அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும் Veeragathy Thanabalasingham on April 29, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு அப்பால் நாடடின் தற்போதைய மிகவும் கடுமையான வெப்பநிலையும் கூட இதற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யக்கூடும். ஆளும் தேசி…
-
- 0 replies
- 293 views
-
-
உள்ளூராட்சி மன்ற தேர்தலும் இடைக்கால அறிக்கையும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கிய எந்தவொரு தேர்தலும் பதவியை மையப்படுத்தி யதாகவோ அல்லது அபிவிருத்தி, உட்கட்டுமானங்கள், சபைகளுக்கு என்று குறித்தொதுக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துதல் என்பதற்கும் அப்பால் தேசிய இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டு அதற்கான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டே அமைந்துள்ளது. தமிழ் தேசிய இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் ஜனநாயக வழியில் அதற்கான குரல் பல்வேறு அச்சுறுத்தல்களையும், அதிகார பலப்பிரயோகங்களையும் மீறி தேர்தல் அரங்குகளில் எதிரொலித்து வருகிறது. இத்தகைய பின்ன…
-
- 0 replies
- 354 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவது எவ்வாறு? உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய தினங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. கட்சிகள் தற்போது தேர்தலுக்கு மும்முரமாக தயாராகிவருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில் நடைபெறவுள்ளமையே விசேட அம்சமாகவுள்ளது. இந்நிலையில் புதிய வட்டாரம் மற்றும் விகிதாசார முறை என கலப்பு முறையில் தேர்தல் நடைபெறவுள்ளமையே விசேட அம்சமாகும். அதன்படி தேர்தல் எவ்வாறு நடக்கும்? இரண்டு முறைகளிலும் எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்? வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது? இதுபோன்ற கேள்விகள் தற் போது சமூகத்தில் எழ…
-
- 2 replies
- 660 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும் ருத்திரன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் ஜனநாயக அரசியலை கொண்டு நகர்த்துவதற்கான மக்கள் பிரதிநிதிகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்டத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய அமைப்புக்களும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் போன்று தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடியவர்கள். 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரழிவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தான…
-
- 0 replies
- 384 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’ - 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நடக்கப்போகும், உள்ளூராட்சித் தேர்தலை எல்லா கட்சிகளுமே ஒரு பலப்பரீட்சையாகத் தான் பார்க்கின்றன. வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் கூட அதேநிலைதான். இந்த உள்ளூராட்சித் தேர்தல் பல்வேறு கட்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் பலத்த சோதனையையும் கூட ஏற்படுத்தியிருக்கிறது. நேரடித் தெரிவு மற்றும் விகிதாசாரத் தெரிவு முறை என்பன, இணைந்த கலப்பு முறையில் நடைபெறும் முதலாவது தேர்தல். புதிய தேர்தல் முறையின் சாதக பாதகங்களை அனுபவபூர்வமாக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம்தான் கிடைக்கப் போகிறது. …
-
- 0 replies
- 310 views
-
-
ந.ஜெயகாந்தன் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்றும், அந்த வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும் என்றும் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முறைமைகளை விடவும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமை முற்றிலும் வித்தியாசமானது என்பதனால் வாக்களிக்க முன்னர் மக்கள் இது தொடர்பில் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதாவது ஜனாதிபதித் தேர்தல் முழுநாடும் ஒரே தேர்தல் மாவட்டம் போன்று கணிக்கப்பட்டு வெற்றி பெற்றவர் தீர்மானிக்கப்படுவர். அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில…
-
- 0 replies
- 278 views
- 1 follower
-
-
உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இம்மாதம் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது 2023 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல், 2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்தன. ஆனால், இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் குறித்த தினத்தில் தேர்தல் நடத்தப்பட முடியாது தாமதமானது. உயர்நீதிமன்றின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, பாதீட்டில் தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதைத் தடுக்க, இடைக்கால தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் நடப்பதற்கான ச…
-
- 0 replies
- 770 views
-
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில் - அதிரன் நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரே நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில், பிரதான கட்சிகள் பலப்பரீட்சையொன்றை நடத்தி முடித்திருக்கின்றன என்றுதான் சொல்லிக்கொள்ள முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்டது போன்று, மொட்டு எல்லாவற்றையும் மேவியிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று, ஜனாதிபதியின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தலால் குழப்பமடைந்தே இருக்கிறார்கள். உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில், 43 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 222 சுயேட்…
-
- 0 replies
- 466 views
-
-
உள்ளூர் அரசியல் காய் நகர்த்தல்களின் பின்னணியில் சர்வதேச இராஜதந்திரம் ` இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், மலையக மக்கள் முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் அணி திரண்டு விட்டன. அந்நிலையில், "எல்லாவற்றுக்கும் மேலானதாக நாட்டைக் கருதி' ஒன்றுபட்டு செயற்பட வருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கின்றார். தேசிய அரசு மூலம் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஐ.தே.கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஐ.தே.கட்சியுடன் இணைந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டி யிட்டு, அந்தக் கட்சியின் தேசியப் பட்டியலில் தமக்குரிய பங்கையும் பெற்றுக்கொண்ட இ.தொ.காவையும், மலையக மக்கள் முன் னணியையும் ஐ.தே.க. அண…
-
- 0 replies
- 1.5k views
-
-
நவிபிள்ளை அம்மையார், விடுதலைப் புலிகள் மீது பகிரங்கமாக விமர்சனங்களை வைத்தாலும், அவரைக் காப்பாற்றுவதற்கென்றே நம்மிடையே ‘இராசதந்திரம்’ பேசும் ராசாக்கள் தோன்றிவிடுவார்கள். வரிக்கு வரி வியாக்கியானங்களும், பொழிப்புரைகளும் கொட்டப்படும். அத்தோடு, ‘மக்களின் எதிர்ப்புணர்வுகளை தனித்துவிட்டோம்’ என்று சுயதிருப்தி கொள்வார்கள். இதுவும் ஒருவகையில், மக்களின் போராடும் உணர்வினை மழுங்கச் செய்யும், ஒடுக்குமுறையாளர்களின் உத்திதான். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளிலேயே திட்டமிட்ட வகையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன. உண்மையிலேயே, தலைவரோடு நீண்ட காலமாகக் களத்தில் நின்று போராடியவர்கள், வேறு இயக்கங்களில் இருந்து சிங்களத்தின் ஒடுக்குமுறைக்கெதிராக களமாடியவர்கள் எவரும், போ…
-
- 2 replies
- 957 views
-
-
Gota Rally at UN * கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று புதன்கிழமை ஐ.நாவின் முன்னால் மேற்கொண்டிருந்தது * UNITED NATIONS, NEW YORK CITY, UNITED STATES OF AMERICA, September 24, 2021 /EINPresswire.com/ — சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய இராஜபக்ச நியு யோர்க் ஐ.நா சபையின் உள்ளே, உள்ளகபொறிமுறை குறித்து பேசிக் கொண்டிருக்க, சிறிலங்காவை சர்தேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஐ.நாவின் வெளியே குரல் எழுப்பினார் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. WATCH: https://youtu.be/n2qE4zFXgvU கோhத்தாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் ந…
-
- 0 replies
- 520 views
-
-
உஷார் பகவதி’ என்று ஒரு திரைப்படம் 15 வருடங்களுக்கு முன்னர் வெளியானது. நடிகர் விஜய்தான் திரைப்படத்தின் கதாநாயகன். அந்தப் படத்தில் இரண்டு பாத்திரமேற்று வடிவேலு நடித்திருக்கிறார். நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத திரைப்படம். வடிவேலுவின் பிரபல வசனமான, ‘வந்துட்டான்யா... வந்துட்டான்’, அந்தத் திரைப்படத்தில்தான் உள்ளது. அத்திரைப்படத்தில், விஜய்யின் பெயர் பகவதி. அதனால், இரண்டு வடிவேலுகளில் ஒருவர், தனது பெயரை ‘சின்ன பகவதி’ என்று வைத்துக்கொண்டு காட்டும் அலப்பறைகள் படுசுவாரசியமானவை. ‘சின்ன பகவதி’ வடிவேலு, மற்றைய வடிவேலுவைச் சந்திக்க வரும்போது, நிலம் அதிரும்; பாத்திரங்களில் அசைவற்றிருக்கும் நீர் தளம்பத் தொடங்கும்; புழுதி கிளம்பும்; இதன்போத…
-
- 1 reply
- 841 views
-
-
ஊசலாடும் தமிழர்களுக்கான நீதி? - யதீந்திரா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில், சர்வதேச விசாரணை ஒன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நவிப்பிள்ளை, இலங்கை சர்வாதிகார ஆட்சியொன்றிற்கான வழிகாட்டல்களை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம். சர்வாதிகார வழிகாட்டலுக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு நாட்டுக்குள் இடம்பெறும் எந்தவொரு விசாரணையும் நம்பத்தகுந்தவையாக இருக்க முடியாது என்னும் அடிப்படையில்தான், தற்போது நவிப்பிள்ளை சர்வதேச விசாரணையொன்றிற்கான பரிந்துரையை வழங்கியிருக்கின்றார். ஆனால் இது நவிப்பிளையின் பரிந்துரை மட்டுமே ஆகும். வழமை போலவே இலங்கை அரச…
-
- 1 reply
- 640 views
-
-
ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து நாட்டில் தேசிய அரசியலில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றின் காரணமாக தேசிய அரசியல் மட்டத்தில் இந்தளவு தூரம் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டமை மிக முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இந்தத் தேர்தல் மிகத்தாமதமாகவே நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றம் காரணமாக பாரிய தாமதத்தின் பின்னரே நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் முன்னரே இந்தத் தேர்தலின் பின்னர் பாரிய அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் …
-
- 0 replies
- 500 views
-
-
ஊசலாட்டத்தின் பிடிக்குள்... ரொபட் அன்டனி தனித்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்ற சக்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருக்கின்றதா? என்றால் அது கேள்விக்குறிதான். தற்போதைய நிலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மைத்திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இணைந்தால்தான் 95 ஆசனங்கள் கிடைக்கும். அப்படியிருந்தும் 96 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஆட்சியமைக்க முடியாது. கூட்டு எதிரணி இணைந்துகொள்ளும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது. ஆனால் 106 ஆசனங்களைக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியம் அதிகம…
-
- 0 replies
- 409 views
-
-
ஊசிக் கதைகள் -நிலாந்தன்! September 26, 2021 கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நேற்று முன்தினம் அதாவது கடந்த 24ஆம் திகதியிலிருந்து பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடக்கப்படுவதையொட்டி மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தோன்றிய காலமிருந்தே அதுதொடர்பான கட்டுக்கதைகளும் தோன்றத் தொடங்கின. கிளிநொச்சியில் நடந்த ஒரு கதை வருமாறு. ஐரோப்பாவில் வசிக்கும் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள உறவினருக்கு ஒரு காணொளியை அனுப்பியிருக்கிறார். காணொளியில் தான் தடுப்…
-
- 0 replies
- 834 views
-
-
இலங்கையில் இப்போது அரசியல் கட்சிகளின் பசியும் ஊடகங்களின் பசியும் பெரிய வினைகளை உருவாக்குகின்றன. தமிழ் மக்கள் பெரும் ஒடுக்குமுறைகளையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்ற காலத்தில் தனிப்பட்ட நலன்கள் கருதிய இப் பசிகள் ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாய் ஈழத் தமிழ் இனத்தை வேட்டை ஆடுகின்றது. அறிவாலும் போராட வேண்டிய ஒரு இனமாக இருப்பதனால் இது குறித்து சிந்திக்கவும் உரையாடவும் இடித்துரைக்கவும் தலைப்பட்டுள்ளோம். நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனது பேச்சானது, ஒரு சில ஊடகங்களால் ‘வெட்டிக் கொத்தி’ தமது ஊடக அரசியல் தேவைகளுக்…
-
- 1 reply
- 610 views
-
-
ஊடக அறம் - ரஜினியும் எம்.ஜி.ஆரும்: ஓர் ஒப்பீடு ஊழிமுதல்வன் ரஜினிக்காகச் சலம்பும் அடிப்பொடிகள் வருவேன் வருவேன் என்று இருபத்தோரு ஆண்டுகளாகப் போக்குக்காட்டி வந்த ரஜினிகாந்த் என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டு கடைசியில் தமிழக அரசியலில் குதித்தே விட்டார்; "நேரடியாக இருநூத்தி முப்பத்துநாலு தொகுதிகளிலும் போட்டி போடுறோம்; ஜெயிக்கிறோம்; ஆட்சி அமைக்கிறோம்", என்று அறிவித்தும் விட்டார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாக் காணும் இக்காலகட்டத்தில், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும், கவிஞர்களும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரஜினி என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டை எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதருடன் ஒப்பிட்டு, இல்லை, இல்லை, எம்.ஜி.ஆரைவிட ரஜினி மிக உயர்ந்தவர் என்று தலைமேல…
-
- 0 replies
- 757 views
-
-
ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள், கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும்- ஹரினி அமரசூரிய. November 27, 2020 8:20 am GMT http://athavannews.com/wp-content/uploads/2020/11/Harini-Amarasooriya-.jpg அரசாங்கத்தின் ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள் என்பது, ஒழுங்குபடுத்துவதல்ல, மாறாக கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும் – JVPயின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய 25.11.20 ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரை – தமிழில் நடராஜா குருபரன். “ஊடகத்திற்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது, ஏனென்றால் இலங்கையில் வரலாற்று ரீதியாக இந்த அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 397 views
-
-
ஊடகங்களின் தவறான வழிநடத்தல்! http://www.webeelam.com/seithikal.html .... ........ மேற்குலகம் தமிழினத்தின் அபிலாசைகளுக்கு எதிராக ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்திவிட்டுஇ அந்த திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறது. இந்த தீர்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசை சம்மதிக்க வைக்கும் முயற்சியாக சில ராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது உண்மைதான். ஆனால் இந்த அழுத்தங்களை தமிழர் தரப்பிற்கு சாதகமானவையாக அர்த்தம் கற்பிப்பது தவறு. மேற்குலகின் தற்போதைய நிலை தமிழ் மக்களிற்கு முற்றிலும் எதிரானதே. இந்த விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்வதும்இ சரியான முறையில் வெளிக் கொணர்வதும் மிக அவசியம். "தடை!"…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஊடகங்கள் நல்லிணக்கத்துக்காக உழைக்கின்றனவா? சிலவேளைகளில் தமிழ் ஊடகங்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கும் இடையில் செய்தித் தெரிவு விடயத்தில் காணப்படும் வித்தியாசம் அல்லது இடைவெளி ஆச்சரியமாகவும் சிலவேளைகளில் விந்தையாகவும் இருக்கிறது. சில முக்கிய, தேசிய பிரச்சினைகள் தொடர்பான செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் பெயருக்காக வெளியிடுகின்றன. அல்லது முக்கியத்துவம் அளிக்காமல் பிரசுரிக்கின்றன. மறுபுறத்தில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தமிழ் ஊடகங்களால் முக்கியத்துவம் அளிக்கப்படும் சில விடயங்களை முற்றாக மூடி மறைக்கின்றன. குறிப்பாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகள், பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான போராட்டங்கள் ஆகியவற்ற…
-
- 0 replies
- 367 views
-
-
ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்? (நிலா)விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது. அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன். இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள். விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல தங்களுடன் கூடவே இருந்த பேனாக்களுக்கே . என்னதான் தங்களத…
-
- 3 replies
- 892 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல் Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்க…
-
- 0 replies
- 172 views
-
-
ஊதிக் கெடுத்தல் முகம்மது தம்பி மரைக்கார் சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது, இந்த அச்சம் தவிர்க்க முடியாமல் எழுகிறது. ‘‘இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காகவே, தங்கள் வடிவம் - மதம் சார்ந்தது என, அவர்கள் கூறிக் கொள்கின்றனர்” என்று அண்மையில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தும், அதற்கான எதிர்வினைகளும் அரசியல் அரங்கில் விவகாரமாக மாறியுள்ளன. விக்னேஸ்வரன் தனது…
-
- 1 reply
- 843 views
-
-
"பரம்பரை நோயால் அவதிப்படும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் 60000 ரீச்மார்க்கள் செலவாகிறது.மக்களே இது உங்கள் பணம்."நாசிகளின் பிரச்சார போஸ்டர் 1938 உலகில் பெரும்பாலான மக்கள் ஹிட்லர் யூதர்களை மட்டும்தான் படுகொலை செய்ததாக நினைக்கின்றனர்.ஆனால் ஹிட்லரின் நாசிப்படைகள் தங்களின் கொலைவெறியை யூதர்களை கொல்வதன் மூலம் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை.அவர்களின் கொலைவெறியை தனித்துக்கொள்ள அவர்களினால் கொல்லப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டம் தான் உடல் ஊனமுற்றோர்கள் மற்றும் பரம்பரை நோயால் அவதிப்படுபவர்கள். நாசிகளின் இந்த கொடுமையான நிகழ்ச்சித் திட்டம் T4 என்ற குறியீட்டுப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.ஹிட்லரின் நாசி கட்சியால் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் " இனத்தை சுத்தப்படு…
-
- 0 replies
- 829 views
-