எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன்தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ இளவரசனாவான். ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் ஆவான். அதற்கான ஆதாரங்கள் உண்டு. உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்…
-
- 0 replies
- 10.1k views
-
-
[size=6]படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ? [/size] சஞ்சயன் முழு நிலாவின் ஒளி மட்டக்களப்பு வாவியில் மினுங்கிக் கொண்டிருந்தது. நண்பரின் மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன், நான். மீண்டும் படுவான்கரைப்பக்கமாக ஒரு காணாமல் போன போராளியின் மனைவியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். இரவு எமக்கு முன்பாகவே ஊருக்குள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. தார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதைகளினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி ஏழிருக்கும். அவர்களின் ஒழுங்கையினுள் நாம் நடந்து போது நாய்கள் எம்மை வரவேற்றன. பயந்தபடியே நண்பரின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். அவரோ மிக அலட்சியமாய் இருட்டில் வழி தெரிந்தவர் போல் நடந்துகொண்டிருந்தார். அவர்கள் வீ…
-
- 10 replies
- 3.8k views
-
-
எமது மக்கள் மின்னஞ்சல்கள் ஊடாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ONTARIO ENERGY BOARD தமிழ் மொழியினை அடையாளப்படுத்தப் பயன்படுத்தியிருந்த இலங்கை கொடியினை அகற்றியுள்ளார்கள். தனிமைப்படுத்தும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சிறிய மைல்கற்களாக முன்னேறுவோம்.. தொடர்ந்து உழைப்போம்.. http://www.ontarioenergyboard.ca/OEB/Consumers தங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்ளுங்கள்
-
- 0 replies
- 1.9k views
-
-
சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள் (சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் ஆதீனப்புலவர், இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்.) குப்பிழான் மண்ணில் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் அவதரிக்கிறார்கள், அந்த வரிசையில் திரு கலாநிதி க.கணேசலிங்கம் அவர்களும் ஒருவர். அவர்கள் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவருகிறார்கள். உலகெங்கும் நடக்கும் பல சைவ மகாநாடுகளில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு எமது ஈழத்திரு நாட்டுக்கும், எமது குப்பிழான் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் செந்திநாதையர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து ஆராய்ச்சி செய்த, சைவர்களின் புண்ணிய பூமியான, காசியில் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளி விழா 2012 ஆகஸ்ட் 6, 7, 8-ந் திகதிகளி…
-
- 1 reply
- 5.8k views
-
-
புலம் பெயர்ந்த ஈழ மக்கள் மீண்டும் ஈழம் நோக்கி ஒரு தரமாவது செல்லவேண்டும். ஏன் செல்ல வேண்டும்? போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அவர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.... என யார் யார் எல்லாம் சிந்திக்கின்றார்களோ... விரும்புகின்றார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரு தரமாவது ஈழம் செல்லவேண்டும். மரணத்தை வென்ற மனிதர்களுடன் சில கணமாகவது வாழவேண்டும்... மரணத்துடன் போராடி மீண்ட மனிதர்கள் கதைப்பதைக் கேட்கவேண்டும்... மனம் உடைந்து போனவர்கள் (உடன்) மனம் விட்டு பேச வேண்டும்... அப்பொழுதுதான் அவர்களது வாழ்நிலையை, அவர்களது பிரச்சனைகளை, அவர்களது இல்லாமையை... அவர்களது இழப்புகளை, அவர்களது தேவைகளை, அவர்களது வலிகளை அறியவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஹாய் கள உறவுகளே நாங்கள் என்ன தான் புலம் பெயர்ந்து வந்தாலும் என்ன தான் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் எங்களை இன்று வரை விட்டு பிரியாமல் இருப்பது நாங்கள் ஓடி விளையாடிய அந்த தாய் மண்ணின் யாபகங்கள் நாங்கள் மட்டும் புலம்பெயரவில்லை எங்களுடன் இணைந்து இன்று வரை பயணித்துக்கொண்டு இருப்பது அந்த பசுமையான நிகழ்வுகள் இந்த யாபகங்கள் தாலாட்டும் பகுதியினூடாக இன்று வரை நாங்கள் மறக்காமல் இருக்கும் அந்த நினைவுகளை ஏனைய உறவுகளோடும் பகிர்துகொள்ள போகின்றோம்.... அந்த வகையில் யாபகங்கள் தாலாட்டும் பகுதி 1 இல் உங்கள் ஊரில் இல்லை உங்கள் மாவட்டத்தில் இல்லை நீங்கள் எமது நாட்டில் இருந்தா பொழுது தனிய இல்லை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பல உணவகங்களுக்கு சென்று இருப்பிங்க அந்த …
-
- 30 replies
- 3k views
-
-
[size=4][/size] *தமிழீழ மாவட்டங்கள் {1}யாழ்ப்பாணம் {சப்ததீவுகள் உட்பட} {2}மன்னார் {3}கிளிநொச்சி {4}வவுனியா {5}திருகோணமலை {6}மட்டக்களப்பு {7}அம்பாறை {8}புத்தளம் {9}முல்லைத்தீவு *தமிழீழ உட்கட்டுமான அமைப்புகள் வழங்கற் பிரிவு மருத்துவப் பிரிவு கொள்முதல் பிரிவு பரப்புரைப் பிரிவு தமிழீழப் பொறியியற்றுறை வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு கணிணி தொழில்நுட்பப் பிரிவு இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு போர்கருவித் தொழிற்சாலை தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி திரைப்பட , புத்தக மொழிபெயர்ப்புத் துறை புலனாய்வுத் துறை தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை தமிழீழ விளையாட்டுத் துறை தமிழீழக் க…
-
- 7 replies
- 2k views
-
-
[size=6]கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்[/size] [size=4]கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.[/size] [size=4] [/size] [size=4]எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.[/size] [size=4]அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.[/size] [size=4]மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது…
-
- 6 replies
- 1.6k views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். ப.நடேசன் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர்
-
- 0 replies
- 492 views
-
-
" வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்... அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் என்.டி .பி தளத்தில் இருந்து - நல்லதொரு பேட்டி ,யாழில் இதை இணைக்கலாமோ தெரியவில்லை . கூடாதேன்றால் தூக்கி விடவும் . பொங்கு தமிழ் நிகழ்வு பெண் போராளி - முன்னணி இதழுக்காக பிரத்தியேகமாக வழங்கிய பேட்டி இது. வவுனியாவில் இருந்து நான் காலை எட்டு மணிக்கு ஏறிய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மூன்று மணித்தியாலங்களின் பின் தம்புள்ள நகரை சென்றடைந்தது. நகரத்தின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கிய எனக்கு திசை ஒன்றும் விளங்கவில்லை. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் தம்புள்ளைக்கு வந்ததாக நினைப்பு. இன்று யாழ்பாணத்தை விட, ஏன் அனுராதபுரத்தை விட…
-
- 11 replies
- 1.5k views
-
-
[size=3] [size=4]மருத்துவர் எல்லன் சாண்டர் அம்மையாரைப் பாருங்கள் ![/size][/size] [size=4]https://www.facebook.com/boycottsrilankanow [/size] [size=3] [size=4]செயல் திட்டங்களை உககமெங்கும் செய்து , முடிந்த அள்விற்கு ஒரே நேரத்தில் செய்து நமது போராட்டத்தை[/size][/size] [size=3] [size=4]உலகுக்கு அறிவிப்போம்.![/size][/size][size=3] [size=4]செயல் திட்டங்கள் :[/size] [size=4]உலகெங்கும் இணைந்து, தமிழரல்லாதோரையும் இணைத்துச் செயல் பட வேண்டும். இனப் படுகொலை, சிங்களவருடன் தமிழர் சேர்ந்து வாழ முடியாது என்பதை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.[/size] [size=4]இந்தியத் தூதரகங்கள் முன் உண்ணா விரதம் உலகெங்கும் ஒரே நாளில் இருப்போம்.[/size] …
-
- 1 reply
- 1.2k views
-
-
பாருங்கள் ஒரு பழைய கால கப்பல் ..........ஆனால் கொஞ்சம் உற்றுப்பாருங்கள் ....... தெரியவில்லையா...............நான் இதை நேரடியாக பார்த்ததும் என் மனதில் பட்டென்று அடித்தது .ஒரே விடயம்தான்..........எம்மை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்புச்சின்னங்களில் ஒன்று ........... ஆம் இந்தக்கப்பல் மூலமாகத்தான் ஒல்லாந்தர் அன்று எம்மண்ணுக்குள் பிரவேசித்து எம்மை அடிமை ஆக்கினர் ....இதன் பெயர் BATAVIA இது தற்போது ஹொலண்டில் lelystad என்னும் இடத்தில் தரித்துநிற்கிறது. இதை இனி பாவனைக்கு பயன்படுத்தமுடியாது .......தற்போது காட்சிப்பொருளாக சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்வதற்காக பாவிக்கப்படுகிறது......ஆனால் உள்ளே எழுதப்பட்ட வசனம் 1602 இலிருந்து 1799 வரை ஆசியாவுடன் பெரும் வர்த்தகத்தில் ஈடுபட்ட கப்…
-
- 1 reply
- 781 views
-
-
[size=3][/size] [size=3][size=4](ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.) தமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான். இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. இனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது. சங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இறந்த மனிதன் மீண்…
-
- 0 replies
- 825 views
-
-
[size=4]ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.[/size] [size=4]முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்…
-
- 9 replies
- 923 views
-
-
[size=3][/size] [size=3][size=4]“அனைவருமே எதிர்த்து நின்றாலும் சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும்பிழையானவை பிழையானவையே”[/size][/size] [size=3][size=4]உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.[/size][/size] [size=3][size=4]அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு…
-
- 0 replies
- 720 views
-
-
சென்னை திருவல்லிக்கேணியில் பாட்டுத் திறந்தால் வையத்தை பாலித்திடப் பிறந்த பாரதி நடந்த தெரு வாழ்ந்த தெரு, துளசிங்கப் பெருமாள் கோயில்தெரு, அந்த வீதியில் பாரதியார் இல்லம் இருக்கிறது. பாரதியார் ஒரு ஒண்டிக் குடித்தனக்காரர். அக்ரஹார வீடுகளின் அமைப்புள்ள வீட்டில், ஒரு இடுக்கில் ஒரே ஒரு அறையும் சமையல் கட்டுமுள்ள பகுதியில் பாரதி வசித்து வந்தார அவர் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, ஏகப்பட்ட பணம் செலவழித்து புதுப்பிக்கப்பட்டது. இன்று அரண்மனை போல் காட்சி தருகின்றது. இவ்வளவு பெரிய அரண்மனையிலா பாரதியார் வாழ்ந்தார் என பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். ஏழை எளியவர்கள் வீட்டில் - இந்த ஈன வயிறு பாடும் பாட்டில்… என்றொரு கவிதை. இன்னொரு கவிதை… சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் சோற…
-
- 1 reply
- 1.1k views
-
-
பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம். அப்போது ஒரு அண்ணன் எல்லோரும் விளையாட…
-
- 2 replies
- 1.8k views
-
-
பாகம் ஒன்று அனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி….. நேர்காணல் எஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் சிகிச்சை செய்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியில் அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் ஆழமான பல கதைகள். …
-
- 5 replies
- 1.8k views
-
-
[size=3] [size=4]“சத்திரியானாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது பல நன்மைகளை பயற்கும்” என்ற கருத்தினை மற்றுமுழுதாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் “ சத்திரியனாக இருப்பது மட்டும் போதாது, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது சாணக்கியனாகவும் வேண்டும்” என்பதை நான் முமையாகவே எற்றுக்கொள்கின்றேன். தமிழனைப்பொறுத்தவரையிலும் அவன் எந்தச்சந்தர்ப்பத்திலும் சாணக்கியனாக இருந்ததில்லை, அதனாலேயே அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் ஓரளவுக்கு எற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.[/size] [size=4]தமிழன் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவன், எனவே அவன் உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தியே வரலாற்றில் பல முடிவுகளையும், செயற்பாடுகளையும் எடுத்துள்ளான். அதன் பின்னர் பல விளைவுகள் அவனுக்குப் பாதகமாகவே நடந்து…
-
- 1 reply
- 957 views
-
-
தர்மினி அந்த வயோதிபப் பெண் சில மாதங்களின் முன் இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பிள்ளைகள் எல்லோரும் அகதிகளாக வந்த பின் அவர் தனித்திருக்க முடியாமல் இலண்டனுக்கு வந்து வாழ்பவர்.இப்போது நாட்டில் சண்டையில்லை. போக்குவரத்துப் பாதை பிரச்சனையில்லை.பலரும் விடுமுறைக் காலங்களைக் கழித்துவிட்டு வருகிறார்கள்.ஊரையும் வீட்டையும் சகோதரிகளையும் பார்த்துவிட்டு வருவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த மனிசி பல ஆண்டுகளிற்குப் பிறகு வந்திறங்கினார் யாழ்ப்பாணம். ‘லண்டனிலை பூட்டின சூட்கேஸை யாழ்ப்பாணத்தில அக்கா வீட்டில போய்த்தான் திறந்தனான்’ என அதை ஒரு ஆச்சரியமாக நினைத்தார்.முன்னரெல்லாம் கொண்டு போற பொருட்களைக் கொட்டிக் கவிழ்த்து அடுக்கிக் கொண்டு போவதே பெருந் துன்பமென்பார…
-
- 1 reply
- 766 views
-
-
சாதாரண உடைகளுக்கு மாறிய எங்களை பார்க்க எங்களுக்கே பிடிக்கவில்லை. ஆளையாள் பார்த்து சரி என தலையாட்டிவிட்டு மூழிக்காதுகளோடு புறப்பட்டோம். ‘அக்கா இந்த திறப்பை என்ன செய்ய?’ என்றாள் சந்தியா பதற்றமாக. ஏனெனில் அவளது கையிலிருந்தது அலமாரித்திறப்பு. பனைமரத்தோடு அண்டி வைக்கப்பட்டிருந்த அந்த அலுமாரிக்குள் கடைசிநாட்களில் போராளிகளாகியவர்களது நகைகள் இருந்தன. ‘இதிலயே போட்டிட்டும் போகலாம். அல்லது நகைகளை எடுத்து எல்லாருக்கும் போட்டுக்கொண்டுபோகவும் குடுக்கலாம்.’ என்றேன். ‘அது சனத்தின்ரது. என்ர கையால எடுத்து ஒருதருக்கும் குடுக்கமாட்டன். அப்பிடி குடுத்தனெண்டால் இவளநாளும் நான் நேர்மையாய் வாழ்ந்ததுக்கும் அர்த்தமில்லாமல் போயிரும்’ என்றாள் சந்தியா. சரிதான் அதிலொன்றை நான் போட்டுக்கொண்டுபோக உ…
-
- 0 replies
- 879 views
-
-
16.05.2009. அன்றைய பகலும் காப்பகழிக்குள்ளேயேதான் கழிந்தது. இரண்டேபேர் இருக்கக்கூடிய பதுங்குகுழிக்குள் நான்குபேர் நின்றவாறே பொழுதை நகர்த்தினோம். படையினர் நெருங்கி வந்துகொண்டிருப்பது புரிந்தது. சன்னங்கள் எங்கள் தலைகளின்மேலால் சீறிப்பாய்ந்தன. சதக் பொதக் என்று தம்முடலில் இறங்கும் சன்னங்களை பனைமரங்கள் வாங்கிக்கொண்டன. முற்றுமுழுதுமாய் கொலை வலயத்திற்குள் நின்றோம். எங்களைச்சுற்றி ஆர்.பி.ஜி எறிகணைகள் விழத்தொடங்கின. அவை வெடித்துச்சிதறிய சலசலவென்ற சிதறல்களிலிருந்து தப்ப, குழிகளுக்குள்ளேயே குந்தியிருந்தோம். கால்கள் வலியாய் வலித்தன. குருதி வழியும் காயங்களோடு போராளிகள் பலர் எங்களை கடந்து போனார்கள். கடைசியாய் களமுனையில் நின்ற போராளிகள் அவர்கள் என்பதை அவர்களின் தோற்றம் சொன்னது. இடு…
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=3][size=3] [size=4]அண்மைக்காலமாக அதுவும் புலம்பெயர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்தீர்களேயானால் யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பை விமர்சிக்கும் எழுத்துக்கள், குறிப்பாக தலித்திய எழுத்துக்கள் என்ற வரையறைககுள் நின்று பலர் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், மேட்டுக்குடியினர் என்று பரவலாக வசைபாடும் தன்மையினையும், பல வரலாற்று ஆதாரங்களை சான்றுகளாக முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சாதிகள் இல்லையடிபாப்பா.. என்ற பாரதியாரின் வாக்குக்கு என்னிடமும் எதிர்கருத்துக்கள் கிடையாது. “சாதிகள் எங்கே வரையறுக்கப்படுகின்றதோ அங்கே மனிதம் செத்துவிட்டது” என்ற கருத்து என் மனதில் அசைக்கமுடியாத நம்பி…
-
- 8 replies
- 2.1k views
-
-
ஒரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், மேற்கே வடக்கு பார்த்தாலும் கிழக்கு எனும் வெளிச்சத்தில் பார்த்தல், வானத்தைப்பார்த்து மானத்தை இழக்காமை, வெளி மயக்கங்களால், உள் ஒளியை மறக்காத தெளிவு. [size=4]இத்தனை மன ஆரோக்கியம் மிக்க ஒருவருக்கு மண்[/size] [size=4]ணின் பாட்டு சுவையாய், ஒளியாய், ஊறாய், ஓசையாய், நாற்றமாய் வகைப்பட்டுக் கேட்கும்.[/size] [size=4]இக்கேட்டலில் பிறக்கும் ஞானம் பிறருக்கு தா[/size] [size=4]னமாய் கிடைக்கும். தமிழ் மனம் கனிய தனிக்குணம் துணியக்கிடைக்கும் ஞானதானத்தால் ஒரு இனம் மட்டும் அல்லாது உலகின் பல இனங்களும் பயனடையும். இப்பயன்பாட்டினை – பண் பாட்டின் வழி …
-
- 2 replies
- 10.6k views
-
-
ஈழத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈழவரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குவது தான் கிளிநொச்சி. கிளிநொச்சி என்றதும் ஞாபகத்துக்கு வரும் விடயங்களில் காமதேனுவும் ஒன்று. இவ் இடம் முதன்மைச் சாலை கிளிநொச்சி யின் பழைய தோற்றம்- அந்தோ தொலைவில் தெரியும் தண்ணீர் தாங்கி இன்று இல்லை! ஈழ வரலாற்றில் இந்த தண்ணீர் தாங்கிக்கும் உயிர் இருப்பின் கண்ணீர் கலந்த பல கதைகளைப் பேசும்! 1996ம் ஆண்டுக்கு முன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்கள் அல்லது கிளிநொச்சிக்கு விஜயம் செய்தவர்கள் அனைவரும் இந்தக் காமதேனு என்ற பெயரை அறியாமல் இருந்திருக்கமாட்டார்கள்.கிளிநொச்சி நகரத்துக்கு வந்தால் ஒரு முறையேனும் காமதேனுவுக்கு போகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. …
-
- 6 replies
- 1.9k views
-