுள்ளனர். இந்த உலகக் கிண்ணப் போட்டி வெற்றிகரமாக நிறைவேறும்போது அது முழு ஆசியாவினதும் வெற்றியாக அமையும் என கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பீபா பேரவை உறுப்பினருமான சவூத் அல் மொஹன்னாதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கத்தாரின் தலைநகர் தோஹா, அல் பிதா கோபுரத்தில் அமைந்துள்ள கத்தார் கால்பந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றல் மற்றும் ம…
-
- 2 replies
- 564 views
-
-
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சட்டோகிராமில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த ஒற்றை டெஸ்ட்டை ஆப்கானிஸ்தான் இன்று வென்றது. இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: 342/10 (துடுப்பாட்டம்: ரஹ்மட் ஷா 102, அஸ்கர் ஆப்கான் 92, ரஷீட் கான் 51, அஃப்ஸர் ஸஸாய் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/116, ஷகிப் அல் ஹஸன் 2/64, நயீம் ஹஸன் 2/43) பங்களாதேஷ்: 205/10 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 52, மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 48, லிட்டன் தாஸ் 33 ஓட்டங்கள…
-
- 2 replies
- 658 views
-
-
FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி @Getty Images கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது. எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல…
-
- 2 replies
- 363 views
-
-
கோலியும் அனுஷ்காவும் ஆர். அபிலாஷ் இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 ஆட்டத்தில் கோலி சிறப்பாக ஆடினார் (73 ஓட்டங்கள்). ஆனால் ஆட்டத்தை வென்ற பிறகு பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் தன் ஆட்டத்தின் சிறப்புக்கு யாருடைய உதவு, பங்களிப்பெல்லாம் இருந்தது எனும் போது அணியின் பயிற்சியாளர்களை குறிப்பிட்டு கூடவே “அனுஷ்காவும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் உதவியது.” எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை. தொழில்முறை வெற்றிகளை தொழில்முறையில் மட்டும் பார்ப்பதே நல்லது, அதை அந்தரங்க வாழ்க்கையுடன் கலந்து தன் குடும்பமும் தன் பயிற்சியாளர்கள், அணியும் ஒன்றே என சமப்படுத்துவது ஒரு மோசமான போக்கு. பொதுவாக ஒரு வீ…
-
- 2 replies
- 1.2k views
-
-
விராட் கோலி கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக பட்டியலிட்ட காரணங்கள் - ரசிகர்கள் கவலை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல் முறையாக வழி நடத்தினார். பின்னர் முதன்மையாக அந்த பதவியில் அவர் தொடர்ந்தார். கேப்டவுன் டெஸ்டில் கேப்டனாக அவர் கடைசியாக விளையாடினார். இதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் தமது ட்வ…
-
- 2 replies
- 358 views
- 1 follower
-
-
The Hundred இங்கிலாந்தில் முதன்மைக் கழகங்களுக்கிடையே தற்போது பிரசித்தி பெற்ற கிரிக்கெட்டாக உருவெடுத்திருக்கிறது 100 கிரிக்கெட். இந்த கிரிக்கெட்டில் ஒரு போட்டில் விளையாடும் இரண்டு அணிகளுக்கும் தலா 100 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்படும். இதில் அதிகூடிய ஓட்டமெடுக்கும் அணி வென்றதாகக் கருதப்படும். இந்தப் போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் 5 அல்லது 10 பந்துப் பரிமாற்றங்களை தொடர்ந்து செய்யலாம். மொத்தம் ஒரு பந்து வீச்சாளர் 25 பந்துப் பரிமாற்றங்களே செய்ய முடியும். ரி20 க்கு போட்டியாக உருவான இந்த 100 கிரிக்கெட்.. தற்போது மெதுமெதுவாக பிரசித்தம் பெற்று வருவதோடு நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக்கான அணிகள்.. பெ…
-
- 2 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 38 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 புதிய விதிகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்றான ஸ்டாப் கிளாக் என்ற புதிய விதிமுறை பந்துவீசும் அணிக்கும், பவுலர்களுக்கும் புதிய நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப் கிளாக் விதிமுறை என்ன? அதனால் பந்துவீசும் அணிக்கு என்ன நெருக்கடி? மற்ற இரு விதிகள் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு என்ன பிரச்னை? இந்த 3 விதிகளும் எப்போது முதல் அமலுக்கு வரும்? விரிவாகப் பார்க்கலாம். ஸ்டாப் கிளாக் விதிமுறை ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்…
-
- 2 replies
- 407 views
- 1 follower
-
-
ஒலிம்பிக் போட்டி... இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்தது – வெங்கைய நாயுடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலங்களைவையில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அதிகமானனோர் பதக்கங்கள் பெற்றதால் மட்டுமல்ல, அதிகமானோர் பதக்கச் சுற்றுக்குச் சென்றாலும் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைத்துள்ளதாக தெரிவித்தார். ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்றது நம்மாலும் கூட முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1233316
-
- 2 replies
- 357 views
-
-
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான்! காலே: பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்கள் அடித்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். காலேவில் இலங்கை& பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 278 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் 215 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை 313 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அகமது ஷேஷாத் டக் அவுட் ஆனார். அசார் அலி 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து யூனிஸ் கான், மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத்துடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 255 ரன்கள் க…
-
- 2 replies
- 445 views
-
-
இந்திய வெற்றி! இளமையின் வெற்றி! புதன், 5 மார்ச் 2008( 12:36 IST ) பல்வேறு கீழ்த்தரமான சர்ச்சைகள் உருவான, இந்திய -ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர்களுக்கு பெரும் தலைவலிகளை கொடுத்த, ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் பல்வேறு கசப்பான அனுபவங்களுக்கிடையே, முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியாவிற்கு வெற்றி என்ற இனிப்பான தருணத்துடன் நேற்று நிறைவடைந்தது. கடந்த 10 ஆண்டுகளாகவே ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய ஒவ்வொரு அணியும் ஒரு தயக்கத்துடனும், அந்த அணிக்கு நாம் இணையில்லை என்ற தாழ்வு மனப்பான்மையுடனும்தான் ஆடித் தோற்றுள்ளன. இதற்கு இந்திய அணியும் விதி விலக்காக இருந்ததில்லை. ஆனால் இருபதிற்கு 20 போட்டித் தொடரில் இருந்தே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்களிடம் இந்த மனப்பான்மை…
-
- 2 replies
- 1.5k views
-
-
04 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது. தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 615 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 551 ஓட்டங்கள் பின்னிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தா…
-
- 2 replies
- 335 views
- 1 follower
-
-
லண்டன்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் 25 மீட்டர் ராபிட் ஃபயர் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 34 புள்ளிகள் பெற்ற கியூபா வீரர் புபோ தங்கமும், 30 புள்ளிகள் பெற்ற விஜய்குமார் வெள்ளி பதக்கமும், 27 புள்ளிகள் பெற்ற சீனா வீரர் டிங் வெண்கலம் பதக்கமும் வென்றனர். விஜயகுமார் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. முன்னதாக, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். வெள்ளி வென்ற விஜய்குமார் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தற்போது இந்திய [size=4]ராணுவத்தில் [/size]சுபேதாராக பணியாற்…
-
- 2 replies
- 633 views
-
-
என்னை நான் கண்டுபிடித்துக் கொள்ள விரும்பினேன்: கடந்து வந்த பாதை பற்றி மனம் திறக்கிறார் முரளி விஜய் முரளி விஜய். | படம்.| ஆர்.ரகு. குறும்புத்தனம் செய்யும் பையனாக தனது வாழ்க்கையை தொடங்கியது முதல் இன்றைய டெஸ்ட் தொடக்க வீரராக முன்னேறியது வரையிலான தனது பயணத்தை முரளி விஜய் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். கடினங்களிலும் கிரிக்கெட் மேல் உள்ள அந்த நேசம் மட்டுமே தன்னை நகர்த்திக் கொண்டு சென்றது என்று கூறிய விஜய், “மலையின் உச்சியைத் தொடுவது கடினம்தான், ஆனால் ஏறிய பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கும் போது கடினப்பாடு பெரிதாகத் தெரியவில்லை” என்றார் விஜய். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் மிகவும்…
-
- 2 replies
- 571 views
-
-
ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்த முறைமையானது சர்வதேச கிரிக்கெட்டின் மூச்சை நிறுத்திவிடும் என பிரித்தானியாவின் 2014ஆம் ஆண்டின் விஸ்டென் கிரிக்கெட் சஞ்சிகையின் 151ஆவது அல்மனாக் பதிப்பில் கடுமையாக சாடியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) அதிகாரம் மற்றும் வருமானத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று முப்பெரும் நாடுகள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவின் அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த முப்பெரும் நாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை வெளியான கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டென் சஞ்சிகையின் 151ஆவது பதிப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தில் உருவான 'காலணித்துவ…
-
- 2 replies
- 700 views
-
-
நாளை இலங்கை வருகிறது உலகக் கிண்ணம் 6 ஆவது இருபதுக்கு20 உலகக்கிண்ணம் இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கை வரவுள்ளது. உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற 5 ஆவது தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது. இருபதுக்கு20 கிண்ணத்திற்கான தொடர் 2007 ஆம…
-
- 2 replies
- 689 views
-
-
முரளியிடமும் சங்காவிடமும் மன்னிப்புக் கோரினார் மக்கலம் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், முத்தையா முரளிதரனைச் சர்ச்சைக்குரிய விதத்தில் ரண் அவுட் செய்தமைக்காக, அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்காரவிடமும் ரண் அவுட் முறையில் ஆட்டமிழப்புச் செய்யப்பட்ட முரளிதரனிடமும் மன்னிப்புக் கோருவதாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரென்டன் மக்கலம் தெரிவித்துள்ளார். எம்.சி.சி கிரிக்கெட்டின் உணர்வுக்கான கொலின் கௌட்ரி உரையை, லோர்ட்ஸில் வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியிருந்தார். கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற…
-
- 2 replies
- 625 views
-
-
அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்த பேட்ஸ்மேனும் ஒருமுறைகூட வீழ்த்தமுடியாதவர்களும்! இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, இலங்கை பேட்ஸ்மேன் லஹிரு திரிமானே 9 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து அஸ்வின் வீழ்த்திய பேட்ஸ்மேன்களில் அதிகமுறை அவுட் ஆனவர் என்கிற ஒரு பெயர் திரிமானேவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்தவர்களாக (11) திரிமானேவும் வார்ன…
-
- 2 replies
- 309 views
-
-
அயர்லாந்துடன் டி 20-ல் இன்று இந்தியா மோதல் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 டி 20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக இரு டி 20 ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை டப்ளின் நகருக்கு இந்திய அணி சென்றடைந்தது. அங்குள்ள மெர்ச்சன்ட்ஸ் டெய்லர் பள்ளி மைதானத்தில் இந்திய அணி 3 குழுக்களாக பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் கேரி வில்சன் தலைமையில் அயர்லாந்து அணி இந்திய வீரர்களுக்குச் சவாலாக …
-
- 2 replies
- 775 views
-
-
சங்காவின் அதிரடி தொடர்கிறது இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பலமிக்க யோர்க்ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார். பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாக…
-
- 2 replies
- 366 views
-
-
Nov 2, 2025 - 08:51 AM நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில…
-
- 2 replies
- 168 views
- 1 follower
-
-
சென்ற வாரம் நடைபெற்ற ஜரோப்பிய தடகளப் போட்டியில் சுவிஸ் நாட்டிற்காக ஒரு தமிழர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்றுள்ளார். இறுதிச் சுற்றில் சில விநாடிகளால் 3ஆம் இடத்தை நழுவிட்டுள்ளார்கள். http://www.youtube.com/watch?v=RMqSS0ZlPFQ
-
- 2 replies
- 579 views
-
-
உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியாவின் 'துல்லியத் தாக்குதல்' பட மூலாதாரம்,HOCKEY INDIA/TWITTER 13 ஜனவரி 2023, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 12 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றார்கள். அதை இந்திய வீரர்கள் அற்புதமாகக் கோலாக மாற்றினார்கள். 26-ஆவது நிமிடத்தில் ஸ்பெனின் டி பகுதிக்குள் அற்புதமாக பந்தைக் கடத்தி வந்த இந்திய வீரர்கள் மற…
-
- 2 replies
- 785 views
- 1 follower
-
-
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது டெல்லி: 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன. 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. 10வது உலகக் கோப்பைப் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்த முயன்றன. ஆனால் ஆசிய நாடுகள் இதைத் தட்டிச் சென்று விட்டன. 10வது உலக்க கோப்பைப் போட்டியின் தொடக்க விழா வங்கதேசத்தில் நடைபெறும். மொத்தம் 53 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 22 போ…
-
- 2 replies
- 1.3k views
-