விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம் சீனிவாசன் | கோப்புப் படம்: ஜோதி ராமலிங்கம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவரைத் திருப்பி அழைத்தது. சீனிவாசனுக்குப் பதிலாக தற்போதைய பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் ஐசிசி தலைவர் ஆகிறார். மும்பையில் நடைபெற்ற 86-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் மீதான சீனிவாசனின் பிடி முடிவுக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் ஐசிசி தலைவராக சீனிவாசன் பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. எனவே, மீதமுள்ள பதவிக்காலத்…
-
- 1 reply
- 620 views
-
-
ரியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில், பிரேசில் நாட்டைப் பற்றியும் ரியோ டி ஜெனிரோ நகரத்தைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா? ரியோ பெருமைகள் # பிரேசில் தமிழகத்தைப் போல 65 மடங்கு பெரியது. மிக முக்கியமான வளரும் நாடு. # தன்னுடைய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்களைக் காட்டிலும் ரியோ மிகவும் அற்புதமானது' என்று பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வின் ரியோ டி ஜெனிரோ பற்றிக் கூறியுள்ளார். # ரியோவில் 90 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடற்கரை இருக்கிறது. சார்லஸ் டார்வின் ரியோவைப் பற்றிக் கூறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். # 1815 முதல் 1821 வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்துள்ள ரியோ, போர்ச்சுகல் நாட்டுக்கும் தலைந…
-
- 1 reply
- 343 views
-
-
டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளைக்கு முன்னர் சதமடித்து டேவிட் வார்னர் சாதனை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். அதிவேக சதமடித்த டேவிட் வார்னர் இன்று ( செவாய்க்கிழமை) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, உணவு இடைவேளைக்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னர், வார்னர் இந்த மைல்கல்லை எட்டினார். …
-
- 1 reply
- 440 views
-
-
லெய்செஸ்டர் சிற்றி கழக உரிமையாளர் உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கினார்! லெய்செஸ்டர் சிற்றி காற்பந்தாட்ட கழக உரிமையாளர் விச்சாய் சிறிவத்தானபிரபா பயணித்த உலங்கு வானூர்தி ஒன்று கழக மைதானத்திற்கு வௌியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரிமியர் லீக் விளையாட்டு போட்டியொன்று நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து வௌியேறிய போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. உலங்கு வானூர்தி விமானம் விபத்துக்குள்ளான தருணத்தில் கழக உரிமையாளர் அதில் இருந்ததாகவும், பிரித்தானிய நேரப்படி சனிக்கிழமை இரவு 20:30 அளவில் இந்த சம்பவம் நடத்ததாக அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் இடம்பெற்ற போது லெய்செஸ்டர் அணி போட்டியாளர் கெஸ்பர் ஸ்கெமிசெல் மைதானத்தை…
-
- 1 reply
- 456 views
-
-
இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் அணி இடைவிடாமல் தொடர்ச்சியாக 34 மணிநேரம் கிரிக்கெட் விளையாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள நோர்தம்பர்லேண்டில் ரெட்ரோ ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளது. இங்குள்ள கிரிக்கெட் வீரர் டேவிட் கிரிப்பித்ஸ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்மா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். அவரது நினைவாகவும், கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கிலும் ரெட்ரோ கிளப் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. பகல்- இரவு என்று தொடர்ந்து 34 மணிநேரம் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஆடினார்கள். இரவில் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடினார்கள். இதற்கு முன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கிரிப்பித்ஸ் பல்கலைக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்க அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தலைவர் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட் கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து முன்னாள் தலைவர் அசாருதீனிடம் கருத்து கேட்ட போது, ‘அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன். எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும். அந்த வாய்ப்பு வழங்ககப்படுவதற்கு டோனி தகுதியானவர். டோனி சிறந்த தலைவராக விளங்கி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் வென்று இருப்பதுடன், இந்தியா ம…
-
- 1 reply
- 248 views
-
-
என் கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்குண்டு: பும்ரா! தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் செதுக்கியதில் முன்னாள் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்டுக்கு முக்கியப் பங்கிருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ஷேன் பாண்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தற்போது இருந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் தரப்பு சமீபத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளது. அதில் பேசியிருக்கும் பும்ரா, “நான் இங்கு இல்லையென்றாலும், இந்திய அணியுடன் விளையாடும்போது ஷேன் பாண்டோடு பேச முயல்வேன். இது ஒரு நல்ல பயணமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவதைக் கற்று எனது பந்துவீச்…
-
- 1 reply
- 704 views
-
-
பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருது: ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார் ரொனால்டோ போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல் மாட்ரிட் அணி இந்த வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கோப்பை, ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றியது. இதற்கு ரொனால்டோவின் ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வருடத்திற்கான பிஃபாவின் சிறந்த வீரரருக்கான வி்ருது நேற்று அறிவிக்…
-
- 1 reply
- 976 views
-
-
UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள் Getty Images உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் விபரம் இன்று (11) வெளியானது. இதன்மூலம் இந்த சுற்றில் பரபரப்பான சில முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. UEFA சம்பியன்ஸ் லீக்கின் இந்த ஆண்டு குழு நிலைப் போட்டிகளில் இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டன. ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து குழு நிலைப் போட்டிகளிலும் கோல் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) குழுநிலையில் மொத்தம் 25 கோல்களை போட்டு அதிக கோல்கள் பெற்ற அணியாக சாதனை படைத்தது. முன்னர் 21 கோல்கள் போட்ட போர்ஷியா டொர்மு…
-
- 1 reply
- 329 views
-
-
மைக்கல் பிளாட்டினி மீண்டும் மேன்முறையீடு March 02, 2016 சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் விவகாரத்தில் ஆறு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர் மைக்கல் பிளாட்டினி விளையாட்டுக்களுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்துள்ளார். இந்த தகவலை சுவிஸை சார்ந்த விளையாட்டு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. இது குறித்து விளையாட்டுக்களுக்கான நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளில் பங்கு பெறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வதற்கு பிளாட்டினி முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கால்பந்து சபைத் தலைவர் மைக்…
-
- 1 reply
- 382 views
-
-
அஷ்வின் Vs ஹர்பஜன் பனிப்போர்..! புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை என்ன? அஷ்வின் மீது ஹர்பஜன் காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பதாக அனல் கக்கும் விமர்சனங்களை ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இந்தூர் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக பிட்சை பற்றிய விமர்சனம் ஒன்றை டிவிட்டரில் வைத்தார் ஹர்பஜன் சிங்." ஒரு பந்து கூட இன்னும் வீசப்படவில்லை, ஆனால் இரண்டு நாள் பிட்ச் போல காட்சியளிக்கிறது. என்னுடைய கணிப்புப்படி மூன்றரை நாட்களைத் தாண்டி மேட்ச் செல்லாது" என விமர்சித்திருந்தார் ஹர்பஜன். Harbhajan Turbanator ✔ @harbhajan_singh Already looks like 2 days old pitch before the 1st bowl is bowled..…
-
- 1 reply
- 366 views
-
-
டோனி சம்பளம் குறித்து பேசிய பாகிஸ்தான் வீரருக்கு டோஸ் கொடுத்த டுவிட்டர்வாசிகள் இந்திய நட்சத்திர கேப்டன் டோனியின் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜாவிற்கு டுவிட்டர் வாசிகள் டோஸ் கொடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் ராசியான கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையா…
-
- 1 reply
- 286 views
-
-
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் உறுப்பினர்களும் இராஜினாமா இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவும் குழுவின் உறுப்பினர்களும் தமது பொறுப்புக்களை இராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் இன்று பிற்பகல் தமக்கு கிடைத்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் ரஞ்ஜித் மதுரசிங்க, அசங்க குருசிங்க, ரொமேஸ் களுவித்தரன , எரிக் உபசாந்த ஆகியோர் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களாக அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களது ஒன்றிணைந்த இராஜினமாக் கடிதங்களின் பிரகாரம் செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் அவர்களின் பதவிகள் முடிவுக்கு வருகின்றன. h…
-
- 1 reply
- 402 views
-
-
பார்முலா-1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பார்முலா-1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். ஆஸ்டின்: பார்முலா-1 கார் பந்தயத்தின் 17-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி ஆஸ்டினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 1 மணி 33 நிமிடம் 50.991 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ) 2-வது இடம் பிடித்தார். இன்னும் 3 சுற்று பந்தயங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் லீவிஸ் ஹாமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தி…
-
- 1 reply
- 468 views
-
-
தினேஷ் கார்த்திக் தலைவராக தேர்வு! இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5 வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது. டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி - டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் இன்றும் கடைசிப் பயிற்சி ஆட்டம் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் வியாழன்று செளதாம்ப்டனில்…
-
- 1 reply
- 537 views
-
-
சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி - லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட் ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்…
-
- 1 reply
- 330 views
-
-
குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை October 20, 2019 தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 46 வயதான குலாம் போடி 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சூதாட்ட வழக்கில் சிக்கியமை தொடர்பிலேயே இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நநடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் சிக்கியிருந்தமைக்காக அவருக்கு 20 வருடம் தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது தொடர்பான வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் அவர் மீது 8…
-
- 1 reply
- 642 views
-
-
இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது! By A.Pradhap - இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த குழாத்தின் படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், சுமார் 18 மாதங்களுக்கு பின்னர், இலங்கை T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக, இலங்கை அணியானது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், தொடரை முழுமையாக இழந்திருந்தது. இவ்வாறான நிலையில், குறித்த தொடருக்கான குழாத்திலிருந்து…
-
- 1 reply
- 738 views
-
-
கிரிக்கெட் மைதானத்தில் சேட்டை காட்டிய நாய்க்கு டிவிட்டரில் அக்கவுன்ட்! புஜாராவும், கோஹ்லியும் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மைதானத்துக்குள் நுழைந்த நாய் ஒன்று இடத்தை கலகலப்பாக்கியது. கிரிக்கெட் கிரவுண்ட் மட்டுமின்றி இணைய கிரவுண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது அந்த நாய் குறித்து தான் பேச்சு. டிவிட்டர் வாசிகள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்த நாய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதகளம் செய்திருக்கிறார்கள். இது #vizagdog என்ற ஹாஷ்டாகில் டிரெண்டாகி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.கான்பூரை போல புட்கள் இருக்கும் பிட்ச் இல்லாமல், பந…
-
- 1 reply
- 779 views
-
-
சங்காவின் அதிரடி வீண் : CPL தொடரிலிருந்து ஜமெய்க்க அணி வெளியேற்றம் Image Courtesy - Getty image மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின், பிளே ஒப் சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. இச்சுற்றில் நடைபெற்று முடிந்திருக்கும் வெளியேறல் (Eliminator) நொக்அவுட் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியினால் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் நடப்புச் சம்பியன் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறுகின்றது. கடந்த மாத ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஒப் போட்…
-
- 1 reply
- 283 views
-
-
டெல்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியை பயன்படுத்திய கோலி: ஐ.சி.சி. விதியை மீறினாரா? டெல்லியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். இது ஐ.சி.சி. விதிமுறை மீறலா? என்ற விவாதத்தை எழுப்பியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது வெளியில் இருந்த கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தார். இதை பல செய்தி நிறுவனங்கள் படம் எடுத்தனர்.…
-
- 1 reply
- 479 views
-
-
35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்…
-
- 1 reply
- 512 views
-
-
'சுழல் தமிழன்' அஸ்வின் சாதனை: உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர்: அஸ்வின் சாதனை. | படம்: பிடிஐ. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 1973-ம் ஆண்டு பிஷன் பேடி நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு தற்போது அஸ்வின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகள் அடங்கும். 1973-ம் ஆண்டில் பிஷன் சிங் பேடி நம்பர் 1 இடம் பிடித்த பிறகு இந்திய பவுலர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இ…
-
- 1 reply
- 742 views
-
-
IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle கார்த்தி கிறிஸ் கெயில் 41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை. 132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை.…
-
- 1 reply
- 775 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா? சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். கேள்வி – …
-
- 1 reply
- 433 views
-