விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை By DIGITAL DESK 5 08 FEB, 2023 | 09:09 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில்…
-
- 3 replies
- 640 views
- 1 follower
-
-
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி எப்ஏ கோப்பையை கைப்பற்றியது செல்சி அணி எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup லண்டன்: 2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந…
-
- 2 replies
- 639 views
-
-
லண்டன்: ஒலிம்பிக் தனி நபர் வில்வித்தை போட்டியில், நம்பர் 1 வீராங்கனை தீபிகா குமாரி, பிரிட்டன் வீராங்கனையிடம் படுதோல்வி அடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு எலிமினேஷன் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தீபிகா குமாரி தோல்வி அடைந்து வெளியேறினார். பிரிட்டன் வீராங்கனை ஆலிவரிடம் 6-2 என்ற செட் கணக்கில் தீபிகா தோல்வி அடைந்தார். இதன் மூலம் வில்வித்தையில் இந்திய ரசிகர்கள் வைத்திருந்த இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது. வில்வித்தையில் உலகின் முதல் தரவரசையில் இருந்த தீபிகா படுதோல்வி அடைந்தது இந்தியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. vikatan.com
-
- 1 reply
- 639 views
-
-
ஒலிம்பிக் சின்னமாகும் பந்து எறும்புத் தின்னி வரும் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடக்கிறது. இதற்காக அரிதான, மிகவும் பொருத்தமான ஒரு அதிகார பூர்வ சின்னத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறது அந்த நாடு. அது ஒருவகை எறும்புத்தின்னி. ‘பிரேசிலியன் த்ரீ பேண்டட் ஆர்ம டில்லோ’ என்று இதற்குப் பெயர். பெயருக்கு ஏற்றபடி இது பிரேசில் நாட்டில் மட்டுமே வசிக்கிறது. அழிந்துவரும் அரிதான இனம். இதன் உடல் அமைப்பு விநோதமானது. தலை ஒரு பகுதியாகவும், வயிற்றுப் பிரதேசத்தில் ‘வெஸ்டிபுள் டியூப்’ போல மூன்று விசித்திரமான மடிப்புகளுடன் உடல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. குட்டியூண்டு வால் பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலின் மேல்பகுதி, ஆமைகளுக…
-
- 1 reply
- 639 views
-
-
மே. தீவுகளை வெல்லுமா இலங்கை? இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பல்லேகலவில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை வெள்ளையடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 10ஆம் இடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அவ்வணியின் தலைவர் கெரான் பொலார்ட்டுடன், டுவைன் …
-
- 0 replies
- 639 views
-
-
சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் : அவுஸ்ரேலியா முன்னிலை! சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த அவுஸ்ரேலிய அணி தமது முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பெர்த் மைதானத்தில் கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போட்டியில் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலி அணி சார்பாக மாக்கஸ் ஹரிஸ் 70 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், ஆரோன் வின்ஞ் 50 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர். இதனிடையே, இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் இஷாந்த் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றி…
-
- 0 replies
- 639 views
-
-
இலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன் இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டீ டுவென்டி தொடரில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு ஒய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த டீ டுவென்டி தொடரின் அணித்தலைவராக டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை கேன் வில்லியம்ஸனுடன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்டுக்கும் டீ டுவென்ட்டி தொடரில் ஒய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கைக்கெதிரான நியூசிலாந்து டீ டுவென்டி அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/188138/
-
- 1 reply
- 639 views
-
-
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நான்காவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தமையே இதற்கான காரணம் ஆகும். கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் விக்கெட் 06 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. என்றாலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஜோடி 219 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது. …
-
- 2 replies
- 639 views
-
-
யூரோவின் ‘தல’! எம்.பிரதீப் கிருஷ்ணா `கிளப்புக்கு ஹீரோ... நாட்டுக்கு ஸீரோ’ என்ற விமர்சனத்தை அதிரடியாக உடைத் திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. முதன்முறையாக ஐரோப்பாவின் மிகப்பெரிய கெளரவமான யூரோ கோப்பையை ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. கால்பந்தைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் பிரசித்திப்பெறாத நாடு போர்ச்சுக்கல். ஆனால், அது கால்பந்திலும் இதுவரை எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை. `நம் அணி ஒருமுறையாவது உலக அளவில் ஒரு கோப்பையை வெல்லாதா?’ என ஏங்கிக் கிடந்தது போர்ச்சுக்கல். மொத்த தேசத்தின் ஏக்கத்தையும் அணித் தலைவனாக நின்று, கோப்பையை வென்று கொண்டாட் டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் ரொனால்டோ. யூ…
-
- 0 replies
- 639 views
-
-
சுனில் நரைன் பந்து வீச்சு மீது நடுவர்கள் புகார் பவுலிங் செய்யாமல் த்ரோ செய்யும் பந்து வீச்சாளர்கள் மீது ஐசிசி-யின் நடவடிக்கைகள் இறுகுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் மீது தற்போது நடுவர்கள் த்ரோ புகார் எழுப்பியுள்ளனர். நேற்று ஐதராபாதில் நடைபெற்ற டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் சுனில் நரைன் பந்து வீச்சு மீது கள நடுவர்களான அனில் சவுதாரி மற்றும் சேட்டிஹோடி சம்சுதின் மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் புகார் எழுப்பினர். சுனில் நரைன் வீசும் வேகப்பந்து த்ரோ போல் தெரிகிறது என்று இவர்களது புகார் ஆகும். சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சட்டவிரோத பந்துவீச்சுக் கொள்கையின் படி முதலில் பிசிசிஐ சட்டவிரோத பந்து…
-
- 2 replies
- 639 views
-
-
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஐ.சீ.சீ எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர், வீரர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றின் பின்னர் அணியின் முக்கிய வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கள் , நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 638 views
-
-
லண்டன்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஆடவர் 25 மீட்டர் ராபிட் ஃபயர் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 34 புள்ளிகள் பெற்ற கியூபா வீரர் புபோ தங்கமும், 30 புள்ளிகள் பெற்ற விஜய்குமார் வெள்ளி பதக்கமும், 27 புள்ளிகள் பெற்ற சீனா வீரர் டிங் வெண்கலம் பதக்கமும் வென்றனர். விஜயகுமார் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சேர்த்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. முன்னதாக, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். வெள்ளி வென்ற விஜய்குமார் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் தற்போது இந்திய [size=4]ராணுவத்தில் [/size]சுபேதாராக பணியாற்…
-
- 2 replies
- 638 views
-
-
கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம் நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று தனது 68 ஆவது வயதிதில் மரணம் அடைந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது. http://www.virakesari.lk/article/4540
-
- 1 reply
- 638 views
-
-
பாகிஸ்தானுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியனுக்கான தண்டாயுதம்: ஐசிசி வழங்கியது ஐசிசி தண்டாயுதத்துடன் மிஸ்பா. | படம்: ஏ.பி. முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடிய மைதானமான லாகூரில் இது வழங்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்கிறார் கேப்டன் மிஸ்பா உல் ஹக். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தண்டாயுதத்தை மிஸ்பாவிடம் வழங்கினார். உள்ளூர் ரசிகர்கள் ஆதரவில்லாமல் முழுக்கவும் பாகிஸ்தானுக்கு வெளியே விளையாடி முதலிடம் பிடிப்படு சாதாரண விஷயமல்ல. ஸ்டீவ் வா…
-
- 1 reply
- 638 views
-
-
தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார். டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை…
-
-
- 5 replies
- 638 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை பிரதேச இளைஞர் அணி சம்பியன் பெற்றது. இதன் இறுதியாட்டம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தெல்லிப்பழைபிரதேச இளைஞர் அணியை எதிர்த்து உடுவில் பிரதேச இளைஞர் அணி மோதியது.https://newuthayan.com/story/11/வலைப்பந்தாட்டத்-தொடரில-2.html
-
- 1 reply
- 637 views
-
-
பிரான்ஸ் வீரர் பால் போக்பா ரூ.816 கோடிக்கு ஒப்பந்தம் ? யுவான்டஸ் அணியின் மிட்பீல்டர் பால் போக்பாவை, மான்செஸ்டர் யுனைடெட் அணி ரூ.816 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பால் போக்பாவை ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் முயற்சித்து வந்தன. ஆனால் அவர் விளையாடி வந்த இத்தாலி அணியான யுவான்டசுடன் பேரம் படியவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஜோஸ் மோரின்ஹோ பொறுப்பேற்ற பின், முதல் கட்டமாக ஸ்வீடன் அணியின் கேப்டன் ஸ்லாட்டன் இப்ராஹிம்விச்சை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக ஒப்பந்தம் செய்தார். தொடர்ந்து பால் போக்பாவை மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்…
-
- 0 replies
- 637 views
-
-
முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கா அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பின்னர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 39 வயதான குமார் சங்கக்கார, இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக தற்போது விளையாடி வ…
-
- 2 replies
- 637 views
-
-
[size=4]வெற்றியாளர்-[/size] [size=4]சாரதி - Marcos Ambrose [/size] [size=4]வாகனம் - Ford[/size] http://youtu.be/1MqYe6LNq-M http://youtu.be/CRhiEGCV2N4 http://youtu.be/FfybOGRAAoc Credit: http://www.nascar.com/series/cup/
-
- 0 replies
- 637 views
-
-
நேற்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு ஆரம்பமான தமிழீழ அணிக்கு இடையிலான நடந்த உதை பந்தாட்ட போட்டியின் விபரங்கள். 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 3 – Husum - 0 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 2 – Holstebro – 1 போட்டிகளில் வாகை சூடிய 16, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 4 –Vardeneset BK 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 – LKB /Gistrup– 0 16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0 - Stenløse BK – 0 எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.sankathi24.com/news/44892/6…
-
- 3 replies
- 637 views
-
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின், மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி நுழைந்துள்ளது. இந்திய ரஷ்ய ஜோடி காலிறுதிப் போட்டியில், 2வது நிலை வீராங்கனைகளான லீஸல் ஹ்யூபர், லிசா ரேமன்ட் ஜோடியை கடுமையாகப் போராடி வென்றது. மூன்று மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில், 6-3, 5-7, 7-6 (6) என்ற செட் கணக்கில் இந்திய, ரஷ்ய ஜோடி வெற்றி பெற்றது. ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதியில் சானியா நுழைவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு அவர் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். அப்போதும் அவர் எலினாவுடன்தான் விளைய…
-
- 0 replies
- 637 views
-
-
யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான .கால் பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட சம்பியனானது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி. ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லியோ சிறப்பான கோல் பதிவைச் செய்தார். https://newuthayan.com/story/11/சென்-பற்றிக்ஸ்-கல்லூரி-அ.html
-
- 0 replies
- 637 views
-
-
உலகக் கோப்பையை ஜெர்மனி கைப்பற்றிட 20 ஆண்டுகள் காத்திருக்கும் இந்திய ரசிகர் ஜெர்மனி அணி உலகக் கோப்பைக் கால்பந்தில் சாம்பியன் ஆவதற்காக விஸ்கி பாட்டில் ஒன்றை 20 ஆண்டுகளாக தன் தோட்டத்தில் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார் இந்திய கால்பந்து ரசிகர் ஒருவர். புதுல் போரா என்ற அந்த 53 வயது அசாம் மாநில வர்த்தகர் 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும் என்ற நம்பிக்கையில் உயர்தர ஸ்காட்ச் விஸ்கியை வாங்கினார். ஆனால் காலிறுதியில் பல்கேரியாவிடம் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவ வேதனையடைந்த போரா அந்த பாட்டிலை தன் தோட்டத்தில் புதைத்து வைத்தார். .“இந்த முறை ஜெர்மனி அணி ஆடும் ஆட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதைத்த விஸ்கி பாட்டிலை தோண்டி எடுக்க வைத்துள்ளது, ஆனால் …
-
- 4 replies
- 636 views
-
-
கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவை: 40 ரன் அடித்து வெற்றி பெற வைத்த 54 வயது வீரர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார் 54 வயது வீரர். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டுஷைர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஸ்வின்ப்ரூக்- டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்வின்ப்ரூக் அணி 45 ஓவரில் 240 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணி கடைசி ஓவருக்கு முந…
-
- 0 replies
- 636 views
-
-
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை! சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது. கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை அமைத்ததன் ஊடாக ஏதேனும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டால் இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இழக்கும் என அறிவித்துள்ளது. இவ்வாறு உறுப்புரிமை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டால, உலகக் கிண்ணப் போட்டித் தொடர் போன்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை பங்கேற்க முடியாது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசியல் தலையீடு ச…
-
- 5 replies
- 636 views
-