விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெய்ல் இந்தியன் பிறிமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவருகின்றபோதிலும், தேசிய அணியில் அவர் இணைத்துக்கொள்ளப்படவில்லை. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் ஏற்பட்ட முரன்பாடுகளை அடுத்து கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த…
-
- 1 reply
- 630 views
-
-
ரங்கண ஹேரத், ஜனித் பெரேராவிடம் சூதாட்ட தரகர்கள் அணுகியமை உறுதி..! காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். போட்டியின் முடிவை மாற்றியமைப்பதற்காகவே குறித்த சூதாட்ட தரகர்கள் மேற்படி வீரர்களை அணுகியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சூதாட்ட தரகர்களின் வாய்ப்பை மறுத்த இரு வீரர்களும் உடனடியாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியு…
-
- 1 reply
- 490 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையை ரத்து செய்ய வேண்டாம்: இந்தியா சிமெண்ட்ஸ் மன்றாடல் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் ஒப்பந்த்தத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் மன்றாடியுள்ளது. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான முத்கல் கமிட்டியின் அறிக்கை மீதான எதிர்வினையில் இந்தியா சிமெண்ட்ஸ் கோரிக்கை வைக்கும் போது, “குருநாத் மெய்யப்பன் மீது கூறப்பட்ட விவகாரங்கள் தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதோ உரிமையாளர்கள் மீதோ, ஊழியர்கள் மீதோ எந்த வித அனுமானங்களும் இல்லை.” என்று கோரியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அது ஐபிஎல் கிரிக்கெட்டிற்கே பா…
-
- 1 reply
- 411 views
-
-
சதத்தை நெருங்கும் போது பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்படுவது உண்மையே: ஆய்வு 90 ரன்களைக் கடந்த பிறகு சதம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் பேட்ஸ்மென்களுக்கு நடுக்கம் ஏற்படுவது உண்மையே என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அப்போது, பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், ம…
-
- 1 reply
- 341 views
-
-
-
ஆச்சரியமேற்படுத்திய சங்காவின் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சேர்க்கப்பட்டமை, ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை. இலங்கை அணி சார்பாக அண்மையில் வரை விளையாடிய குமார் சங்கக்கார, 7 மாதங்களுக்கு முன்னரே சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். அத்தோடு, உள்ளூர்ப் போட்டிகளில் இன்னமும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இந்நிலையில், இலங்கை அணியின் தேர்வாளராக அவர் நியமிக்கப்பட்டமை, புருவங்களை உயர்த்தியிருந்தது. தனது பதவி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குமார் சங்கக்கார, குறுகியகாலத்துக்கான பதவி மாத்திரமே என்பதாலேயே, இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். …
-
- 1 reply
- 801 views
-
-
பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல் 40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் கட்டுமானம் தொடருமா என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச…
-
- 1 reply
- 548 views
-
-
பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டுகள் இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவுவிடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கு இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது அரசதரப்பு சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்ஸ் தற்பாதுகாப்பு என்ற எல்லையை மீறி செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர். பென்ஸ்டோக்ஸ் தன்னிலை இழந்து பழிவாங்கும் நோக்கில் தாக்க தொடங்கினார், எனதெரிவித்துள்ள சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்சும் அவருடன் இருந்தவர்களும் தாங்கள் தாக்கப்பட்டனர் என கருதியதை தொடர்ந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பென்ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவுவிடுதிக்குள் நுழைய முயன்ற வேளை இடம்பெற்ற மோதல்கள் தொடர…
-
- 1 reply
- 548 views
-
-
2020 ஆசியக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமையை வென்றது பாகிஸ்தான் எதிர்வரும் 2020 ஆம் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரினை நடத்தும் வாய்ப்பினை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐ.சி.சி.) உறுப்பினராக உள்ள ஆசிய நாடுகள் மட்டும் பங்கேற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 1894 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இதேவேளை இவ் ஆண்டு இடம்பெற்ற 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய 7 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது. இந் நிலையில் எதிர்வரும் 2020 ஆம்…
-
- 1 reply
- 528 views
-
-
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணக்கிறார் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அமெரிக்காவை சேர்ந்த அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். நீண்ட நாள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸ் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் தொழில் அதிபர் அலெக்சிஸ் ஒஹனியனை மணப்பதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்து உள்ளார். அலெக்சிஸ், ரெட்டிட் இணையதளத்த…
-
- 1 reply
- 396 views
-
-
ஓய்வை அறிவித்தார் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் அர்ஜென் ராபென் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவைர் அர்ஜென் ராபென், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்பொவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம்பெறவுள்ள பிஃபா உலக கிண்ண போட்டிகளுக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற தவறிய நிலையிலேயே அவர் தனது ஓய்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலக கிண்ண தகுதிகான் போட்டிகளில் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2 க்கு 0 என்ற குால் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அர்ஜென் இரண்டு கோல்களை அணிக்காக போட்டுக் கொடுத்தார். எனினும், எனினும் ஏ பிரி…
-
- 1 reply
- 502 views
-
-
2017-ல் அதிக கோல்: மெஸ்சியை துரத்துகிறார் டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன் 2017-ம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மெஸ்சியை டோட்டன்காம் வீரர் ஹாரி கேன் துரத்துகிறார். கால்பந்து விளையாட்டில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். 2017-ம் ஆண்டு மட்டும் மெஸ்சி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக இதுவரை 54 கோல்கள் அடித்துள்ளார். நேற்று நடைபெற்ற எல் கிளாசிகோவில் அடித்த ஒரு கோலும் இதில் அடங்கும். இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்சி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இ…
-
- 1 reply
- 625 views
-
-
தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித் தலைவராக செயற்பட்டு வந்த சகலதுறை வீரர் திசர பெரேரா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உப தலைவரும் சர்வதேச கிரிக்கெட்டிற்கான பொறுப்பாளருமான K. மதிவனன், இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா, தெரிவுக் குழுவின் தலைவர் கிரேம் லப்ரோய், இலங்கை …
-
- 1 reply
- 555 views
-
-
மெல்போர்ன் ப்ளாஷ்பேக்: 1981 சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார் கவாஸ்கர் 1981-ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் ஆஸி. வீரர்களின் வாய்ப் பேச்சுக்குப் பதிலடியாக மறுமுனையில் இருந்த பேட்ஸ் மேனையும் அழைத்துக்கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறிய சம்பவத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். 1981-ல், இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த கவாஸ்கர், டென்னிஸ் லில்லி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். பந்து முதலில் பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதாக கவாஸ்கர் நினைத்தார். ஆனால் நடுவர் ரெக்ஸ் ஒயிட்ஹெட…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிளட்டருக்கு 90 நாட்களுக்கு இடைக்காலத் தடை? சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக விவகாரத்தால், அச்சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத் தலைவர் மைக்கல் பிளட்டினி இருவருக்கும் 90 நாள் இடைக்காலத் தடை விதிக்கப்படுமெனத் தெரியவருகிறது. இவ்வாறானதொரு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், பெப்ரவரியில் இடம்பெறவுள்ள பீபா தேர்தலுடன் பதவி விலகவுள்ள பிளட்டர், தனது 17 வருடகாலப் பதவியின் இறுதிப் பகுதியை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டவராகவே நிறைவு செய்ய வேண்டியேற்படும். மறுபுறத்தில், பிளட்டரின் இடத்துப் போட்டியிட எதிர்பார்க்கும் பிளட்டினியின் வாய்ப்புகளுக்கும் இது எதிரானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 1 reply
- 545 views
-
-
ஆஸியின் சார்பாக 1000 சதங்கள் December 27, 2015 ஆஸ்திரேலியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நேற்று மெல்பேர்ணில் ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிவரும் ஆஸ்திரேலியா சார்பாக பேர்ண்ஸ், கவாயா இருவரும் சதம் அடித்தனர். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை இவர்கள் படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முதல் மூன்று வீரர்கள் இந்த ஆண்டில் மட்டும் 14 சதங்களை விளாசியுள்ளனர். இதற்கு முன் 2003ஆம் ஆண்டு இதேபோல் 14 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வருடம் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 4020 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். கவாஜா கடைசி நான்கு இன்னிங்சில் 448 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 149.33 ஆகும். அதற்கு முன்னர் 17 இன்னிங்சில் 377 ஓட்டங்கள…
-
- 1 reply
- 716 views
-
-
சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்…
-
-
- 1 reply
- 168 views
- 1 follower
-
-
திருட்டு வழக்கில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர் முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர். 65 வயதாகும் இவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995-ம் ஆண்டு நடைபெறும்போது முத்தையா முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று அறிவித்…
-
- 1 reply
- 789 views
-
-
சிக்ஸர் மழை பொழிந்த டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா உலக சாதனை! 120 பந்துகளில் 244 ரன்கள். இதுதான் ஆஸ்திரேலிய அணிக்கு அளிக்கப்பட்ட இலக்கு. இதை மட்டும் நிகழ்த்திக்காட்டினால் உலக சாதனை செய்யலாம். இதற்கு முன்பு டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 231 ரன்கள் எடுத்தபோது அந்தக் கடினமான இலக்கை 19.2 ஓவர்களில் எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஏழு பந்துகள் மீதமுள்ள நிலையில் 245 ரன்கள் எடுத்து வெற்றியடைந்த ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற 6800 + சர்வதேச, உள்ளூர…
-
- 1 reply
- 337 views
-
-
டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 இறுதி ஆட்டத்திற்கு நான்கு முனை போட்டி 09 JAN, 2023 | 04:50 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்தின் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற நான்கு முனை போட்டி நிலவுகிறது. அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பிற்கான போட்டி நிலவுகிறது. இந்த நான்கு அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி டெஸ்ட் தொடர்கள் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. சதவீத புள்ளிகள் அடிப்படையில் தற்போது முதல் 4 இடங்களில் இருக்கும்…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது. டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலியா, துடுப்பாட்டம் மற்று…
-
- 1 reply
- 457 views
-
-
[size=4]30 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினம் லண்டன் நகரில் ஆரம்பமாகிறன. ஒலிம்பிக் ஆரம்பவிழா இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு வேளையில் ஆரம்பமாகின்றது.[/size] [size=4]இவ்வாண்டு இடம்பெறும் போட்டிகளில் 204 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்து 500 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர்.[/size] [size=4]இதேவேளை இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை முன்வைத்து லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 384 views
-
-
முதல் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இம்மாதம் ஆரம்பம் 19 வயதிற்குட்பட்டவர் களுக்கான இளையோர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிரிக்கெட் சம்மே ளனத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் இளையோர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந் தியா, நேபாளம், மலேசியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், ஆப்கனிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்தத் தொடரின் போட்டி கள் கொழும்பு, காலி, மாத் தறை, மொறட்டுவை ஆகிய இடங்களிலுள்ள மைதானங்க ளில் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி மட்டும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கி…
-
- 1 reply
- 291 views
-
-
-
‘கெட்ட பையனா’ இஷாந்த் சர்மா புதுடில்லி: ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை இஷாந்த் சர்மா உணராதவராக இருக்கிறார். களத்தில் இவரது ஆக்ரோஷம் எல்லை மீறுவது ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 28. களத்தில் இவரை சீண்டி விட்டால் போதும், மோதலில் இறங்கி விடுவார். கடந்த 2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கம்ரான் அக்மலுக்கு இவர் பவுலிங் செய்தார். அப்போது கம்ரான் ஏதோ கூற, உடனடியாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் சமீபத்தில் நடந்த பிரிஸ்பேன் டெஸ்டில், ஸ்மித்தை தகாத வார்த்தைகளால் திட்டிய இஷாந்த் சர்மாவுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது இலங்கை மண்ணில் அளவுக்கு அதிகமாக …
-
- 1 reply
- 524 views
-